உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 8

0
202

உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 8


வீல்.. னு கத்தி கொண்டே வாசு அலறவும் … அனைவரும் பதறி அடித்து கொண்டு காயு அறையை நோக்கி ஓடினர்…
அங்கே அவர்கள் கண்ட காட்சியில். . உயிர் உறைந்து போய் நின்றிருந்தார்கள்..

தலை விரி கோலமாய் அந்தரத்தில்கண் மூடிய படியே அமர்ந்துக்கொண்டு இருந்தாள் காயத்திரி….

அதை பார்த்ததும் வாசு பயத்தில் அலமுவை கட்டிக்கொண்டாள்…

எல்லாரோட பார்வையும் காயத்ரி மேல இருக்க…

கண்மூடிகொண்டிருந்த காயத்திரி சட்டுனு கண் திறந்து வாசுவைஅருகில் வா வென்று அழைத்தாள்..

ஹுகும்… நா போமாட்டேன் … பயந்து அம்மாவை இன்னும் நெருக்கமாய் கட்டிக்கொண்டாள்…

வா… வாசு உன்ன எதுவும் பண்ணமாட்டேன் வா… அருகில் வா…

மாட்டேன் .. நா வர மாட்டேன் போய்டு என் காயு வ விட்டுடு பாவம் அவ .. அவளை ஏன் இப்படி தொல்லை பண்ணுற….

வாசு பயத்தில் நடுங்குவதை கண்ட
அலமு திரும்பி சிவராமனிடம் ஏன்னா நாம இங்க இருந்து கிளம்பறது தான் உசிதம் வாங்கோ…

இல்லனா காயுக்கு ஏற்பட்ட நிலைமை தான் நம்ம பொண்ணுக்கும் நடந்துடுமோனு நேக்கு ரொம்ப பயமா இருக்குதுணுன்னா.. வாங்கோ போய்டலாம்… காயத்திரியே பார்த்துக்கொண்டு அலுமு பயத்தோட சொல்லவும்…

சிவா சாம்புவை பார்த்தான்…

. சாம்பு கலங்கிய கண்களோடு வாயில் துணிஅடைத்து துக்கத்தோடு நண்பனை பார்த்துக்கொண்டிருந்தார்…

தன் நண்பன் படும் துயரம் கண்கொண்டு பாக்க முடியாமல்…

அலுமு சத்த சும்மா இரு .. னு அதட்டல் போட்டார்…

ஹுக்கும் தோள் பட்டையில் இடித்துகொண்டே .. இங்கோ பாருங்கோனா உங்களுக்கு வேணா உங்க நண்பர் உசிதமா படலாம்
ஆனா நேக்கு என் பொண்ணு தான் முக்கியம் என் பொண்ணு இங்க இருந்தா இதே நிலைமை தான் ஆகும்னு நேக்கு பயமா இருக்கு..
நா வாசுவை அழைச்சிண்டு போறேன் ஆத்துக்கு .

நீங்கஉங்க நண்பராண்ட இருந்துட்டே வாங்கோ..
வாடி வாசு மூச்சு இறைக்க கோவமாய் பேசியபடியே திரும்பினாள்.. …. அங்கே தலைவிரிகோலமாய் காயத்திரி நிற்கவும்… பயத்தில் நாக்கு மேலோன்த்தில் ஒட்டிக்கொள்ள வாசுவை அம்போன்னு விட்டுவிட்டு அம்மாஆ. பதறி அடித்துக்கொண்டு சிவராமன் பக்கத்தில் போய் ஒளிந்துகொண்டாள்…

உக்கிரமாய் அலமுவை பார்த்தபடியே காயத்திரி… வாசு விடம் நெருங்கினாள்…
வாசு பயந்து பின்னாடியே செல்லவும் .. ஜானகி ஓடிவந்து வாசுவை பிடித்துகொண்டாள்…

காயு வாசுவையே பார்த்துகொண்டு இருந்தவள் திரும்பி ஏல்லோரிடமும் வாசுவை தவிர யாரும் இங்க இருக்க கூடாது எல்லாரும் வெளியே போங்க என கோபாவேச கத்தினாள்..

அவள் போட்ட கத்தலில்
பயந்து அலறிண்டு வெளியே ஓடி வந்தனர் …
கதவு தானாய் படீர்னு மூடிகொள்ளவும்… வெளியே நின்றுஇருந்தவர்கள் பயந்துபோனார்கள்…

அலமு ஜானு சிவா சாம்பு எல்லாரும் கதவை தட்டியும் கதவு திறக்க முடியாமல் போகவும்…
மூடிய கதவில் தட்டி தட்டி பார்த்துவிட்டு ஐயோ என் பொண்ண யாராச்சும் காப்பாத்துங்களேன்… கதறி அழுது கொண்டிருந்தாள்..

என்ன சொல்லுறீங்க குருவே … கன்னிப்பெண்ணா… வேணாம் குருவே நாம எப்பவும் போலவே குழந்தையை பலி குடுத்துடுலாம் …
பொண்ணுபோனா எதுனா பிரச்சனைல மாட்டிக்க போறோம்.. .. எனக்கு என்னமோ பயமாவே இருக்கு குருவே … முனியன் பயத்ததோட சொல்லவும்…

என்மேல உனக்கு இவளோ தான…
நம்பிக்கை ஏளனமாய்சிரித்தான் முனியா…..

அப்படிலாம் இல்ல குருவே …

பொண்ணு தலைச்சன் பொண்ணா இருக்கனும் அமாவாசைக்கு பொறந்த பொண்ணா இருக்கனும் …
இதெல்லாம் எங்க தேடிபோய் கொண்டுவந்து பலி கொடுக்கறது..

இது நடக்குற விசயமா படல குருவே… நீங்க இதுவரை 105 பலி குடுத்து இருக்கீங்க .. அதுஎல்லாம் எந்த தடங்கல் இல்லாம நடத்தியாச்சு..

ஆனா நீங்க சொன்ன மாதிரி பலி குடுத்தா தடங்கல் வருமோனு ஏதோ உள் உணர்வு சொல்லிட்டே இருக்கு…

..அதெல்லாம் ஒன்னும் ஆகாது .. நீ பயப்படாத முனியா வேணும்னா பாரு இந்த பலி எந்த தடங்கல் இல்லாம குடுக்க போறத…

குருவே… அதிர்ச்சியோட பார்த்தான் அப்போ இந்த பலி குழந்தையில் ஆரம்பித்து கன்னிப்பெண்ணாலே முடிக்க போறிங்களா குருவே….

முனியன் கேட்டது எதுவும் காதில் வாங்காமல்
தீவராம யோசித்து கொண்டிருந்தான் .

முனியா.. அந்த காயத்திரி பொண்ணோட ஜாதகம் உன்கிட்டதான இருக்கு ..

ஆமா குருவே…

ஹ்ம்ம் யோசனைபண்ணிக்கொண்டிருத்தவன்… அந்த ஜாதகத்தை எடுத்துட்டு வா…

ஹ்ம்ம் சரிங்க குருவே… முனியன் போய் காயத்திரியோட ஜாதகத்தை கொண்டு வந்து கொடுக்கவும்….

ரிஷிபன் சோழி போட்டு பார்த்தான்..பார்த்ததும் ..முனியாஆஆ .. அதிர்ந்து போனான்… .

ஆத்மாவின் பயணம் தொடரும்…. FB_IMG_1557659837340|400x300
..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here