அம்ரீஷை சந்தித்து விட்டு வந்த தன் மகள் அங்கு நடந்ததை நினைத்து அழுவதை தாங்க முடியாத சந்திரசேகரும் அவரின் மனைவி ஷர்மிளாவும் கவலையில் ஆழ்ந்தனர்.
ஷர்மிளா, “என்னங்க இது ஓரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சி.. இவ விளையாட்டு தனத்தால் வந்த விளைவை பார்த்தீங்களா? அவங்க குடும்பத்தை பற்றி நல்லா தெரிஞ்ச பிறகு கூட ஏன் இப்படி பண்ணனும்? இப்ப அங்க பிரச்சனைனு அழனும்? எல்லாம் உங்களை சொல்லனும்.. அவளுக்கு அந்த பையன் தான் வேணும்னா ஒழுங்கு மரியாதையா அவங்க கிட்ட போய் மன்னிப்பு கேட்க சொல்லுங்க.. பெத்தவங்க சம்மதம் இல்லாம அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட சந்தோஷமா வாழ முடியாது.. பார்த்துக்கோங்க” என்று தன் ஆதங்கத்தை கொட்டி விட்டு சென்றார்.
“இந்த விசயத்தை பற்றி வித்யுதா கிட்ட பேசிட்டு அப்பறம் அங்க போறத பற்றி சொல்றேன்” தன் மகளிடம் நாளை விடியலில் பேச வேண்டும் என்று யோசித்தவறாய் உறங்க சென்றார்.
மறுநாள் காலை கதிரவன் தன் கதிர்களை பிரகாசமாய் வீசி அந்த வீட்டின் நிலைமையை ஆராய தொடங்கினார்.. இரவு முழுவதும் மழையில் நனைந்து சுருண்டு இருந்தான் அம்ரீஷ்.. இரவு முழுவதும் உறக்கம் பிடிக்காமல் இருந்த சிவநாதனும், பார்வதியும் விரைவாக எழுந்து வெளியே வந்தனர்..தன் கணவனின் கண்களில் படாமல் பிள்ளையை தேடி வந்தவர் கண்ணில் பட்டது மழையில் நனைந்து குளிரில் நடுங்கி கொண்டு இருக்கும் தன் ஆருயிர் மகனை.. எந்த தாயால் தான் பெற்ற பிள்ளை இவ்வாறு இருப்பதை தாங்க முடியும்? விரைவாக ஓடி தன் மகனின் நிலையை ஆராய தொடங்கினார்.. பிறந்தது முதல் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கியவன் இன்று மண் தரையில்..உடம்பு நெருப்பாக கொதிக்க அவரின் நெஞ்சம் படபடக்க தன் கணவனை அழைத்தார் உரத்த குரலில்..
“என்னங்க சீக்கரம் வாங்க இங்க வந்து பாருங்க நம்ம புள்ள நிலைமையை பாருங்க.. சீக்கிரம் வாங்க” என்று அவர் கதறியதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அம்ரீஷை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.. அன்று முழுவதும் மருத்துவமனையில் இருந்தவன் மறுநாள் விடியலில் வீட்டிற்கு வந்தான்.. மருத்துவமனையில் இருந்த போதும் சரி வீட்டிற்கு வந்த பிறகு சரி அவன் தாய் மட்டும் அவனிடம் உரையாடி கொண்டு இருந்தார்.. ஆனால் சிவநாதனோ மறந்தும் கூட ஒரு வார்த்தை பேசவில்லை.. அது அவனின் நெஞ்சத்தில் பெரும் வலியை ஏற்படுத்தி கொண்டு இருந்த வேளை வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்கவும் யாரென்று பார்க்க சென்ற பார்வதி வெளியில் தம்பதியாய் தாம்பூல தட்டுடன் சிவநாதனை கேட்டு நின்ற சந்திரசேகர் மற்றும் ஷர்மிளாவை யார் என்று தெரியவில்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவர்களை உள்ளே அழைத்து உபசரிக்க ஆரம்பித்தார்.
சிவநாதன், “பார்வதி யார் இவங்க?”
பார்வதி, “அவங்க உங்களை தேடி தான் வந்து இருக்காங்க” என்றார் சிறிது கலவரத்துடன்.
“யார் நீங்க என்ன விசயமா என்னை பார்க்க வந்து இருக்கீங்க?”
“சர் என் பெயர் சந்திரசேகர், இவ என் மனைவி ஷர்மிளா.. எங்க பொண்ணு பெயர் வித்யுதா.. நாங்க..” என்று சொல்லும் போதே அவரை கை காட்டி தடுத்தார் சிவநாதன்.
