கனவில் வந்தவள்

0
129

டிரிங்!! டிரிங்!! என விடாமல் அலைபேசி அழைத்துக் கொண்டு இருக்க… உறங்கிக் கொண்டிருந்தவனின் துயில் கலைந்தது.

எஹ்!! ச்சே!! யாருடா இது? இந்த நேரத்தில் கால் பன்றது!! என தன் உறக்கம் கலைந்த கோபத்தோடு தட்டு தடுமாறி எழுந்தவன்… மெல்ல மெல்ல தள்ளாடிக் கொண்டே சென்று அழைப்பை எடுத்தான்.

ஹலோ யார்டா!! இந்த நேரத்தில், என எடுத்த எடுப்பிலேயே குரலை உயர்த்த!! எதிர்பக்கம் கேட்ட குரலில், முதல் நாள் அடித்த சரக்கின் மப்பு சட்டென குறைந்தது.

சார்!!

…….

சரி!!

………

இல்ல!!

……..

நேரத்துக்கு அங்கே இருப்பேன் சார்!!

………

சரிங்க சார்!!

என பேசி முடித்தவன் அலைப்பேசியை முறைத்த வண்ணம்… சிறிது நேரம் நின்றிருந்தவன் பட்டென வைத்து விட்டு தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்தான்.

ச்சே!! அடிச்ச போதை எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்னு இறங்கிட்டு… இனிமேல் எங்க தூங்குறது என நினைத்தவன்…

போனை போட்டு என் தூக்கத்தையே கெடுத்துட்டானே! என பெருமூச்சி விட்டவன் மறுபடியும் தன்னுடைய நித்திரையை தொடர கட்டிலில் மல்லாந்து படுத்தவன் போர்வைக்குள் புகுந்து கொண்டான்.

உறக்கம் லேசாக அவனை தழுவியது…. மறுபடியும் அலைப்பேசி அடிக்கவும், கோபத்தோடு எழுந்தவன்!! ரிசிவரை எடுத்து கட் செய்து விட்டு… டேபிளில் ரிசிவரை தனியே வைத்துவிட்டு நேராக கட்டிலில் சென்று படுத்தவன் அப்படியே உறங்கியும் போனான்!!

வீட்டின், அழைப்பு மணி!! விடாமல் அடித்துக் கொண்டே இருக்க… கூடவே கதவும் படபடவென தட்டப்படவும்… டேய் யாருடா அது!! நைட்டுல கூட தூங்க விடாமல், வீட்டுக்கே வந்து கதவை தட்டுறீங்க என புலம்பியன்!! கோபத்தில் வேகமாக சென்று வாசல் கதவை திறக்க… சூரியன் உச்சியை சென்றடைந்து கொண்டிருந்தான்… இவ்வளவு நேர இருட்டில் இருந்தவனின் கண்களில் சூரிய ஒளி படவும், கண்கள் கூச கையால் கண்ணை மூடியவன் சிறிது நேரம் கழித்து மூடிய கண்ணை திறந்தவன்… எதிரே நின்றவனின் முறைப்பில் வழியை விட்டு நின்றான்.

டேய்!! உனக்கு எவ்ளோ நேரமாடா போன் பன்றது…

சாரிடா!! மச்சி, நேத்து நைட்டு அடிச்ச சரக்குல அசந்து தூங்கிட்டேன் என்றவன்!!! அய்யோ!! சொட்டை தலையன் போன் பன்னான்டா!!! இன்னைக்கு சீக்கிரமே வர சொன்னான்டா, என புலம்பியவன் கிளம்புவதற்கு தயாராக போகவும், மறுபடியும் கதவு தட்டப்பட சென்று கதவை திறந்தவன் முன்பு!!! எதிர்த்த டீ கடையில் வேலை செய்யும் சிறுவன் நின்றிருக்கவும்…

டேய் உன்கிட்ட நேற்றே, என்ன சொன்னேன் காலையில் சீக்கிரமே வந்து கதவை தட்டி என்னை எழுப்புன்னு சொன்னேன்ல!!

அட!! போ அண்ணாத்தே! நானும் வெள்ளனவே!! கையில் டீ யோட வந்து கதவை தட்டினா! நீ பாட்டுக்கு தூங்கிட்டே இருக்க.. கதவை திறக்கவே இல்லை… இங்கேயே நின்னுட்டு இருந்தா!! என் மொதலாளி திட்ட மாட்டாரா!! அதான் போயிட்டேன் என டீ கடையில் வேலை பார்க்கும் சிறுவன் அலுத்துக் கொண்டான்.

சரிடா!! ரொம்ப அலுத்துக்காதே! இப்போ மட்டும் ஏன் வந்தே!!…

உன் ஆபிசில் இருந்து கால் வந்துச்சா!! அதான் உன்னை ஓனர் கூப்டாரு என சொல்லவும்,

டேய்!! அவர் ஏன்டா? உனக்கு போன் பன்ன போறாரு!! என் ரூமிலேயே தான் போன் இருக்கே என்றிட!! அது எனக்கு தெரியலை அண்ணாத்த! என சிறுவன் சொல்ல!!

டேய் வசந்தா!! நீ போன் வச்சிருக்கிற அழகை பாரு!! என இதுவரைக்கும் இவர்களின் பேச்சை மௌனமாக நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தவன் அலைப்பேசியை காட்டவும்… அய்யோ!!!

டேய் சந்துரு, இத முதல்லயே சொல்ல வேண்டியது தானே டா!! என படபடத்தவன்… மேல்சட்டையை தேடி போட்டு கொண்டு… கட்டியிருந்த கைலியோடு கிளம்பினான்.

