22.என்னவள் நீதானே

0
457

நாட்கள் அதன் போக்கில் நகர ஜானுவும் ஆதவ்வின் அறிவுரைகளை ஏற்று கொஞ்சம் பக்குவமாக நடக்க தொடங்கினாள்….

சிவாவும் ஆதவ்வும் வேலை பளுவின் போதும் ஜானுவின் மீது ஒரு கண் வைத்தே இருந்தனர்… டெண்டர்க்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்க எதிரிகளும் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து கொண்டேதான் இருந்தனர்….

இப்போது ருத்ரா கன்ஸ்ட்ரக்ஸன் பிசினஸ் ஏறுமுகவாகவே இருக்க சிவாவிற்கு மனதில் ஒரு நெருடல் அது அவர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமையில் அல்ல.. ஆனாலும் அவர்களது வித்யாசமான அணுகுமுறையில் அவளுக்கு பின் வேறு ஒரு மூளை என்று கண்டுபிடிக்க தெரிந்த அவனால் அது யாரென்று கண்டுபிடிக்க முடியாதது தான் அவனுக்கு சோதனையே…

ஆபிஸில் இது குறித்து யோசனையில் அமர்ந்திருந்தவனை பாக்க ஆதவ் வந்தான்…

ஆதவ்,”என்னடா யோசனையா இருக்க… டெண்டர் பத்தியா??”

சிவா,”ஹ்ம்ம் அதுவும் தான் அது இல்லாம ஒன்னு மனசுல ஓடிட்டே இருக்கு..அதான்”

ஆதவ் அவன் மனதை புரிந்தவனாக,”ருத்ரா கன்ஸ்ட்ரக்ஷன் வளர்ச்சியை பத்தியா?? எப்படியும் அவங்க நேர்வழில முன்னேற போறதில்லை அப்பறம் என்ன.. அதுக்கு ஏன் இவ்ளோ யோசனை” என்றான்…

சிவா,”இல்ல மச்சான்… எப்பவும் போல இல்ல அவங்களோட மூவ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.. அதான் இதுக்கு பின்னாடி இருக்க மூளை யாருன்னு யோசிக்கறேன்”

ஆதவ்,’இப்போ கூட அவங்களோட புது ப்ரொஜெக்ட்ல வீடு வாங்கரவங்களுக்கு புது ஸ்கீம்,ஆபர் எல்லாம் குடுத்து நிறைய பேர் வீடு வாங்கிருக்காங்க இதுல அந்த ப்ரொஜெக்ட் மொத்தமும் இப்போவே சேல் ஆயிடுச்சு டா’ என்ற கூடுதல் தகவலையும் கொடுத்துவிட்டு எது எப்படியோ இனிமே நம்மள தொல்லை பண்ணாம இருந்தா சரி என்றான்…

சிவா,” மச்சான் புலி பதுங்கறது பாயறதுக்கு தான், அவங்க அமைதியா இருக்கரதுல இருந்தே தெர்ல அவங்க நமக்கு பிளான் பண்ணி ஸ்கெட்ச் போடுட்டு இருக்காங்கடா”

ஆதவ்,”சோ அவங்க பதுங்கி இருக்க நேரம் தான் நமக்கான டைம் அதுக்குள்ள அந்த பின்னணி மூளை யாருன்னு கண்டுபிடிச்சு அதை செயலிழக்க வைக்கணுமோ” என்றான்.

சிவா,”எஸ்.. நானும் இதை தான் யோசிச்சேன் பட் நம்ம ஆக்டிவிட்டிஸ்ஸ ஸ்பீட் அப் பண்ணனும் அப்போ தான் அவங்களுக்கு முன்னாடி நாம அவங்கள அடைய முடியும்”

ஆதவ் யோசனையினூடே,”எனக்கென்னமோ அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்காக யாரும் வந்த மாதிரி தெரியலடா.. அந்த எக்ஸ்(X) கூட நமக்கு எதிரியா இருக்க வாய்ப்பு அதிகம், எதிரிங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து அட்டாக் பண்ண போற மாதிரி ஒரு பீல் வருது” என்றான்.

