சென்ற சிறுகதைக்கு நீங்கள் அளித்த ஆதரவை நம்பி மீண்டும் ஒரு புதிய முயற்சி .
(நமக்கு சம்பந்தமே இல்லாத கனவு வரும்ல.அது சம்பந்தமா ஒரு கற்பனை அவ்ளோ தான்ங்க .)
2111–ஆம் ஆண்டின் துவக்கத்தில் அமைதியான அந்த வீட்டின் படுக்கை அறைக்குள் சிவப்பு நிற கண்ணாடி பெட்டி பச்சை நிற விளக்குடன் மென்மையான ஒலியை எழுப்ப அதன் கதவுகள் தானாக திறந்து கொள்ள உள்ளிருந்து ஒரு அழகான பெண் வெளியே வந்தாள் .
நேராக குளியறை சென்று தனக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி தன் உடலை சுத்தப்படுத்தி கொண்டு சமையல் அறைக்குள் சென்று அன்று அவளுக்கு கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை பயன்படுத்தி சமைத்து பிறகு சாப்பிட்டு விட்டு அலுவலகத்தில் அணிய வேண்டிய சிறப்பு உடையுடன் காத்திருக்கும் போது அவள் வீட்டு வாசலில் ஒரு வாகனம் வந்து நின்றது .அவள் அதன் கதவருகே வந்ததும் அவள் விழிகள் பரிசோதிக்கப்பட்டதும் புறப்பட்டது.
சாலைகள் நான்கு அடுக்குகளாய் ஒன்றின் மீது ஒன்று அமைக்கப்பட்டு எந்தவிதமான இடையூறும் இன்றி தனக்களிக்கப்பட்ட வேகத்தில் பயணித்து கொண்டு இருந்தது .வாகனங்களில் ஓட்டுநர் கிடையாது தானாய் இயங்க கூடியவை .அந்த பெண் அலுவலகம் வந்ததும் அவளுடைய அடையாளங்களை இயந்திரங்கள் சரி பார்த்தவுடன் தன்னை போன்ற மனிதர்களிடம் கலந்து பணிபுரிய தொடங்கினாள் .அவளுடைய உடையில் YH5656127845 என்று எழுதி இருந்தது .அவளை எல்லோரும் அப்படியே அழைத்தார்கள்.எல்லோருக்கும் அதே போன்ற அடையாளம் வழங்கப்பட்டிருந்தது.அலுவலகத்தின் ஓய்வு மணி ஒலிக்க அனைவரும் அந்த இரண்டு மணி நேர ஓய்வுக்கு திரும்பும் போது அவளுடைய நெருங்கிய தோழியிடம் பேச தொடங்கினாள் .அப்போது “எனக்கு ஏதோ மாதிரி இருக்கு.நினைவுகள் சிதறுது.சரியான நேரம் தூங்க முடியல .என்ன பண்றதுன்னு தெரியல”என்றதும் அவள் தோழி”இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சதும் ஆஸ்பிட்டல் போயிட்டு போலாம் “என்றபடி இருவரும் தனக்கான பெட்டிக்குள் சென்றதும் கதவுகள் அடைப்பட்டு உறங்கி போனார்கள் .இரண்டு மணி நேரம் உறங்கி போனார்கள் .
அலுவலகம் முடிந்தவுடன் இருவரும் மருத்துவமனையில் இறங்கி அங்கிருந்த திரையில் எந்த மருத்துவர் தற்போது தங்களை பார்க்க தயாராக இருக்கிறார் என்று தேடினர் .இறுதியில் ஒருவரை கண்டுபிடித்து அவருடைய நம்பரை அழுத்தியதும் அவர் பச்சை நிற ஒளியை எழுப்பி வரும் படி அழைத்தார் .அந்த அறைக்குள் நோயாளிக்கு மட்டுமே அனுமதி தோழி காத்திருந்தாள் .மருத்துவரிடம் தன்னுடைய பிரச்சினைகளை சொன்னாள் .அவர் அவளுடைய மூளை பகுதியில் ஒரு இயந்திரத்தை பொருத்தி அவளுடைய நினைவுகளை பரிசோதித்துவிட்டு”உனக்கு ரோம்ப வினோதமான பிரச்சனை இருக்கு.உன்னோட நினைவுகள் இந்த உலகத்துல இல்ல.
