என் கோடையில் மழையானவள்-6

0
321

பயமும் பதற்றமுமாக மருத்துவமனை வளாகத்தை அடைந்தவள் வரவேற்பு பெண்ணிடம், குரு இருக்கும் அறை இலக்கத்தை கேட்டுக் கொண்டு அந்த தளத்தை நோக்கி விரைந்தாள்.

குருவின் அறையின் முன்னே கறுப்பு உடையணிந்த இருவர் விறைப்பாய் நின்று கொண்டிருக்க அவர்கள் நின்ற தோரணை அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. இவர்கள் யாராக இருக்கும்? என எண்ணியவாறு அவர்களை கடந்து செல்ல எத்தனிக்க குறுக்கே கை நீட்டி தடுத்து,

“சமாவென்ன மிஸ்.. ஒயாட எதுலட்ட யன்ன பே..” (சாரி.. உங்களுக்கு உள்ளே போக முடியாது) என்றான் விறைப்பாக.

“இந்த கறுப்பு பூனை என்னை ஏன் குருவை பார்க்க வேணாம்னு சொல்றான்?” எனப் புரியாமல் அவனை நோக்கி,
“எக்ஸ்கியூஸ்மீ சார்.. குரு மகே யாலுவெக்.. எயாவ பலன்ன ஆவே மங்.. கருணாகரலா மட யன்ன இட தெனவத?”
(எக்ஸ்கியூஸ்மீ சார் குரு என் நண்பன் அவனை பார்க்கத் தான் இங்கே வந்திருக்கிறேன். தயவு செய்து தள்ளி நிற்க முடியுமா?) என அதிகாரத் தொணியில் வினவ அவன் முடியவே முடியாது என மறுத்து விட இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அறையினுள்ளே குருவின் அருகே நாற்காலியில் அமர்ந்து செல்போனைக் குடைந்து கொண்டிருந்தவனுக்கு வெண்பாவின் குரல் கேட்க, “மேகி மண்டையின் குரல் மாதிரியே இருக்கே… ஐயையோ இங்கே வந்துட்டாளா?” என்றெண்ணியவன் சட்டென எழுந்து கதைவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

அங்கே நின்ற இருவரையும் சமாதானம் செய்து விட்டு கூடப் படிக்கும் நண்பி என அவளை அறிமுகம் செய்து விட்டு உள்ளே அழைத்துப் போனான்.

அங்கிருந்த படுக்கையில் படுத்திருந்தவனின் ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டிருக்க, இடது கையின் தோள் முதல் முழங்கை வரை போடப்பட்டிருந்த கட்டே அவளை கொஞ்சம் பயமுறுத்தியது. எல்லாம் அவளால் தான் நேர்ந்தது என்ற குற்றவுணர்வு அவளை வெகுவாகத் தாக்க உறங்கிக் கொண்டிருந்த குருவையே பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.

அன்று கல்லூரியில் வெண்பாவிடம் வம்பு செய்த சிவாவை அடித்து எச்சரித்து விட்டு குரு சென்று விட அவனை இதற்காக பழி தீர்த்தே ஆக வேண்டுமென்ற வெறி அவனுள் தீயாய் எரிந்து கொண்டிருந்தது. அன்று இரவே அதற்கான சந்தர்ப்பம் கிட்டவே தன் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்களை ஏற்பாடு செய்தான்.

அந்நேரம் சுகீர்த்தனுக்கும் தனக்குமான இரவுணவை வாங்குவதற்காக வீட்டிலிருந்து நடந்தே வந்தான். அதுவே சிவாவிற்கு வசதியாக இருக்க ஆள் நடமாட்டமில்லாத அந்த தெருவில் அவனை சரமாரியாக தாக்கினர். தன்னால் முயன்றளவு அவர்களுடன் சண்டையிட்ட குருவிற்கு அந்த ஐந்து பேரை சமாளிக்க முடியாமல் போனது.

