திருச்சி மணப்பாறையை அடுத்துள்ளதுதான் சிறும்பேடு… இயற்கை எழிலோடு காண்போரை வசிகரிக்கும் வனப்புடன் இருக்கும் அந்த கிராமத்தில் இருந்துதான் நம் கதையின் நாயகனின் தொடக்கம். கனவு ஒன்றுதான் மனிதன் தான் நினைக்கும், தன் வசமாக்க ஆசைபடும் ஒன்றினை எந்தவித தங்கு தடங்களும் இன்றி பெற முடியும் . நம் கதையின் நாயகனும் அதையே பின்யற்றி கனவு கண்டுகொண்டிருந்தான்.
வெளியே தன் கட்சி சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்தார் அதியனின் தந்தை சந்திரமோகன்.அதியன்னா யார்ன்னு கேக்காதிங்க அவர் நம் கதையின் ஹீரோ . தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் மாபெரும் கட்சியின் அந்த ஊரில் பெரும் புள்ளியாக செயல்பட்டுக்கொண்டிருந்தார் சந்திரமோகன். ” சங்கர் நேத்து மாவட்டம் போன் பண்ணார் நாளைக்கு நம்ம ஊர்ல இருந்து 10 வேன் எடுக்கனும். ஆளுங்களுக்கு சொல்லி வைச்சிடு எப்படியும் 1 வேனுக்கு 20 பேர் 10 வேனுக்கு 200 பேர் பெண்களுக்கு 150 ரூபாய் ஒரு பிரியாணி பாக்கெட் ஆம்பளைங்களுக்கு 150 ரூபாய் ஒரு பாட்டில் இப்போவே சொல்லி வைச்சிடு நாளைக்கு வந்து என்னை கூப்பிடல உன்னை கூப்பிடலன்னு என்கிட்ட வந்து நிக்க கூடாது ” என்று வரிசையைய் கூறி முடிக்க
“சரி தலைவரே பாத்துக்கலாம் நான் போய் ஆளுங்களுக்கு சொல்லிடுறேன் அப்புறம் வேலை இருக்குன்னு போயிட போறங்க நான் வறேன் தலைவரே ” என்று சங்கர் விடை பெற்று செல்ல
“அப்புறம் மகேஷ் இந்த இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு வேட்புமனு போட நாளைக்கு தான் லாஸ்ட் நாள் என் பங்குக்கு உனக்கு நான் ரெக்கமன்ட் பண்ணி இருக்கேன். ஆனா இதுல கட்சி மேலிடம் வாக்கு வித்தியாசம் வைச்சிதான் தேர்நதெடுக்கும்ன்னு நம்ம எம்.எல். ஏ வே சொல்லிட்டார். அதனால உன் சைட் கொஞ்சம் ஆளுங்கள பாத்துக்கோ” என்று கூறி அவனையும் அனுப்பியவர் காலை உணவை முடிக்க உள்ளே சென்றார்.
உள்ளே வந்த கணவருக்கு மல்லிகை பூ இட்லியும் நிலக்கடலை சட்னியும் வைத்து காலை உணவை பரிமாற “எங்க உன் சீமந்த புத்திரனை காணும் ” என்று கேட்டுக்கொண்டே சாப்பிட
ஒருமுறை உள்ளே எட்டி பார்த்த மரகதம் மறுபடியும் கணவனை பார்க்க “இன்னும் துரைக்கு விடியலையோ? இவன் என்ன செய்ய போறானோ ஒன்னும் புரியல ” என்று இரவு தன்னுடைய விருப்பத்தை மகன் தெரிவித்ததை எண்ணி தன்பாட்டிற்க்கு பேசிக்கொண்டு இருக்க
“நான் அவனை இந்த இடத்துலயே வச்சிருக்க வேண்டாம்ன்னு தலபாட அடிச்சிக்கிட்டு சொன்னேன் . யார் என் பேச்சி கேக்குரா நாம்தான் கட்சி அரசியல்ன்னு வீணா போய்ட்டோம். நம்ம புள்ளையும் அப்படிதானே போகுது ஏனோ அதை புரிஞ்சிக்க மாட்டறிங்க ” என்று மனைவியின் வார்த்தையை கேட்டவர்
“என்ன வந்துச்சி இப்போ நான் அரசியல்ல இருக்கறதுதான் உனக்கு கஷ்டமா சொல்லு. அவன் இப்படி நடந்துக்கறதுக்கும் அதுக்கும் என்னடி சம்மந்தம் இருக்கு”
“ஆமா இல்லாமையா சொல்றேன். கட்சி மாநாடு அது இதுன்னு கூடவே கூட்டிக்கிட்டு சுத்தினது யாரு ? எவ்வளவு சொன்னேன் படிக்கிற புள்ள அவனையாவது இந்த சாக்கடையில இழுக்காதிங்க … விடுங்கன்னு உங்களுக்கு உங்க அப்பாரு சொல்லியும் புத்தி வரல நான் சொல்லியும் புத்தி வரல இப்போ அவன் மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாத்துகிட்டு இருக்கான் ” என்று படபடவென்று பட்டாசாய் பொரிய
“நாமதான் அவனை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்துவிட்டோமோ? என்று யோசனையோடு உணவினை அளந்தபடி அமர்ந்திருந்தார் சந்திரமோகன்.
