உயிரானவளே.. பகுதி.. 6

0
387

அனு …”ஹூக்கும்..பாத்தது போதும் வாங்க போலாம் …. இருவரையும் கூப்பிட்டாள்…

மயூரி.. முகிலென பாத்து சிரிக்க அவனும் சிரித்தான்…

ஸ்ப்பா தாங்க முடில டா சாமி… உங்க ரொமான்ஸ்ஸ… எப்படியும் நைட் பியுள்ள உங்க ஜவ்வா கண்டினியூ பண்ணதான போற வாடி… ஏண்டி எருமை உன்ன தாண்டி போலாம்னு சொன்னென் காதுல விலுதா இல்லையா…

“அனு “அழற மாதிரி பொலம்பனுதும் முகிலன் சத்தமா சிரிச்சிட்டான்..

.என்ன முகிலன் சார் என் புலம்பல் உங்களுக்கு சிரிப்பா இருக்கா… முறைகவும்,”…

ஹாஹா … அப்படிலங்க அனு “

மயூ இங்க தனியா வந்து இருக்கா !.. அதான் நேத்து நைட் பேசிட்டு இருந்தோம்.. இதுவே மயூ ஊருல இருந்தா இப்படி பேசமுடியாது ல ….

“அனு “அதுக்கு என் காது ஜூவ்வு தான் கெடைச்சதா… பக்கத்துல அப்பாவி பொண்ணு இருக்காளே .. அவ மனச கெடுக்குறோமே கொஞ்சம் மச்சும் எண்ணம் இருக்கா … அனு சொல்ல சொல்ல மயூ முகம் சிவந்து போனது..

ஹெய்ய்ய போதும் டி விடு….

இப்படி தான் முகிலன் நேத்து நானும் கெஞ்சினேன் கொஞ்சகூட மனசு இறங்களையே அம்மணிக்கு…. கேலியாய் சொன்னாள்…

அனுஉஉஉ…. ப்ளீஸ் போதும் டி….. “

அது அந்த பயம் இருக்கனும்.. அனுக்கிட்ட… சரி சரி வாங்க போலாம் …

எங்க டி போலாம் …?

செவிக்கு உணவு இல்லனாலும் சிறிது வைத்துக்கு ஈயபடனும் னு யாரோ ஒரு புண்ணியவான் சொல்லிட்டு போயிருக்காரு…. சோ வாங்க
எல்லாம் கொட்டிக்க போலாம்…

.நானும் உங்க கூட வரலாமா மேடம்.. முகிலன் கேட்கவும்”!!

நீங்களும் வரலாம் தப்பில்ல நா ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்..

மயூ சிரித்தாள்.. போடி வாலு… நீங்க வாங்க முகிலன்… போலாம்

மூனுபேரும் கேன்டீன் போனார்கள் சாப்பிட உக்காந்து .என்ன வேணும் மயூரியிடம் கேட்டுகிட்டே மெனு கார்ட் எடுத்தால் அனு .

எனக்கு சான்விஜ் போதும் டி. உனக்கு வேணும் நா வேற சொல்லிக்கோ …

முகிலன் நீங்க என்ன சாப்பிடறீங்க .. அனு கேட்கவும் எனக்கும் சான்விஜ் போதும் சொன்னான்.
.
அடடா… இதுவல்லவோ ஒற்றுமை முகிலன் எங்கியோ போயிட்டீங்க போங்க… புல்லரிக்குது…

பாத்து டி மாடுமேஞ்சிட போகுது ..கிண்டலா சொன்னாள்…
மயூரிக்கு முகிலென அனு ரொம்ப கலைக்கிற மாதிரி தோணுச்சு… அந்த கடுப்போட சொன்னாள்.

பாரா” உன் ஆளா சொன்னதும் அம்மணிக்கு கோவம் பொத்துகிட்டு வருது …..

முகிலன்… மயூரியை பார்க்க..அதே சமயம் மயூரியும் பாக்க…. அவனின் பார்வையில் வெக்கம் பட்டாள்…உதடு கடிக்கவும் . அவன் பார்வை உதட்டில் சென்றது…..
ஓம்ஜி…. என்ன யாராச்சும் காப்பாத்துங்களேன்…. அனு புலம்பினாள்

முகிலன் சிரிக்கவும்… மயூ ஹெய்ய …. அனு மானத்தை வாங்காத டி கம்முனு சாப்பிடு..

