உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 5
அலமு அவ ஆத்துகாரரை அழைத்தால்.. ஏன்னா சத்த இப்படி வாங்கோ…
என்னடி அலுமு எதுக்கு கூப்பிட்டாய்..திடு திப்புனு கூப்பிடுறாய் அவா எல்லாம் என்ன நினைப்பா… ஹ்ம் சட்டு பிட்டுன்னு சொல்லுடி நேக்கு தலைக்கு மேல வேல இருக்கு.. சிவராமன் பட படன்னு பேசவும்…
ஏன்னா நம்ம காயுக்கு என்னனா குறைச்சல் …
என்னடி அலுமு திடிர்னு இப்படி கேக்குறாய்.
இல்லனா வந்தவா பெரிய இடம் தான் இல்லனு சொல்லல..
அவாளுக்கு இருக்குற வசதிக்கு பெரிய இடமா பாக்காம எதுக்குன்னா நம்ம காயுவ பாக்க பாக்க வந்து இருக்கா…
உங்க .. சினேகிதரும் வசதியான இடம்னு ஆசை பட்டு அவாளாம் நம்மளவாள் இல்லனு தெரிஞ்சும். காயுவை கட்டி வைக்க பாக்குறாரே…
இதெல்லாம் கொஞ்சம் கூட நன்னாஇல்லனா… எனக்கு என்னமோ அந்த புள்ளையாண்டன பாத்தா நல்லா விதமா படல மனசுல கிலி பரவுதுன்னுனா..
அவா குடும்பத்தை பார்த்தாலும் நேக்கு அப்படி தான் தோன்றது மனசுல பட்டுதுனா..
அதான் சொல்லிட்டேன் காயுவும் நம்ம பொண்ணு மாதிரி தானேன் னா தப்பா எடுத்துக்காதேள் உங்க சிநேகிதர் பத்தி தப்பா சொல்லுறேன்னு …
ஹ்ம்… நீ சொல்லுறது நேக்கு புரியர்துடி… நேக்கும் சங்கடமா தான் இருக்கு ஆனா பொண்ணா பெத்தவாளுக்கு அதுல விருப்பம் இருக்கறச்சே நாம என்னடி பண்ணமுடியும்…
வா.. அவா அவா தலையில என்ன எழுதி இருக்கோ அதன் படி நடக்கும் ….. இது அந்த பகவான் விதிச்ச விதி… நீயும் நானும் கவலை பட்டு ஒன்னும் ஆகப்போறது இல்லை… போ போய் ஆகவேண்டிய வேலைய பாரு.. கலங்கிய கண்களை துடைத்து கொண்டே சென்றார்..
பெண்ணுக்கே உண்டான நாணம் கொஞ்சமும் இல்லாமல் நிமிர்ந்து பார்த்தாள்… காயத்திரி..
எங்கோ பார்த்திருந்த பார்த்திபன்… ஏதோ உள் உணர்வு சொல்லவும் முட்டத்தில் பார்வையை செலுத்தினான்….
காயுவை பார்த்ததும்… அசந்துதான் போனான்… அவள் அழகில் வாவ் என்னமா இருக்கா… (டேய் என்ன முன்ன பின்ன பொண்ணையே பார்த்தது இல்லாத மாதிரி வாயை பிளக்குற நீ பாக்காத பொண்ணா டா அவன் மனதுக்குள்ளே ஒரு குரல் சொல்ல.. ஹே.. எத்தனை பொண்ணுகளை பாத்தாலும் இவ அழகுக்கு ஈடு வரமாட்டாங்க செமையா இருக்கா… அவனுக்குள்லேயே பேசிட்டு இருந்தவன்
பரவாயில்ல அம்மா சாய்ஸ் சூப்பரா தான் இருக்கு….
அவளை அப்படியே தன் போனில் படம் பிடித்துகொண்டான் பிரண்ட்ஸ் கிட்ட காட்ட..
அவளையே இமைக்காமல் பார்த்துகொண்டிருக்கவும்… ..
காயத்திரி அவனின் பார்வையில் உதட்டை சுழித்துக்கொண்டாள்..
பார்த்திபனுக்கோ.. அவளின்செய்கையில் கோவத்தை உண்டு பண்ணியது…
எவளோ திமிரு இருந்தா என்ன பார்த்து உதாசீனம் படுத்துவா.
