உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 3

0
242

ஏன்னா… சீக்கிரமா வாங்கோ அவாளாம் வந்துண்டு இருப்பா… வாங்கோனா…அங்கே என்ன பண்ணிண்டு இருக்கேள் ரேழியில் வேல பண்ணிண்டே கத்தி கொண்டிருந்தாள்….ஜானகி..

சாம்பசிவம் … பூஜையறையில்… மனமுருகி வேண்டிண்டு இருந்தார்..

பகவானே நேக்கு தெரிஞ்சுதுலாம் உன் சன்னிதானம்தான்.. இத விட்டா நேக்கு போக்கிடம் கிடையாது … உன்னையே நம்பிண்டு இருக்கேன்..என்ன ஏமாத்திடாத நீதான் பாத்துக்கணும்… என் குழந்தையை… அவ சின்ன பொண்ணுவெளியுலகம் அறியாதவ… தன்னை சுத்தி என்ன நடக்குதுனு கூட தெரியாம இருக்கா… என் குழந்தை… அவளை உன் பொறுப்பில் விட்றேன்… நீ தான் பாத்துக்கணும் ….நா சாதாரண மானிடபிறவியப்பா என் குழந்தை அப்படியில்லை மென்மையானவ அவளை தெயவாம்சம் நிறைந்தவளா தான் பாக்க ஆசைப்படுறேன் .

ஆனா அவளிடம் அரக்கத்தனம் குடிகொண்டிருக்கு … என் குழந்தை இன்னும் என்னனென்ன சந்திக்க போகுதோ… என்ன ஆகுமோ தெரியாதுபகவானே.. உன் சந்நிதியே கதியென்று இருக்கேன் .. என் குழந்தையை காப்பாத்தி கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு … என் பாரத்தை உங்கிட்ட ஒப்படைச்சிட்டேன்…. நீ தான் அவளை காவல் காக்கனுனும்… இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவா எல்லாம் வந்திடுவா…அதுக்கப்புறம் என் குழந்தையா இப்போ இருக்க அவா வந்ததும் எப்படி நடந்துப்பாளோ.. நேக்கு பயமா இருக்கு எதுவானாலும் நீயே பொறுப்பு … .. சாமியிடம் பாரத்தை இறக்கிவச்சுட்டு கண்ணீரோட வெளிய வந்தார் சாம்பு….

மாமி… மாமி… குரல் குடுத்து கொண்டே உள்ளே வந்துண்டு இருந்தாள் வாசு…

ஹ்ம் வாடியம்மா ..வாசு நோக்கு இப்போ தான் வர நேரம் கிடைத்ததா..

இல்ல மாமி காயு பொண்ணு பாக்க வரா இல்லியோ….

அதான் காலம்பற கோவில் போய் பெருமாளை சேவிச்சிட்டு நேர இங்க தான் வறேன் மாமி … வாசு சொல்லவும்..

ஓ.. அப்படியா சரி சரி டி நல்லது..

அம்மாள… வரச்சொன்னியோ இல்லியோ..

அவா வந்துடுவா மாமி… நேக்கு பில்டர் காபி வேணும் போட்டு குடுங்கோ. .

ஹ்ம் சத்த நாழி பொறுடி போட்டு தரேன்..

நீ போய் காயு ரெடியாகிட்டாளானு பாரு.. நீ தான் அவளுக்கு அலங்காரம் பண்ணனும் சரியா..

ஹ்ம் சரிங்கோ மாமி…

வாசு காயு பாக்க உள்ளே சென்றாள்…
காயு எங்கோ விட்டதை பார்த்துண்டு இருக்க..

என்னடி எப்பப்பாரு மேலயே பார்த்துண்டு இருக்க…

அப்படி என்ன தான் இருக்கு அங்க வாசுவும் மேல பார்க்க…
அவா கண்ணுக்கு ஒன்னும் அகபடாம போக மறுபடியும் காயுவ பார்த்தாள்…

அவ இன்னும் அங்கேயே பார்த்துட்டு இருக்க..

மறுபடியும் நல்லா கண்ணைக்கசக்கிட்டு பார்த்தாள் ஹுக்கும்… ஒரு மண்ணும் தெரியல…அப்படி என்னத்ததான் பாக்குறளோ… பகவானே இவளுக்கு நல்லா புத்திய குடு… அடியே காயு… காயுவை உலுக்கினானால்..

