ஒரு சேயும் தாய் ஆகிறாள்—குறுங்கதை.

0
104

கிருஷ்ணன் விடை தெரியாத கேள்விகளை சுமந்து கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.அங்கே நின்றுகொண்டு இருந்த மணமக்களை பார்த்து கொண்டே இன்ஸ்பெக்டர் முன்னாடி போய் அமைதியாய் அமர்ந்தார்.இன்ஸ்பெக்டர் அவரிடம் “சார் உங்க வேதனை ஒரு அப்பாவா எனக்கும் புரியுது.ஆனாலும் எங்களுக்கும் சில கடமைகள் மனசாட்சிய மீறி செய்ய வேண்டி இருக்கு.இனி நீங்க தான் முடிவு பண்ணனும்”என்றதும் கிருஷ்ணன் தனது செல்போனில் மனைவியை அழைத்தார் .

சில நிமிடத்திற்கு பிறகு அவர் மனைவி மாலதி .கலங்கிய கண்களுடன் ஸ்டேஷனுக்குள் வந்தார் .தனது கையில் இருந்த பையை கிருஷ்ணனிடம் கொடுத்தார் .அதை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தப்படி “இதுல என் பொண்ணு கல்யாணத்திற்கு சேமித்து வச்ச நகைகள் ,பணம் இருக்கு.அவளுக்காக இன்ஸ்யூரன்ஸ்ல கட்டுன பணமும் முடிஞ்சு போச்சு .அதுவும் அவளுக்கு தான்.எங்க காலத்து அப்புறம் வீடும் எழுதி தர்றோம்.ஆனா எங்களுக்கு இந்த பொண்ணு வேணாம் சார்.தாங்க முடியல சார் .இது துரோகம் .பெத்தவங்களுக்கு புள்ளைங்க செய்யுற பச்ச துரோகம் .அவளோட பத்து வயசுல இருந்து நான் வெளியில டீ கூட சாப்டறது கிடையாது .அதை கூட சேமிச்சு வச்சேன் .எல்லாம் கனவா போயிருச்சு .பரவாயில்லை சார் நல்லா இருக்கட்டும் .ஆனா நாங்க செத்து போனாலும் பாக்க மட்டும் வரக்கூடாது”என்றவர் மாலதியுடன் வேகமாய் வெளியேறினார்.ஸ்டேஷனில் ஓரமாய் நின்றிருந்த காவ்யா .கண்ணீர் விட்டு கதறியப்படி மணமகன் கார்த்தியின் மீது சாய்ந்தாள் .

மாலதி தன் நிலை மறந்து அந்த ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சாய்ந்து கிடந்தார்.தனக்கான ஒரே துணையும் இப்போது உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை நினைத்து உடைந்து போனார் .இந்த ஆஸ்பத்திரியில் வைத்து டிரிட்மெண்ட் பாக்குற அளவுக்கு கையில் பணமும் இல்லை என்கிற நிலையில் டாக்டர் வந்து”அவருக்கு ரோம்ப நாளா இதயத்துல பிரச்சனை இருக்கு.இப்போ மோசமான சூழ்நிலையில் இருக்கார் .ஆபரேஷன் பண்ணனும் .உடனே பணத்த கட்டுங்க”என்றதும் உடைந்து போனார் .

மாலதி தோள்களில் ஒரு கை ஆறுதலாக பற்ற திரும்பி பார்த்த மாலதி அது காவ்யா என்றதும் விலகி சென்றார்.அவர் அருகில் சென்ற காவ்யா “அப்பாக்கு ஹார்ட் ப்ராபளம் இருக்குன்னு எனக்கு முன்னாடியே தெரியும் .நானும் அவர் டிரிட்மெண்ட் பாத்துக்குவாறுக்கு எதிர் பார்த்தேன் .ஆனா எனக்கு பெரிய இடமா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டார்.அவர் அப்ப இருந்த நிலையில் நான் சொல்றத அவர் கேட்க கூடிய நிலையில் இல்ல .அதனால தான் என் கூட படிச்ச .நம்மள மாதிரி சாதரண குடும்பத்த சேர்ந்த கார்த்திய கல்யாணம் செஞ்சுகிட்டேன்.”என்றதும் கார்த்தி உள்ளிருந்து வந்து “காவ்யா பணம் கட்டியாச்சு.இன்னும் ஒரு மணி நேரத்துல ஆபரேஷன் பண்ணிருவாங்க”என்றதும் மாலதி தனது கைகளை உயர்த்தி நன்றி கூறினார் .

கார்த்தி அவரிடம் “இது அவருடைய பணம் தான்ங்க .தன்னை பத்தி யோசிக்காத அப்பா.அப்பா பத்தி யோசிக்குற மகள் .அழகான இந்த குடும்பத்தில் நானும் ஒருத்தன்னு நினைக்கும் போது சந்தோசமாய் இருக்கு”என்றதும் மாலதி காவ்யாவை கட்டி பிடித்து கொண்டார் .

கிருஷ்ணன் கண் முழித்ததும் தனது மகளை தேடினார்.அவர் முன்பு வந்து நின்ற காவ்யாவிடம் “என் மகளா?இல்ல அம்மாவாடா நீ?என்றதும் அவரது தலையை கண்ணீருடன் தலை கொதினாள்.

[முற்றும் ]

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here