இதுக்காகவே உன்ன நா கல்யாணம் பண்ணிக்காட்டுறேண்டீ மனதுள் சூளுரைத்து கொண்டான்…
அவனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டவள் ..உன்னால முடிஞ்சா என்னை கல்யாணம் பண்ணிகாட்டுடா..
இந்த பார்வைக்கு லாம் மயங்குற ஆள் நா இல்லை என்னை என்ன துளசி னு நினைச்சியா உன் பார்வையை பார்த்து மயங்க… போக …
உன்னோட உயிரே என் கையில் தாண்டா…இருக்கு
இதழ்கடையில் ஏளனமாய் பார்த்து சிரித்தாள்..
மீண்டும்..அவனை அலட்சியமா பார்த்து சிரித்து வைக்கவும் … ..
அவளை வெறியோடுபார்த்தான்… சிரி டி நல்லா சிரி.. உன்ன அடைஞ்சு உன் திமிரை அடக்குறேன்டி…
இல்லனா என் பேர் பார்த்திபனே இல்லை…
அங்கிருந்தே எல்லார் முகத்தையும் பார்வைஇட்டாள்…
கற்பகமும் வேதாவும் ரகசியமாய் ஏதோ பேசிக்கொண்டார்கள்…
வேதா….
என்ன கா..
இவளை எங்கியோ பார்த்தா மாதிரி தோணுது டா உனக்கு தோணுதா பாரு…
வேதா மறுபடியும் காயுவை பார்த்துட்டு எனக்கு அப்படி ஒன்னும் தோணலையே அக்கா ஆனா பொண்ணு அம்சமா இருக்க…
ச்சி வாய மூடு நீ பேசினது அகிலாண்டேஸ்வரி காதுல விழுந்துச்சி நீ செத்த..
அக்கா நீதானா அவளை நல்லா பாக்க சொன்ன அதான் பாத்து சொன்னேன் இது ஒரு குத்தமா….
அடேய் உன்ன பாக்க சொன்னேன் தான் அதுக்காக அவ அழகை ரசிக்க சொல்லல…
இதே கண்ணு இதே முகம் நா எங்கியோ பார்த்து இருக்கேன் டா …
நீயும் பார்த்து இருக்க மறந்துட்டு இருப்ப …
அப்ப்பா… என்ன பார்வை டா அது நெருப்பு தகிக்குது அவ பார்வையில….
ஷ்.. அக்கா சுமி இங்க தான் பாக்குறா நீ கொஞ்ச நேரம் சும்மா இரு …
ஹ்ம்ஹ்ம் சரி டா …
ஜானகி காபி எடுத்துண்டு வந்து காயத்திரி கையில் குடுத்தாள் …
அதை வாங்கியவள்… நேர.. அகிலாண்டேஸ்வரியிடம் வந்தவள் .குனிந்து ..யார் உயிரை காப்பாத்த இங்க வந்து இருக்கீங்க.. எந்த வாரிசுகாக ஒரு அப்பாவியை பலி கொடுத்தீங்களோ….. அந்த வாரிசை காப்பாத்த வந்துருங்கிங்களோ? ….
அவளின் கேள்வியில்
அகிலாண்டேஸ்வரி
விதிர்த்து போனாள் …
கைக்குட்டையால் முகத்தை துடைத்து கொண்டே காபியை எடுத்து கொண்டாள்… உக்கிரமான பார்வையோடு அகிலாண்டர்ஸ்வரிய கடந்து சென்றாள்…
சுமித்ராவிடம் காபியை நீட்டியவள் முன்
என் கருவை எப்படி துடிக்க துடிக்க அழைச்சியோ அதே போல உன் கருவையும் துடி துடிக்க வேரோட அழிப்பேன்டி ..அவளின் அனல் பார்வை மதுராவிடம் சென்று மீண்டது…
இவளை கோவில பார்த்துல இருந்தே வீட்டுல அபசகுமான ஏதோ ஒன்னு நடந்துட்டே இருக்கே .. ..
இவளை இதுக்கு முன்ன எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கேனு அப்பவே யோசித்தால்… ஆனால் நியாபகம் சட்டுனு வராமல் போகவும் விட்டு விட்டாள் … இப்போ கருவை அழித்தேன்னு சொல்கிறாள்னா இவளுக்கும் எங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கனும்….