எங்க நிம்மதியா சாப்பிட விடமாற்றங்களே… .. சரி நா அந்த டேபிள் போறேன் .. அப்பதான் என்னால ஒழுங்கா சாப்பிடமுடியும் …

நா அப்படிப்போனதும் உங்க ஜவ்வா ஸ்டார்ட் பண்ணிக்கோங்க ….

மயூரிக்கு என்னவோ போல் ஆகிடுச்சு ….ஏன் இப்படி பண்ணுற…. அனு இப்படி பண்ணுறவ இல்ல.. எப்பவும் ஜாலியா பேசுறவ தான் .. ஆனா இப்போ அப்படி பேசல ஏதோ ஒரு கோவத்துல பேசுறமாதிரி மயூரிக்கு பட்டுச்சு…

முகிலன் …. மயூரியை பார்த்தான் அவ மைன்ட் அப்செட்டா இருக்குற மாதிரி தோணவும் … மயூ கொஞ்சம் வெளியே போலாமா … கேட்டான்.
அவளுக்கும்…. தனியா இருந்தா பீல் பெட்டரா இருக்கும்னு தோணுச்சு போலாம் முகில் ..சொன்னாள்.

ஹ்ம் ” வா முகிலன் எழுந்து செல்லவும்…

மயூ அனு கிட்ட போனாள்.. அனு நானும் முகில்லும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வறோம் … நீ வீட்டுக்கு போய்டு… நா வந்துகிறேன்… சொல்லிட்டு அங்க நிக்காமல் சென்று விட்டாள்.

அனு…. மயூ போறதேயே பார்த்துட்டு இருந்தாள்.. ரொம்ப டீஸ் பண்ணிடேட்டோமோ . கோவமா போறா போல தெரிது…

ச்சே என்ன ஆச்சி எனக்கு … நா ஏன் இப்படிலாம் நடத்துகிறேன்…

மயூ மேல நா ஏன்பொறாமை படுறேன் .. ..

எவளோ ஆசையா முகிலன் கிட்ட பேசனும் இருந்தாள். நானே அவ மூடு ஸ்பாயில் பண்ணிட்டேனேனே ..
எல்லாம் அவனால வரது…
அவன் மயூ வா பாத்தா எனக்கு ஏன் கோவம் வருது ஒரு வேல நானும் லவ் பண்ண ஆரம்பிச்சுடேனா அது எப்படி. இப்ப தான பஸ்ட் டைம் பாக்குறேன் அதுக்குள்ள எப்படி லவ் வரும்…?

மயூ மேல் தேவைஇல்லாம கோவப்படுறேனு மட்டும் அனுவுக்கு புரிஞ்சது…

அவ மனசுல வேற ஒருத்தர் இருகாங்க னு தெரிஞ்சும் இப்படி நடத்துகிட்டேனே …

என் மேலயே கோவம்கோவமா வருது..எனக்கு ..

மயூபேபி சாரி டா நைட் வரட்டும் பேபி நீ பியுள்ள பேசு நா வேணாகாதுல பஞ்சு வசிக்கிறேன் டிஸ்டர்ப் பண்ணமாட்டேனு சொல்லுறேன்… பேபி கூல் ஆகிடுவா…

.மயூரியும் முகிலன்னும் வெளியே போவதை .

கார்த்திக் குரோதம் மா பாத்துகொண்டு இருந்ததான் எங்க போறாங்க ரெண்டு பேரும் பின்னாடியே சென்றான் .

அவர்கள் கடற்கரைக்கு சென்று ஒரு இடம் பார்த்து உக்காரவும் ..

கார்த்திக்கும் அவங்க என்ன பேசுறாங்க னு தெரிஞ்க்க ஒளிஞ்சிநின்னுகொண்டான்.
கடலையே வெறித்து பாத்துட்டு இருந்தாள்… மயூரி..

அவளை உரசினார் போல் முகிலனும் உக்காந்துகொண்டான்…

அத பாத்ததும் கார்த்திக்கு வயிறு எரிந்தது அவனை அங்கேயே கொலை பண்ணிடனும் போல ஆத்திரம் வந்தது..

