இதயம் திறந்தவள்—சிறுகதை

0
109

ஆபிஸ் டைம் முடிஞ்சு ,இந்த டிராபிக் பிரச்சனையே நினைச்சுகிட்டே பைக் ஸ்டார்ட் பண்ணுன மனோகருக்கு போன் வந்தது .பேசி முடிச்சிட்டு மறுபடியும் ஆபிஸ் உள்ளே போய் மொட்டை மாடியில் இருந்த கதிர்கிட்ட போய்”இவ்ளோ நேரம் பக்கத்துல தான இருந்தேன் .கிளம்பும் போது ஏன்டா கூப்புடுற?”என்றதும் கதிர் “இல்லை மச்சான் .கொஞ்சம் தனியா உன்கிட்ட பேசலாம் தான்”என்றதும் அவன் பக்கத்துல போய் உக்காந்து ஒரு சிகரேட் எடுத்து பத்தவச்சவுடன் “இப்ப சொல்றாப்பா அப்படி என்ன பிரச்சனை?”என்றவுடன் பதிலுக்கு கதிர் “நாளைக்கு பொண்ணு பாக்க போறேன் “என்றதும் மனோகர்”வாழ்த்துக்கள் மச்சான் “என்றதும் கதிர் “ஒரு கதை சொல்றேன் கேட்டுட்டு அப்புறமா வாழ்த்துக்கள் சொல்லு சரியா?

எங்கப்பாவுக்கு ஒரு அக்கா மட்டும் தான்.அம்மா ,அப்பா கிடையாது .அக்காவுக்கு காதும் கேக்காது ,வாயும் பேச முடியாது.யாருமே கல்யாணம் பண்ணிக்க வரலை.ரோம்ப நாள் கழிச்சு எங்க மாமா வந்து கல்யாணம் பண்ணிகிட்டாரு.அத்தைய அப்படி கவனிச்சுகிட்டார் .எங்கப்பாவுக்கு சந்தோசம் தாங்கல.ரோம்ப வருஷமா அவுங்களுக்கு குழந்தையே இல்லை.மறுபடியும் கஷ்டம்.எங்கப்பாவுக்கு கல்யாணம் ஆகி நான் பொறந்த மூணு வருஷத்தில் அவுங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது .கொஞ்சம் நாள் கழிச்சு தான் தெரிஞ்சது அந்த குழந்தையும் எங்க அத்தைய போல தான்னு .அவுங்க வாழ்க்கையே இருண்டு போனமாதிரி ஆச்சு .அப்ப தான் எங்கப்பா என் அத்தை கைய புடுச்சு “அக்கா நான் சத்தியம் பண்றேன் .உன்னை மாதிரி இந்த புள்ளை கஷ்டப்படாது.இது தேவதை போல வாழும் பாரு .நான் என் பையனுக்கே கட்டிக்கிறேன்.யார்கிட்ட போயும் கெஞ்ச வேணாம்னு சத்தியம் செஞ்சு கொடுத்துட்டார்”என்றதும் மனோகர் “என்ன மச்சான் சொல்ற உங்கப்பா கிரேட் உண்மையிலேயே “என்றதும் கதிர் “ஆனா எனக்கு அந்த மனசு இல்ல .எனக்கும் உங்கள மாதிரி கனவுகள் இருக்கு மச்சான் .நான் தியாகி இல்ல .வாழ்நாள் பூராவும் சைகை பண்ணிட்டே எப்படி வாழ்றது ?”என்றதும் மனோகர் “நீ உன் அப்பாகிட்ட பேசிப்பாரு.அதுக்கு முன்னாடி நிறைய யோசிச்சு பாரு .பெத்த புள்ள மேல எந்தளவுக்கு நம்பிக்கை இருந்தா உன் அப்பா வாக்கு கொடுத்திருப்பாரு.நீ மாறிட்டா உங்க அப்பா வாழ போற ஒவ்வோரு நிமிஷமும் நரகமா மாறிடும்”என்றவன் கிளம்பி போனான் .