சாப்பாடு வாங்கச் சென்ற தன் நண்பன் நீண்ட நேரம் வராமல் போகவே அவனுக்கு அழைப்பெடுக்க பதிலேதுமில்லை. ஏற்கனவே குருவின் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்திருந்தவன் உடனே பைக்கில் விரைந்தான். அதன் பிறகு அங்கே கண்ட காட்சியில் ஒரு கணம் பதறியவன் மறு கணமே அவனை மருத்துவமனையில் சேர்த்தான்.

குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு நான்கு நாட்கள் ஆகியிருந்தன.

“ஏய் மேகி.. உனக்கு வர வேணாம்னு தானே சொன்னேன் பின்னே ஏன் வந்த? சீக்கிரமா போ அவன் கண் முழிச்சி பார்த்தா என் உயிரை வாங்குவான்..” என கோபமாக அதே சமயம் குருவுக்கும் கேட்காத குரலில் சொன்னான்.

“நானே பதறிப்போய் வந்திருக்கேன்.. குருவுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு.. ஏன் சுக்குண்ணா நீங்க வேற..” என்றாள் கவலையாக.

அச்சமயம் குருவுக்கும் விழிப்புத் தட்டியது. மெல்ல கண்களை திறந்து பார்த்தவன் கண் முன்னே நின்றிருந்தவளை கண்டதும் பதறிப் போய் எழுந்தமர்ந்தான். காண்பது கனவா? நனவா? என்பது போல் கண்களை மீண்டும் மூடித் திறக்க அவள் அவனருகே வந்து நின்று கொண்டு,

“குரு உனக்கு இப்போ எப்படி இருக்கு? உனக்கு ஒன்னும் பிரச்சினையில்லையே..?” என குரலில் சோகம் இழையோட வினவினாள்.

“ம்ம்.. இப்போ கொஞ்சம் ஓகே.. நீ ஏன் இங்கே வந்த?”

“என்ன குரு இப்படி கேட்குற? காதலனுக்கு அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு சொன்னதுக்கப்புறம் எந்த காதலியால பார்க்காம இருக்க முடியும் சொல்லு..? நாலு நாளா காலேஜ்ல உன்னை காணாம எவ்வளவு டென்ஷன் ஆகிட்டேன் தெரியுமா?” என்று முகத்தை பரிதாபமாய் வைத்துக் கொண்டு அவனிடம் கூற சுகீர்த்தனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான் குரு..

“ம்ஹூம்.. இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. செய்றதெல்லாம் அவ திட்டு எல்லாம் எனக்கா? கடவுளே எனக்கு ஏன் இந்த சோதனை..?” என தன் மனதால் புலம்பியவன் மறந்தும் கூட குருவின் பக்கம் திரும்பாமல் மும்முரமாக ஃபோனில் எதையோ குடைந்து கொண்டிருந்தான்.

அங்கிருந்த குட்டி மேசையின் மேல் ஆரஞ்சை கண்டவள் குருவிடம் திரும்பி,
“குரு.. உனக்கு ஆரஞ்சு ஜூஸ் போட்டு எடுத்து வர்றேன் ..” என அவன் பதிலையும் எதிர்பாராமல் அதை செய்யத் துவங்கினாள்.

அவளிடம் தன்னால் இந்த நிலைமையில் வாயாட முடியாது என நன்கறிந்த குரு முகத்தை மட்டும் விறைப்பாக வண்ணம் மௌனம் காத்தான். அவன் கோபமெல்லாம் சுகீர்த்தனின் பக்கமே திரும்பியது.

“என்னடா என்னை பார்த்து முறைக்குற? சத்தியமா இவளை இங்கே வராதேனு தான் சொன்னேன். சொன்னதை கேட்காம இந்த மேகி மண்டை வந்துருச்சிடா..” என்று தன் நிலைமையை எடுத்துக் கூற முயல அவனை முறைத்தான் குரு.

“அப்போ நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு நீதான் இவளுக்கு சொல்லியிருக்க? ம்ம்..?” என அவன் முகத்தை கூர்ந்து கவனிக்க சுகீர்த்தனின் திருட்டு முழியே அவனை காட்டிக் கொடுத்தது.

