தேடி வந்த சொர்க்கம் _2

0
739

அவனை முறைத்தபடியே இரண்டு இருக்கை தான்டி அமர்ந்தவள் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள். மனதில் ஏதேதோ எண்ணங்கள் தான் செய்தது சரியா. நூறு கேள்விகள் அவளை நோக்கி வந்த வண்ணம் இருந்தது. தலை வழிக்க ஆரம்பிக்க தலையை பிடித்த படி அமர்ந்து இருந்தாள் அதே நேரம்
கிஷோர் இவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.

நிஷா நீ என் கூட ஆட வா இன்றைக்கு.
எப்பவுமே அவன் கூடவே சுத்தணும்ன்னு ஏதாவது வேண்டுதலா. வா கையை பிடித்து இழுக்க ஆரம்பித்தான்.

கிஷோர் கைய விடு …. நானே பயங்கர கோபத்தில் இருக்கிறேன். நீ வேற வம்பு பண்ணாதே.. அவனது கையை தட்டிவிட அவனோ இருக்கி பிடித்திருந்தான். அதே நேரம் அப்போது தான் அவளை ராகவிடம் இருந்து நகர்த்தி விட்டு சென்றிருந்த
இன்னோரு நண்பனான விநாயக்
இவளிடம் மறுபடியும் வந்தான்.

உன் டிரைவர் வரலையா. இங்கே என்ன பிரச்சனை. கிஷோர் உன் கிட்ட பல டைம் சொல்லியாச்சு. அவ கிட்ட போகாதன்னு இப்ப மறுபடியும் அவகிட்ட வந்து வம்பிலுக்கற. நீ கைய விடு. ..

நீ என்ன அவளுக்கு பாடிகாட் வேலை பார்க்கறயா. போவியா…. அந்த பக்கம்
நீ வா பேபி நாம ஆட்டம் போடலாம்.

கிஷோர் தப்பு பண்ணாதே. இன்றைக்கு நீ சரி இல்ல. வீணா அடி வாங்கிட்டு போயிடாத. லாஸ்ட் டைம் நடந்தது நீ மறந்துட்டியா என்ன.
நான் உனக்கு ஞாபகம் படுத்தவா…

என்ன ஞாபகப்படுத்த போற. இங்க வர்றவங்க எல்லாம் யோகியமா. என்னவோ பேசற. இங்கே வந்துட்டா
இப்படி தான். ஏய்…. ஆட வாடி என் கூட இன்றைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்திடலாம். அதோ உலகத்தை மறந்து விழுந்து இருக்கறவன் தான் இன்றைக்கு உன்னை காப்பாற்ற போறானாக்கும். கையை பற்றியவன் விடாது இழுத்து போக ராகவை தாண்டும் போது சரியாக நிஷாவின் கையை பற்றி இருந்தான் ராகவ்…

ஏண்டா கொஞ்சம் தூக்கம் வருதுன்னு கண்ணை மூடினா… சரிடா கொஞ்சம் போதை அதிகம் ஆயிடுச்சு. அதுக்காக
நீ நிஷா கைய பிடித்து இழுப்பயா.
ஆமாம் மணி என்ன ஆகுது. நீ ஏன் இன்னும் இங்கே சுத்திட்டு இருக்கற…
உன் கிட்ட ஏற்கெனவே சொல்லி இருக்கிறேனே. பத்து மணிக்கு மேலும் இருக்க கூடாதுன்னு…..

கிஷோர் பொண்ணுக்கு பிடிக்கலன்னா கிட்டவே போக கூடாது.
உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறது . இப்படியா…
கையை உதறியபடி ஓங்கி கண்ணத்தில் விட அடுத்த டேபிளில் விழுந்திருந்தான். அடித்த வேகமே சொல்லியது அவனது வேகத்தை…

விநாயக் இவளை கூப்பிட்டுட்டு போய் ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பாரு.
இனிமே இவன் யார் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது. மாசம் ஒரு தடவை அடி வாங்கணும்ங்கறது இவனுக்கு வேண்டுதல் போல… இவன் அடிக்க ஆரம்பிக்க கிஷோருக்கு ஆதரவாய் இன்னும் சிலர் சேர… ராகவிற்கு
ஆதரவாய் சிலர் வர சற்று நேரத்திற்குகெல்லாம் முற்றிலுமாக மாறி இருந்தது.

சிலர் கையில் இருந்த மொபைலில் விடியோ எடுக்க இன்னும் சிலர்
ராகவ்…. ராகவ் என்ன கத்த இன்னும் சிலர் கிஷோர் … கிஷோர் என கத்த….
ஒவ்வொரு டேபிலும் டேபிள் மேல் இருந்த கோக் முதல் அசைவ உணவுகள் அனைத்தும் பறக்க ஆரம்பித்தது.

சத்தம் கேட்டு வந்த செக்யூரிட்டிகள் ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து சண்டையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர். சிலர் சண்டை தொடங்கவும் கிளம்பி இருக்க இன்னும் சிலர் பை… சொன்னபடி கிளம்பி ஆரம்பித்தனர்.

கிஷோரும் கிளம்பி இருக்க விநாயக் நிஷா இன்னும் சிலர் மிச்சமிருந்தனர். அருகில் வந்த பேரரிடம் ஒரு பாக்கெட்டில் இருந்த மொத்த பணத்தை எடுத்து போட்டவன். உடைச்சதுக்கு பில் செட்டில் செஞ்சிடு… மிச்சம் டிப்ஸ் ஓகே…. சொன்னவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து டேபிளில் தலை வைத்து படுத்து மிச்ச தூங்கத்தை தொடற ஆரம்பித்தான்.

சற்று தொலைவில் இங்கு நடந்தது எதையும் விடாது தனது கைபேசியில் விடியோ எடுத்ததும் இல்லாமல் ஒவ்வொரு நிகழ்வையும் போட்டோ எடுத்து கொண்டிருந்தான் பிரபல பத்திரிக்கையின் ரீப்போட்டர். பார்ட்டி கலாச்சாரத்தால் சீரழியும் இன்றைய இளைய தலைமுறையினர். இந்த தலைப்பில் எழுத இன்று இங்கு கூட்டத்தோடு வந்தவன் அவன் எதிர் பாராத்ததற்கும் அதிகமான தகவல் கிடைத்த சந்தோஷம் அவன் கண்களில் தெரிந்தது. வந்த நேரம் முதல் நடந்து அடிதடி வரை அத்தனையும் அவனது செல் பேசியில் பதிவாகி இருக்க மகிழ்ச்சியோடு கிளம்பினான். அன்றைய நாள் அத்தோடு முடிந்ததா… இல்லை அது முடியாமல் தொடர போவதை அறிய வில்லை அப்போது….

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here