அய்யோ!! எப்படி மறந்தேன் முக்கியமான அசைன்மெண்ட் இருக்கே!! என யோசித்தபடியே வேகமாக எட்டுக்களை வைத்து டீ கடையை அடைந்தான்.

வசந்தன் தங்கியிருப்பது மேன்சனில், மூன்று மாடிகளை கொண்ட பேன்சனில்… முன்றாவது மாடியில் மாதம் முந்நூறு ரூபாய் வாடகைக்கு நண்பனுடன் தங்கியிருந்தான் வசந்தன்…

பத்திரிக்கையில் போட்டோகிராபராக வேலை பார்க்கிறான்… நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வதால் இரவானால் போதும்!!! தகுந்த வேலை கிடைக்காத விரக்தியில் மூக்கு முட்ட குடிப்பதையே வேலையாக வைத்திருந்தான்.

அப்படி தான்!! வழக்கம் போல குடித்து விட்டு வந்து படுத்தவன், விடிந்தது கூட தெரியாமல் தூங்கி கொண்டிருந்தான்.

அண்ணே!! போன்ல யாரு? என. வேகமாக ஓடி வந்தவன், மேல் மூச்சு வாங்க கேட்க!!

இதோ!! பாரு வசந்த் தம்பி! நான் போன் வச்சிருக்கிறது நாலுபேர் பேசினா அது மூலமாக துட்டு சம்பாரிக்க தான்!! ஆனால் என் கடை போன் நம்பரை உன் ஆபிசில இருந்து முதல்ல அழிச்சிடு என்றவர் ஆமா!! வசந்த்து நீ, தான் போன் வச்சிருக்கியே அப்புறம் ஏன் மறுபடியும் என் கடைக்கு வருது… இதோட கடைசியா வச்சிக்க… என கடுப்படித்துவிட்டு நகர!!

வசந்தனுக்கோ!! இது வழக்கமான ஒன்று தானே.. என்று நினைத்தவன், போனை எடுத்து காதில் வைத்தான்.

ஹலோ!! என வசந்தன் சொல்லவும்,

…..,,

சரி சார்

……..

ம்ம் போய்ட்டு வந்துடுறேன்

…….

யாருக்கும் தெரியாது சார்… சரிங்க சார் என பேசிவிட்டு வைத்தவன் முகத்தில் வெறுப்பு மண்டி கிடந்தது.

வேகமாக தன்னுடைய அறைக்கு சென்றவன்… டேய்!! சந்துரு, சொட்ட தலையன் தான் போன் பன்னான்… நான் அவசர வேலையா போறேன் அதை முடிச்சிட்டு வரேன்!!! நீ படுத்து ரெஸ்ட் எடு!! உனக்கு சாப்பாட்டுக்கு கடையில் சொல்லிட்டு போறேன்..

சரிடா பார்த்து போ!! எங்கேயும் மாட்டிக்காதே!! என்றவன் மறுபடியும் போர்வைக்குள் நுழைந்து கொண்டான்…

வசந்தன்! நேராக குளியலறையை நோக்கி சென்றான். அந்த மேன்சனில் ஒரு தளத்தில் பத்து அறைகளும், அவற்றுக்கு பொதுவில்!! ஐந்து கழிப்பறை மற்றும் ஐந்து குளியலறை மட்டுமே இருந்தது. வாடகை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக இங்கே தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தான்.

மதிய நேரம் என்பதால் பாத்ரூம் காலியாக கிடந்தது!! அவசர அவசரமாக தன்னை உள்ளே புகுத்தி கொண்டவன்.. பத்தே நிமிடத்தில் வெளியே வந்தான். பசி வயிற்றை கிள்ள உடனே அந்த டீ கடைக்கு சென்று இரண்டு பன்னும் ஒரு டீயும் வாங்கியவன்!! பன்னை டீயில் நனைத்து உண்டு விட்டு அதற்கான காசை அவரிடம் கொடுத்து விட்டு!!! கடைக்காரரிடம்! அண்ணே சந்துரு ரூம்ல தான் இருக்கான்… அவனுக்கு நேரத்துக்கு சாப்பாடு கொடுத்துடு என சொன்னவன்!! கூடவே அதற்கான காசையும் அவரின் கையில் திணித்து விட்டு வேகமாக பஸ்டான்ட்டை நோக்கி சென்றான்.

ச்சே!! பத்திரிக்கையில் போட்டோகிராபர் ஆக இருந்தால், வாழ்க்கையே ஜம்முன்னு இருக்கும்… அப்படியே நம்மலால முடிஞ்சா!! சினிமா இன்டஸ்ட்ரீஸ்க்குள்ளேயும் புகுந்திடலாம்… என நினைத்து இருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தினத் தகவல் பத்திரிக்கையில் பேருக்கு போட்டோகிராபராக குப்பைக் கொட்டி கொண்டிருந்தான் வசந்தன்.

ஒரு மணி நேரம் பஸ் பயணத்தை தொடர்ந்த வசந்தன்!! பத்திரிக்கை ஆபிஸை இரண்டு மணி வாக்கில் சென்றடைந்தான்.

நேராக!! சீஃப் எடிட்டரின் அறைக்குள் நுழைந்தவன் எடிட்டரின் முன்பு பவ்யமாக போய் நின்றான்.

என்ன தம்பி இதா வேலைக்கு வர நேரமா! மூக்கு கண்ணாடியை கழட்டி வாயை குவித்து ஊதியவர் தன் சட்டையின் பின்புறம் கண்ணாடியை துடைத்து விட்டு மாட்டிக் கொண்டவர் எதிரே நின்றவனை ஏற இறங்க பார்த்தார்.