அந்த சமயம் வயதான ஒரு முதியவரும் அவருடன் ஒரு 15 வயது மதிக்க தக்க சிறு பெண்ணும் வர வாயிலில் இருந்து அய்யா அய்யா என்று குரல் கொடுத்தனர்…
வீட்டின் வெளியே எட்டி பார்த்த மரகதம் என்ன என்று கேட்க
சந்திரமோகனை பார்க்க வந்திருப்பதாக கூறினார்கள். அவர் சாப்பிட்டுகிட்டு இருக்கார் கொஞ்சம் இருங்க வந்திடுவார்ன்னு சொல்லிவிட்டு சென்றார் அவரின் தர்மபத்தினி.
உள்ளே சென்று பார்க்க கணவர் உணவினை அளந்தபடியே இருந்தார். என்ன யோசனைங்க போதும் விடுங்க… எல்லாம நடக்கறபடி நடக்கும் . வயசு 25 ஆயிடுச்சி அவன் பொழப்ப அவன் பார்த்துப்பான் சாப்பிடுங்க … வெளியே யாரோ உங்கள தேடி வந்திருக்காங்க என்று கூறினார்.
…………………………………………………………………..
“டேய் மச்சி அங்க பாருடா சீன …இவனையெல்லாம் ஒரு பொண்ணு லவ் பண்ணுது. தங்குமாடா உலகம்” என்று கிஷோரை சக நண்பர் பட்டாளம் கிண்டலடிக்க
தன் உடன் வந்த அனிதாவை அனுப்பிவிட்டு வந்த கிருஷ்ணன் பைக்கில் சாய்ந்தபடி “உன்னையே தாங்கும்போது இதெல்லாம் சாதரணம்டா” என்று கவுண்டர் அடித்து தன் கணக்கை சரி செய்தவன் ” எங்க மாப்புள நம்ம தோஸ்த்துல ஒருத்தன காணும்” என்று கேட்க
“அவன் எங்கடா மாப்புள போகபோறான் இன்னும் மச்சி எந்திரிச்சே இருக்க மாட்டான்…. அவனெல்லாம் வேற லெவல் டா மச்சான்” என்று அருண் கூறினான்.
நல்ல வசதியான வீடு…. வீட்டுக்கு ஒரே புள்ள…கேட்டது கிடச்சிடும்… நம்மள பாரு எல்லாத்துக்கும் ஒரு ஏலரை வந்து நிக்கும் என்று கிஷோர் போசிக்கொண்டே இருக்கே தன் ராயல் என்பில்டில் வந்து இறங்கினான் அதியன்
“அண்ணா ஒரு டீ என்பதோடு இறங்கியவன் தன் சகாக்கள் இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தான். என்ன மச்சி இன்னைக்கு நல்லா தூங்கலையா வெள்ளனே வந்துட்ட…” என்று கிஷோர் கலாய்க்க
“உனக்கு நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன் … நைட்டெல்லாம் யோசிச்சி யோசிச்சி மண்ட காஞ்சது தாண்டா மிச்சம்… விடியும்போதுதான் தூங்கினேன்….”