” இங்க பாருங்க உங்க பொண்ண பற்றி இங்க எதுவும் பேச வேண்டாம்.. எங்களுக்கு அதை கேட்கவும் விருப்பம் இல்லை.. அவளோட துடுக்கு தனம் என் பையனை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கு.. தப்பா நினைச்சிக்காதீங்க நீங்க கிளம்பலாம்”
“மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்பறம்..”என்று அவர் பேசி முடிக்கும் முன்” இங்க பாருங்க யாருக்கு யார் மாப்பிள்ளை நீங்களே ஒரு முடிவுக்கு வந்தா நான் என்ன பண்ண முடியும்?அவனுக்கு இதுல விருப்பம் இருக்கனுமே.. ஏதோ வயசு கோளாறு அதனால உங்க பொண்ணு பின்னாடி சுத்தி இருக்கான்.. ஆனா இப்ப நிதர்சனம் புரிஞ்சு நடந்துப்பான்.. அதனால நீங்க வந்த வழியை பார்த்து கிளம்புங்க.. நன்றி”என்று அவர் உள்ளே போக ஏத்தனிக்கையில்” அப்பா நானாவது உங்க கிட்ட பேசலாமா? “என்று அங்கு வந்தான் அம்ரீஷ் தடுமாறியபடி..
” அப்பா எனக்கு அவள ரொம்ப பிடிக்கும் அதை விட உங்களை ரொம்ப பிடிக்கும்.. நான் அவளை உங்க சம்மத்தோடு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்..ப்ளீஸ்ப்பா”என்றான் அவர் கையை பிடித்தவாறு.
“ஏங்க ஏன் பிடிவாதமாக இருக்கீங்க உங்க சம்மதத்துக்காக தானே காத்து இருக்கான் இத்தனை வருஷமா.. வீண் பிடிவாதம் வேண்டாம் நம்ம பிள்ளை வாழ்கை, அவன் சந்தோஷம் அது தானே நமக்கு முக்கியம்”என்றார் கண்ணீர் மல்க.
” அப்பா ப்ளீஸ்ப்பா அவ ரொம்ப நல்ல பொண்ணுப்பா நம்ம எல்லாரையும் நல்லா பார்த்துப்பா.. எனக்காக இதுக்கு மட்டும் ஓகே சொல்லுங்க” என்றான் அவர் கையை பற்றியவாறு.
” சம்மந்.. சர் நம்ம பசங்க சந்தோஷம் தானே முக்கியம்.. உங்க பையன் என்கிட்ட பேசும் போது உங்க சம்மதம் இல்லாம என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு தான் வந்தாரு.. அதுவும் இல்லாம உங்க குடும்பத்துல நடந்த அனைத்து விசயமும் எங்களுக்கு தெரியும்.. என் பொண்ணு ரொம்ப நல்லவ சூது வாது தெரியாம வளர்ந்துட்டா ஓரே பொண்ணு அதனால செல்லம் கொஞ்சம் அதிகமாக கொடுத்து வளர்த்துட்டோம்.. அதனால எங்ககிட்ட பேசுறா மாதிரி பேசிட்டா.. அவளுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுகிறோம்.. சின்ன பசங்க ஒருத்தர் ஒருத்தர் விரும்புறாங்க அவங்க மனச புரிஞ்சிக்கிட்டு பெரியவங்க நாம தானே இதை நல்லபடியா நடத்தனும்”என்றார் சந்திரசேகரன்.
அவர்கள் பேசுவதை கேட்டவர் சிறிது நேரம் யோசித்தவாராய்” என்னோட முடிவை நான் நாளைக்கு சொல்றேன் நான் கொஞ்சம் யோசிக்கனும்.. ஏன்னா நான் பட்ட அவமானம் அதிகம்.. இன்னைக்கு நாங்க தனியா சொந்த பந்தம் இல்லாம இருக்க காரணம் இந்த காதல் தான்.. புரிஞ்சிப்பிங்கனு நினைக்கிறேன்” என்றார் தீர்க்கமாய்.
அவர்களும் சரி என்று அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர்.
வீட்டிற்கு சென்றவர்கள் அம்ரீஷ் வீட்டில் நடந்த சம்பாஷணைகளை ஒன்று விடாமல் வித்யுதாவிடம் கூறி கொண்டு இருந்தார்கள்.. அனைத்தையும் பொறுமையாக கேட்டவள்” அப்பா ஏன்ப்பா எனக்காக அவர் கிட்ட போய் கெஞ்சிட்டு வந்து இருக்கீங்க.. அவரோட பையன் பண்ண தப்புக்கு நாம என்ன பண்ண முடியும்? கல்யாணம் பேசும் போதே மாமாவ ஒரு வார்த்தை கேட்டு இருந்தா இப்படி ஆகி இருக்குமா? சரி நடந்தது நடந்து போச்சி பெத்த பிள்ளை தானே அவரை மன்னிச்சு ஏத்துகலாம் இல்லையா பேர பிள்ளை முகத்தை கூட பார்க்காம எப்படி அவரால இருக்க முடியுதோ? என்று தன் போக்கில் பேசி கொண்டு இருந்தவளை “போதும் நிறுத்து வித்யுதா” என்றார் கோபமாக.