அங்கே ஜாலியாக பாட்டொன்றை பாடிய வண்ணம் குருவிற்காக ஆர்ஞ்சு ஜூஸ் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கம் பார்வையை திருப்ப அவள் பாடிக் கொண்டிருப்பது இவனது கோபத்தை கிளற சுகீர்த்தனை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக இருந்தான்.

“இங்கே என்னை மாட்டி விட்டதும் இல்லாம எவ்வளவு ஜாலியா பாடிக்கிட்டு இருக்கா… என்னமோ உயிரே போன மாதிரி பதறியடிச்சுக்கிட்டு இவனை பார்க்க ஓடி வந்தா.. இப்போ என்னடான்னா ஜாலியா பாட்டு… ஹூம் இந்த மேகி மண்டையை புரிஞ்சுக்கவே முடியலையே..” என்று சுகீ தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டிருந்த நேரம் அவள் தயாரித்த ஜூஸை மூன்று கப்களில் ஊற்றி எடுத்து வந்து குருவிடம் நீட்டினாள் வெண்பா.

எதுவும் பேசாமல் ஒரு கப்பை எடுத்துக் கொண்டவன், அவளை நோக்கி,
“எனக்கு ஒரு கப் போதும்.. எதுக்கு மூனு கொண்டு வந்திருக்க..?” என எரிச்சலுடன் கேட்க,

“ஐயோ குரு.. ஒன்னு தான் உனக்கு.. நீ கேட்டாலும் மத்த இரண்டையும் கொடுக்க மாட்டேன் ஏன்னா.. ஒன்னு சுக்குண்ணாவுக்கு மத்தது எனக்கு..” என்று தன் முத்து பல்வரிசை தெரியும் வண்ணம் சிரித்துக் கொண்டே ஒன்றை அவனுக்கு கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“என்னம்மா நீ.. அவன் தான் பேஷன்ட்.. அவனுக்குத் தான் அடிப்பட்டிருக்கு.. அப்போ அவனுக்குத் தானே கொடுக்கனும்..” என்று அவளிடம் கூற ஒரே அந்த ஆரஞ்சு ஜூஸ் முழுவதும் ஒரே சிப்பில் பருகி முடித்தவள்.. பெருமூச்சொன்றை வெளியிட்ட வண்ணம்,

“ஹப்பாடா.. இப்போ தான் இதமா இருக்கு..” என்றவள் மேலும் , “போங்கண்ணா நீங்க வேற .. இவனா பேஷன்ட்? நீங்க என்னமோ பெருசா கைல பலமா அடிபட்டிருக்குனு சொன்னீங்க.. நானும் என்னமோ ஏதோன்னு பதறியடித்து ஓடி வந்து பார்த்தா இந்த சின்ன கட்டுக்கு இவ்வளவு பெரிய சீனா..?

இந்த தளம் முழுக்க காவலுக்கு கார்ட்ஸ் இருக்காங்க . இவன் பக்கத்து ரூம்ல யாரும் மினிஸ்டர்ஸ் அட்மிட் செஞ்சி இருக்காங்களா என்ன? பட் குரு டோன்ட் வொரி என்னையும் அந்த பிளாக் கேட்ஸையும் மீறி உன்னை யாரும் தொட முடியாது ” என்றவள் சத்தமிட்டு சிரித்தாள் அவள்.

அவளது செய்கை அவனை கடுப்பேற்ற சுகீர்த்தனை மீண்டும் முறைக்க, அவனுக்கோ தன் நிலையை எண்ணி சிரிப்பதா? இல்லை அழுவதா? என்றே தெரியவில்லை. வெளியே கார்ட்ஸ் இருக்கிறார்களா? என்று அவள் கூறியதை கேட்டு ஒரு கணம் குழம்பியவன் சுகீர்த்தனை நோக்கி,

“சுகீ வெளியில கார்ட்ஸ் இருக்காங்களா? யாருக்கு?” என்று கேட்டான் அவனிடம்.

சற்று தடுமாறியவன், “அது .. அது வந்து குரு உங்கப்பா தான்..” என்று அவன் இழுக்க அவன் கண்கள் அனலை சிந்தின.