வீட்டிற்கு திரும்பிய கதிரிடம் அவனோட அம்மா “லீவு சொல்லியாச்சா?துணி எல்லாம் எடுத்து வை.எல்லாமே சொல்லணுமாடா?”என்றார்.அவனோட அப்பா வந்ததும் “தம்பி காலையில சீக்கிரமா எந்திரிக்கனும் போய் தூங்கு.உங்க மாமா போன் பண்ணி இருந்தாரு .நீ ரோம்ப நாள் கழிச்சு வர்றன்னு தெரிஞ்சதில் இருந்து உங்க அத்தை கால் தரையில் நிக்கலையாம்.எல்லாருடைய சந்தோசமும் நீ ஒருத்தன் தான்டா .போ போய் படு”என்றவரின் முகம் மிகவும் சந்தோசத்தில் இருப்பதை கதிரும் உணர்ந்தான் .

காலையில் கிளம்பி ராத்திரி தான் ஊருக்கு போய் சேர்ந்தோம்.என்னை பார்த்ததும் ஒடி வந்து என் அத்தை இரண்டு கன்னத்தையும் கிள்ளி முத்தம் கொடுத்தாங்க.இன்னும் அவுங்க கண்ணுக்கு நான் குழந்தை தான் போல.தூங்கி எழுந்து அப்பா கூட ஊர் முழுவதையும் சுத்திட்டு வந்து உக்காந்திருக்கும் போது ஜன்னல் வழியா கலகலன்னு வளையல் சத்தம் திரும்பி பாத்தா யாரும் இல்ல .கதவுகிட்ட இருந்து கொலுசு சத்தம் திரும்பி பாத்தா மறுபடியும் யாரும் இல்ல .தொடர்ந்து சத்தம் வந்தது .அப்போ என் அம்மா வந்து”என்னடி பண்ற மாமாவ பாக்க வந்தியா?இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க முடியலையோ?போடி உங்க வீட்டுக்கு.யாராவது பாக்க போறாங்க”என்ற வார்த்தைகள் என் காதிலும் விழுந்தது .

சாய்ந்திரம் எல்லோரும் பெண் பாக்க போனோம் .பொண்ண கூட்டிட்டு வந்தாங்க .தேவதை மாதிரி இருந்தா.பட்டு சேலையில் தலை நிறைய பூ வச்சு .மஞ்சள் முகம் செவக்க செவக்க வெட்கப்பட்டுகிட்டே வந்து நின்னா .சின்ன பொண்ணுல பாத்தது .இப்போ எனக்கு சமமா வளந்திருக்கா.அவளுக்கு எங்க அம்மா பூ வச்சு விட்டாங்க.கல்யாணத்திற்கு தேதி முடிவானதும் ஊருக்கு கிளம்பும் போது அவன் ஜன்னல் பக்கம் வந்து ஏதோ சைகையில சொன்னா எனக்கு ஒண்ணுமே புரியல.மறுபடியும் மறுபடியும் சொல்றா எனக்கு புரியல.பக்கத்துல என் அப்பா”உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு கேக்குறா?”என்றதும் நிமிர்ந்து பாத்து “பிடிச்சிருக்கு”ன்னு சொன்னேன் .ஊருக்கு வந்து கல்யாண வேலைகள் வேகமாய் பாக்க ஆரம்பிச்சோம் .பத்திரிக்கை வைக்க போகும் போது ஒவ்வோரு வீட்லயும் ஒவ்வோரு விதமான கருத்து சொல்றாங்க .யாருக்கும் சொல்லாமல் கல்யாணம் பண்ணிருக்கலாம்னு தோணுச்சு .சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து கல்யாணம் சிறப்பாக நடந்து முடிந்தது .

