காதல் கருவறை 19

0
1100

கரு 19:

புயலுக்கு பின் வரும் அமைதி அங்கு இருந்தது , இழந்த விஷயங்களின் வலி அவள் கொடுத்த விலை என்று அனைவர் மனதிலும் வருத்தம் கனமாக இருந்தது .

இதை எதையும் தன் அளவில் கடந்து போன ஒன்றாக நினைத்து யோசனையில் ஆழ்ந்திருந்தவளின் கால்களில் ஈரம் படிவதை உணர்ந்து கீழே பார்த்தவள் சரண் அவள் கால்களை கட்டிக்கொண்டு மௌனமாக அழுதுகொண்டிருந்தான் .. மெதுவாக தலையை நிமிர்த்தியவன் என்ன மாதிரி நேசம் சஷி இது , எவ்வளவு இழந்திருக்கிறாய் எல்லாம் எனக்காகவா , என்னால் இழந்துவிட்டாயா , உன் இன்பங்களை தொலைத்து என்னை வாழ வைக்க வேண்டும் என்று நினைக்கும் அளவு உன் காதலுக்கு நான் என்ன செய்தேன் , எனக்காக உன் தாய் தந்தையை இழந்து சுற்றி இருப்பவர்களிடம் அவப்பெயர் வாங்கி இருக்கிறாய் எல்லாவற்றிற்கும் மேலாக எனக்காக மானத்தை இழந்து எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாய் , இதற்கு நான் என்ன தகுதியுடயவன் , ஏன்டா இப்படி செய்தாய் உன்னை விட என் கனவுகள் எனக்கு முக்கியம் இல்லை , எதுவுமே முக்கியம் இல்லை என்று நீ உணரவில்லையா ?” என்று அழுதவனை ார்த்து மனதில் அவன் பாலான நேசம் அவளை தீண்டி சென்றது .

மெதுவாக அவன் தலையை கோதியவள் சரண் நான் இவ்வளவும் ஏன் செய்தேன் என்று எனக்கே புரியவில்லை எல்லாவற்றுக்கும் விடை உங்களிடம் கொண்ட நேசம் என்று மட்டுமே நான் அறிந்தது , ஆனால் அந்த நேசத்தை வைத்து இப்பொழுது என்னை மாற்றிக்கொள்ள என்னால் முடியாது அன்பிற்கு சுயநலம் இல்ல , நான் செய்ததும் அதை மனதில் கொண்டுதான் உங்களுக்காக விலை கொடுத்துவிட்டு அதில் உங்களை வாங்க எனக்கு விருப்பமில்லை , இந்த தாலியை நீங்கள் உங்களுக்கு கொடுத்த விலையாக எண்ணாதீர்கள் நான் உங்கள் வாழ்வில் எந்த இடத்திலும் நுழைந்து தொந்தரவு செய்யமாட்டேன் நீங்கள் உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் , நான் இவ்வளவு செய்ததற்கான அர்த்தமும் , எனக்கு நீங்கள் செய்யும் உதவியயும் நீங்கள் நன்றாக வாழ்வதுதான் என்றவளை எதுவும் சொல்லாமல் சற்றுநேரம் உணர்வில்லாது பார்த்தவன் யாரையும் பார்க்காமல் விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டான்

யாருக்கும் எதுவும் புரியவில்லை அடுத்து என்ன செய்வது என்று யாருக்குமே தெரியவில்லை மெதுவாக சுதாரித்து கொண்ட தாருண்யா அதே நிலையில் இருந்த சந்தோஷியை பார்த்து நீ இப்படியே எத்தனை நாட்கள் இருப்பாய் , இது வரை நீ செய்ததே பெரிய வேலைகள் உன் வாழ்க்கை மேலும் பாழாவதை ஏன் ஏற்கிராய் சந்தோஷி

எனக்கு இனி தனியாக வாழ்வு என்பதே இல்லை தாருண்யா என் மகள் வாழ வழி செய்ததும் அது முடிந்து விடும் என்றவளை அழுகையுடன் கட்டிக்கொண்டாள் குணா

பெரியம்மாவிற்கு நான் என்ன பதில் சொல்வேன் சந்து , என்னால் முடியவில்லை டி , இதெல்லாம் தெரிந்தால் அவர்களால் தாங்க முடியாது

சொல்லாதே எதுவும் யாருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது , இவளை இப்படியே வளர்ப்பதுதான் குணா எல்லாருக்கும் நல்லது , சரணை இனி நீங்கள் எக்காரணத்தை கொண்டும் தொந்திரவு செய்ய கூடாது , அவர் வாழ்க்கையை அவர் வாழ்வதுதான் எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி

என்றவள் கண்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து தன் காரை நோக்கி சென்றவள் திரும்பி குணா என்றழைத்தாள்

ஏறிட்டு பார்த்தவளிடம் மாமாவுக்கு இது எதையும் சொல்லாமல் இருப்பதே எல்லாருக்கும் நல்லது , இது அவருக்கு தெரியும் பொழுது எல்லாம் எல்லை மீறி விடும் அது மட்டும் நடக்கவே கூடாது என்றவளை ஆதங்கத்தோடு பார்க்க மட்டுமே குணாவால் முடிந்தது .