“உங்கப்பாவுக்கு எப்படியோ மேட்டர் தெரிஞ்சு போச்சுடா.. திடுதிப்புனு இவனுங்க வந்து நின்னுட்டாங்க.. உங்கப்பா வேற இந்த கொஞ்ச நாளா ஸ்ரீலங்கால இல்லை.. நேத்து தான் ஸ்ரீ லங்கா வந்தாராம். அவர் வரும் வரை உன்னோட பாதுகாப்புக்காக அனுப்பியிருக்காரு.. என்று ஒருவாறு தட்டுத்தடுமாறி கூறி முடித்தான்.

குருவின் விழிகள் சினம் கொண்டு சிவந்திருக்க இவர்களது உரையாடல் புரியாமல் குழப்பத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் அவள்.

“என்னது குரு அப்பாவா?? அவர் என்ன பெரி டானா அண்ணா..?” என்று வியந்து விழி விரியக் கேட்ட விதம் சுகீர்த்தனுக்கு சிரிப்பை ஏற்படுத்த, குருவின் முறைப்பை கண்டு தன்னை அடக்கிக் கொண்டவன்,

“இல்லைமா.. அவர் பெரிய டான்லாம் இல்லை.. ஆனால்..” என்று ஏதோ சொல்ல வந்தவனை பார்வையாலேயே தடுத்தான் குரு. இந்தப் பேச்சில் அந்த பாதுகாவலர்களைப்பற்றி கேட்க மறந்து போனாள்.

அவன் சொல்ல வந்ததை புரிந்து கொண்டவள் போல, “ஓஓஓ.. அப்போ நானும் ரவுடி தான் விஜய் சேதுபதி போல.. பெரிய டாஆஆஆஆஆன் இல்லை டான்.. அப்படியாண்ணா?” என அவனை பார்த்து கேட்க, இம்முறை சுகீர்த்தனோ அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான்.

“சுகீஈஈஈஈ..” என அவனை ஓர் உஷ்னப் பார்வை பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் அமைதியானான்.

மீண்டும் மீண்டும் அவள் அதையே கேட்க அதில் கடுப்பான குரு,

“ஒரு இளவும் இல்லை அந்தாளு.. நீ இதை இப்போ நிறுத்துறியா?” என்றவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.

மறுபடியும் அதைப்பற்றி தன்னிடம் கேட்டு விடுவாளோ? என்ற பயத்தில் சுகீர்த்தனும் அவள் புறம் திரும்பாது யாருடனோ ஃபோனில் பேசுவது பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.

“என்ன இவன் அப்பாவை பத்தி பேசுனா அந்தாளு இந்தாளுன்னு கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம பேசுறான். இதுல இவனுக்கு கோபம் வேற..” என குழம்பிப்போய் தன்னுள்ளேயே புலம்பிக் கொண்டிருக்க அந்த அறையின் தட்டப்பட்டு திறக்கப்பட்டது.

மூவரும் யாரென நிமிர்ந்து பார்க்க வெளியே குருவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த ஒருவன் உள்ளே நுழைந்து, “சார்.. மந்த்ரீதுமா தவ வினாடி தஹயகின் மெதனட்ட என பவ ஆரஞ்சியக் லெபுனா சார்.. (சார்.. அமைச்சர் அவர்கள் இன்னும் பத்து நிமிடங்களில் இங்கே வருவதாக தகவல் வந்திருக்கு சார்.) என்றவன் குருவின் தலையசைப்பை பதிலாக பெற்றுக் கொண்டு வெளியேறினான்.

“அமைச்சரா அவர் ஏன் இங்கே வரணும்? ஆமா யாருண்ணா அந்த கார்ட்ஸ்? ஏன் குருவுக்கு பாதுகாப்பா இருக்கனும்..? என தலையை சொறிந்தபடி சுகீர்த்தனிடம் வினவ அவளுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் குருவைப் பார்க்க அவனோ கழுத்து நரம்புகள் புடைக்க, கோபத்தில் கண்கள் சிவக்க சுவரை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here