“அப்படி என்னடா யோசிச்ச நீ எதையுமே இவ்வளவு டீப்பா சிந்திச்சி நாங்க பாத்ததில்லையே” என்று மறுபடி தன் குரங்குசேட்டையை ஆரம்பிக்க
“டேய் நானே குழம்பிபோய் இருக்கேன். இதுல நீ வேற கலாய்க்கிறியா எடுடா மாப்பிள அந்த கட்டைய என்று அருணிடம் கேட்க… அவன் இதுதான் சாக்கு என்று பக்கத்தில் இருந்த பெரிய கட்டையை எடுத்து கொடுத்தான் . அவனிடம் இருந்து அதை பறித்தான் கிஷோர்.
“என்ன மாப்புள பொசுக்குன்னு கோவப்பட்டுட்ட … நாம எல்லாம் அப்படியா பழகி இருக்கோம்”. என்று தன் சமாதன கொடியை பறக்கவிட்ட கிஷோர்
“கொழம்புன குட்டையிலதான் மாப்புள மீன் புடிக்க முடியும் உன் குழப்பத்த சொன்னாதானே தெளிவான யோசனை சொல்ல முடியும் ” என்றவன்
“என்ன மாப்புள உன் பிரச்சனை என்னன்னு சொல்லு அதை திருத்திடுவோம் என்று களத்தில் குதித்தான்.
“பின்ன என்னடா… நானே அப்பா இப்படி கட்சி பொருப்பு எலக்ஷ்ன் அது இதுலாம் வேணங்கராருன்ற கடுப்புல இருக்கேன்… நீ வேற
“டேய் மச்சி உங்க அப்பாக்கு தெரியாததாடா… அவரே வேணான்னும்போது உன் நல்லதுக்குதானே சொல்றாருன்னு தெரியலையா? அதுக்கு ஏன்டா இப்படி டென்ஷன் ஏத்திக்கிற …
“எனக்கு இந்த லைன்தானடா புடிச்சி இருக்கு சின்னவயசுல இருந்தே இதுல ஊறிட்டதால இல்லை என் அப்பாவோட செல்வாக்கை பார்த்ததாலன்னு தெரியல ஆனா எனக்கு இந்த பொலிடிக்கல் லைன் தான்டா புடிச்சி இருக்கு. இதை விட்டுட்டு வேற லைன்ல போன்னு சொன்னா எனக்கு மைன்ட் போகலடா என்னால என்னோட மைன்ட டைவர்ட் பண்ண முடியலடா” என்று தன் எண்ணத்தை உரைத்தான்.
“நீ அப்பாகிட்ட உன் மனசுல இருக்கறத சொன்னியா ?..” என்று அருண் கேட்க
“நான் நேத்துதான் அவர்கிட்ட பேசினேன். இது உனக்கு வேண்டவே வேணடாம். உன் அம்மாவுக்கு இந்த அரசியல் சுத்தமா பிடிக்கல நான் இருக்கறதையே அவ விரும்பல இதுல நீ வேற இந்த பைத்தியம் பிடிச்சி அலையுறேன்னு அவளுக்கு தெரிஞ்சா வீட்டில் நிம்மதியே இருக்காதுடான்னு ஒரே காய்ச்சி எடுத்துட்டார்” என்று நடந்ததை கூற
“கரெக்டா தானேடா சொல்லி இருக்கார் . அப்படி என்னடா இதுல இருக்கு எனக்கு கட்சிதான் வேனும்ன்னு பித்து பிடிச்சி சுத்தற அளவுக்கு” என்று அருண் கேட்க
“மச்சான் சொன்னா உனக்கு புரியாதுடா ….அது ஒரு தனி உலகம் மச்சி… இன்னைக்கு என் அப்பா பெயர் சொன்ன இந்த சுத்துவட்டாரத்துல தெரியாத ஆளே இல்ல …. இன்னைக்கு கூட ஒரு விஷயம் நடந்துச்சிடா நானே அசந்துட்டேன் எங்க அப்பாதான்டா எனக்கு ரோல் மாடல் அவரப்போல ஆகனும் என்னால முடிஞ்சத நான் செய்யனும்” என்று கனவு போல பேசிக்கொண்டே போனதை கொடுரபார்வை பார்த்தனர் அவன் சகாக்கள்.
