19.என்னவள் நீதானே

0
464

காதல் என்ற
ஒற்றை சொல்லில்
விலகி போனாயே
என்னுயிரே..
விலகிய நொடி முதல்
சேர துடிக்கிறேன்
இதுதான்
காதலென்று அறியாமல்…

சிவாவுக்குள்ளும் அவனுடைய தனுவின் மீதான சிந்தனைகளே.. பெண்கள் இயல்பில் மென்மையானவர்கள் தான் எனினும் அவர்களின் மனஉறுதி ஆயிரம் யானைகளுக்கு சமம்.. இத்தனை சின்னவளுக்கு தான் எத்தனை மன உறுதியோ என எண்ணியவன்… என்னதான் அவன் காதலை ஏற்காததற்கு அவன் கடந்த காலம் ஒரு காரணம் என்றாலும்
இன்னொரு புறம் படிக்கும் பெண் மனதில் காதல் என்னும் ஆசையை அவன் வளர்க்க விரும்பவில்லை அதற்காகவே அவளுக்கு இந்த காதலெனும் தேர்வை வைத்திருந்தான்….

ஆராவும் தன் அறையில் படுத்துக்கொண்டு சிவாவின் சிந்தனையில் மூழ்கினாள்.. தன்னவன் தனக்கு வைத்த இந்த காதல் எனும் பரிட்சையில் எவ்வாறு வெற்றி கொள்வது என்ற சிந்தனையில் உழன்றாள்.. பெண்ணவளுக்கோ அவள் காதல் மேல் கொண்ட நம்பிக்கை புது தெம்பை தர தன் காதல் எப்படியும் ஜெயிக்கும் என்ற உறுதியுடன் நித்திரைக்குச் சென்றாள்…

ஆதவிற்கும் ஜானுவின் நினைவுகள் அவளுடைய பழைய குறும்புகள் சேட்டைகள் அவன் கண்ணில் நிழலாட…ஆனால் அவளின் இன்றைய தோற்றம் கசங்கிய பூ போல் இருக்க தன்னையே நொந்து கொண்டான்….இருந்தும் சிவாவின் நட்பிற்காக தான் எடுத்த முடிவு சரியானதுதான் என்று மனதை தேற்றிகொண்டான்…

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருக்க நாட்களும் நகர தொடங்கியது… ஆதவும் சிவாவும் தொழிலில் கவனத்தை பதிக்க மங்கையர் இருவரும் தேமே என கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்… தனுனால் வந்த மாற்றத்தினால் சிவா தங்கையிடம் இருந்து சற்று விலகியே இருந்தான் அதனால் ஜானுவின் மாற்றம் குறித்து அவன் அறிந்திருக்கவில்லை..

அவர்கள் சென்று வந்து மூன்று நாள் ஆயிருக்க சற்றே தெளிந்த ஆதவிற்கு அப்போது தான் புரிந்தது ஆராவின் மாற்றமும் சிவாவின் அமைதியும் அன்று ஏதோ நடந்து இருக்கிறது என்பதை உணர்த்த குழம்பி போன ஆதவ் சிவாவிடமே தெளிவு படுத்தி கொள்வதற்காக அவனிடம் விரைந்தான்….

சிவாவின் அறையில் மடிக்கணினியில் மூழ்கி இருந்த சிவாவிடம் வந்த ஆதவ்,”மச்சி..ஏன்டா ஒரு மாதிரி இருக்க… என்னடா நடந்துச்சு அன்னிக்கி”

சிவா அவனை பார்த்து மெல்லிய புன்னகையை வரவழைத்து கொண்டு,” என்னைக்கு” என்றான்…

ஆதவ்,”டேய்… நாம ரெசார்ட் போன அன்னிக்கி உனக்கும் ஆராவுக்கும் நடுவுல என்ன நடந்துச்சு… அதுக்கு அப்பறம் நீ சரியாவே பேசரதில்லை.. கேட்டா மட்டும் தான் பதில் சொல்ற .. நீயா சொல்லுவனு பாத்தா நீ சொல்ற மாதிரி தெரியல அதான் நானா கேட்டுட்டு போலாம்னு வந்தேன்”என்றான்…
உண்மையில் சிவா இருந்த மன நிலையில் ஆதவின் மாற்றத்தை அவனும் கண்டிருக்கவில்லை.. அதை அறிந்த பின்பே ஆதவ் சிவாவை முன்பே கண்டு கொண்டதுபோல் பேச ஆரம்பித்தான்…

சிவா,”என்ன சொல்ல சொல்ற….”அவன் குரலில் ஒரு வலி தெரிந்தது…

ஆதவ் அவன் தோளை பற்றி உலுக்கி ,”என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலையேண்டா..”என்று கத்த…
நடந்த அத்தனையும் கூறிக்கொண்டு தான் எதனால் இத்தகைய முடிவு எடுத்தேன் என்பது முதற்கொண்டு ஆதவ்விடம் உரைத்து இருந்தான் சிவா….