ரோம்ப பின்னோக்கி இருக்கு.எனக்கே அதேல்லாம் புதுசா இருக்கு.இது வரமா?இல்ல சாபமா?தெரியல .நான் இந்த நினைவுகளை உன் மூளையில் இருந்து அழிச்சிடுறேன்.ஆனா மறுபடியும் திரும்ப தோன்றினாள்.என்னையே வந்து பார்க்க அனுமதி தர்றேன் “என்று அவள் கையில் தன்னோட அடையாள எண்ணை தந்து அனுப்பி வைத்தார் .இரண்டு நாட்களுக்கு பிறகு அதே நினைவுகள் திரும்ப வர மருத்துவரை நாடி வர அவர்”இதை சரி பண்ணனும்னா நீ அந்த நினைவுகளை பின் தொடர்ந்து போகணும் .என்ன பிரச்சனைன்னு பாத்து சரி பண்ணிட்டு வரணும் .இங்கிருந்து போக உனக்கு அனுமதி கிடைக்காது .உன்னோட உணர்வுகளை ஊடுறுவ செய்யலாம் .உடம்பு உறக்கத்தில் தான் இருக்கும் .எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் திரும்பி வந்திரணும்.இல்லைன்னா நீ திரும்பவே முடியாது.நீ திரும்பலைன்னா எனக்கும் பிரச்சனை.நாளைக்கு உன் வீட்ல நீ தூங்கியதும்.அந்த நினைவுகள் தோன்றியதும் உன்னுடைய மூளையோடு இணைந்து உன்னுடைய உணர்வுகளை நான் அனுப்புறேன் .”என்றவர் அவளுடைய மூளையை தன்னுடைய சிஸ்டத்தில் பதிந்து கொண்டார் .
அவள் இரவு தன்னுடைய பெட்டிக்குள் சென்று தூங்கியவுடன் மூன்று மணி நேரம் கழித்து நினைவுகள் தோன்ற மருத்துவரின் சிஸ்டத்தில் அவள் மூளையில் கோடுகள் தோன்ற மருத்துவர் அந்த நினைவுகளுக்கள் அவளை அனுப்ப ஏற்பாடு செய்து பட்டனை தட்டியதும்.அந்த கோடுகளுக்குள் அவள் உணர்வுகள் கலந்து பயணிக்க ஆரம்பித்ததும் .மருத்துவர் எதையோ சாதித்துவிட்டவர் போல் பெருமூச்சோடு வீடு திரும்ப தயார் ஆனார் .
2019 ஆம் ஆண்டு .
வினோதா தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் .அப்போது ஏதோ தலை பாரமானது போன்று தோன்ற உறக்கத்தில் இருந்து விழித்தவள்.தன்னை சுற்றி இருந்த இந்த மாற்றத்தை பார்த்து முதலில் பயந்தவள்.தன்னுடைய உடல் முகம் எல்லாம் மாறி இருப்பதை உணர்ந்தாள் .நினைவுகளை பின் தொடர்ந்தவள் தற்போது இன்னோரு பெண்ணின் நினைவுகளில் கலந்திருப்பதை உணர்ந்தாள் .அப்படி என்றால் இந்த பெண்ணின் நினைவுகள் எங்கே?என்று யோசிக்கும் போது அங்கே தூக்க மாத்திரை அதிகமாக சாப்பிட்டு அந்த பெண் இறக்க முயற்சித்து கொண்டிருக்கையில் இவள் நினைவுகளில் கலந்துவிட்டதால் அவளது மூளை இவளை ஏற்றுக்கொண்டு விட்டதை உணர்ந்தாள் .ஆனால் உண்மையில் வினோதாவும் இவளது நினைவுகளில் கலந்துவிட்டது இவளுக்கு புரியவில்லை .இனி வினோதா நினைத்தால் மட்டுமே இங்கிருந்து இவள் திரும்ப முடியும் .