“இந்த நாயகன் டையலாக்லாம் வேனா மச்சி உண்மைய சொல்லு …. உனக்கு ஊருக்கு முன்னால ஜம்பமா காலர தூக்கி விட்டுகிட்டு வொட் அண்ட் வொட்ல சுத்தனும் அதுதானே ” என்று அவனை கிண்டலடிக்க
“அதுக்கு என் பைக்க வைச்சிக்கிட்டு இரண்டு மைனர் செயின போட்டுக்கிட்டு சும்மா கெத்தா சுத்தினா போதாது பேரு டா பேரு பேரு முக்கியம் தம்பி… நாம நல்லது பண்ணறதுக்கு கூட ஒரு பொருப்பு இருந்தாதான் மச்சி பண்ண முடியும்” என்றவன் இதுவே எங்க அப்பா ஒரு சாதரண மனுஷன் அவரோட வேலை வைச்சி பாத்த அந்த ஹெட் மாஸ்டர் அந்த பொண்ணுக்கு உடனே சீட் கொடுத்து சரின்னு சொல்லி இருப்பாரா… அந்த பெரியவர் மட்டும் பத்து வாட்டி நடையா நடந்தாராம் முடிஞ்சிதா அவரால எதுக்கும் ஒரு பவர் வேனும்டா அந்த பவர் தான் நம்மல தனியா காட்டும் அதுதான் கட்சில இருக்கு.
“இது என்னடா புது கதை “என்று கிஷோர் கேட்க
“அதான் மச்சி மேல தெருவுல வீரபாண்டி இருக்காருல அவர் வீட்டுலதான் அந்த பெரியவரும் அந்த பொண்ணும் குடி இருக்காங்க அவங்க அப்பா போன மாசம் ஒரு அக்ஸிடன்ட்ல இறந்துட்டாரு அதனால அந்த பெரியவர் தன்கூடவே அந்த பொண்ண கூட்டிகிட்டு வந்து படிக்க வைக்கலாம்ன்னு பாத்தா நம்ம ஸ்கூல்ல பாதியில வந்தா சேர்க்க மாட்டோம்ன்னு அனுப்பிட்டாங்களாம் எங்க அப்பாகிட்ட வந்தாங்க… வாறேன்னு சொன்னவர் அன்னைக்கு பைக்குல என்னைய ஸ்கூல்ல விட சொன்னாரு கூட போனேன் . அவர் பேச்சிக்கு நம்ம ஹெச்.எம் கொடுத்த மாரியாதைய பாக்கனுமே” என்று அந்த நாளைய நினைவில் கூற
“டேய் அவங்க வேலை வெட்டின்னு போயிட்டு குடும்பத்தை ஒரு நிலையில வைச்சிட்டு அப்புறமா இதுல இறங்கினாங்கடா ..உனக்கு 25 தானடா ஆகுது அதுக்குள்ள கட்சி அது இதுன்னு உன் லைப் பாழாக்கிக்காதடா … உன்னால முடியுமாடா?” என்று கிருஷ்ணன் கேட்டான்.
“ஏன்டா முடியாது …ஏன் முடியாது. என்னால இதுல ஜெயிக்க முடியும். இதுக்கு நாயகன் டையலாக் தான் சொல்லனும்னு இல்ல மச்சி… அரசியல் ஒரு சாக்கடைன்னு சொல்றிங்க அதுல இறங்கி எப்பவாவது நாம சுத்தம் பண்ணுவோம்னு ஒருத்தனவது நினைச்சி இருக்கிங்களா??…. ஏன் ஒதுங்கி போகனும் மச்சி… மாணவர் அணி இருக்கு இளைஞர் அணி இருக்கு இன்னும் உள்ளாட்சி தேர்தல் வர போகுது இன்னும் எவ்வளவோ இருக்குடா முதல்ல அடிமட்ட ஆளா இருந்து தான்டா வந்துட்டு இருக்கேன்” என்று கூற
“டேய் இது நமக்கு செட் ஆகுமான்னு யோசிச்சி பாரு… இன்னைக்கு பகையா இருக்கவன நாளைக்கு ஃபிரெண்டுன்னு சொல்ல வேண்டி வரும்… இப்போ நண்பனா இருக்கவன் உன் வளர்ச்சியபாத்து எதிரியாவன்… அரசியல்ல நிரந்தர நண்பனும் இல்ல நிரந்தர எதிரியும் இல்ல என்றான் கிஷோர்.