சொட்ட தலையன் ஆரம்பிச்சிட்டான்… இவன் சொன்ன வேலையை தானே அர்த்த ராத்திரி வரைக்கும்!! வெயிட் பன்னி கண்டுபிடிச்சேன்… விடிஞ்சா எல்லாத்தையும் மறந்துட வேண்டியது என மனதுக்குள் புலம்பிக் கொண்டே வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்கவும்,

காலையிலேர்ந்து உனக்கு போன் பன்றேன்… நாட் ரீச்சபுள்னு வருது… நைட் போன் பேசும் போதே என்ன சொன்னேன் காலையில் முக்கியமான வேலை இருக்கு நேரத்திற்கு வரவேண்டும்னு சொன்னேன் தானே உன் இஷ்டத்துக்கு வந்துருக்க… மணியை பார் இப்பவே இரண்டு ஆகுது என அவனை காய்ச்சி எடுத்தவர் வசந்தனின் முகத்தை பார்த்ததும், சரி சரி இனிமே நேரத்திற்கு வந்துடு!!! இப்போ இந்த அசைமெண்டை முடி என போட்டோவையும் அதை பற்றிய தகவல் அடங்கிய கோப்புகளையும் வசந்தனிடம் கொடுத்தார்.

எடிட்டர் கொடுத்ததை பவ்யமாக வாங்கி கொண்டு!! கதவை நோக்கி நடந்தவனை அழைத்தது வேறு யாரும் இல்லை சேம் சொட்டை தலையன் தான்…

வசந்தன்!! இது கொஞ்சம் சீரியஸ் கேஸ் இதை பற்றி யாரிடமும் பகிராதே! என்றிட… சரிங்க சார் என சொல்லிவிட்டு தன் இருக்கைக்கு சென்றவன் போட்டோவையும் கோப்பையும் டேபிளில் பொத்தென போட அதிலிருந்த அழகான நங்கை ஆண்களே மயங்கும்படி சிரித்துக் கொண்டிருந்தாள்…

அழகான பெண்ணை பார்த்ததும், வேகமாக தன் இருக்கையில் அமர்ந்தவன்!! ஒரு சிகரெட்டை வாயில் வைத்து அதை பற்ற வைத்துவிட்டு அந்த நெடி புகையை உள்ளிழுத்துக் கொண்டு சிறிது சிறிதாக புகையை வெளியே விட்டுக் கொண்டே அந்த பெண்ணின் பைலை படிக்க ஆரம்பித்தான்.

பெயர் நளினா!! வயது இருபத்தி ஒன்று, ஊர் சென்னை நீலாங்கரை என்று இருந்தது. கணவர் பெயர் என்ற இடத்தை பார்த்ததும்… சட்டென வாயிலிருந்த சிகரெட்டை துப்பிவிட்டு மேலும் பார்வையை அதில் ஓட விட்டான்… பெரும்புள்ளியின் பெயர் இருக்கவே!!! நிலைமையை அறிந்து கோப்புகளையும் பெண்ணின் புகைப்படத்தையும் தன்னுடைய பேக்கில் வைத்துக் கொண்டு அவசரமாக கிளம்பினான். ஆபிசில் இருந்து கிளம்பும் முன்னர் தனக்கு வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டே வெளியேறினான்.

இவனுக்காக, ஆபிசில் கொடுக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நேராக நீலாங்கரைக்கு தன்னுடைய வண்டியை விட்டான்.

ச்சே!! இது என்ன பத்திரிக்கை ஆபிசா இல்லை டிடெக்ட்டிவ் ஆபிசா!! போலீசு கண்டுபிடிக்க வேண்டியது எல்லாத்தையும் என்னை வச்சே கண்டுபிடித்து சொட்ட தலையன், சைடுல பணத்தை வாங்குவாரா… என்ன எழவுனே தெரியலை வேற வேலை கிடைக்கிற வரைக்கும் இதில் இருக்க வேண்டியது தான்!! வேலை மட்டும் கிடைக்கட்டும் இதை தூக்கி போட்டுட்டு போக வேண்டியது தான்… இன்னும் ஒரே நாளு தான் இருக்கு அதுக்குள்ள இந்த கேஸை முடிச்சா தான்!! எனக்கு லீவு கிடைக்கும் என மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டவன் செய்ய வேண்டிய வேலையை பார்க்க தன்னை தயார் செய்து கொண்டான்.

தின தகவல் பத்திரிக்கையில் வசந்தன் வேலை கேட்டு போகும் போது எந்த இடமும் காலியாக இருக்கவில்லை ஏற்கனவே போதிய ஆட்கள் அங்கே! இருப்பதால் இவனை வேண்டாம் என்று சொன்னவரின் மனதில் ஒரு திட்டம் உதிக்க உடனே வேலையில் சேர்த்துக் கொண்டார்.

இவனிடம் கொடுக்கப்படும் வேலை யாரையாவது பாலோ பன்னுவது தான் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை படம்மெடுத்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்… அதை வைத்து இவர் என்ன செய்கிறார் என இதுவரைக்கும் வசந்தன் கேட்டுக் கொண்டதில்லை.. ஒவ்வொரு வேலையை முடித்து கொடுத்த பிறகு கனிசமான தொகையை தருவதால் இவனும் எதைப்பற்றியும் யோசிக்காமல் வாங்கிக் கொண்டான்.

ஒரே மாதிரியான வேலையை செய்வதால் இப்போது வசந்தனுக்கும் செய்யும் வேலையில் பிடிப்பில்லாமல் எப்போதடா இங்கேயிருந்து போவோம் என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். அதற்கு ஏற்றாற் போல் இந்த வார இறுதியில் ஒரு முக்கியமான இடத்திற்கு செல்ல அனுமதி கிடைத்திருப்பதாக தகவல் வர அங்கே போவதற்கான லீவை இந்த கேஸை முடித்து கொடுத்துவிட்டே கேட்கலாம் என்றிருந்தான் வசந்தன்.