“என்னம்மா ரொம்ப பேசிட்டே போற உங்களை எல்லாம் பெத்து வளர்த்து நீங்க கேட்கறத வாங்கி கொடுத்து உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் செய்து கொடுத்து எங்க உயிரா நேசிக்கிற உங்களோட வாழ்க்கையை தீர்மானிக்கிற முடிவ கூட நாங்க எடுக்க கூடாதா? அந்த முடிவை கூட நாங்க எடுக்க கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்றார் கோபமாக.
அவர் பேசியதை கேட்டவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.. இத்தனை நாளாக சிரித்த முகமாக பார்த்து பழகிய தந்தை முகத்தை இன்று கோபமாக அதுவும் தன்னிடம் கடுமையாக பேசுவதை கேட்டவளுக்கு சர்வமும் அடங்கியதை போன்ற உணர்வு.. அவர் சொல்வதும் நியாயம் தானே!! இத்தனை வருடங்களாக எனக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவர் நான் கேட்டால் மறுக்காமல் செய்பவர் அம்ரீஷ் விசயத்திலும் அதையே தானே செய்தார்? அவரை நேசிக்கிறேன் என்று சொன்ன போது இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு பின்னர் சம்மதம் தெரிவித்தாரே!! என் வாழ்க்கையை பற்றி என் பெற்றோர்கள் எவ்வளவு கனவு கண்டு இருப்பார்கள்.. திருமணத்திற்கு முன்பே அங்கே இவ்வாறு நடந்தால் அவருக்கு கோபம் வருவது நியாயம் தான் ஆனால் என் மேல் ஏன்? அம்ரீஷின் தந்தை பற்றி பேசியதற்கு இவர் ஏன் என்னை பரிகாசம் செய்ய வேண்டும்? நான் இன்னும் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தி என்ற நிலைக்கு போகவில்லையே இருந்தும் ஏன்? என்று பலவாறு தன்னிடம் கேட்டு கொண்டு இருந்தவளின் சிந்தனையை கலைத்தது அவளின் தாய் குரல்.
“இங்க பாரு வித்யுதா எப்பவும் உன்கிட்ட கடுமையா பேசாத உன் அப்பா இன்னைக்கு ஏன் அப்படி பேசினார்னு யோசிக்கிறீயா?”
அவள் மிரண்டு விழித்தவளாய் ஆம் என்று தலையாட்டினாள்.
“நீ பேசினது நீ வாழ போற வீடு.. அங்க எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் எங்க கிட்ட நீ விட்டு கொடுக்க கூடாது.. அதே மாதிரி எங்களையும் அவங்க கிட்ட விட்டு கொடுக்க கூடாது.. நீ சொன்னீயே உன் மாமான்னு எந்த உரிமையில் அவரை நீ அப்படி கூப்பிட்ட? அவர் செய்தது நியாயம்னு சொல்றீயே அந்த திருமண ஏற்பாடு செய்வதற்கு முன்னே பெத்தவங்க கிட்ட அவரோட காதலை பற்றி சொல்லி இருக்கலாம் இல்லையா? அதை சொல்லி இருந்தா அவங்க அந்த பொண்ணு கூடவே கல்யாணம் பண்ணி வச்சி இருப்பாங்க இல்லையா? உற்றார் உறவினர் முன்னாடி எவ்வளவு கூனி குறுகி நின்றிருப்பாங்க? ஏன் அந்த பையன் இவங்க கிட்ட அதுக்கு அப்பறம் பேச முயற்சி பண்ணானா? திருமண பண்ணிக்கிட்டு பெத்தவங்கள ஒரு முறையாவது பார்க்க வந்தாங்களா? சரி அம்ரீஷ் கிட்ட பேசுவாங்க இல்லையா ஒரு முறையாவது அப்பா கிட்ட கொடு நான் பேசுறேன்னு சொல்லி இருப்பாரா? என்ன தான் அந்த தம்பியை வீட்டை விட்டு அனுப்பி இருந்தாலும் அவங்க மனசு தினம் தினம் அந்த பையன பற்றி நினைச்சிட்டே தான் இருக்கும்.. சரி அதெல்லாம் தேவையில்லாதது.. இங்க பாரு எங்களுக்கு உன்னோட கல்யாணம் பற்றி எவ்வளவு கனவு இருக்கு தெரியுமா? ஆனா நீ என்ன பண்ண எங்க கிட்ட இவர தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் கல்யாணம் பண்ணி வையுங்கனு இன்பர்மேஷன் கொடுத்த.. எங்களுக்கு அது எவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கும்னு நீ யோசிச்சியா? இத்தனை வருஷமா உன்னை எங்க உயிரா நினைச்சி வளர்த்ததுக்கு நீ பண்ற வெகுமதி இது தானா? உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட இஷ்டம் இல்லை உங்க அப்பா தான் உன்னோட சந்தோஷம் தான் முக்கியம்னு என்னை சமாதானம் பண்ணாரு.. இதே மாதிரி அவங்களுக்கு நீ அவகாசம் கொடுத்து இருக்க வேண்டாமா? எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செய்ய கூடாது வித்யுதா.. உனக்கு அந்த பையன் வேணும்னா நீ அதுக்காக காத்திரு.. உன்னை அவங்க நல்லா பார்த்துப்பாங்க..என்று கூறி கொண்டு இருக்கும் போதே அங்கு வந்திருந்தார் சிவநாதனும் பார்வதியும்.