ஹ்ம்ம்… என்னடி ஏன் கத்துற ஆஆ… முதல்ல கையை எடு தோள் வலிக்கிறதுடி.. காயு வலியால் கத்த…

ஹுக்கும்.. வந்ததுல இருந்து காட்டுகத்தலா கத்திண்டு இருக்கேன் கொஞ்ச மாச்சும் திரும்பி பார்த்தியா… புடிச்சி வச்ச பிள்ளையார் கணக்கா விட்டதையே பார்த்துண்டு இருக்க… நோக்கு என்ன பயத்தியமாடி…

இன்னும் சத்தநாழியில உன்ன பொண்ணு பாக்க வரா..
ஆனா அதுக்குன்டானா சந்தோசம் உன் முகத்துல காணோமே… ஏன் டி வர்றவா நோக்கு பிடிக்கலயாடி …
தோழி கவலையா இருக்கவும் வாசு அவளுக்கு என்ன தான் பிரச்சனைனு கண்டறியமுற்பட்டால்… சொல்லுடி நோக்கு பிடிக்கல யா…?

ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுமில்லடி…. அப்பா பாத்து யார கட்டிக்க சொன்னாலும் நான் கட்டிப்பேன் நேக்கு எந்த பிரச்சனையும் இல்ல…

அப்பறம் என்னடி நோக்கு கவலை…

அது வந்து வர்றவா எப்படி னு தெரில டி அத நெனச்சதான் பயமா இருக்கு…

அடி அசடே இத நெனைச்சிதான் பயந்துண்டு இருந்தியா .

நா வேற நோக்கு என்னமோ ஏதோ னு பயந்துபோய்ட்டேன்… வர்றவா பத்தி நோக்கு என்ன பயம்.லூசு .

அவா போட்டோ பாத்தியா… எப்படி இருக்கார்டி கண்ணடித்துகொண்டே கேட்டாள்.

ச்சி போடி… அழகாய் வெட்கப்பட்டாள்…

அய். அட பாரா வெக்கத்தை.. நோக்கு வெக்க படகூட தெரியுமாடி …. கிண்டல் பண்ணிண்டு இருக்க…

காயு கலகலவென சிரித்தாள்… ச்சி போடி கிண்டல் பண்ணாதடி…

ஹ்ம்ம் … அவர் பேரு என்னடி காயு..

ஹ்ம் ..பார்த்திபன்..

என்னடி சொல்லுற…?

பார்த்திபன்னு சொன்னேன்…

அது தெரிது… அவா நம்மளவாள் இல்லையே… எப்படி ஒத்துண்டாண்டர்.. உன் தோப்புனார்…?

ஹ்ம் நேக்கும் இதே டவுட் தாண்டி … அப்பா எப்படி சம்திச்சார்னு நேக்கும் விளங்கள…

அவா கேட்டதும் அப்பா சரின்னுட்டார்னு அம்மா சொன்னா…

ஓ.. மறுத்து எதுவும் பேசலயாமா..

ஹுகும்.. எதுவும் பேசலயாம்… அவா பேச பேச உன் அப்பா மண்டைய மண்டைய ஆட்டிண்டு வந்துட்டார்னு அம்மா சொன்னா…

ஓ… உன் தோப்புனார்தான அந்த கோமுட்டியோட அண்ணா உன்ன பொண்ணு கேட்கறச்ச நீ என்ன எங்களவாளா.. எப்படி பொண்ணு கேட்டு வருவனு வாய் கிழிய பேசி அசிங்க படுத்தி அனுப்பினார்… இப்போ எங்கே போச்சாம் ஆச்சாரம்மெல்லாம் உன் தோப்புனாருக்கு… கடுகடுனு பொறியவும்…

ப்ச் விட்ரிடி.. அவர்க்கு என்ன இஷடமோ அதுவே நடக்கட்டும்…

ஹுக்கும்… இது மட்டும் அந்த கோமுட்டியோட அண்ணாவுக்கு தெரிஞ்சுதுனு வை உன் தோப்புனாரா உண்டு இல்லனு பண்ணிடுவான்….

அவன் கிடக்குறான் கடன்காரன்… விடு..அவன் ஆளும் முகரகட்டையும்…. நல்லா அடுப்பில இருந்து சூடு தாங்காம எழுந்துவந்தவன்மாதிரில இருக்கான் …..

அடி பாவி… வாசு வாயில் கைவைத்து அதிசியம் பட்டாள்…

ஹ்ம் சரிடி பையன் போட்டோ காட்டுடி பாக்கலாம்…

ஹ்ம். காயு திருதிருனு முழிக்கவும்..

