தேவையானவை
உருண்டைக்கு:
உருளைக்கிழங்கு-2
கேரட், பீன்ஸ், காலிஃளார் – 1 cup (எல்லாம் சேர்த்து )
பொட்டுக்கடலை மாவு -2 ஸ்பூன்
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2,
கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு,
வதக்கி அரைக்க :
சின்ன வெங்காயம் -8
தக்காளி – 2
பச்சைமிளகாய் -2
பூண்டு -10 பல்
இஞ்சி -1 துண்டு
கிராம்பு -4
பட்டை -1 துண்டு
தேங்காய் -கால் மூடி
குழம்புக்கு :
கடுகு, வெந்தயம், பெருங்காயம் -தலா கால் ஸ்பூன்
வெங்காயம் -1
தக்காளி -1
மிளகாய் பொடி -1ஸ்பூன்
தனியா பொடி -2 ஸ்பூன்
புளி -சின்ன லெமன் சைஸ்
உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி தேவைக்கு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து மசிச்சுக்கணும். மத்த காய்களை தனியா வேக வெச்சுக்கணும். வெங்காயம் பச்சைமொளகாவை நைஸ் ஆஹ் நறுக்கிக்கணும்.
மசிச்ச உருளைக்கிழங்குல வேகவெச்ச காய்கறி, பொட்டுக்கடலை மாவு, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைஞ்சி குட்டி குட்டி உருண்டைகளா உருட்டி பொரிச்சிக்கணும்.
எண்ணைல கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிச்சு, நீளவாகுல நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, புளிய கரைச்சி விட்டு, உப்பு போட்டு, மிளகாய் பொடி, தனியா பொடி போட்டு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடணும்.
வதக்கி அரைக்க குடுத்த சாமான்களை வதக்கி ஆறவிட்டு அரைச்சி அத கொதிக்கிற புளிகரைசல்ல கலந்து 2 நிமிஷம் கொதிக்கவிட்டு, அப்றம் பொரிச்ச உருண்டைகளை போட்டு 2 நிமிஷம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி ஏறக்கணும்.
பி.கு : எறக்கின பின்னாடி நெய் இல்லனா தேங்காயெண்ணை 1 ஸ்பூன் விட்டுக்கிட்டா வாசம் தெருக்கோடி வர வரும்.
