காமனின் காதல் 5

0
793

அமீர் அபியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அபி 10:15 க்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள் சிறிது நேரம் அமீருக்காக காத்திருந்தாள் அவன் வராது போக பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்கயில் அவள் பின்னே இருந்து ஒரு கரம் மயக்க மருந்து துணியால் அவள் வாயையும் மூக்கையும் சேர்த்து மூட மூர்ச்சையானாள்.

அவள் மயக்கம் தெளிகையில் அவள் ஒரு தூசி படிந்த அறையின் தரையில் படுக்க வைக்க பட்டிருந்தாள். திறந்த கதவின் வெளியே மூன்று ஆண்கள் நின்று பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் பேசுவதை கூர்ந்து கேட்கலானாள்…

மதி ஜானியிடம் “மச்சி பொண்ணு செலயாட்டம் கீதுடா… சீக்கிரம் அந்த ஆள வர சொல்லு டா. “

“எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா? பொறு டா சேந்து சாப்பிடலாம்.”

ராஜா “அண்ணே மோகன் வரக்குள்ள நா போய் கொஞ்சமா பாத்துட்டு வந்துடறேன் னே… பொண்ணு இன்னும் மயக்கத்துல தான் இருக்கு.”

“டே தம்பி அவன பத்தி தெரியாதா உனக்கு பொறுமையா இருடா.”

“அவரு கண்டுபிடிக்காத மாதிரி கொஞ்சமா னே… கட்டு படுத்த முடியல.”

மதி “என்ன பாத்தா கேனப்பய லா தெரியுதா உனக்கு? கடைசியா தான் உனக்கு…”

ஜானி “பங்கு நாம தான் வாரத்துக்கு ஒன்னு பாக்குறோம்ல. தம்பி தான் காஞ்சி கிடக்கான் போல… டே சீக்கிரம் முடிச்சிட்டு வா அந்த ஆள் வந்தா காண்டாயிடுவான்.”

“ரொம்ப நன்றி னே”

வெளியே இலைக்கு அடித்து கொள்ளும் நாய்களின் சத்தம் அபியின் இதய துடிப்பை அதிகப் படுத்தியது கண்கள் தானாக கண்கள் கண்ணீரை சுரக்க தனது கை பையை தேட அதை காண வில்லை. அவசரத்திற்கு யாரையும் அழைக்க வழி அடைக்க பட்டது. “நாளை நமது பிணம் ஆடையின்றி எங்கோ கிடைக்க போகிறது. தந்தையும் தாயும் அருகில் அமர்ந்து கதறி அழ தன் தோழமைகள் கண்ணீருடன் தன்னை சூழ்ந்து நிற்க அந்த காட்சி அவ கண் முன்னே விரிந்தது. சத்தமின்றி அழுது கொண்டிருந்தாள். உள்ளே வந்த ராஜா அவள் அருகே வந்து அவள் கால் அருகே அமர்ந்தான். அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு தேமிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தைப் பார்த்தான் வேகமாக வெளியே சென்றான் “அண்ணே அந்த மயக்க மருந்து துணிய குடு பொண்ணு முழிச்சிருச்சி. “

எட்டி பார்த்த மதி “இந்தா” என வேண்டா வெறுப்பாக அவன் கையில் வைத்து திணிக்க புன்னகையுடன் உள்ளே சென்றான்.

மீண்டும் அவ கால் அருகே அமர்ந்தவன் அவள் பதறிக் கொண்டு தன் துணியைப் பிடித்துக் கொண்டாள். “விட்டு…டுங்க…” தேமலுக்கு இடையே திணறி வந்தது வார்த்தைகள். கண்களை மூடி கொண்டு தன் கரங்களை கூப்பி அவனிடம் வேண்டினாள். அவனுக்கும் பதற்றம் தொற்றி கொள்ள வெளியில் இருந்து ஜானியின் குறள் வந்தது. “டே அவ வாயில அந்த துணிய வை டா…” அவன் சொன்ன படி அவள் முகத்தில் மயக்க மருந்து துணி வைத்தான் ராஜா… அவள் மயக்கமானாள். பின் அவள் மேலாடையை களைய தொடங்க கதவினை பார்த்தவன் அங்கு அவர்கள் இருவரும் தன்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான்.

“அண்ணே கதவை சாத்து எனக்கு கூச்சமா இருக்கு.” அவைகள் வருத்தத்துடன் கதவை சாத்த ராஜா தன் பணியை தொடர்ந்தான். சிறிது நேரம் கழித்து கலைந்த ஆடைகளை சரி செய்தவன் “இந்த தேவதை எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும்” என்று சொன்னவன் சுற்றி முற்றிலும் பார்த்தான் அடுத்த நிமிடம் அவளை தன் தோள்களில் தூக்கிக் கொண்டு அந்த கட்டிடத்தின் அடுத்த சாலையில் ஓடிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு மோகனின் வாகனம் வருவதை பார்த்த ஜானியும் மதியும் அரக்க பறக்க கதவைத் திறந்தவர்கள் அரண்டு போனார்கள். அங்கு அந்த இருவர் மட்டுமே நின்றனர். மோகன் வந்தான். “எங்கடா அவ போய் தூக்கிட்டு வாங்க…”

“தல ராஜா பய தூக்கிட்டு ஓடிட்டான் தல…”

“என்னடா பேச்சி இன்னும் பத்து நிமிசத்துல அவ இங்க இருக்கணும். போங்கடா வெளில.” மூன்று பேர் மூன்று திசையில் சென்றும் தொலைந்த இருவரையும் கண்டு பிடிக்க முடிய வில்லை. மோகன் கையில் துப்பாக்கியுடன் ஜானியை பார்த்து கொண்டிருந்தான்.

“வேணாம் தல… வேணாம் தல…”

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here