மாலை பொழுது நெருங்கும் வேலையில்!! அந்த வீட்டை அடைந்தான்.. பெரிய பங்களா கம்பீரமாக காட்கியளித்தது. அதன் பொழிவையும், அழகையும் முழுமையாக பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

செக்யூரிட்டி!! கண்கொத்தி பாம்பாக கேட்டின், அருகேயே அமர்ந்திருக்கவும்.. உள்ளே போவதற்கான வழியை யோசித்தபடியே நின்றிருந்தான் வசந்தன்.

இந்த பெண்ணோட கணவன் ஒன்றும் சாதாரண ஆள் இல்லையே பெரும் தொழிலதிபர்… ஆனால் அவரை கூட கடந்த சில நாட்களாக காணவில்லைனு பேப்பர்ல.. டீவியில் கூட!! செய்தியில் சொன்னாங்களே! அப்படி இருக்கும் போது அவன் மனைவியை ஏன் பின்தொடர சொன்னார்… என யோசனையுடன் நின்றான் வசந்தன்.

அறைமணி நேரம் அந்த பங்களாவின் முன்பு யார் பார்வையிலும் படாதவாறு நின்று கொண்டு நோட்டமிட்டான்.

ஒன்று அவள் எங்கேயாவது வெளியே கிளம்பி போகனும் இல்லையென்றால் அவளை பார்க்க யாராவது வரணும், என மனதுக்குள் யோசித்தவன் கார் ஹாரன் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவன் நளினாவின் பங்களாவிற்குள் கார் நுழைவதை பார்த்ததும், பரபரத்தான் யார் வந்திருப்பார்கள் என அறிந்து கொள்ள துடித்தவன்!! எப்படி கண்டுபிடிப்பது என யோசனையில் ஆழ்ந்தான்.

இப்படி ஒரே இடத்தில் நின்றிருந்தால் நம்மலால் எதையுமே கண்டுபிடிக்க முடியாது என முடிவுக்கு வந்தவன் உடனே அந்த வீட்டை சுற்றிலும் நோட்டமிட்டபடியே வட்டமிட்டான்… அப்போது தான் பக்கத்து பங்களாவின் காம்பவுண்டும்…நளினா வீட்டின் காம்பவுண்டும் ஒரே சுவராக இடது பக்கத்தில் இருக்கவும், அந்த வுட்டில் செக்யூரிட்டி யாராவது இருக்கிறார்களா!! என பார்த்துக் கொண்டே வீட்டை நெருங்க.. காவலாளி இல்லை என தெரிந்ததும் சட்டென உள்ளே நுழைந்தவன்.. மதில் சுவர் ஏறி நளினாவின் பங்களாவுக்குள் குதித்தான் வசந்தன்.

அதற்குள் இருட்ட ஆரம்பித்து இருந்ததால் வசந்தன் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்ததை யாரும் அறியவில்லை… இருட்டை தனக்கு சாதகமாக வைத்து கொண்டு மெல்ல அடியெடுத்து வெளிப்புறமாகவே, ஒவ்வொரு ஜன்னலாக நோட்டம் விட்டுக் கொண்டு வந்தவன் காதில் சிரிப்பு சத்தம் கேட்க வேகமாக அந்த அறையின் ஜன்னலை அடைந்தவன் கதவை லேசாக திறந்தான்.

நளினாவின் ஒரு கையில் டிரிங்க்சும் மற்றொரு கையில் சிகரெட்டையும் வைத்து புகைத்து கொண்டே!!

இன்னும் எத்தனை நாட்களுக்கு நான் இப்படி இருக்கிறது டார்லிங்!! என கொஞ்சல் குரலில் கேட்க!!

உன் புருசன் கேஸ் அஃபிஷியலா க்ளோஸ் ஆகுற வரைக்கும் நளி டார்லி என ஒரு ஆடவனின் குரல் கேட்க… அவன் முகத்தை பார்க்க எவ்வளவோ! முயற்சித்தும் முடியாமல் போகவும், தன்னுடைய கேமாராவை எடுத்து பல கோணங்களில் போட்டோ பிடித்தான்.

அறைக்குள் திடிரென பேச்சுக்குரல் நின்றுவிடவும், கதவை நெருங்கி ககாதை வைத்துக் கொண்டு கேட்டும் எந்த சத்தமும் வராமல் போகவும், மனதுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.

நான் இங்கே இருக்கிறதை கண்டுபிடிச்சிட்டாங்களா! என நினைத்தவன் வந்த வழியே திரும்பி வேகமாக நடந்து மதில் சுவரை அடைந்தவன் அதில் ஏறுவதற்குள் தலையில் விண்ணென்று வலி வர அப்படியே மயங்கி விழுந்தான்.

கண்களை மெல்ல திறந்தவன்… நாம இப்போ எங்கே இருக்கோம்!! நளினாவோட வீட்டுக்கு போனோம் என அடுத்தடுத்து ஞாபகம் வர!! நெற்றி பொட்டில் வியர்வை துளிகளால் வழிந்து கொண்டிருந்தது.

கை கால்கள் அசைக்க முடியாமல் ஒரு இன்ச் கூட!! நகர முடியாமல் கட்டுண்டு கீழே கிடந்தவனின் நாசியில் கெட்ட வாடை அடிக்க… அய்யோ!! என்ன நாற்றம் அது மூச்சு கூட விட முடியவில்லையே என நினைத்தபடியே, மிகவும் கஷ்டப்பட்டு இருக்கும் இடத்தை நிமிர்ந்து பார்த்தவனுக்கு!! அந்த இடம் பாலடைந்த வீடு போல தெரிந்தது.

