Home Blog Page 33
இரண்டு ஜோடிகளும் காதலை உணர்ந்தும் அதை ஏற்காமல் ஆடும் கண்ணாமூச்சியில்வலி தான் நிறைந்து இருந்தது நால்வருக்கும்..காதல் இத்தனை கொடுமையானதா என்று எண்ணுமளவிற்கு.. சிவவோ கடந்த காலத்தைநினைத்து காதலை ஏற்க மறுக்க.. ஆதவ்வோ ஜானு நாளுக்கு நாள் அவனிடம் உரிமையில் முன்னேற ஆதவ் காதலை தன் நண்பனுக்காக துறக்க முடிவு செய்துள்ளான்.. காரிலே பயணம் செய்து கொண்டிருந்த ஆராவும்...
ஆரா தன் காதலை தெரிவித்த பின் சிவாவின் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாததை கண்டு திடுக்கிட்டாள்.. இருந்தும் அவளே மீண்டும் பேச ஆரம்பித்தாள்… ஆரா,"என்னங்க நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்.. நீங்க ஏதும் சொல்லாம இருக்கீங்க…" சிவா இறுகிய முகத்துடனே,"என்ன சொல்ல சொல்ற… என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு??? இன்னைக்கு உன் முன்னாடி இருக்க...
மின்னல் கீற்றாய் வந்தஉன் நயணபார்வைமறத்து போன என்இதயத்தையும்இடியென தாக்குதடிகள்ளியே உன் விழியின்மொழியில் ஆயிரம் அர்த்தங்கள்அறிந்தேனடி நான்.. உன் விழியால் என்னைகளவாடி சென்றகள்வனேஉன்னை சிறைபிடிக்கவேண்டுமென்றால்ஆயுள்முழுதும்சிறைபிடிப்பேன்என் இதயக்கூட்டில்… இருவரும் விழியோடு காதலை பரிமாற்றம் செய்ய…சற்றே சுதாரித்த சிவா அவளை விடுவித்துவிட்டு நின்றான்… அவளுக்கும் வெட்கம் பிடுங்கி திங்க தயங்கியவாறே சாரி.. என்றுரைத்துவிட்டு நகர அவளை சீண்ட வேண்டுமென்றெண்ணியே,"அது என்ன எப்ப...
ருத்ரா சிவாவின் ஆபிசில் இருந்து கோவமாக வெளியே சென்றவள்…. நேராக அவளது பீச் ஹவுஸ்க்கு செல்ல அவளை பின்தொடர்ந்த அந்த காரும் பீச் ஹவுஸ் சென்றது… உள்ளே சென்ற அவள் வெறிப்பிடித்தது போல் அங்கிருந்த பொருள்களை எல்லாம் எடுத்து வீசிக்கொண்டிருந்தாள்… அங்கிருந்த நிலைகண்ணாடியில் அவளது முகம் தெரிய… நீ தோத்துட்ட.. அந்த சிவா கிட்ட நீ தோத்துட்ட என்று கத்திகொண்டே பூச்சாடியை...
சிவா ஆராவின் நினைப்பிலேயே தன் அலுவலகத்தில் வலம் வர… ச்ச இப்படி அவ நினைப்புலயே இருக்கறதுக்கு பதிலா அவளுக்கே போன் பண்ணி எப்படி இருக்கானு கேப்போம்னு யோசிச்சவன்.. தன் அலைபேசியை எடுத்து ஆராவிற்கு அழைக்க எதிர்முனை பிஸி என்று வர மீண்டும் இருமுறை அழைக்க திரும்பவும் அதே போல் வர கடுப்புடன் மொபைலை டேபிளின் மீது எறிந்தவன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள அருகில் இருந்த கிளாசில்...
ஜானுவின் உடைந்த மனத்தை பாத்தவுடன் ஆதவ்வும் உடைந்து தான் போனான் என்றே சொல்ல வேண்டும்.. ஜானு முதன் முதலாக தன் காதலை அவனிடம் சொன்ன போதே தன் நண்பனின் நிலையை அறிந்து தன் மனதை அடக்கியவன் ஆயிற்றே..இன்று அவளின் கலங்கிய முகம்நோக்கியவுடன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ என்ற குற்ற உணர்வு தோன்ற அவளை சமாதானப்படுத்த சற்று தூரத்தில் அமர்ந்திருந்தவளின் அருகில்...
ஜானு தன் அண்ணன் சொன்ன மாதிரி ஆராவை அழைத்துக்கொண்டு அவளுக்கு தேவையானவற்றை செய்துவிட்டு அவளை ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள்… இனியனும்,ஜானுவும் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு அவளை ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திருப்பிருந்தனர்… ஆரா என்ன தான் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாலும் சிவாவின் கோர்ட்டை அவளுடனே வைத்திருந்தாள் அதில் அவளுக்கு தன்னவனுடன் இருப்பது போன்ற உணர்வு… அவளின் மன...
என் வாழ்வில்புயலாகி விடுவாயோஎன்று எண்ணிஉன்னை விட்டு விலகும்போதெல்லாம்நீ தென்றலாக மாறிஎன் மனதைஉன் பால் ஈர்க்கின்றாயடிபெண்ணே…… உனக்கும் எனக்குமானஇந்த யுத்தத்தில்ஆயுதம் இன்றிஉன் விழியாலேஎனை வெல்கிறாயடி !!!! ஆராவின் அலறலை கேட்டவன் தன்னையும் மறந்து சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.. தூரத்தில் அவள் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்க பதறியடித்து கொண்டு ஓடியவன், அவளை...
சிவாவோ ஆராதனைவை ஓரக்கண்ணால் பாத்தபடியே மொபைலில் மூழ்கியிருக்க ஆராதனாவோ ஆதவிடம் அன்று நடந்த பிரச்சனையை பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள். ஆரா,"ஏன்னா அன்னிக்கு யார் ஆக்சிடெண்ட் பண்ணங்கன்னு கண்டு பிடிச்சுட்டீங்களா" ஆதவ்,"இல்லமா ஒரு சில பேரு மேல சந்தேகம் இருக்கு யாருன்னு இன்னும் கண்டு புடிக்கல" ஆரா,"உங்க கிட்ட ஒன்னு கேட்கவா, தப்பா நினைக்கமாட்டீங்கல"
ஆமாம் சிவா கணித்தது போலவே இந்த விபத்தில் பின்னணியில் ருத்ரா இருக்க அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தான்… இதனிடையில் அவனுடைய அலைபேசி அடிக்க தொடுதிரையில் வந்த பேரை பாத்தவுடன் கடும் கோபத்தினூடே அழைப்பை ஏற்க… எதிர்முனையில் ருத்ரா,"என்ன சிவா உன் ஓர்க்கர்க்கு ஒண்ணுன உடனே துடிச்சு போயிட்டாயா இப்போ தெரிஞ்சுருக்குமே எங்களை பகச்சிக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு" நக்கலாக சொல்ல

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!