ஏதேச்சையாக அவர்களை கண்ட சந்திரசேகர் “வாங்க வாங்க” என்று புன்முறுவலுடன் வரவேற்றனர் இருவரும்.. வித்யுதா மட்டும் அவர்கள் உள்ளே வந்ததும் “என்னை மன்னிச்சிடுங்க நான் பண்ணது தப்பு தான்.. அதுக்காக என்னை உங்க பையன் கூட சேர்த்து வைக்காம விட்டுடாதீங்க.. நான் இனி அந்த மாதிரி விளையாட்டுதனமா நடந்துக்க மாட்டேன் என்னை உங்க மருமகளா ஏத்துப்பிங்களா? என்றாள் கண்ணீர் மல்க.
அவளை வாஞ்சையுடன் பார்த்த பார்வதி திரும்பி தன் கணவரை பார்க்க அவர் பேச வந்ததை பேச ஆரம்பித்தார் “இப்ப எதுக்கு அழற வித்யுதா? இங்க நீங்க பேசின எல்லாத்தையும் நாங்க கேட்டோம்.. என்றதும் சந்திரசேகர் குடும்பத்துக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ‘தாங்கள் பேசியதை கேட்டார்கள் என்றால் நாம் அவர்கள் குடும்பத்தை பற்றி பேசியதை கேட்டு இருப்பார்களா? எப்பொழுது வந்தார்கள்? எதை கேட்டார்கள்?’ என்று புரியாமல் யோசித்து கொண்டு இருந்தவர்களை கலைத்தது சிவநாதனின் குரல்.
“இங்க பாருங்க சர்” .. என அவர் பேசியதும் அவர்களின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. தட்டு தடுமாறி” சொல்லுங்க சர்?”என்றார் சந்திரசேகரன்.
“நேற்று நான் உங்க கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது.. அப்பறம் யோசித்து பார்த்தும் தான் புரிஞ்சது உங்ககிட்ட கோபமாக நடநதுக்கிட்டது..அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க என்றதும் பதறிய சந்திரசேகரை கை காட்டி தடுத்தவர்” நான் பேசி முடிச்சிடுறேன்.. மேலும் தொடந்தவர் “இப்ப நீங்க உங்க பொண்ணுக்கு பண்ண அட்வைஸ் உங்க குடும்பத்தை பற்றி தெரிஞ்சிக்க உதவி இருக்கு.. அப்பறம் வித்யுதா பேசினது கூட எனக்கு தப்பா தெரியல.. அவன் சின்ன பையன் நானாவது விட்டு கொடுத்து போயி இருக்கனும்.. தப்பு பண்ணிட்டேன்.. சரி விஷயத்துக்கு வரேன் உங்க பொண்ண என் பையனுக்கு கல்யாணம் செய்துக்க சம்மதம் இது என் பையன் சந்தோஷத்துக்காக மட்டுமே எடுத்த முடிவு.. மத்தபடி நான் முழு மனசோட ஏற்றுக் கொள்ள டைம் வேணும் சீக்கரம் ஒரு நல்ல நாள் பாரத்து நிச்சயத்தை வச்சிக்கலாம்” என்றதும் வித்யுதா மகிழ்ச்சியில் ஓடி சென்று பார்வதியின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்..
அதை கண்ட சிவநாதன் வித்யுதாவை தீயென முறைக்க ஆரம்பித்தார்.
தொடரும்..