புயல் அடித்து ஓய்ந்த அமைதி அங்கு சூழ்ந் இருந்தது கண்களை துடைத்துக் கொண்டே யோசனையில் இருந்த தாருண்யாவை அழைத்தாள் “, அடுத்து என்ன செய்வது அக்கா , இந்த சரண் அண்ணாவேற எதுவுமே சொல்லாமல் போய்விட்டார் ஒருவேளை இவள் வேண்டாம் என்று நினைத்துவிட்டாரா அக்கா , எனக்கு பயமாக இருக்கிறது

இல்லை குணா சரண் அவ்வளவு சீக்கிரம் பின் வாங்கமாட்டார் , தாலி கட்டும் அளவு அவளை பாதுகாக்கும் எண்ணம் கொண்டவர் , அவர் சென்றது அவருக்கு கிடைத்த அதிர்ச்சியின் விளைவாக இல்லை இது சம்மந்தமாக வேறு விஷயம் அறியக்கூட இருக்கலாம் ஆனால் என் முக்கிய யோசனை அதுவல்ல இவளை எப்படி சரணுடன் வாழ ஒத்துக்கொள்ள செய்வது என்பதுதான் யோசித்ததில் ஒருவர் செய்யமுடியும் என்று தோன்றுகிறது என்றவளை யார் என்ற கேள்வியோடு பார்க்க

முகத்தில் இறுக்கம் சூழ மனுபரதன் என்றாள்

கல்லாய் சமைந்திருந்தவளை உலுக்கியவள் ஏய் குணா ஏண்டி இப்படி ஷாக் அடிச்ச மாதிரி முழிக்கற

ஷாக்கா அக்கா நீங்க இப்ப தூக்கி போட்டது அணுகுண்டுக்கு சமம் கா , எத்தனை விஷயம் நடந்திருக்கு அதையெல்லாம் அப்பவே சொல்லாமல் இப்பொழுது திடீர்னு இவ்வளவு சொன்னால் தாங்கவே மாட்டார் அக்கா , அதுவும் அவசரத்தில் எது வேணும்னா செய்யவும் தயங்கமாட்டார் , அவரோட வேகத்தையும் கோபத்தையும் நீங்க பார்த்ததில்லை , இது வேண்டாம் கா

கண்டிப்பா வேணும் , இதுதான் சந்தோஷியை சரணோட சேர்க்கும் , கண்டிப்பா உங்க அண்ணன் இதுல தலையிட்டு தான் ஆகணும் நம்ம சொன்னாதான் அவர்க்கு தெரியும்

என்னால் இதையெல்லாம் அண்ணன் முகத்தை பார்த்து சொல்ல முடியாது நான் உங்கக்கூட வேணும்னா வரேன் ஆனா நீங்க தான் சொல்லணும் , அவர் மீட்டிங் முடிச்சு எப்ப வருவார்னு தெரியாதே

எப்ப வந்தாலும் சரி வந்ததும் உடனே பேசிதான் ஆகணும் என்றவள் அங்கிருந்த அன்னையிடம் விரைவில் வருவதாக கூறிவிட்டு வெளியே வந்தவர்கள் அதிர்ந்தார்கள் , யாரை எப்பொழுது வந்தாலும் பார்க்க வேண்டும் என்று சொன்னாளோ அவன் கைகளை கட்டிக்கொண்டு காரின் மேல் சாய்ந்தவாறு அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான்

அவனை கண்டதும் பிரேக் அடித்தது போல் நின்றவர்களை நோக்கி வந்தவன் குணாவை ஒரு பார்வை பார்த்து விட்டு தாருண்யாவிடம் திரும்பி நக்கலாக அந்த சரணின் பிறந்தநாள் அப்பொழுதே முடிந்துவிட்டதாக சொன்னீர்கள் திருப் ி அடுத்த வருடபிறந்தநாளையும் சேர்த்து இப்பொழுது கொண்டாடி இருப்பீர்கள் அப்படிதானே என்றவன் வளை பார்த்து

நான் சொன்னேனே தன்யா இந்த உதடுகளுக்கு அதிகமாக பேச தெரிந்தது பொய் மட்டும் தான் இல்லையா , குணாம்மா நீ வீட்டிற்கு போ , உன் அக்காவிடம் சிறிது பேசவேண்டும் என்றவன் அவளிடம் காரை காட்டினான்

எப்படியம் இவனை பார்த்து பேசியாக வேண்டிய கட்டாயம் அவளுக்கும் இருந்ததால் குணாவிடம் தான் பார்த்துக்கொள்வதாக கண் காட்டிவிட்டு அவனுடன் வண்டியில் ஏறினாள்

காரை எடுத்தவன் ஒரு ஒதுக்குப்புறமான சாலையில் வண்டியை நிறுத்தி சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் அவளை பார்த்து அன்று கொடுத்த தண்டனை உனக்கு வலியை தரவில்லை போலும் அதுதான் இந்த உதடுகள் ஓயாமல் பொய் பேசிக்கொண்டே இருக்கிறது அதை விட பெரிதாக தண்டனை கொடுத்தால் சரியாகிவிடும் இல்லையா என்றான் வன்மமாக .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here