மறுமொழி பேசாத
சிறுவிழி பார்வையிலே
மனம் கேட்ட ஆறுதலை
தினமும் கண்டேனடி
மாறாத நிறமெல்லாம்
வானவில்லாய் புருவத்திலே
கேளாத உன் குரலில்
கவியொன்றை கூறிவிட்டு
வார்த்தைகளும் தவறுதடி
உன்னை எழுத்துகயில்
பேச்சும் மறுக்குதடி
தொண்டைகுழியில் பிரசவமே
இதயத்தின் துடிப்பினிலே
உணர்ந்து கொள்வாயா
உனக்காக துடிக்கின்ற
நமக்கான இதயமென்று…..
- சேதுபதி விசுவநாதன்
Facebook Comments