போர் நடந்துகிட்டு இருந்தது. இரண்டு பக்கமும் இருநாட்டு வீரர்களும் ஒருத்தரையொருத்தர் சுட்டுகிட்டு இருந்தாங்க. அப்போ ஒரு வீரர் தன்னோட நண்பர் தூரத்தில் எதிரிகளால சுடப்பட்டு விழறத பார்த்தார்…
உடனே தன்னோட நண்பரை தூக்கிட்டு வரதுக்காக லீடர்கிட்ட அனுமதி கேட்டார்.. லீடர் அனுமதி தந்தார் ஆனால் “நீங்க அங்க போறதா ஒரு பிரயோஜனமும் இல்ல. அவர் இறந்திருப்பார். மேலும் நீங்க அங்க போய்ட்டு வரதுக்குள்ள உங்களுக்கும் பயங்கரமா அடிபட்டுடும்”னு சொன்னார்.
அதை பொருட்படுத்தாம அந்த வீரர் அங்கே போய் தன்னோட நண்பரை தூக்கிட்டு வந்தார்.. அவர் நண்பரை சோதிச்ச பிறகு லீடர் சொன்னார் “நான் முன்னேயே சொன்னேன்ல… நீங்க போறதால ஒரு பிரயோஜனமும் இல்லனு.. உங்க நண்பர் உயிரோட இல்ல… உங்களுக்கும் மோசமா அடிப்பட்டிருச்சே”
ஆனா அந்த வீரர் அமைதியா பதில் சொன்னார் “பிரயோஜனம் இருக்கு சார்.. நான் அங்க போனப்ப என் நண்பர் உயிரோடதான் இருந்தார்… எனக்கு திருப்தி கிடைச்சிருச்சி அவர் சொன்னத கேட்டப்ப…. ‘நண்பா நீ வருவேன்னு எனக்குத் தெரியும்’…”
வாழ்க்கையில் பல சமயங்களில் ஒரு விசயத்தால் பயன் இருக்கோ இல்லையோ, அது நீங்க பார்க்கிற பார்வையிலதான் இருக்கு… உங்க மனசு சொல்றத கேளுங்க.. அப்பதான் அதை செய்யலையேன்னு பின்னாடி நீங்க வருத்தப்படாம இருக்க முடியும்…