உயிரானவளே பகுதி 3

0
466

பூங்குடில் கிராமம்..

பச்சை பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியாய் வயல் வரப்போட சேர்ந்துதது தான் மயூரி வீடு …. மயூரியோட அப்பா விவசாயி … அவர்க்கு மண்ணு தான் உலகம் நமக்கு படிஅளக்குற சாமி டா எக்காரணம் கொண்டும் நிலத்தை காயவிட்டுத்டாதா டா மயூ மா உன்ன அதுக்கு தான் அக்ரி கல்சேர் படிக்க வச்சேன் …அப்பாவின் ஆசைபடியே மயூரி விவசாய படிப்பை தேர்வு செய்து படிக்கிறாள். மயூரிக்கும் விவசாயம் என்றால் ரொம்ப பிடிக்கும். ..FB_IMG_1550741569855|500x500

அம்மா எங்க காலேஜ் கல்ஜூரல்ஸ் மா நானும் கலந்துக்கிட்டேன்.
நாளைக்கு பங்ஷன் மா உன் பொண்ணுக்கு பரிசு கொடுக்க போறாங்க மா நீயும் வாயேன்.

அப்படியா சந்தோசமா இருக்கு டா ஆனா அம்மாவால இப்போ வர முடியாது டா வயல்ல கம்பு போட்டு இருக்கு நெல்லு கதிர் அறுக்கும் வேலை இருக்கு டா, நீ வேணா அக்காவ கூட்டிட்டு போய்ட்டு வா.

ஹுக்கும்.. யாரு அக்காவ அப்படியே வந்துட்டு தான் மறு வேலை பாக்க போறா. அவளுக்கு மாமா தான் எல்லாம் நாமெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.

போமா… நீ தான் வர மாட்டேன்னு சொல்லிட்டல நான் என் ப்ரெண்ட் அனு வீட்டுல தங்கி கலந்து கிட்டு வரவா.
ப்ளீஸ் அம்மா என் செல்லம் அம்மால.

மயூ… சொல்லுறத புரிஞ்சிக்கோ டா சென்னைக்கு போய்ட்டு அக்காவ பாக்காம வந்தா அவ சண்டை போடுவா.

போமா ” எப்பப் பாத்தாலும் நாம தானே போறோம் அவள பாக்க,
எப்பவாச்சும் நம்மள பாக்க வந்து இருக்காளா.

அவளுடைய கோவம் நியாயம் தானு காஞ்சனாவுக்கு தெரியும் .

அப்டி தான் இருப்பா மயூரியோட அக்கா நித்தியா கல்யாணம் முடிஞ்சி 3 வருஷம் ஆகுது இன்னும் தாய் வீடு வந்தது இல்லை .

அவள் கணவர் வசதி படைத்தவர்.
காலேஜ் ல படிச்சிட்டு இருக்கும்போதே லவ் பண்ணி “அடம் பிடிச்சி கல்யாணம்மும் பண்ணிக்கிட்டா.
கல்யாணம் ஆனதும் பொண்ணா அப்பப்ப வந்து பாத்துட்டு இருந்தாள் காஞ்சனா..

. மாப்ளா மாப்ளயோட அம்மா அப்பா எல்லாம் தங்கம் மாணவங்கதான் ஆனா நித்யா எதுக்கு இப்படி சும்மா சும்மா வந்து பாத்துட்டு போறீங்கனு ” செலவுக்கு காசு இல்லனா சொல்லுங்க குடுக்கிறேன் “
இப்படி அடிக்கடிவராதிங்க
முஞ்சில அடிச்சமாதிரி பேசிட்டாள் நித்தியா.

அதுக்கு அப்பறம் இருந்து பெரிய பொண்ண பாக்க போகமாட்டாள் …காஞ்சனா . எப்பாவது என்னாலம் மறந்துட்டீங்களானு. போன் போட்டு அழுது வைப்பாள்.
அப்போது மட்டும் மயூரி கிட்ட என்ன விளைஞ்சதோ அத எல்லாம் குடுத்து பாத்துட்டு வா னு சொல்லி அனுப்புவாள் காஞ்சனா.

மயூரி ஒவ்வொரு தடவையும் போய்ட்டு திரும்பி வரும் போது என்ன ஏன்மா அங்கலாம் அனுப்புற அக்கா ரொம்ப பண்ணுற மா நாம என்ன ஒன்னும் இல்லாமையா இருக்கோம்.

