கடவுள் என் அம்மா மட்டுமே

0
33

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..

“உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி” என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் “என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள்.
ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவளாய் இல்லை”

இதைகேட்ட தகப்பன் கேட்டான்,
“அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?”
அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் …..

“நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள், எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று. ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி, நிலாவைக்காட்டி கதை சொல்லி அவள் தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய ‪பாசம்‬ இருக்கும்..
ஆனால்..

“இப்போதைய அம்மா, நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் “உனக்கு சோறு தரமாட்டேன் என்று.”..
இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்ன வார்தையை நிறைவேற்றி விட்டாள்.”.!!!

‪#‎அம்மாவுக்கு‬ நிகர் இந்த உலகில் யாருமில்லை…
இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே….
என் உயிர் என் அம்மாதான்.!!!!!

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here