ஆதவ்,” எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மச்சான்.. நீயே இப்படி இருக்க அப்படினா.. ஆரா சின்ன பொண்ணுடா அவ எப்படி இதை தாங்கிட்டு இருப்பான்னு தெரியலையே டா”..ஆதவின் கவலை சிவாவையும் தொற்றிக்கொள்ள… சிவா,”நானும் அதை தான் யோசிச்சேன்”என்று கூறியவன் கண்களில் தனுவின் தெளிவான உரையாடலும் அவள் காதலின் உறுதியும் தோன்ற சிறு புன்முறுவல் அவன் உதட்டோரம் அதை பார்த்த ஆதவிற்கோ கண்கள் மின்னியது…..

சிவா புன்னகையுடனேயே,”என்ன பொண்ணுடா அவ… பாக்க அவ்ளோ குட்டியா இருக்கா… ஆனா அவ பேச்சுல இருக்க தெளிவு.. லவ் மேல வச்சுருக்க நம்பிக்கை சான்ஸே இல்ல மச்சான்… உனக்கு இப்படியொரு தங்கச்சியானு ஒரே சாக்கிங் டா”என்றான்…

ஆதவ்,”அப்போ உனக்குள்ளேயும் காதல் வந்துருச்சாடா?? என்று ஆச்சரியப்பட…

சிவா,” ம்ம்ஹூம்… காதல் எனக்குள்ள… இந்த இதயம் ஒரு பட்டமரம் டா… அதுல இதுக்குமேல ஒண்ணுமே துளிர்க்காதுடா” என்றான்…

சிவாவின் பதிலில் ஆதவ்வும் குழம்பிதான் போனான்… ஆராவை பற்றி பேசும் போது அவன் முகத்தின் மாறுதலையும் அதே நேரத்தில் காதலை பற்றி பேசும் போது அவனின் விரக்தியான பதிலும் என இருவேறு மனநிலையை ஒரு சேர காட்டிக்கொண்டிருந்தான்…..

ஜானுவும் வழக்கம் போல் காலேஜ்க்கு கிளம்பி சாப்பிட வந்தவள் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க அவளின் மாற்றத்தை கண்டுகொண்ட அவளின் தந்தை அருகில் அமர்ந்து அவளின் தலையை தடவியவாறே,”ஜானுமா.. என்னடா ஆச்சு… ஏன் டல்லா இருக்க” என்று வினவ…

ஜானு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு,” அப்படி எல்லாம் இல்லப்பா… செமஸ்டர் எக்ஸாம் ஸ்டார்ட் ஆக போகுதுள்ள அதான் கொஞ்சம் டென்ஷன் மத்தபடி ஒன்னும் இல்ல… அடுத்த வருஷம் வேற பைனல் இயர் இல்ல அதான் கொஞ்சம் வேலையும் அதிகமா இருக்கு…” என சமாளித்தாள்…

ஜானு அப்பா,”சரிடா… நல்லா சாப்பிடு பாரு எப்படி மெலிஞ்சிட்ட..”

ஜானு,”சரிப்பா… நான் பாத்துகிறேன்… நீங்க ஓர்ரி பண்ணிகாதீங்க”என்றவள்… தன் மனதில் குடும்பத்துக்காகவாவது பழைய மாதிரி இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்… அவளுக்கு வர போகும் துன்பம் அறியாமல்….

அன்று காலையில் ஆதவ்வின் வீட்டில் அவனின் அம்மாவின் தூரத்து உறவினர் ஒருவர் மூலம் வரன் ஒன்று வந்திருக்க ஆதவின் அம்மாவிற்கும் அவனுக்கும் 27 வயசாகுது சரி கல்யாண பேச்சை ஆரம்பிப்போம் என்று அவனிடம் கேட்க ஆடி தீர்த்துவிட்டான் ஆதவ்…..

ஆதவின் அம்மா மூலம் சிவாவிற்கு விஷயம் தெரிய வர ஜானுவை காலேஜ் அழைத்து செல்வதற்காக கிளம்பியவன் போன் வர அதை கேட்டவன்… ஜானுவையும் கூட்டிக்கொண்டே ஆதவ்வின் வீட்டிற்கு சென்றான்….ஜானுவின் நிலை அறியாமல்????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here