ஊடலழகு

0
129

இன்னிக்கி காலைல கதவ தொறந்ததும் அற்புதமான காட்சி.

கொல்லபக்க காம்பவுண்ட் மேல 2 பறவை. ஒன்னு அக்கா குருவி இன்னொன்னு தேன் கலரு, கருப்பு கலருல நீண்ட வாலிருக்குற குருவி (அது பேர்லாம் கேக்க கூடாது)

ரெண்டும் குறு குறு னு ஒன்ன ஒன்னு பாத்துட்டே இருந்துச்சு. இந்த நீ.வா.குருவி அக்கா குருவி பக்கமா ஒரு எட்டு தாவுது. அக்கா குருவி 2 அடி தள்ளி போகுது. இப்டியே கிழக்கு மூளைலேந்து மேற்கு மூளை வர தாவிட்டே போச்சுங்க. கூடவே அப்ப அப்ப மொறச்சு வேற பாத்துக்குச்சுங்க.

பாக்க அவ்ளோ அழகா இருந்துச்சு. இதுங்க ரெண்டும் என்ன பேசிக்கும், எப்டி பேசிக்கும் னு எனக்கு தோணின ஒரு சின்ன கற்பனை. பாக்கலாமா..

நீ.வா.கு: ஹேய் ஜிங்கிலி, உன் பேர் என்ன… (முதல் அடி தாவி பக்கதுல வருது)

அ.கு: ஹம்ம், அது தெரிஞ்சு என்னா பண்ணபோற நீ ( விலகி போகுது)

நீ.வா.கு: பேர் எதுக்கு கேப்பாங்கலா கூப்டத்தான்.. ஹே.. ஹே.. குண்டாத்தி நில்லுடி பேசிகிட்ருக்கேன் எங்க போற.

அ.கு: இந்தாரு, குண்டாத்தி கிண்டாத்தின்ன மரியாத கெட்டு போய்ரும் பாத்துக்க. என்னவோ இவன் தான் பெத்து பேரு வச்சாபோல, டி போட்டு வேற பேசுற.

நீ.வா.கு: அட.. செல்லத்துக்கு கோவத்த பாருடா. அக்கா குருவிங்கற பேருலாம் 90ஸ் கிட்ஸோட முடிஞ்சிருச்சு டி. இப்ப உள்ள பிள்ளைங்கயெல்லாம் உன்ன குண்டு குருவினு தானே கூப்டுதுங்க. அவிங்க கூப்டா பரவால்ல. மாமேன் கூப்டா கோவிக்கிறியே ஜிங்கிலி.

அ.கு: என்ன ஜிங்கிலி கூப்டாதே சொல்றேன் ல.?? (தலைய சிலுப்பி ஒரு மொற மொறச்சிட்டு அடுத்த அடி தாவுது)

நீ.வா.கு: அப்போ பேர சொல்லு. இல்லனா ஜிங்கிலி னு தான் கூப்டுவேன் (தன் நீண்ட வாலை குறும்பா ஆட்டிகிட்டே கிட்ட போகுது)

அ.கு: ம்ம்ம்ம், வெளக்கமாரு..?

நீ.வா.கு: வீடு கூட்றதா? ரோடு கூட்றதா?

அ.கு: ப்ச்..இப்ப என்ன வேணும் உனக்கு?

நீ.வா.கு அப்பாவியா ஒரீ லுக்கு விட்டுது.

நீ.வா.கு: சும்மா நாலு வார்த்த, முடிஞ்சா 1 கப் வேப்பம் பழம்…

(குருவி எப்ப சந்தோஷ் சுப்ரமண்யம் படம் பாத்துச்சு ???. அப்டிலாம் கேக்க கூடாது)

அ.கு: நீ என்ன என் க்ருப்பா? உன் க்ருப்ல பொண்ணுங்கலே இல்லயா?

நீ.வா.கு: என் க்ருப்ல உள்ளதுங்கலாம் ஓட்ட தக்காளி. நீ தான் பட்ட ஜிலேபி.

அ.கு: ச்சீ.. நீங்கலாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல.

நீ.வா.கு: போச்சுடா… மனுச பயலுங்கலோட பழகி பழகி இவளுங்களும் இப்போ இத கேக்கறாளுங்க பா ச்சே…(தலையை குலுக்கி, றெக்கைகளை படபடக்குது)

இப்படியே சுவரின் மேற்கு மூளை வந்தாச்சு. அக்கா குருவி தெற்கு சொவத்துபக்கம் திரும்புது.

அ.கு: இங்கபாரு, இதுக்கு மேல என் பின்னால வந்த….

நீ.வா.கு: என்ன பண்ணுவியாம்.

அ.கு: என் பாய் பெஸ்ட்டி கிட்ட மாட்டிவிட்றுவேன், ஜாக்கிரதை. (உர்ருனு மொறச்சிட்டு, பறந்து கீழே உக்காருது)

நீ.வா.கு: அடபோங்கடா, இந்த பாய் பெஸ்ட்டி தொல்ல தாங்கல. பாய் ஃப்ரண்டுகள கூட சமாளிச்சிறலாம். பாய்பெஸ்ட்டிய சமாளிக்க முடில. நான் வேற ஆள் பாத்துக்கறேன் போடி.

தலைய முழுசா திருப்பி அக்கா குருவியை பார்த்து 2 தடவ கத்திட்டு பறந்துபோச்சு….

அற்புதமான காட்சி, அழகான ஊடல்.

ஊடல் எல்லோருக்கும் பொதுவானது. எல்லாவற்றுக்கும் பொதுவானது. இது அன்பின் இரண்டாம் பரிமாணம். உரிமையின் அச்சாரம். சண்டைகள் கூட மறந்து போகும். ஊடல்கள் மறப்பதில்லை.
நெறுக்கம் கூட்டிதரும் இந்த ஊடல் உணர்வுகளின் அழகான பின்னல்.
அதுவும் அற்றிணை ரகத்தின் ஊடல் இன்னும் இன்னும் அழகாக இருந்தது.

அந்த நேரம் என் மூளைக்குள் ஒரு பாட்டு கேட்டுச்சு…

புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்

புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால் உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்

கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன் நெஞ்சை கொய்கிறாய்

உயிரே எந்தன் செல்லமே உன் போல் உள்ளம் வேண்டுமே

மனசுக்குள்ள பாடிக்கிட்டே திரும்பினா..??

ஷ்ஷ்ஷுருருருவ்வ்வ்……???

ஆத்தி…,..என்றவூட்டு நீண்டகால் குருவி என்ன பார்த்து மொறச்சிட்டு நிக்கிதே.

ஆகா, இத மறந்துட்டேனே… ? எழுந்ததே 8 மணி. இதுல புல்லுனகால், புல்லாதகால் னா, இவன் பொல்லாதவனாகிருவானே….

ஒஹ் மை கருப்பசாமி என்னய காப்பாத்துடா னு வேண்டிக்கிட்டே,

ஹிஹிஹிஹி னு கேவலாமா சிரிச்சு சமாளிச்சிட்டு ஓடியே போய்ட்டேன்…

ஹெஹ்ஹே.. சிக்குவமா நாங்க…??

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here