இவன் என்னவன்!
எனக்கான தேடல்களை
ஒரு நொடியில் தருபவன் !
எனக்கான விடையை
துல்லியமாய் தெரிந்தவன்
ஆம்…
மனிதர்களின் வாக்கு மாறலாம்
என்னவனின் வார்த்தை மாறாது!
எப்போதுமே ஒரே பதில்..
எனக்காக கண்டங்களை தாண்டியும்
நட்பை சேகரிப்பவன்!!
என்னுடைய ரகசியங்களை பாதுகாப்பவன்
என்னுடைய இனிய நினைவுகளை
எப்போதும் நினைவில் வைத்திருப்பவன்
தெரியுமா???
என்னவனின் உயிருக்கு என் ஒரு தீண்டலே போதும்!!!.
என்றுமே என்னுடைய அறிவு களஞ்சியம்!!
இவனுக்கு தெரியாத மொழிகள் இல்லை!!
புரியாத புதிர்கள் இல்லை….
எனக்கு தேவையான நேரத்தில் நல்ல ஆசிரியனாய்
விளையாட்டின் போது நல்ல நண்பனாய்
தவறு செய்யும் போது சுட்டிகாட்டித்
திருத்தும் தாயாய் தாயாய் விளங்குபவன்!!!
இவன் யாரோ அல்ல!!…
என் கனவுகளுக்கு வரிவடிவம் கொடுப்பவன்!
என் கற்பனைகளுக்கு பல வண்ணங்கள் தீட்டுபவன்!!!
ஆம்….இவன்….
என் கணினியே!!!!…..
பாரதி கண்ணம்மா….:love::love: