அனுமா … ரிலாக்ஸ்.. கத்தாத கொஞ்சம் அமைதியா இரு.
ஏன் டா முகிலன் ஏன்
அவனை வெளிய போ சொல்லு மயூ .. என் லைப்பே ஸ்பாயில் பண்ணிட்டான்… கதறி அழுதாள்.
முகிலன் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான்…
மயூ போ சொல்லு மயூ கையில எது கிடைச்சாலும் முகிலன் மேல தூக்கி வீசினாள்..
அனு… ரிலாக்ஸ் டா..
மயூ திரும்பி ப்ளீஸ் கொஞ்சம் வெளிய போங்க … பட்டும் படாமல் பேசினாள்..
மயூ முகிலன் பேச வாய் எடுக்கும் முன் கை நீட்டி வெளிய போங்கனு சொன்னேன்…
முகிலன் எதுவும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான்..
மயூ … … மயூ நா..நா.. பேட் கேர்ள் ஆகிட்டேன் மயூ .. நா வேணாம்…எனக்கே என்ன பிடிக்கல … நா செத்து போறேன்…சொன்னதே சொல்லி கொண்டிருந்தாள்…
திடீர்னு டேபிள்ல இருக்குற பழம் கட் பண்ணுற கத்திய எடுத்துட்டாள் அனு நா செத்து போறேன் எனக்கு வேணாம் லைப்….
மயூ பயந்து போய் அனு கத்திய குடுடி . நீ நல்ல பொண்ணு தான… ப்ளீஸ் டி கெஞ்சி கொண்டிருந்தாள். டாக்டர்… நர்ஸ்… கத்தினாள்…
இல்லை நான் நல்ல பொண்ணு இல்லை மயூ கெட்டு போனவ நா இருக்க கூடாது….
நர்ஸ் ஓடி வந்து அனு கையில இருக்குற கத்திய கஷ்டபட்டு பிடுங்கி போட்டதும் ….
மயூ அனுவ பிடித்ததும் நர்ஸ் ஊசி போட்டுதும் அனு மயக்கத்திலேயே நான் தப்பு பண்ணிட்டேன் … முகிலென வர சொல்லிருக்க கூடாது தப்…பு எ. ல்.. லாம்… த….. மயங்கிட்டாள்….
என்னது அனு வர சொல்லிதான் முகிலன் வந்தாரா… அப்போ.. என்கிட்ட சொன்னது…. அதிர்ச்சியில்
மயூ அப்படியே சரிந்து உக்காந்து விட்டாள்.. என்கிட்ட பொய்யா சொன்னார்.. ஏன்.. முகிலன்.. ஏன்…?
ஒரு பக்கம் அனு, இன்னொரு பக்கம் முகிலன்..
முதல்ல என்ன நடந்தது தெரிஞ்சாகணும்… மயூ வெளியே வந்து முகிலனை தேடினாள்..
வராந்தாவில் சேரில் தலையில் கை வைத்து குனிந்த படியே அமர்ந்து இருந்தான்..
அவன் அருகில் சென்று நிற்கவும்…
எதிரே அசைவு தெரிந்ததும் நிமிர்ந்து பார்த்தான் முகிலன்…
மயூ … நான்.. ஒன்னும்..
ஷ்ஷ்… கை நீட்டி தடுத்தாள்..
முகிலன் நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும் தேவை இல்லாத பேச்சு வேண்டாம்.. புரிஞ்சிதா..
மயூ …. என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல…. சொல்லு மயூ..
நம்பிக்கை இருக்கு இல்லை அது இப்போ பேச்சு இல்லை.. நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க …
ஹ்ம் கேளு மயூ..
அனு வீட்டுக்கு ஏன் வந்தீங்க..
அதான் அப்பவே சொன்னேனே மயூ..
ஹ்ம் சொன்னீங்க தான் ஆனா நீங்களா வந்தேன்னு தான என்கிட்ட சொன்னீங்க..
ஆ…மா.. மயூ முகிலன் தடுமாறினான்..
ஆனா அனு கூப்பிட்டு தான் நீங்க வந்து இருக்கீங்க உண்மையா.. இல்லையா.. சொல்லுங்க..
தலை குனிந்துகிட்டே.. ஆமா மயூ உன்கிட்ட பொய் தான் சொன்னேன் அனு கூப்பிட்டு தான் நான் வந்தேன்…
முகிலன் இப்படி சொல்லவும் மயூ உதட்டை கடித்து அழுகையை கட்டு படுத்தினாள்…
இப்போ நீ அழக்கூடாது மயூ .. தைரியமா பேசுற நெரம் …. அழுகையை கண்ட்ரோல் பண்ணு.. ஹ்ம்ம்ம்..
ஏன் முகிலன் இப்படி பண்ணீங்க…
மயூ உன்கிட்ட அனு கூப்பிட்டு நான் வந்ததை மட்டும் தான் மறைச்சேன் மத்த படி நா எதுவும் பண்ணல மயூ ப்ளீஸ் என்ன நம்பு ..
அத ஏன் நீங்க முன்னாடியே சொல்லல..
அது வந்து மயூ அனு கூப்பிட்டு தான நீங்க வந்தீங்க நீங்களா வரலயேனு நீ எங்க கேட்டுட போறயோனு தான் மறைச்சேன்…
இது தான் நான் பண்ண தப்பு மயூ வேற எதுவும் நான் பண்ணல என்ன நம்பு..
ஒரு வேல முகிலன் சொல்லுறது உண்மையா இருக்குமோ…
அப்பறம் ஏன் அனு முகிலன பாத்து கத்தினாள்……
யோசிக்க யோசிக்க மண்டை வெடிக்குற மாதிரி இருந்தது மயூரிக்கு….
கார்த்திக் ஏன்டா டென்ஷன்ன இருக்க அதான் நீ நெனைச்சத முடிச்சிட்ட ல அப்பறம் என்ன…
நியாமா பார்த்த இப்போ நீ செம ஹப்பியா இருக்கனும் எங்களுக்கு எல்லாம் ட்ரீட் வச்சிருக்கணும்… அத விட்டுட்டு சம்பந்தேமே இல்லாம டென்ஷன் ல இருக்க..
. சிவாவும் சுந்தரரும் ஒருத்தர
மாத்தி ஒருத்தர் கேட்டும் வாயை துறந்து
எதுவும் சொல்லாமலே இருந்தான்..
டேய் உன்னதான் டா கேக்குறேன் காதுல விழுதா இல்லையா இங்க நா ஒருத்தன் காட்டு கத்துலா கத்திட்டு இருக்னே என்னென்னு கேக்குறிய நீ..
.சிவா செம கடுப்புல இருந்தான் … பின்ன போன் பண்ணும் போதும் கோவம் மா பேசினான்.. ஏன் டா கோவம்னு கேட்டவுடனே கால் கட் பண்ணிட்டான் .. சரி ஏதோ டென்ஷன் போல னு சும்மா விட்டுட்டேன் … இங்க வந்தும் அதே டென்ஷன் ல தான் இருக்கான் … எதுனா பேசுறானா பாரு இடிச்ச வச்ச பிள்ளையார் மாதிரி இருக்கான் பாரேன்
சுந்தரிடம் கோவமா பொலம்பிட்டு இருந்தான் ….
சுந்தரம்… ப்ச்.. கொஞ்சம் அமைதி யா இருடா சிவா .. என்னென்னு கேப்போம்.
கார்த்திக் நீ எதுவும் சொல்ல வேணாம்…
இந்தா.. இத அடி எல்லாம் டென்ஷன்னும் பறந்து போய்டும்…
சுந்தரம் பேசிட்டு இருக்கும் போதே மடமடன்னு இருக்குறது எல்லாம் எடுத்து குடிச்சிட்டான்…
டேய் கார்த்திக் னு சுந்தரும் சிவாவும்.. அலற.
குடிச்ச… பாட்டிலைகோவத்தோட தூக்கி போட்டு உடைச்சான்…..
அதில் பயந்து போனார்கள் சிவாவும் சுந்தரம்மும் .. என்ன ஆச்சு இவனுக்கு.. கார்த்திக் இப்படி நடந்துகிறவன் இல்லையே… சிவா சந்தேகத்தோடு கார்த்தியை கூர்ந்து கவனித்தான்….
கார்த்திக் கண்ணெல்லாம் சிவந்து .இருக்கு எதுமேலயோ பயங்கரமா கோவமா இருக்கான்போல தெரிதே …
கோவத்துக்கு எது காரணம் னு தெரியாமல் முழிச்சிட்டு இருந்தான்…
கார்த்திக் க்கு போதை அதிகமானதும்…. நிதானம் இல்லாமலே தடுமாறினான்.. பின்ன மொத்த பாட்டிலையும் காலி பண்ண…
இப்படி தான் தள்ளாடனும் கொஞ்சம் மாச்சும் எங்களுக்கு குடுத்தானா ஒண்டியா கவுத்துட்டான்… கிராதகன்… சிவா பொறுமிட்டு இருந்தான்
கார்த்தி பண்ணது பாத்து… சரி வா உனக்கு இப்போவே ஓவர் ஆகிடுச்சு… உன்னால வண்டி லாம் ஓட்ட முடியாது. . நாங்களே உன் வீட்ல விட்டறோம்… வா டா..
டேய்…. எவனும் வர வேணாம் நானே போய்குவேன்…. போங்கடா…. தள்ளாடடிட்டே வண்டிய எடுக்க போனவன் தொப்புனு கிழே விழுந்துவிட்டான்…
ஹ்ம் இது ஆகுறது இல்லை… இவனை தனியா அனுப்பமுடியாது.. சுந்தரம். வா நாமளே ட்ராப் பண்ணிட்டு வருவோம்…
ஆமா டா எனக்கும் அதான் சரியா பட்டுச்சு… இவன் ரொம்ப குடிச்சி இருக்கான்..
சரி வாஇப்பவே டைம் ஆகிடுச்சு..
கார்த்திக்கை காரில் ஏத்திக்கிட்டு கிளம்பினார்கள்..
போகும் வழில கார்த்திக் குடி போதைலஎன்ன பேசுறோம்னு தெரியாமல் உளறி கொட்டினான்.. அய்ய…ய்ய.. யோ… மயூரி எனக்கு கிடைக்க மாட்டாளே… எல்லாம் போச்சே… மயூ … நீ எனக்கு வேணும் டி.. அவ ஏண்டி வந்தா …. நீ னு தானே நெனச்சேன்… எல்லாம் போச்சு… போச்சு…உளறிட்டு இருந்தான்.
சடார்னு காரை நிப்பாட்டிட்டான் சிவா.. யார பத்தி புலம்பிட்டு இருக்கான்…
அதிர்ச்சி யோடுஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.. திரும்பி கார்த்திக்யை பார்த்தார்கள்…