சம்பந்தம் இருக்க போய் தான நீங்க எலாரும் இங்க வந்து இருக்கீங்க… …. சுமித்ராஅண்ணி மனதுள் நினைத்ததை வெளியில் காயத்திரி சொல்லவும்.. நடுங்கிபோனால்…. சுமித்ரா.. பார்த்திபனோட அக்கா..
அவளின் நடுக்கத்தை அலட்சியமாய்
கடந்து சென்றவளின் பார்வையில் பார்த்திபன் கண்ணில் படவும்….
காதல் எனும் பொய் முகம் காட்டி ஒரு அப்பாவி பொண்ணை ஏமாத்திட்டியே டா…
மனதுக்குள் வெகுண்டாள்… கையில் இருக்கும் காபி தம்பளர்கூட அவளின் கோவத்தில் குலுங்கியது… அனல் தகிக்கும்
பார்வையாள் பார்த்திபன் மேல் விழவும் அவளின் கூர்மையான பார்வையில் மெய்மறந்து நின்றான்…
காபி எடுத்துக்கோங்க நீட்டினாள்… அவளையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தவன்… நீட்டின காபியை தொடாமல் இருக்க…
காயு அவனைநிமிர்ந்து ஓர் பார்வை பார்த்தாள்…
அதில் உடனே சுதாரித்தவன் காபியை எடுத்து கொள்ளவும்…. அவனையேகூர்மையாய் பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள்…
அங்கிருக்கும்
ஒவொருத்தரிடமும் ..நீட்டிகொண்டே வந்தவள் …கற்பகதிடம் ..
எங்கே நீ பெத்து வச்சிருக்கிற பொம்பள பொறுக்கி
அவனை கூட்டிட்டு வரலையா.. கற்பகம்.
சாம்பசிவம் ஜானகியும் மனதில் கிலியோடவே காயு நடந்துகொள்வதை பார்த்துக் கொண்டிருந்தனர்…
அவர்களால் வேற என்ன செய்ய முடியும் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும் பிற்பகல் செய்யின் முற்பகல் விளையும் னு சொல்லுவா .. இவா பண்ண பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கற காலம் நெருங்கிடுத்து…
பகவானே என் குழந்தையை உன் பொறுப்பில் விட்டுருக்கேன் நீ தான் பாத்துக்கணும்… மனதுக்குள்.. கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தார்….
கற்பகம்ஆடி போனாள் … காயு கேட்ததும் … அ .. அவ.. அவன் வெளியே இருக்கான் பயத்தில் திக்கி திணறினாள்…
உன் மகனை இப்பவே நல்லா பாத்து வச்சிக்க… அவனுக்கு நான் நாள் குறிச்சி இருக்கேன்…
அதிர்ந்து போனாள்…கற்பகம்.
காயத்திரி அடுத்தது நம்மகிட்ட தான் வரப்போறா
வேதாவுக்கு பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்காம உன் கெத்தா மெய்ன்டன் பண்ணு….. டா வேதா
காயத்திரி வேதலிங்கத்தை கூர்மையாய் பார்த்தவள்
அண்ணானா நினைச்ச பாவத்துக்கு…
உன்ன என்னவெல்லாம் பண்ணனும் தோணுது
இந்த காபி சூடா இருக்கு இதை உன் மேல ஊத்தினால்…. என்னடா ஆகும்… தங்கையாய் நெனைக்க வேண்டியவளை தராம இருன்னு சொன்னவன்தானே நீ ..
அது …. வ.. ந்து… காபியை எடுடா முத்தல்ல…..
ஹ்ம்… ஆ.. ன்…. பயத்தோட எடுக்கவும்…
மதுராவிடம்வந்ததாள் .. உனக்கு சொன்னதமானது நான் பரிச்சிட்டேன்னு..
என்னை அழிச்சிட்டயே.. உன் உறவை நான் பிரிக்கல… என் உயிரை தான் நீங்க எல்லாரும் சேர்ந்து பரிச்சிருக்கீங்க… யாரையும் சும்மா விட மாட்டேன்…சும்மா விட மாட்டேன் ஹாஹா ஹாஹா கையில் இருக்கும் காபிதம்பளர் சிதறி அடித்தாள்… அந்த வீடே அதிரும் படி ஆக்ரோஷமாய் சிரித்தாள்… நான் மீண்டும் வருவேன்னு எதிர் பாக்கல ல…. ஹா ஹா……சிரித்தபடியே மயங்கிவிழுந்தாள்……..
ஆத்மாவின் ஆட்டம் ஆரம்பம்…….