அப்போது ஹலோ!!! என்ற குரல் கேட்க…

வந்திருப்பவனின் குரல் சற்று முன்னல் நளினாவின் வீட்டில் அவளுடைய படுக்கையறையில் கேட்டவனின் குரல் போலவே இருக்கவும், வசந்தனுக்கு விளங்கிவிட்டது!!! எக்குத்தப்பாக இவர்களிடம் மாட்டிக்கொண்டோமே! என மனதுக்குள் நினைத்தவன் எப்படி தப்பிக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.

வந்திருப்பவனின் முகம் மறைக்கப்பட்டு இருந்தது.. அவன் வசந்தனை காலால் உதைக்கவும் வின்னென்ற வலியில் முனகினான்.

சொல்லுடா யார் நீ!!! நளினா வீட்டில் உனக்கு என்ன வேலை!! என ஒவ்வொரு கேள்விக்கும் காலால் எட்டி உதைத்தான் வசந்தனை… அடிவாங்கினானே தவிர தன்னை பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான். அப்போது அவனுக்கு போன் வர வசந்தனிடம் இருந்து நகர்ந்து சென்றவன்… போனை ஆன் செய்து காதில் வைத்து சொல்லு நளினா!! என்னாச்சு எந்த பிரச்சனையும் இல்லை தானே என கேட்க…

இங்கே எந்த பிரச்சனையும் இல்லை… அவன் யாருன்னு தெரிஞ்சிதா!!

இன்னும் இல்லை!!

எனக்கு என்னமோ நாம பேசினது எல்லாத்தையும் கேட்டுறுப்பான்னு நினைக்கிறேன் இப்ப என்ன செய்றது பயத்தில் நடுங்கினாள் நளினா!!

ஹேய் ஸ்டாப் நீ நினைக்கிற மாதிரி ஒன்றும் இல்லை அவனை விட்டால் தானே நமக்கு பிரச்சனை நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் போல இரு என சொல்லிவிட்டு போனை அணைத்தவன் வசந்தனின் அருகே வந்தான்.

டேய் யார்டா நீ திடுதிப்புன்னு எப்படிடா வந்து தொலைச்ச!!! ஒரு கொலையோட நிறுத்திடலாம்னு பார்த்தால் இன்னொரு கொலை செய்ற மாதிரி ஆகிடுச்சே என போலி வருத்தத்துடன் பேச!!

வசந்தனின் மனம் பயத்தில் நடுங்கியது தன்னுடைய பயத்தை வெளியே காட்டாமல் இருக்க மிகவும் போராடினான்.

என்னடா பயமா இருக்கா!!! என வசந்தனை பார்த்து கேட்டவன், உனக்கு ஒருகதை சொல்லவா!! என அருகே சேரை இழுத்து போட்டவன் தன் காலுக்கு கீழே வசந்தனின் தலையை இருக்கவும், அவனின் தலை மீது தன்னுடைய ஷூ காலை வைத்தான்.

ஊரிலேயே ஒரு பெரிய பணக்காரன் இருந்தானாம் அவனுக்கு ஊருக்கு தெரிஞ்ச மாதிரி ஒரே வாரிசாம்!!! ஆனால் ஊர் உலகத்துக்கு தெரியாமல் இன்னொரு குடும்பம் இருந்ததாம்…

அந்த வாரிசு வளரும் போதே சகல வசதி மரியாதை கௌரவத்தோட வளர்ந்தானாம் ஆனால் அந்த இன்னொரு குடும்பம் இருக்கு பாரு அந்த குடும்பத்து வாரிசுக்கு அந்த பணக்காரனை அப்பானு சத்தமா கூப்பிட கூட உரிமை இல்லையாம்!!

இப்படியே இருக்கும் போது பணக்காரனோட முதல் மனைவியோட மகனும், வளர்ந்து பெரியவனானான்.. அதே மாதிரி பணக்காரனோட இன்னொரு குடும்பம் அதான் இரண்டாவது மனைவி அவங்களோட மகனுமே பெரியவனா வளர்ந்துட்டான்… ஆனால் அவன் மனசுல கூடவே பகைமையும் சேர்ந்தே வளர்ந்துச்சாம்…

அந்த பகையில் முதல்ல அந்த பெரும் பணக்காரனும் அவன் முதல் மனைவியும் ஒரு கார் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்களாம்… கணவன் இறந்த செய்தி கேட்ட உடனே, அவரோட இரண்டாவது மனைவி அதான் ஊர் உலகத்துக்கு தெரியாத மனைவி அவங்களும் இறந்துட்டாங்களாம்!! என்று சொன்னவன் சட்டென கதையை நிறுத்திவிட்டு வசந்தனை பார்த்தான்.

என்னடா கதை புரியுதா என வசந்தனின் தலையில் ஒரு அழுத்து அழுத்த… ஹாங் பு..ரியுது என திக்கி தினறவும்,

இப்போ இரண்டு வாரிசும் அப்பா அம்மா இல்லாமல் தனியா நின்னாங்களாம்!! ஆனால் அந்த முதல் மனைவி மகனுக்கு தாய்மாமன் உறவு பக்கத்திலேயே இருந்து கவனிச்சிக்கிட்டாங்களாம்.. ஆனால் லந்த இரண்டாவது மனைவியோட மகனுக்கு எந்த உறவும் இல்லாமல் தனிமரமா நின்றானாம்..

அப்போ தான்!! இரண்டாவது மனைவியோட மகனுக்கு தேவதை காட்சி தந்தாளாம் அந்த தேவதையோட அன்பால் அவனோட உலகம் வண்ணமயமாக மாறி சந்தோசமாக இருந்தாங்களாம்… அந்த சந்தோசத்தில அவன் தன்னுடைய லட்சியத்தையே மறந்துட்டானாம்… அந்த அளவுக்கு அந்த தேவதை இவனுக்கு போதும் போதும்னு சொல்ற அளவுக்கு அன்பை வாரி வழங்கினாளாம்… இரண்டு பேரும் சந்தோசமா சுத்திக்கிட்டு இருக்கும் போது தேவதை ஒரு நாள் காணாமல் போய்ட்டாலாம்… அவள் காணாமல் போன உடனே இவன் அரக்கனாகவே மாறிட்டானாம்!!

