Home Blog Page 11
Chebaஃபாரூக் வீட்டில் தீதீ பாடலைக் கேட்டு முடிக்கவும் கரண்ட் கட்டாகவும் சரியாக இருந்தது. ஃபாரூக்கின் அம்மா ஏலக்காய் டீயும், காலி ஃப்ளவர் பக்கோடாவும் கொண்டு வந்து தந்து சாப்பிட சொன்னார். அரட்டை அடித்தபடி பகோடாக்களைக் கொறித்து டீ குடித்து முடித்து அரட்டையைத் தொடர ஒரு மணித்தியாலம் கடந்ததே தெரியவில்லை. “டேய் ஃபாரூக் கிளம்புடா மணி நாலேகால் ஆச்சு,...
El Arbiஎன்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் செவிக்கு அறிமுகமான இசைக் கலைஞர் அவர்.“காலேத் ஹட்ஜி இப்ராஹிம்” என்று அவருடைய முழுப் பெயரை சொன்னால் “யார் அவர்?” என பலர் கேட்பார்கள். காலேத் என்றால் “ஓ அந்த அரபிக் மொழியில் பாடும் பாடகரா?” என்று பலர் சொல்வார்கள். காலேத் அல்ஜிரியா நாட்டில் உள்ள ஓரன் என்ற பிராந்தியத்தில் 1960 ஆம் வருடம் பிறந்தார்....
Infinite Love திரைப்பட இசை தவிர்த்து ரஹ்மான் அவர்கள் ஆல்பங்களுக்கு நிறைய இசையமைத்திருக்கிறார். அதிலும் சில பரீட்சார்த்த முறையிலான மாறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். கேஸட், ஸிடி போன்ற வழமையான பாணியில் இல்லாது டிஜிடல் தரவிறக்கம் என்னும் கோட்பாட்டின் கீழ் மொபைல் போனுக்காக பிரத்தியேகமாக அவர் இசையமைத்த பாடல் “Pray for me Brother” .
Only U ஏற்கனவே இதற்கு முந்தைய அத்தியாயம் ஒன்றில் ரஹ்மான் அவர்களின் தமிழ் திரைப்பட இசை அல்லாத அவரின் இசை ஆல்பம் குறித்து பார்த்தோம். அந்த அத்தியாயத்திலேயே நான் ரஹ்மான் அவர்களின் ஆல்பம் இசை தொடர்பாக மேலும் பார்ப்போம் என்றேன். இந்த “Only U ” அத்தியாயம் அந்த வகையறா தான்! தமிழ் மற்றும் ஹிந்தித் திரைப்படங்களுக்கு...
மெய்ஞானம் தானே!“நதியிசைந்த நாட்களில்”… என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருவது ஹிந்தி பாப் என்ற களம் தொடர்பானது என யாரும் நினைக்க வேண்டாம். தமிழகத்தைப் பொறுத்த வரை இசை, பாடல்கள் என்றாலே திரைப்பட இசை மற்றும் பாடல்கள் என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, சுஃபி, சாஸ்திரிய சங்கீதம், நாட்டுப்புற பாடல்கள் (Folk) நீங்கலாக பிற தளங்களில் புழங்கும் இசை பற்றி எழுதுவதே என்...
Kaisa Lagta Hain லெஸ்லி லிவிஸ் என்னும் இசைக்கலைஞர் ஹரிஹரனுடன் இணைந்து கலோனியல் கஸின்ஸ் என்ற பெயரில் ஹிந்தி பாப் இசை ஆல்பங்கள் வெளியிட்டதன் மூலம் எனக்கு அறிமுகமானார். முதல் கஸின்ஸ் ஆல்பம் வந்த போதே அவரின் மற்றொரு தனி ஆல்பத்தின் பாடல்களும் M TV க்களில் ஒளிக்க (ஒலிக்க) ஆரம்பித்தன. ஆஷா போஸ்லே அம்மாவுடன் இணைந்து...
Oh ho Kaizala… பிடித்தமான இன்னொரு ஹிந்தி பாப் இசைக் கலைஞரைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். பொதுவாக ஒருவரைப் பற்றி இத்தொடரில் எழுதும் போது துவக்கத்தில் அவரைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுவேன். அடுத்து அவரது ஆல்பங்கள் பற்றி எழுதுவது என் வழக்கம். இந்த அத்தியாயத்தின் நாயகர் குறித்து எழுதுவதில் சின்ன மாற்றம். இசை நாயகர் பற்றிய விஷயங்களை அடுத்த அத்தியாயத்தில்...
Mubarakaanஇந்தியாவில் இருக்கும் பாப் இசை, இந்தியாவில் பரிச்சயமான ஹிந்தி பாப் இசை… பிரத்தியேகமாக இக்களத்திற்கென்று சில கம்போஸர்களும், பின்னணிப் பாடகர்களும் இருக்கிறார்களா? சிலர் தவிர்த்து பெரும்பாலானோர் திரைப்பட இசை என்னும் களத்தில் இல்லையா? திரைப்படத்திற்கு இசையமைப்பவர்கள், திரைப்படப் பாடல்களுக்கு பின்னணி பாடுபவர்கள் பாப்பில் ஆளுமை செலுத்தவில்லையா? எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டு. பாப்பில் அறிமுகமாகி பிரபலமாகி பின்னர் திரை இசைக்கு போனவர்கள் நிறைய. திரைப்படங்களுக்கு இசையமைத்து...
பகுதி – 6 சிறு வயதில் ஊரிலிருந்து தாத்தா பாட்டி வருகிறார்கள் என்றாலே குஷி தான். அவர்கள் ரயிலில் தான் வருவார்கள். அது காரணமா எனத் தெரியவில்லை. ரயில் என்றாலே உற்சாகம் மேலிடும். ரயில்வே ஸ்டேஷனில் புழங்கும் பலதரப்பட்ட மக்கள், பிளாட்ஃபார்ம், ஸ்பீக்கரில் வழிந்தோடும் அடுத்து புறப்படவுள்ள ரயில் பற்றிய அறிவிப்பு, தின்பண்டங்கள் மற்றும் தேநீர் விற்பனை...
ரிமீக்ஸ் என்பதும் திரைப்படப் பாடல்களில் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. துவக்கத்தில் திரைப்படப் பாடல்களை இவ்வடிவத்தில் மாற்றி இசைத்தாலும் அது தனி கேஸட்டாகத் தான் வெளி வந்தது. தற்போது திரைப்படங்களிலேயே அந்தப் பாடல்களும் இடம் பிடிக்கத் துவங்கிவிட்டன. ரீமிக்ஸ் என்றாலே ஆதிமூலப் பாடலை சிதைக்கும், சீரழிக்கும், கொடூரமான அனுபவத்தைத் தரும் என்பதே பொதுவான அபிப்பிராயமாக ஜனங்களில் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டது. இதை...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!