சிவா மெலிதாக சிரித்துவிட்டே,”எஸ் யூ காட் இட்… என் மண்டைக்குள்ளேயும் இந்த தாட் தான் ஒடிட்டு இருக்கு லெட்ஸ் சீ… தி கேம்ஸ் பிகின்ஸ் நௌ… இந்த கேம்ல எதிரி யாருன்னு தெரியாம விளையாடறது தான் இதுல நமக்கு இருக்க சுவாரசியமே” என்றான்.

சிவா சொன்ன தொனியிலேயே தெரிந்தது அவன் எதையோ பெரிதாக செய்ய போகிறான் என்று.. சிவாவே ஆதவ்வை அழைத்து கம் லெட்ஸ் ஹேவ் டீ என்று அழைத்து சென்றான்..

நண்பர்கள் இருவரும் குழப்பமாக இருக்கும் போதோ தீர்வு எடுக்க முடியாத சூழலிலோ மனதை ஒருமுக படுத்தும் பொருட்டு சதுரங்கம் ஆடுவார்கள் இதற்காகவே அவர்கள் ஆபிசில் பிரத்யேக அறை ஒன்று இருக்கும்..

இருவரும் டீ குடித்து கொண்டே சதுரங்கத்தை ஆட சுவாரசியமாக விளையாடி கொண்டிருந்தவன் “செக் மேட்” சொல்லும் போது அவன் முகத்தில் இருந்த தெளிவு இன்னும் எத்தனை எதிரி வந்தாலும் அனைவரையும் ஒரு சேரும் எதிர்கொள்ளும் வல்லமை புரிந்தவனாக இருந்தது..

ஆம் சதுரங்கத்தை போலவே தன் கண் முன் தனக்கு எதிரே உள்ள அத்தனை எதிரிகளின் மூவ்வையும் கணித்து கொண்டிருந்தான்.. சிறிது கவனம் சிதறினாலும் பலமாக அடிபட நேரிடும் என்பது அவனுக்கு தெள்ள தெளிவாக புரிந்தே இருந்தது..

இதற்கிடையில் ஆராவும் அவ்வப்போது ஆதவ்விடம் கால் பண்ணி சிவாவை பற்றிய தகவலை தெரிந்து கொண்டே தான் இருந்தாள்.. சிவாவிடம் உன்னை பார்க்க மாட்டேன் பேச மாட்டேன் என்று ஒத்துக்கொண்டாலும் அவனை பற்றி ஆதவ்விடம் தெரிந்து கொண்டு தான் இருக்கிறாள்..

சிவாவிற்கு இது தெரிந்தாலும் கண்டும் காணாதது போல் இருந்துவிடுவான்.. சில சமயம் ஆதவ்வே வந்து சொன்னாலும் சிறு புன்னகையுடனே அவனையும் கடந்து விடுவான்..

ஆராவும் சிவா தன்னை பற்றி ஆதவ்விடம் எதாவது கேட்பான் என்று எதிர்பார்ப்பாள் அதுவும் இருக்காது சில சமயம் அவனின் இந்த செய்கையில் அவளுக்கு அழுகை கூட வந்து விடும்.. இருந்தும் அவனின் மனஉறுதி அவளை பிரமிக்க வைத்து மீண்டும் மீண்டும் அவன் மேல் காதல் பித்தாக வைக்கிறது…

அவனின் நினைவும்
அவன்பால் கொண்ட
காதலுமே என்னை
உயிர்ப்புடன் இயக்க
இந்த மெய்காதலில்
காத்திருத்தல் கூட சுகமே!!!

ஆரா வழக்கம் போல் ஆதவிற்கு கால் செய்ய அதை அட்டெண்ட் செய்த ஆதவ்,”சொல்லுடா” என்றான்..