தேவதையை தேடி ஊர் ஊரா அலைஞ்சானாம்!! கடைசியா தேவதையை கண்டுபிடிக்க அவனுக்கு மூன்று வருடங்கள் ஆகிடுச்சாம்?? என்றவன் கதையை நிறுத்திவிட்டு வசந்தனின் தலையில் காலை அழுத்தவும்!!?

எப்ப…டி கண்டுபிடிச்சானாம் தேவதையை என வசந்தன் கேள்வியை கேட்டதும்,

தட்ஸ் மை பாய்!! என்றவன் மேலே கதையை தொடர்ந்தான்.

தன்னோட தேவதையை காணோம்னு அவளை!! ஊரெல்லாம் தேடி சுத்திட்டு இருந்தா!!! என்கிட்டேயிருந்து தேவதையை சத்தமே இல்லாமல் பறிச்சது யாருனு தெரியுமா?

யாரு!! என வசந்தன் கேட்டதும்

அவன் தான்!!! அந்த ராஸ்கல் பிறந்தது முதல் என்னோட எல்லா உரிமையையும் பறிச்சானே அவனே தான் என கோபத்தில் கத்தியவன் உட்கார்ந்திருந்த சேரை எட்டி உதைத்து விட்டு… வசந்தனின் தலையை நிமிர்த்தி!!! என் தேவதைக்காக பழிவாங்குறதையே நிறுத்தி வச்சிருந்த நான்!!! அதே தேவதைக்காக பழிவாங்க தயாரானேன் என கத்தியவன்… கையை மடக்கி சுவற்றில் ஓங்கி குத்தினான்.

கதையை கேட்ட பிறகு!!! தான் எத்தகைய கொடியவனிடம் மாட்டிக் கொண்டுள்ளோம் என்று நினைக்கும் போதே!! வசந்தனின் உடலே நடுங்க ஆரம்பித்தது.

என் தேவதை எட்டாத உயரத்தில் இருந்தாள்!!! அவளை நான் மீட்க நினைச்சேன் தனியே சந்திப்பதற்காக காத்திருந்தேன் என் தேவதையை நான் ஒருநாள் சந்தித்தேன்…

நளினா!! என்று அழைக்கும் குரலில் தன்னிலை அடைந்தவள் சுற்றிலும் தன் பார்வையை படற விட்டாள்.. அது பெரிய ஷாப்பிங் மால் நிறைய மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடமாததால் அவளால் அவனை காணமுடியவில்லை என்றானதும், கண்கள் இரண்டிலும் நீர் கோர்த்து கொண்டது.

ஹாய் டார்லிங்!! என்ன இங்கேயே நின்றுவிட்டாய் வா!! நாம் அங்கே போகலாம் நியூ வெரைட்டிஸ் நிறைய இருக்கு என அவள் தோலில் கையை போட்டு அழைத்து சென்றவனை குரோதத்துடன் பார்த்தன இரு விழிகள்.

அன்று முழுவதும் அவர்களையே பின்தொடர்ந்து கொண்டிருந்தான். ஷிப்பிங்கை முடித்து விட்டு சினிமா ஹோட்டல் என சுற்றி விட்டு அவர்கள் காரை நோக்கி வரவும்… அந்த கண்களுக்கு சொந்தக்காரன் நித்யனின் கார் டிக்கியில் ஏறி கொண்டான் இது தெரியாமல் நித்யனும் நளினாவும் காரில் அமர்ந்ததும், கார் புறப்பட்டு சென்றது.

நித்யனும் நளினாவும் வீட்டை அடையும் போது மணி இரவு பதினொன்றறை ஆகி இருக்க… காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.

அவர்கள் சென்றதும், கார் டிக்கியில் இருந்து இறங்கியவன் வீட்டிற்குள் போக வழியை தேடும் நேரத்தில் வாசல் கதவு திறக்கப்பட பெரிய தூணின் பின்னால் மறைந்து கொண்டான்.

நவீன் என மெல்லிய குரல் கேட்க… மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான் நவீன்.

நளினா!! என இவனும் நவீன் என அவளும் ஒரே நேரத்தில் அழைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

நவீன் என்னை உன்கூட அழைச்சிட்டு போ!! நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என நளினா சொல்லி அழவும்…

அப்புறம் ஏன் அவனை கல்யாணம் செய்தாய்!! நெருப்பென விழுந்தது வார்த்தைகள்…

நான் என்ன செய்வேன் என் அப்பாவுக்கு நம்மல பற்றி எப்டியோ தெரிஞ்சி போய்டுச்சி… திடிர்னு ஒரு நாள் அம்மாவுக்கு முடியலைனு சொல்லி அழைச்சிட்டு போனவர் தான் அதுக்கு அப்புறம் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டேன்… வேற ஊர் வேற இடம் நீயே யோசித்து பார் நான் எந்தளவிற்கு கொடுமைப்படுத்த பட்டேனு உனக்கு சொன்னா தெரியாது என அழுகையில் கரையவும், நளினா!! இனி ஒரு நிமிடம் என்னை விட்டு நீ பிரிய கூடாது என சொன்னவன்… சீக்கிரமே இதற்கு ஒரு முடிவை கட்டுறேன் என சொன்னதும்… நிம்மதியாக வீட்டிற்குள் சென்றாள்.