மெரூன் கலர் பட்டுபுடவையில் அவ என்னோட ரூம்குள்ள வந்து என் பக்கத்துல உக்காந்து கொஞ்ச நேரத்து அமைதிக்கு பிறகு நான் அவகிட்ட “காயத்ரி உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”ன்னு கேட்க அவ பாக்கல.அவள தொட்டு என் பக்கம் திருப்பி பேச ஆரம்பிச்சேன் .நான் சொல்றது அவளுக்கு புரிஞ்சது .பதிலுக்கு அவ சொல்லும் போது எனக்கு புரியல .அவ எது சொன்னாலும் அதுக்கு தப்பான பதிலையே உணர்ந்தேன் .கொஞ்ச நேரம் கழிச்சு அவ ஒரு மாதிரி முகம் வாடி போனத உணர்ந்து “காயத்ரி நம்ம இப்ப தான் முதல் தடவையா பேசுறோம்.அதனால தான் பிரச்சனை.போக போக சூப்பரா பழகிரும்”என்றதும் கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்து கொண்டாள் .அவளுடைய மனநிலை உணர்ந்து நானும் விலகிக்கொண்டேன்.

மறுநாள் காலையில எழுந்து பம்பரமா என் வீட்ல எல்லா வேலையும் ரசிச்சு பண்றா.எல்லா உறவுகாரங்களையும் ஒடி ஓடி கவனிக்குறா.எல்லோரும் அசந்து போறாங்க .அன்னைக்கு ராத்திரி அவ என்கிட்ட ஒரு பேப்பர் கொண்டு வந்து தந்தா அதுல”மாமா கொஞ்ச நாள் நம்ம ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்குறவரை விலகியே இருக்கலாம் .நானும் படிச்சிருக்கேன் வேலைக்கு போகட்டுமா?”என்றதும் அவகிட்ட திரும்பி “தாராளமா வேலைக்கு போ.கொஞ்ச நாள் விலகியும் இருக்கலாம் .சரியா?”என்றதும் தலையசைத்தாள் .மனோகர் மனைவி வேலை பாக்குற அதே ஆபிஸ்ல வேலைக்கு போய்ட்டு இருந்தா.இந்த வாழ்க்கைக்குள் அவ வேகமாக வாழ பழகிட்டு இருந்தா.காலையில நான் குடிக்கிற காபில இருந்து ராத்திரி படுக்கும் போது யூஸ் பண்ற டூத் பேஸ்ட் வரையில் அவளுக்கு தெரிஞ்சது .ஆனா எனக்கு அவள பத்தி எதுவும் தெரியல.புரிஞ்சுக்கவும் முடியல .அவ பேசறது எனக்கு புரியாத காரணத்தினால் அவ இப்ப என்கிட்ட நேரடியாக பேசறதும் குறைஞ்சு போச்சு .

ஒரு தடவை எனக்கு காய்ச்சல் வந்து ரோம்ப அவதிப்பட்டேன்.ஒரு நிமிஷம் கூட அவ என்னை விட்டு நகராம என் பக்கத்துலயே இருந்து கவனிச்சிகிட்டா.நல்லா மனைவி மட்டும் கிடச்சிட்டா எந்த ஆணும் தாய்ப்பாசத்த இழக்க போறதே கிடையாது .கிட்டத்தட்ட கல்யாணம் எட்டுமாசத்திற்கு அப்புறம் வீட்ல அம்மா காயத்ரிய செக் அப் கூட்டிட்டு போறது பத்தி பேச ஆரம்பிச்சாங்க .நிறைய கேள்விகள் வர ஆரம்பிச்சது .வாழ்க்கையில் ஒரு வெறுமை படர ஆரம்பிச்சது .ஒரு நாள் காயத்ரிகிட்ட போய்”போதும்மா இனி விலகி இருக்க வேண்டாம்.யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க .இன்னும் என்கிட்ட புரிஞ்சிக்க என்ன இருக்கு?”என்றதும் அவகிட்ட வந்து என் இதயத்துல கை வச்சு “இதுல நான் இருக்கேனா?”ன்னு கேட்டா.நான் ஆடி போய்ட்டேன்.எதுக்கு அவ என்னை பாத்து அப்படி கேட்டான்னு தெரியல.