“எல்லா இடத்திலும் பிரச்சனை இருக்கு மச்சி… பிரச்சனை இல்லாத இடமே இல்ல… பிரச்சனைக்கு பயந்து ஒதுங்கி போக கூடாதுடா எனக்கு இதுதான்டா பிடிச்சி இருக்கு என்றவனின் கூற்றோடு இதற்குமேல் இதை தொடர்ந்தால் அவனிடம் கட்டையால் அடிவாங்குவது உறுதி என்று நினைத்த கிஷோர் மற்றக் கதைகளை பேசலாயினர்.
…………………………………………………………………..
“என்னா கண்ணா இந்த அதியபய இளைஞர் அணி சார்புல உள்ளாட்சி தேர்தல்ல கவுன்சிலர் பதவிக்கு நிக்கபோறனா “
“அட ஆமாண்ண அப்போதான் நம்மள சம்பாதிக்க விடாம நல்லது செய்றேன் நல்லது செய்றேன்னு கட்சி கொடுக்குற காசையெல்லாம் அவ அவனுக்கு தானம் பண்ணிட்டு இருக்கான் சந்திரமோகன்… கட்சிய உருவாக்கின ஆளா இருக்கோம் ஒத்த ரூபாய கண்ணுல காட்டமாட்ணுறான் … இதுல இவரு புள்ள வேற வந்துட்டு அவ்வளவுதான் என்று நாகராஜ் புழுங்கினான்.
“டேய் உனக்கு இருக்க சொத்துக்கு நீ காலம் முச்சுடும் உட்காந்தே சாப்பிடலாம் இந்த பிசாத்து காசுக்க ஏங்குற…” என்று கண்ணன் நாகராஜை பார்த்து கேட்க
“பணத்துக்காக சொல்லலடா வீட்டுலயும் நீ அரசியலுக்கு போய் என்ன கிழிச்ச கட்சியிலும் பெரிய செல்வாக்கு இல்ல அப்படின்னு அவனவன் வெட்டிக்கிட்டு வான்னு சொன்னா கட்டிக்குட்டு வந்து நிப்பான். நீ உருப்படுறாப்போல தெரியலன்னு ஒரே ஏச்சிதான்டா என்று தன்பாட்டிற்க்கு புலம்பியவன் இன்னும் இவரு புள்ளையும் வந்துட்டா நம்மல மதிக்கிறவன் கூட மதிக்கமாட்டான் டா “என்ற நாகராஜ் “இன்னும் எலக்ஷ்னுக்கு 10 நாள்தான் இருக்கு அதுக்குள்ள நம்மலால முடிஞ்சத பாக்கலாம் என்றவன் நான் எம். எல். ஏ கிட்டயே நேரடியா போலாம்ன்னு இருக்கேன்” என்று கூற
“எதுக்கு டா அந்த ஆளு இவரு சொல்றததான் வேதவாக்கா எடுத்து செய்துகிட்டு இருக்காரு. நாம போய் சொன்னா எடுபடும்ன்னு நினைக்கிற
பாக்கலாம் கொஞ்சம் பொறுமையா இரு “என்று அவனை சாமரசம் செய்து தான் வழக்கமாக செல்லும் மதுக்கடைக்குள் நுழைந்தனர்.
…………………………………………………………………..
“எவ்வளவு சொல்லியும் கேக்காமா இந்த பய கட்சி பித்து பிடிச்சி போய் ராப்பகல் பாக்கமா திரியுது… ஏஞ்சாமி இது உனக்கு தேவையா சொல்லுயா உங்ககூட படிச்ச புள்ளைங்களாம் வேலை வெட்டி தொழில்னனு ஒன்னு ஒன்னு பண்ணுது உனக்கு ஏய்யா இப்படி புத்தி கெட்டு போச்சி” என்று தாய் தான்றோன்றிதனமாய் புலம்ப
“அம்மா நான் பைத்தியம் புடிச்சிதான் அலையுறேன்… உண்மைதான்… ஆனா நல்லது செய்ய அலையுறேன். நம்ம ஊருக்கு அப்பாவுக்கு அடுத்து அப்படி வரனுன்னு நினைக்கல ஆனா அதிகாரம் இல்லனா நம்ம பேச்சி எங்கும் செல்லுபடி ஆகாதும்மா உன் புள்ள இதை நல்லாவே தெரிஞ்சி வைச்சிக்கிட்டான்”. என்றவன் “நான் நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவேன் மா கவலைபடாதே” என்று தாய்க்கு எடுத்து கூறினான்.
