முதல் முத்தம்
என்னையே சுற்றி வந்தாயடா…
என்னைக் கட்டி கொண்டாயடா…
இவ்வுலகே உன்னால்தான் என்றாயே …
இன்று என்னை விட்டு வெகுதூரம் சென்றாயே…
எவளோ ஒரு பெண் ஏற்றினாள் உன் வாழ்வில் தீபம்
எனக்கோ நிதமும் மரணம்
எனக்கென யாருமின்றி ஆனேன் தனி மரம்
என்னை போன்றே பலர் உண்டு இவ்வுலகில்
அது நாங்கள் பெற்று வந்த சாபம்
கண்களில் கண்ணீர் கோடுகள்
கன்னங்களில் அழியாத உன் சுவடுகள்…
“அம்மா” வென்றழைத்து நீ கொடுத்த
“முதல் முத்தம்”
பின் குறிப்பு:
கைல முதல் முதலா பேனாவை எடுத்து எழுதுனது…
எப்போமே எனக்கு நெருக்கமானதும் கூட
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1