தேவை:
ப.அரிசி :1.5 கப்
தேங்காய் துருவல் : அரைகப்
உப்பு: சுவைக்கேற்ப
பச்சரிசியை நன்கு களைந்து 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் துருவல் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப அளவான தண்ணிர் விட்டு மைய அரைக்கவும். அரைக்கும் போது நிறைய தண்ணிர் விட்டால் அரிசி சரியாக அரைபடாது.
டைப் 1
அரைத்த மாவு 2 கப் அளவு இருந்தால் அதில் 2 கப் அளவு தண்ணி விட்டு (மோர் கரைப்பது போல) கரைத்து ஊற்றினார் போல தோசை வார்க்கவும்…
டைப் 2
அரைத்த மாவில் மேலே சொன்ன அளவு தண்ணி விட்டு கரைத்து அதில் கால் பாகம் தனியாக எடுத்து அடுப்பில் வைத்து கஞ்சி போல கிளறவும். அதை மீதி உளள முக்கால் பாகம் மாவில் கலந்து ஊற்றினார் போல தோசை வார்க்கவும்…
காரமாக வெங்காய சட்னி அல்லது இனிப்பான தேங்காய் பால் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்….