மயூ ஏன்டா மைன்ட் அப்செட்டா இருக்க… பிரீயா விடு சின்ன பொண்ணு தான… ஜாலியா பேசிட்டா.. இதுக்கு போய் மைன்ட் அப்செட் ஆவாங்களா..

ஹ்ம் ” முகில் … அவ ஜாலி டைப் தான் பட் டுடே டிபிபிரெண்ட்ட நடந்துக்கிட்டா..

ஹ்ம் … சரி விடுடா … கெடைக்குறதே ஒரு நாள் .. அதுல இவள பத்தி பீல் பண்ணி வேஸ்ட் பண்ணிடாத … ஊருக்கு எப்போ கிளம்பனும்.. மயூ..

நாளைக்கு ஈவினிங் டா..
முகில் உன்கிட்ட இன்னொரு முக்கியமான விசியம் சொல்லணும் …

என்னடா சொல்லு..

வீட்டுல மாப்ளா பாத்துட்டு இருகாங்க டா.. நா இங்க கிளம்பி வரப்ப தான் மாப்ளா போட்டோ, ப்ரோக்கர் குடுத்துட்டு போனார்… அம்மா என்கிட்ட நீ காலேஜ் பங்சன் முடிச்சிட்டு வா அப்பறம் இத பத்தி பேசலாம்னு சொன்னாங்க…..

சரி உங்கிட்ட சொல்லணுமே .. அதான் நானும் எதுவும் பேசாம வந்துட்டேன்…..
என்னடா சொல்ல அம்மா கேட்டா..

விட்டான் ஒரே அறை..பளார் னு ..

மயூரி”அதிர்ச்சியோடபாத்தாள். கண்களில் கண்ணீர் தளும்பின..கண்ணீரோடு கேட்டாள் எதுக்கு அடிச்சீங்க முகில்..

எதுக்கு அடிச்சேனா… கொலை பண்ணிடுவேன்…ஜாக்கிரதை…

முகில் ….?

பின்ன….. என்னடி நினைச்சிட்டு இருக்க என்ன பாத்தா உனக்கு கேன பையன் போல தெரிதா.. வீட்டுல மாப்ளா பாத்து இருக்காங்களாம் என்ன சொல்ல னு என்கிட்டயே வந்து கேக்குறயே எவளோ திமிரு இருக்கனும்.. உனக்கு .
அப்போ என்ன கழட்டிவிட்டுட்டு உங்க அம்மா பாக்குற பையன் ன கட்டிப்ப அப்படி தான …தேள் மாதிரி வார்த்தையாள கொட்டினான்..

முகில் ….?

ச்சீ.. என் பேர சொல்லி கூப்பிடாதடி கொன்னுடுவேன்… ச்ச்சே இந்த பொண்ணுங்கள நம்புனா இப்படி தான் கழட்டி விட்டுறவாளுங்க… ஆத்திரத்தில் என்ன பேசுறோம்னு தெரியாமல் வார்த்தைகளை கொட்டிட்டு இருந்தான் …

ஸ்டாபிட்….கைநீட்டி திஸ் இஸ் லிமிட்.. ரொம்ப பேசிட்டிங்க போதும் முகிலன்…

உங்க மனசுல என்ன பத்தி இருந்த ஒபினியன் ….. நல்லா புரிஞ்சிக்கிட்டேன்…மனச உடைச்சிட்டீங்க முகிலன் …. கதறி அழுதாள்..

உங்க கிட்ட நா இத எதிர் பாக்கல… அம்மா பாத்து இருகாங்க தான சொன்னேன்.. நான் சம்மதம் சொல்லிட்டு வந்தேனா சொன்னேன்… உங்கல ஏமாத்துன்னு நெனைச்சா நான் ஏன் உங்கள தேடி வந்து சொல்லபோறேன் … நான் இந்த விசியம் உங்க கிட்ட சொன்னதும் என்கூட நீங்களும் ஊருக்கு வந்து அம்மாகிட்ட பேசுறேன்னு சொல்லுவீங்க எதிர் பாத்தேன் முகிலன் ஆனா… நீங்க இப்படி பேசுவீங்கனு கொஞ்சம் கூட நெனைச்சி பாக்கல.. என்ன பாத்தா ஏமாத்திட்டு போறவ மாதிரியா தெரிது… கண்களில் வலியோட பேசினாள்…