அடுத்தடுத்து அவர்களின் சந்திப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது… நித்யன் கம்பெனி பிஸ்னெஸ் என வேலையில் முழ்கி இருப்பதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இருவரும்… தங்களுடைய திட்டத்தை தீட்டினர்.

அவர்கள் தங்களுடைய திட்டத்தை செயல்படுத்தும் முன்னரே நித்யனால் பிடிப்பட்டனர்… பிஸ்னெஸ் மீட்டிங்கிற்காக பாரின் டிரிப்புக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் செய்திருந்த நித்யன் நளினாவிடம் சொல்லிக் கொண்டு ஏர்போர்ட் சென்றதும்… நவீனுக்கு போன் செய்து விசயத்தை சொன்னவள் உடனே அவனை வீட்டிற்கு அழைத்தாள்.

நவீனும் நளினாவின் விருப்பத்திற்கினங்க உடனே கிளம்பி அவளுடைய வீட்டிற்கு சென்றவன்… இருவரும் ஒன்றாக மது அருந்தி தங்களுடைய உலகில் பறந்தவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை… வீட்டில் ஹாலிங் பெல் சத்தமும் இவர்களின் காதை எட்டவில்லை…

ச்சே!! நளினா இந்நேரம் தூங்கிருப்பா என நினைத்த நித்யன் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே வந்தவனுக்கு!!! சிரிப்பு சத்தம் இதுவரை தன் மனைவியின் சிரிப்பை கேட்காமல் இருந்ததில்லை… எத்தனையோ தடவை கேட்டிருக்கிறான் ஆனால் அதையெல்லாத்தையுமே விட இந்த சிரிப்பு புதிது… என நினைத்தவனுக்கு கூடவே ஒரு ஆணின் சிரிப்பும் இணைந்தே கேட்க… அவனின் இதயமே சுக்கல் சுக்கலானது… நாளே எட்டுக்களில் தன்னுடைய பெட்ரூமை நெருங்கிய நித்யனின் கண்களில் தன் மனைவி வேறொரு அடவனின் அணைப்பில் இருப்பதை பார்த்ததும், கோபத்துடன் உள்ளே நுழைந்தவன் நளினா என அந்த வீடே அதிரும்படி கத்தினான்.

திடிரென கணவனை பார்த்ததும் பயத்தில் உடல் நடுங்க நின்றிருந்த நளினாவின் கரங்களை பற்றிய நவீன்… கண்களை மூடி திறக்கவும், சற்று தெம்பு வர… நித்யன் உங்க கோபம் நியாயமானது தான் ஆனால் எனக்கு நவீன் தான் வேண்டும்… நவீன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என கெஞ்சவும்…

வாய மூடுடி நாயே!! ஆத்திரத்தில் வெளி வந்தன வார்த்தைகள்…

நான் உன்மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன் அந்த அன்புக்கு நீ தகுதியானவள் கிடையாது… உன்னை மாதிரி கட்டின கணவனுக்கு துரோகம் செய்றவ!!! இந்த உலகத்திலேயே இருக்க கூடாதுடி என்றவன் நளினாவை நெருங்கினான்.

நித்யன்!! நான் காதலிச்சது நவீனை தான், என் அப்பாவோட கட்டாயத்தாலா தான் உன்னை மேரேஜ் பன்னினேன்… எனக்கு உன் மேல இப்போ வரைக்கும் எந்த லவ்வும் வரலை என சொன்ன அடுத்த நொடி நளினாவின் கழுத்தை நெறித்திருந்தான் நித்யன்..

என்னடி சொன்ன லவ் இல்லையா?? இந்த வார்த்தையை நீ நம்ம மேரேஜிக்கு முன்னடி சொல்லிருக்கனும்… அதுவும் இல்லைனா மேரேஜ் முடிஞ்ச பிறகாவது என்கிட்ட சொல்லியிருக்கனும்… அப்போலாம் வாயை மூடிகிட்டு இருந்துட்டு எவனோ கேடுகெட்டவனோட அதுவும் என் பெட்ரூமில இருந்துட்டு பேசறியா!! லாஸ்ட் மினிட்ல பிஸ்னெஸ் மீட்டிங் கேன்சல் ஆகினவுடனே! அய்யோ பொண்டாட்டி தனியா இருப்பாளேனு ஓடோடி வந்தா!!! சபாஷ் உன்னோட குடும்ப குத்துவிளக்கு டிராமாவை தூக்கிட்டு!! சிவப்பு விளக்கு காரியா நிற்கிற என சொன்னவன் அவளை தன் கைகளுக்குள் இறுக்கினான்.

நித்யனின்!! பிடியில் நளினாவின் மோசமான நிலையை கண்டவனுக்கு… இதுவரைக்கும் தனக்குள்ளேயே புதைந்திருந்த கோபம் வெளிவர… அருகில் இருந்த வெயிட்டான பிளவர் வாஷ்ஷை எடுத்து நித்யனின் தலையில் தன் கோபம் முழுவதும் தீர அடிக்கவும், இரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தான் நித்யன்.

நவீன்! என்ன பன்னிட்ட இப்போ நாம என்ன செய்றது என பயத்துடன் கேட்ட நளினாவிடம் தன் திட்டத்தை கூற அவளும்… அதற்கு சம்மதித்தாள்.

இரவோடு இரவாக நித்யனின் உடலை கொண்டு போய் புதைத்தவர்கள்… அவன் வெளிநாடு சென்றது போலவே காட்டிக் கொண்டனர். அவன் திரும்ப வருவதாய் சொன்ன தேதியை வைத்து போலீசில் புகார் அளித்தனர்.

அவர்களும் நித்யனை பற்றி முழுமையாக விசாரணைகள் நடத்தி அவனை பற்றி துப்பு எதுவுமே கிடைக்காமல் தேடி வருகின்றனர்.