உறக்கத்தில் எழுந்த வினோதா நேரடியாக குளியறை சென்று ஆடைகளை கலைத்து விட்டு தண்ணீரை தேடி இல்லாது போக வால்வை சுற்றியதும் மேலிருந்து அருவியை போல் தண்ணீர் சிந்த பயந்தே போனாள் .விலகி நின்றவள் மெதுவாக தனது கைகளை நீரில் நனைத்தவள் அந்த குளிர்ச்சியில் மயங்கி உடலை முழுவதும் நனைத்து மகிழ்ந்தாள்.அறைக்குள் திரும்பி அந்த ஆடைகளை அணிய நினைத்தாள் .வினோதமான ஆடைகளாய் தோன்றியது அவளுக்கு .அப்போது அந்த அறைக்குள் வந்த ஒரு பெண் “என்னடி இப்படி டிரஸ் இல்லாம நிக்குற.விடிஞ்சா இரண்டு நாள்ல கல்யாணம் .யாராவது வர போறாங்க .டிரஸ போடு முதல்ல”என்றதும் பதிலுக்கு அவள்”எனக்கு இந்த டிரஸ் போட தெரியல”என்றவளை முறைத்து கொண்டே சுடிதார் ஒன்றை எடுத்து கொடுத்து போட்டு காட்டி “நீ ரோம்ப விளையாடுற .சின்ன குழந்தை கிடையாது நீ.இன்னோரு வீட்டுக்கு போற பொண்ணு பாத்து நடந்துக்கோ.”என்று கிளம்பினாள் .
வினோதா மெதுவாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் .வீடு முழுவதும் உறவுகளால் நிரம்பி இருந்தது .எங்கு திரும்பினாலும் சத்தம்.குழந்தைகளின் விளையாட்டு கூச்சல் .ஒரே வியப்பு அவளுக்கு .எந்த மாதிரியான உலகம் இது .இவுங்க எல்லோரும் எப்படி இணைஞ்சு இருக்க முடியுது .அவளுடைய உலகத்துல அவள் 16 வயதில் பெற்றோரிடம் இருந்து விலகிவிட வேண்டும் .தனக்கான துணையை தானே முடிவு செய்து கொள்ள உரிமை உண்டு .அதற்கு எந்த சடங்குகளும் தேவையில்லை .இணையும் போதும் ,பிரியும் போதும் பதிவு செய்தால் போதும் .ஆனால் இங்கே எத்தனை மனிதர்கள் இணைந்து வாழ்கிறார்கள் .அப்போது வினோதாவின் அப்பா”அம்மா சேலை கட்டிகிட்டு வாடா.குலதெய்வ கோயிலுக்கு போய் பொங்கல் வச்சுட்டு வரலாம் .உங்கம்மா ஏற்பாடு பண்ணிட்டு இருக்கா போய் கிளம்புடா”என்றவர் தன்னுடைய கல்யாண வேலையில் கிளம்பினார் .அடுத்து சேலை அது என்ன?அதை எப்படி போடணும்?யார்கிட்ட கேட்கறது?என்று குழம்பியவள் .அங்கிருந்த இன்னோரு பெண்ணை அழைத்து சேலையை பற்றி கேட்க”ஏன்டி இன்னும் சேலை கட்ட தெரியாதா ?சிறுக்கி மகளே.உங்காத்தா இத கூட சொல்லி தரலையோ?நாளைக்கு புருஷன் வீட்ல போய் என்னடி பண்ணுவ?என்றவள் .சேலையை கட்டி சொல்லி தந்தார் .