காலையில் அனு நடந்து கிட்டது நெனைச்சி . கஷட பட்டுட்டு இருந்தவளை.. நாமலும் கஸ்ட ப்படுத்திட்டோமோ.. ச்சே நா ஒரு அவசரக்குடுக்க என்ன சொல்ல வரான்னு புரிஞ்சிக்காம தப்பு தப்பா பேசிட்டேன்…

மயூ…..சாரிடா..
நீ என் உயிர் டா என்மேல கோவம் இருக்கும் இந்த நீ வேணா என்ன அடிச்சிக்கோ .. ரெண்டு கன்னத்தையும் காட்டினான்.

மயூரி அமைதியா எழுவும் .. கை பிடிச்சி தடுத்தான்…
மயூ … பேசுடா … அவள் முன் மண்டியிட்டு கெஞ்சிக்கொண்டிருந்தான்..
கையை சட்டுனு இழுத்துக்கொண்டாள்…ப்ளீஸ் தொடதிங்க முகிலன்…

அவள் யாராவது பக்கத்தில் இருந்தா மட்டுமே முகிலன் னு சொல்லிகூப்புடுவாள் .. தனிமையில் இருக்கும் சமையம் முகில் தான் சொல்லி அழைப்பாள்..

அவளுக்கு தான்அந்நியம் ஆகிட்டோமோ…?என் மேல கோச்சிக்கிட்டு போய்டுவாளோ பயந்து போனான்… மயூ ப்ளீஸ் புரிஞ்சிக்க டா சாரி டா என்ன மன்னிக்க மாட்டியா… தப்புத்தாண்டா நான் பேசுனது… மன்னிச்சுடு.

மயூரி …. ஆழமாய் பார்த்து Mr. முகிலன் மனசுல இருக்கறது தான் வார்த்தையா வெளிவரும்னு சொல்லு வாங்க … சோ உங்க மனசுல என்ன பத்தின நெனப்பு எப்படி இருக்கு னு புரிஞ்சிக்கிட்டேன்…. நாளைக்கு போகலாம் னு இருந்தேன் ஊருக்கு உதட்டை கடிச்சி அழுகை கட்டுப்படுத்தினால்…..ஆனால் … என்னால இங்க இருக்க முடியாது.. நா கிளம்பறேன் ஊருக்கு ….

முகிலனுக்கோ அதிர்ச்சி இப்படி சட்னு ஊருக்கு போறேன்னு சொல்லுவானு… நெனைச்சி கூட பாக்கல… இங்க இருந்து கோச்சிட்டு போனாலும் அனு வீட்டுக்கு தான போகப்போற அப்போ சமாதானம் படுத்திக்கலாம்னு நெனைச்சா உடனே கிளம்பறேன்னு சொல்லிட்டாளே…. முகிலனுக்கு அவளை எப்படி சமானதான படுத்துறதுனே தெரியாமல் முழிச்சிட்டு இருந்தான்…

மயூ பிடிவாதமா இருந்தாள்.. இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது …. வேகமா எழுந்தவள் …. கிளம்பறேன் முகிலன் .. பை டேகேர்… சொல்லிவிட்டு விறு விறுனு சென்று விட்டாள்…
முகிலன் … அப்படியே சரிந்து உக்காந்து விட்டான்… கண்கலங்கியது அவசரப்பட்டுட்டேனே..

வாரே வாவ்…. இது போதும் டா மச்சான்… கார்த்திக் சந்தோஷத்தில் துள்ளிகுதிதான்… எஸ் எஸ் ….. எதையோ சாதிக்கப்போற மாதிரி சிரித்து கொண்டான். முகிலன் ன பாத்து கோவமா சொன்னான்.. டேய் முகிலன்… இனிமே உனக்கு மயூரி கிடைக்க மாட்ட .. எனக்கு மட்டும் தான் இனி அவள் ….. ஹாஹா……..IMG-20190301-WA0026|640x500

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here