என்னடா!! கதையை கேட்டியே கதை எப்படி இருக்கு!!! என நவீன் ஆங்காரமாக கேட்க…

காதல் காவியமாக!! தான் இருக்கு என நக்கலான பதிலை வசந்தன் சொன்னதும், அவனுடைய தலையை அழுத்தி மிதிக்க வலியில் அலறினான்.

எங்களோட ரகசியம் தெரிஞ்ச யாரும் உயிரோட இருக்க முடியாது… உனக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சி சோ!!! நீ செத்துடு என சொல்லிக் கொண்டே வசந்தனை கத்தியுடன் நெருங்கி… அவனின் தலையை துண்டாக்கினான்.

ஆஆஆஆஆ கொலை கொலை அவன் என்னை கொன்னுட்டான் என் தலையை துண்டாக்கிட்டான் என அலறியபடியே பெட்டில் இருந்து குதித்தவனை பார்த்து!!!

டேய் வசந்தா!!! என்னடா!! யாரு கொலை செஞ்சது!!! என்ன கொலை!!! எதுக்குடா இப்படி நீ இப்படி பாதி ராத்தில கத்துற!!! என சந்துரு அவனை திட்டிக் கொண்டே லைட்டை போடவும், வேகமாக கண்ணாடி முன்பு நின்று தன்னை ஆராய்ந்தவன்….

நான் நல்லா தான்டா!! இருக்கேன் என கழுத்தை தொட்டு பார்த்துக் கொண்டவன்.. ச்சே என்னடா கனவு இது நானே சாகிற மாதிரி கனவு கண்டுருக்கேன் என வியர்வையில் குளித்தவன் போல நடுக்கத்துடன் அமர்ந்திருந்தான் வசந்தன்.

அவன் தோல் மீது சந்துரு கையை வைக்கவும்!!! பயத்தில் அலற!!! டேய் நான் தான்டா எதுக்குடா கனவுக்கெல்லாம் இப்படி ஓவர் ரியாக்ட் பன்ற என கடிந்து கொள்ள

டேய் உனக்கு என்னை பார்த்தால் சிரிப்பா இருக்கா நடந்ததை கேட்ட நீயே பயத்தில் உச்சா போய்டுவ!! எப்படி கொஞ்ச நேத்துக்கு முந்தி நீ போனியே அப்படியா!! என நக்கலுடன் சிரிக்க…

போடாடா!!! என கோபத்துடன் சென்று படுத்தவன் விட்டத்தை பார்த்தபடியே இருக்கவும்,

டேய் நான் இதுவரைக்கும் அப்படி ஒரு பெண்ணை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லைடா என தான் கண்ட கனவை முழுமையாக சொல்லி முடிக்க…

டேய்!! மச்சான் நீ பத்திரிக்கையில் வேலை பார்க்கிறியா!!! ஹாஹாஹாஹா என வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான் சந்துரு ஏன்டா!! நீயே ஐடி பீல்டுல புராஜெக்ட் மேனேஜரா இருக்க… இதுல பத்திரிக்கைல போட்டோகிராபராகவா!! இம்ம் கதை செம்ம இன்ட்ரெஸ்டிங்காக தான் இருக்கு என்ன பன்னலாம் போலீசுகிட்ட சொல்லி இப்படி ஏதாவது கேஸ் இருக்கானு விசாரிக்கலாமா!!! என சொல்லிவிட்டு சிரிக்க..

போடா உனக்கு எப்போதுமே!! இப்படி தான்டா!!! நான் சொல்ற எதையுமே நீ நம்பறதே இல்லை என்றவனிடம்,

சரி சரி நம்ம கம்பெனில நாளைக்கு இன்ட்டர்வியூ ஞாபகம் இருக்குள்ள

ம்ம் இருக்குடா இருக்கு!!! நானும் தூங்க முயற்சி பன்றேன் என சொல்லிவிட்டு படுத்தான்.
.
.
.
வழக்கமான புன்னகை ஏதும் இன்றி வசந்தனின் முகம் குழப்பத்துடன் இருக்கவும்… கம்பெனிக்கு வந்தும் எந்த வேலையிலும் முழு மனதோடு ஈடுபட முடியாமல் மன சஞ்சலத்துடன் இருந்தவன் சந்துருவின் கேபினை அடைந்தான்!!!

டேய் சந்துரு நீயே இன்ட்டர்வியூ பன்னுடா!! எனக்கு இன்னைக்கு சுத்தமா ஒன்னும் மூடே சரியில்லை என சொல்ல… ஓகேடா நானே இன்ட்டர்வியூ பன்றேன்… நீ கூடவே இரு என சொல்லவும், தலையை ஆட்டினான்.

சரியாக பத்து மணிக்கெல்லாம் இன்ட்டர்வியூ ஸ்டார்ட் ஆகியது… ஒருவர் பின் ஒருவராக சந்துருவும் வசந்தனும் இருக்கும் அறைக்கு கேண்டிடேட் வந்து தங்களுடைய பதிலை அளித்துவிட்டு செல்ல.. இருக்கையில் இருந்து எழுந்த வசந்தன் ஜன்னல் புறம் சென்று வெளியே வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தவனின் காதில் விழுந்த பெண்ணின் குரலால் ஈர்க்கப்பட்டு திரும்பியவன் அதிர்ந்தான்!!!!

நளினானா!!!! என வசந்தனின் வாய் உச்சரிக்க..

சாரி சார் நான் நட்ஷத்திரா என தேன் குரலால் சொல்லிவிட்டு சென்றாள்.

வசந்தனோ பேயை பார்த்தது போல நின்றிருந்தான்!!! அவன் உதடு உச்சரித்தது!!

கனவில் வந்தவள்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here