என்ன முழிக்கிற காட்டுடி..
உன் ஆளாலாம் நா கடத்திட்டுஒன்னும் போ மாட்டேன் பயப்படாம காட்டு…

அது… வந்து எங்கிட்ட இல்லையேடீ வாசு..

என்ன உங்கிட்ட இல்லையா?

ஆமா…
நா பாக்கவே இல்லை இன்னும்… சொல்லப்போனா
அவர் இங்க இல்லை பாரின் ல இருக்காராம் அம்மாக்கு ஓகே னா அவர்க்கும் ஒகேதான்னு சொன்னாராம்…
அவர் அம்மா அக்கா அத்திம்பேர் அப்பறம் கூட ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்தா…

ஓ. நீ முன்னமே பாத்துஇருக்கியாடீ…அவாள்லாம்..

ஹ்ம்.. கோவில்ல பார்த்துஇருக்கேன்… அப்பவாண்ட பேசிண்டு இருக்கிறச்ச…

ஹ்ம்ம் .. அப்பறம் என்னடீ நோக்கு பயம்…
அதான் அவ்வளலாம் பார்த்துட்டு இருக்கியே அப்புறம் என்ன,?

நான் கோவில் பாத்தேன்னு சொன்னேன் ல அவர் அக்கா பொண்ணு ஒருத்தி இருக்க..

இருந்தா இருந்துட்டு போட்டும் நோக்கு என்ன?

இல்ல வந்து..

என்னடீ இல்ல வந்துனு சொல்லிண்டு ஏன் அவா அழகா இருந்தாளா..

ஹ்ம் ஆமா…..

ஓ.. நோக்கு பொறாமையா… இப்பவே..

அய்யா. நேக்கு ஏன் பொறாமை.. அவாளுக்கு தான் பொறாமை என் மேல … கோவில்ல எப்படி பாத்தா தெரியுமா… அவ கண்ணுல மட்டும் நெருப்பு இருந்தா என்ன பார்வையாலே பொசுக்கிட்டு இருப்பா…. அப்படி பார்த்துட்டு இருந்தா.. என்னை..

.ஓ… ஏன்டி காயு எனக்கு ஒரு டவுட்..?

ஹ்ம் கேளு..

சொந்ததுல பொண்ணு இருக்கறச்சே அதுவும் அழகான பொண்ணு இருக்கறச்சே ஏன்டி உன்ன பொண்ணு கேட்டு வரணும்.. அதுவும் அவாள் லாம் நம்பளாவாள்கிடையாது அப்பறம் ஏன்???

நேக்கும் இதே டவுட் இருக்குடீ …?

ஹ்ம்ம் பாப்போம் … நடக்கிறதா.. சரி சரி அசமந்தம் மாதிரி நிக்காம போய் சட்டுனு முகத்தை அலம்பிட்டு வா மாமி உன்ன ரெடி பண்ண சொன்னா… ஹ்ம் சீக்கிரமா போ… அவசர படுத்தினாள்….

ஹுக்கும் இதுக்கும் ஒன்னும் குறைச்சல் இல்ல நொடித்துக்கொண்டே சென்றாள்…

குளித்து முடித்து கண்ணாடியில் முகத்தை பார்க்க அதிர்ந்துபோனாள் ..

அவள் பின்னாடி ஒர் உருவம் சிரித்து கொண்டிருந்தது…. காயு வேகமாய் வெளியே அரக்க பறக்க ஓடிவர…

ஹேய் என்னடி ஆச்சு ஏன் இப்படி விழுந்தடிச்சி ஓடி வர….

வா.. வாசு.. அங்க அங்கபயத்தில் திக்கி திணறி பேசவும் ….

ஹேய் மெல்ல மெல்ல இந்தா ஜலம்குடி…

வாங்கி முடக் முடக்னு குடித்தாள்.. என்னடி எத பாத்து இப்படி அலறிண்டு வர..

அது…அவள் பார்வை அங்கேயே பார்த்துக்கொண்டே இருக்க.. …

அவளுக்கு மட்டும் சிரிப்பொலி கேட்டது ஹா ஹா ஹா….

காயத்ரியின் உடம்பு பயத்தில் வேர்த்து கொட்டியது. பயத்தில் பல்லை நற நறவென கடித்து கொண்டே நடுங்கி கொண்டிருந்தாள்.

என்னடி ஆச்சு உனக்கு சொல்லுடி காயூ சொல்லுடி தோழி கேட்டு கொணாடிருக்க, அந்த உருவம் காயத்ரியையே பார்த்து கொண்டு இருந்தது.

ஆத்மாவின் பயணம் தொடரும்… IMG-20190415-WA0005|690x387

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here