மறுநாள் மனோகர்ட்ட நடந்த விஷயம் எல்லாத்தையும் சொன்னேன் .அமைதியா கேட்டா அவன் என்கிட்ட “மச்சான் ரோம்ப சிம்பிளா ஒண்ணு சொல்லவா?அவளுக்கு நீ உயிர் .ஆனா உனக்கு அவ? நீயா வெறும் வாய்ல்ல தான் சொல்ற பிடிச்சிருக்குன்னு .ஆனா அவள நீ உனக்குள்ள முழுசா எடுத்துக்கல.அதை அவ உணர்றா.நீ அவள நேசிச்சிருந்தா?அவ மொழி உனக்கும் புரிஞ்சிருக்கும்.கடமைக்கு காதலிச்சா அவளோட உணர்வு உனக்கு புரியாது .உன் கூட உடம்பால கூட சேந்து வாழ்றது கஷ்டம் .நீ தியாகி இல்ல .அவ புருஷன் .விலகி இருக்கலாம்னு சொன்னது தப்பு இல்ல அதுக்காக அவள தனிமைல தள்ளிட்ட பாரு அது தான் தப்பு .போடா போய் லவ் பண்ணுங்க “என்றதும் வேகமாய் கிளம்பி வீட்டுக்கு போனேன் .என்னோட பெட்ல ஒரு பேப்பர் இருந்தது அதில் “ஸாரி மாமா .இதுக்கு மேல உங்கள கஷ்டப்படுத்த விரும்பல .நான் ஊருக்கு போறேன் .திரும்பி வர மாட்டேன் .உங்கள யாரும் எதுவும் பேச மாட்டாங்க .நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கைய அமைச்சுக்கங்க.வாழ்த்துக்கள் “என்று எழுதி வைத்திருந்தாள்.

அமைதியா என்னோட ரெண்டு கண்ணையும் மூடிட்டு அவ என்கிட்ட பேசுன வார்த்தைகளை எல்லாம் நினைவுபடுத்தினேன்.அவ எவ்ளோ அழகா தன்னோட காதல பல தடவை வெளிப்படுத்தி இருக்கா.நான் புரிஞ்சுக்கலைன்னு தெரிஞ்சதும் எவ்ளோ ஏமாந்து போயிருக்கான்னு இப்ப தான் புரியுது .அவளோட சிரிப்பு,வெட்கம்,கண்ணீர் எல்லாம் மாறி மாறி வந்து சாகடிக்குது என்னை.

அடுத்த ரயில் புடுச்சு ஊருக்கு போனேன் .அவ முன்னாடி போய் நின்னேன் .வாடி போய் இருந்த முகத்த நிமிர்த்தி “இப்ப எதாவது சொல்லு?”ன்னு சொன்னேன் .அவ பேசல.யோசிக்க கூட விடல அவள கட்டிப்புடுச்சு அவ உதட்டோடு உதடு வச்சு கிஸ் பண்ணிட்டேன் .அவ எதிர்ப்பாக்கல.உதட்ட பிரிக்க மனசு வரல.என் காதல அவ உணர்ற வரையில் நான் பிரிக்க போறதும் இல்ல.இரண்டு நிமிஷம் கழிச்சு நான் உதட்ட எடுக்க நினைக்கும் போது அவ விடவேயில்லை.

இரண்டு நாள் பொண்டாட்டி இல்லாம போனா தான் என்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் காதலே புரியுது .இனி தான் என் வாழ்க்கைய என் காயத்ரி கூட கவிதை மாதிரி வாழ போறேன் .

           [முற்றும் ]

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here