உறக்கம் கலைந்து பெட்டிக்குள் இருந்த YH5656127845 வெளியே வர அதிர்ந்து போனாள் .இது எந்த இடம் .ஏதோ இங்கிலிஷ் படத்தில் வருவது போல .வீட்டில் தூங்கிட்டு இருந்த நான் இங்க எப்படி வந்தேன் .பயத்தில் தேம்பி தேம்பி அழுதுவிட்டாள்.இந்த உலகம் அவளை பயமுறுத்தியது.கலங்கி போய் ஒரு மூலையில் முடங்கி போனாள் .அடிக்கடி தனது கனவில் தோன்றும் உருவங்கள் இது தானோ என்று நினைத்து பயந்து நடுங்கினாள் .
வினோதா கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழ்நிலைக்கு தன்னை பழக்கப்படுத்தினாள்.அனைவரையும் கூர்ந்து கவனித்தாள் .தன்னை தானே பரிசோதித்து கொண்டாள் .அவளுடைய உலகத்துல சூரியனை பாக்க முடியாது.சூரியனிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி இருந்தது .சேலைக்கட்டி நடப்பது அவளுக்கு சவாலான விஷயமா இருந்தது .கோயில்ல பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதும் கோயில்ல தனிமையில் சுற்றி பார்த்து கொண்டிருந்த அவளை ஒரு கை வேகமாய் அந்த இருட்டு கருவறைக்குள் இழுத்தது.அப்போது அந்த உருவம் அவளை நெருங்கி வந்து”என்னால முடியல வினோதா .நீ இல்லாம வாழ முடியல .அஞ்சு வருஷமா உன்னையே நினைச்சு வாழ்ந்துட்டு இப்ப நீ இல்லைங்கிறத ஏத்துக்க முடியல .நானும் மனுஷன் தான.நீ சொன்ன மாதிரி உன் கண்ணுல படாமல் இருக்கலாம்னு தான் கிளம்பினேன் .ஆனா முடியல .எனக்கு நீ வேணும் .உன் குடும்பத்துக்காக என்னை எதுக்கு தூக்கி வீசுற.
நானும் உனக்குள்ள தான இருக்கேன் ப்ளீஸ் “என்றவன் அழுவதை பார்த்ததும் அவளுக்கு அவன் கண்ணீர் வியப்பாய் தோன்றியதும் அவனை இறுக்கமாக கட்டியணைத்தாள் .அவனே அதை எதிர்ப்பாக்கல .அவளுக்கு காதல் ஆச்சர்யத்தை அளித்தது .அவனிடம் இருந்து விலகும் போது”உன் வினோதா உனக்கு தான்.”என்று கிளம்பினாள் .அவன் குழம்பி போய் நின்றான் .அந்த அஞ்சு வருஷத்தில் அவ இவன் முன்னாடி நின்னு பேசுனது கூட கிடையாது .இப்ப எப்டி இவ்ளோ தைரியமா கட்டி புடிக்குறா?என்று யோசித்தான்.
ஒரு தனிமையான வீட்டில் வசிப்பது அவளுக்கு புதிது .அப்போது அவள் வீட்டு கதவுகள் தானாய் திறந்தது.yh5656127845 வேலைப்பார்க்கும் தோழி அவளை பார்க்க வந்திருந்தாள்.அவளை கண்டு பயந்து நடுங்கினாள் .தன்னை பற்றிய எல்லா தகவல்களையும் சொல்லி அழுதாள் .அவளுக்கும் குழப்பமாய் இருந்தது .மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவு செய்து அவளை பற்றி யாரும் அறியாத படி அழைத்து செல்ல முடிவு செய்தாள் .