ஆரா,”அண்ணா எனக்கொரு டவுட்டு.. அவங்க பக்கத்துல இருக்காங்களா??”

ஆதவ் கேலியுடனே,”இது தான் உன்னோட டவுட்டா??”

ஆரா ப்ச்ச் அண்ணா என்று சிணுங்கியவள், “இல்ல உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் அதான் அந்த கேள்வியை அவர் கேட்டு கோவப்பட்டுட்டாருனா” அதான் என்றாள்..

ஆதவ்,”ஆமா அப்டியே உங்க அவரு நீ பேசரத கேட்டுட்டாலும்.. கேட்டு கோவப்பட்டுட்டாலும்… ஏன் நீ வேற.. சரி சொல்ல வந்த விஷயத்தை மொதல்ல சொல்லு”

ஆரா,”அண்ணா.. அந்த கண்ணனை கொஞ்ச நாளா காலேஜ்ல பாக்கல.. சரி எக்ஸாம்க்கு வருவான்னு பார்த்தா அப்பவும் வரல.. அதான் நீங்க அவனை ஏதாவது பண்ணிட்டீங்கலானு” தயங்கி தயங்கி ஒரு வாராக கேட்டுமுடித்தாள்..

அவள் சொல்லும் போதே போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டான் ஆதவ்.. அவள் தயங்கி தயங்கி பேசுவதை கேட்ட சிவா மெல்லிய சிரிப்புடனே அமர்ந்திருந்தான்….

ஆதவ் ஆராவிடம்,”சரி இப்போ என்ன திடீர்ன்னு அவன் மேல உனக்கு அக்கறை” என்று கேட்க ஆராவோ அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா அவரு எதாச்சும் பண்ணி அதனால அந்த கண்ணன் அவரை ஏதாச்சும் பண்ணிட்டா அதான் கேட்டேன் என்றாள்..

இப்போது ஆதவ் அதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க மறுமுனையில் கடுப்பான ஆரா என்ன அண்ணா எதுக்கு சிரிக்கிறீங்க சொல்லிட்டு சிரிங்க என்றாள் கடுப்புடனே..

ஆதவ்,”பின்ன என்னமா அவனே ஒரு காட்டாறு மாதிரி..அவனை யாரு என்ன பண்ண போறா அதெல்லாம் ஒன்னும் ஆகாது நீ உன்னை பாத்துக்கோ அண்ட் ஒழுங்கா படி”என்று அண்ணனுக்கே உண்டான அறிவுரைகளை வழங்க அனைத்தையும் பொறுப்பாக கேட்டுவிட்டு ஆராவோ சரி அண்ணா அவரையும் பத்திரமாக பாத்துக்கோங்க என்று போன் கட் செய்தாள்…

போனை அணைத்து பாக்கெட்டில் போட்டவன் சிவாவை பார்க்க அவனோ கேலி புன்னகையுடன் ஆனாலும் மச்சான் உன் தங்கச்சிக்கு இவ்ளோ அறிவு இருக்க வேணாம்..இப்போ தான் காந்தி செத்துட்டாரானு கேக்கரா இந்த வேகத்துல போயி இவ என்ன செய்ய போராலோ என சிரிக்க.. ஆதவ் தான் அவனை முறைத்துவிட்டு ஆமா பாவம் அப்டியே அவ உன் கூட பழகிட்டு உன்ன பத்தி தெரியாம இருக்கா அட போடா என சலித்துக்கொண்டான்…

சிவா ஆராவின் பேச்சை கேட்ட திருப்தியில் இருக்க ஆம் கடைசியில் அவள் மொழிந்த அவரை பத்திரமா பாத்துக்கோங்க அதில் இருந்த காதல், அக்கறை,பாசம் அவளை மீண்டும் நினைக்க வைக்க.. ஆதவ்வோ சிவாவின் மனதில் ஆரா இருக்காளா இல்லையான்னு தெரியலையே என்னும் குழப்பத்தில் இருந்தான்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here