“கோவத்தோட பொரி ஞ்சி தள்ளுவா “

மாமா வீட்டு ஆளுங்க கூட அப்படிலாம் நடந்துக்க மாட்றாங்க இவ ஓவரா பண்ணுற மா என்னமோ பொறந்துததுல இருந்து தங்க தட்டு ல சாப்பிட்டு வளந்த மாதிரி பில்ட்டப் குடுக்கிற …. “ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா தாங்க முடியல

“இனிமே என்ன அங்க போக சொல்லாத மா.. னு கறாரா சொல்லிவிட்டாள் மயூரி.

அப்படி சொன்னவளை போய் நீ அக்கா வீட்டுல தங்கி கலந்துட்டு வானு சொன்ன எப்படி போவா மயூரி…எப்படியோ அம்மாவ கெஞ்சி கொஞ்சி சென்னைக்கு வந்து சேர்ந்துட்டாள் மயூரி.

ஹாலோ அனு …. ஹ்ம்ம்
மயூ.வந்துட்டியா

வந்துட்டேன் டி. “

எங்க இருக்க இப்போ”

கோயம்பேடு பஸ் ஸ்டாப்.

ஓகே டி பஸ் பிடிச்சி வந்துடுறியா இல்ல நானே வரவா “

வேணாம் டி நானே வந்துறேன் நான் சென்னைக்கு வந்துட்டேனு இன்போர்ம் பண்ணேன் .
சரி டி பாத்து வா .
ஒகே டி “

மயூ முகிலன் கிட்ட நீ சொன்னியா வரேன்னு “

இல்லை டி சொல்லல வந்து சொல்லிக்கலாம் னு விட்டுட்டேன்.

லூசு முதல்ல சொல்லு கால் பண்ணி.
ஹ்ம் சரி டி “

சரி வைக்கிறேன் பாத்து வா பை டி .

ஒகே பை டி.

முகிலன்க்கு கால் போட்டாள் ஹலோ முகி..
ஹாய் மயூ ” என்ன டா மார்னிங்கே கால் பன்னிருக்க உடம்பு எதுனா சரியில்லையா.

அதெல்லாம் ஒன்னும் இல்ல முகி நான் நல்லா தான் இருக்கேன் சென்னைக்கு வந்துஇருக்கேன்.

ஹேய்…என்னடி சொல்லுற “
ஆமாடா லூசு”

எப்போ வந்த எப்போ கிளம்புன.

நேத்துநைட் கிளம்புனேன் மார்னிங்கே வந்துட்டேன்.

ஏன் நேத்தே என்கிட்ட சொல்ல ல “

சாரி டா அம்மாவ சமாளிச்சு வரவே போதும் போதும்னு ஆகிடுச்சு இங்க வந்ததும் சொல்லிக்கலாம் னு இருந்துட்டேன்.

கொழுப்பு டி உனக்கு ” எவளோ திமிரு இருந்தா நைட் கிளம்புனவ இப்போ சொல்லுற “

டேய்ய் அதான் சொல்லிட்டேன் ல அப்பறம் என்ன “

ஹ்ம்ம் “
ஹாலோ முகில் லைன்ல இருக்கியா .

இருக்கேன் .

சரிடா நான் அனு வீட்டுக்கு போறேன் நீ வரது னா வா.

ஹ்ம்ம்..
என்ன டா ஹ்ம் போடுற வருவியா மாட்டியா.

வரேன்.
ஹ்ம் பை டா .
பை.
ஹுக்கும் கோவமாக்கும்.
சிரிச்சிட்டே கால் கட் செய்தாள்.

ஆட்டோ பிடிச்சி அடையார் போகணும்” சொல்லி பேரம் பேசி ஏறி அமர்ந்து கொண்டாள்.அனு வீட்டுக்கு வரதுக்குள்ள 10 டைம் கால் பண்ணிட்டான் முகிலன் போய்டியா போய்டி யா னு.

இதுக்கு தான் அவ ஊருக்கு வரேன்னு சொல்லாம இருந்தது காரணம்.. ஸ்ஸ்ஸ் முடியல டா சாமி. பெருமூச்சு விட்டாள்.

அந்த ஆட்டோ டிரைவர்ரே ஏன்மா இவளோ அக்கறை இருக்கிறவரு அவரே வந்து கூட்டிட்டு போக வேண்டிதான… கடுப்புல கேட்டுட்டான்.

சிரிச்சு சமாளித்தவள் வந்து சேர்ந்துததும் முகிலன்க்கு தான் கால் பண்ணி சொன்னாள்
வந்துட்டேன் முகில்.

ஹ்ம் சரி சரி .. நான் வரேன் நீ போய் குளிச்சிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடு .
ஹ்ம் சரி டா.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here