வீடு திரும்பிய வினோதாவிற்கு எல்லா விஷயமும் புரிய தொடங்கியது .அவளுடைய தற்கொலை முயற்சிக்கான காரணம் புரிந்தது .சதிஷ்–வினோதா இடையே இருந்த காதல் புரிந்தது .வினோதா நேரடியாக தன்னுடைய அப்பா,அம்மாவை அழைத்து வந்து தனியாக “என்னை மன்னிச்சுடுங்க அப்பா.இதுக்கு மேல என்னால மறைக்க முடியாது.தினம் தினம் செத்து பொழைக்க முடியாது.நான் அஞ்சு வருஷமா சதிஷ லவ் பண்றேன் .உங்கள மீறி என்னால அவன் கூட போக முடியல .அதே சமயம் அவன் இல்லாம வாழவும் முடியல .”என்றவளை அவளோட அப்பா பார்த்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தார் .
இருவரும் மருத்துவரை பார்த்து அவள் நிலையை சொல்ல அவருக்கு அப்போது தான் நடந்த மாறுதல் புரிந்தது .உடனே “கொஞ்சம் பொறுமையா இருக்கணும் .அங்க அவளும் நீயும் மறுபடியும் நினைவுகளால் இணையும் போது தான் பழைய படி மாற முடியும் .”என்றவர் அவளை தூங்க வைக்க மருந்து கொடுத்தார் .
அங்கே வினோதாவும் படுக்கையில் படுக்கும் போது சதிஷ் யாருக்குமே தெரியாமல் வந்து காத்திருந்தான் .அப்போது “இன்னும் ஒரு நாள் இருக்கு வினோதா .கடைசியாக உன்னை பாத்துட்டு போகலாம்னு வந்தேன் .நீயாவது சந்தோசமாய் இரு.கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்து போகும் “என்றவன் கண்ணீருடன் கிளம்பும் போது அவன் கைகளை பிடித்து வேகமாய் அவன் உதட்டோடு உதடு வைத்து அவனை தன்வசப்படுத்தினாள்.அவளது இணைப்பில் அதிர்ந்து போனான் .அவன் உதடுகளை விடுவித்தவள் “நாளைக்கு நான் உனக்கு சொந்தமான்னு தெரியல .இன்னைக்கு நான் உனக்கு மட்டும் தான் சொந்தம் “என்றபடி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாய் நின்றாள் .அவளை கண்ணீருடன் அணைத்தவன்”வேண்டாம் வினோதா .என் காதல் இது வரையில் மட்டும் இல்ல .நீ இல்லைன்னாலும் வாழ்ந்திருவேன்.சாகுறவரைக்கும் உன் நினைவுகள் மட்டும் போதும்”என்றவன் சேலையால் அவள் உடலை மூடிட்டு கிளம்பினான் .அவளும் சிந்திந்தப்படியே தூங்கி போனான் .ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டு நினைவுகளும் இணைய மருத்துவர் தன்னுடைய பணியை சிறப்பாய் செய்து முடித்தார் .உறக்கம் கலைந்து எழுந்த yh5656127845 தனது தோழியிடம் “எவ்ளோ அழகான வாழ்க்கை.காதல் ,அன்பு,பாசம்னு வாழ்றாங்க.அங்கேயே இருந்திரலாம் போல இருந்தது .”என்றபடி மருத்துவரிடம் நன்றி சொல்லி கிளம்பினாள் .
காலை உறக்கம் கலைந்து எழுந்த வினோதாவின் முன்பு அவளுடைய அப்பா”இதை ஏன்டா முதல்ல சொல்லாமல் விட்ட.இப்போ எவ்ளோ கஷ்டம் பாரு .எல்லாம் பேசி சரி பண்ணிட்டேன் .நாளைக்கே உனக்கும் சதிஷ்க்கும் கல்யாணம் .உன்னை விட எங்களுக்கு எதுவுமே பெருசு கிடையாது .”என்ற அப்பாவை வியப்பாய் பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்து முடிவதற்குள் கல்யாணமே முடிந்துவிட்டது.
சதிஷ் –வினோதா வாழ்க்கை சிறப்பாய் ஆரம்பித்தது .
[முற்றும் ]
நன்றிகள் !வணக்கங்களுடன் !
நான்
உங்கள்
கதிரவன் !