“ஆமாடா உன்னை பத்தி எப்படி கவலை படாம இருக்க முடியும் சொல்லு… நீ படிச்சி நல்ல வேலைக்கு போவ உனக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கலாம்ன்னு நினைச்சி இங்க வந்தா நீ என்னமோ கட்சி ஆட்சி லொட்டு லொசுக்குங்கர ….அங்க உங்க அத்தான் என்னை கழுத்தை பிடிச்சு தள்ளாத குரையா அனுப்பி விட்டுருக்காரு” என்று தான் கொண்டுவந்த பேக்கை தூர எறிந்தபடி அக்கா அங்கயற்கண்ணி பேச
“அடியே கண்ணி ஏன் இப்படி வந்ததும் வராததுமா நாளு ஊரு வேப்பிலையை ஒன்னா கட்டிக்கிட்டு ஆடுற” என்று தாய் புதல்வியின் கோபத்தை பார்த்து கேட்க
“பின்ன என்னமா உன் புள்ள நினைச்சிட்டு இருக்கான்… ஏதாவது சாக்கு சொல்லி இவனை என் பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பாத்தா இப்படி இருக்கான் .. அந்த மனுசகிட்ட யாரு மா மல்லுக்கு நிக்கிறது … என்று ஆசையாய் கட்டிய கோட்டையில் விரிசல் விடுதே” என்று அங்களாய்ப்புடன் பேச
“அக்கா கொஞ்சம் பொறுமையா பேசு இப்போதானே வந்த… அதுக்குள்ள தையாதக்கான்னு குதிச்சா என்ன பண்றது ” என்று அதியன் சமாதனம் படுத்தினான்.
“நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது என் பொண்ண உனக்கு தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்… அதுக்கு உன் மாமன எப்படி சரிகட்டனமோ அப்படி சரிகட்டு அம்புட்டுதான் சொல்லிட்டேன் ” என்று பொறுப்பை அவன் கையில் கொடுத்துவிட
“அவ்வளவு தானே விடுக்கா இப்போ என்ன அத்தானை சரிகட்டனும் எப்போ அத்தான் வீட்டில் இருப்பார் ” என்று கேட்டு அறிந்தவன் அவரை தொடர்பு கொண்டான்
“ஹலோ அத்தான்”
“சொல்லுங்க “
“என்ன அத்தான் மாப்பிள்ளைய விட்டுட்டிங்க”
“இன்னும் தெளிவா தெரியலையே பா நீதான் என் மாப்பிள்ளைன்னு”
“நான் எப்பவுமே உங்க மாப்பிள்ளை தான் அத்தான்”
“உனக்கு அது தெரிஞ்சமாதிரி இல்லையேப்பா… தேவையில்லாத வேலையில தலைய விட்டு இருக்க போல இருக்கு…
“அத்தான் நீங்க என்ன சொல்ல வர்றீங்க …எங்க அக்காவ அரசியல் வாதி பொண்ணுன்ணு தெரிஞ்சுதானே எடுத்திங்க ..அப்போ நான் அரசியல்ல போனா ஏன் உங்களுக்கு பிடிக்கல”
“அது வேற பா… அதுல எனக்கோ உங்க அக்காவுக்கோ எந்த பாதிப்பும் இல்ல …
ஆனா இதுல என் பொண்ணோட வாழ்க்கை இருக்கு இதுல இருந்தவங்க யாருமே ஒழுக்கமா இருக்கல அப்போ எப்படி நான் நம்பி என் பொண்ண கொடுக்க முடியும்… உங்களை என் மாப்பிள்ளைன்னு உரிமையோடு கூப்பிட முடியும்… உங்களை முதல்ல நிறுபீங்க அப்புறம் கூப்பிடுறோம்… என்னை பெண்ணை கொடுப்பதை பத்தியும் பேசலாம் என்றார்”.கராராக.
“என்ன தப்பா எடை போட்டுடிங்க அத்தான் …என் ஒழுக்கம் எப்போதும் கெட்டு போகாது நிச்சயம் ஒரு நாள் உங்களுக்கு புரியும். என்றவன் எனக்காக இருந்தா பொற்கொடி நிச்சயம் காத்திருப்பா ” என்றவன் அத்தோடு போனை வைத்துவிட்டு தன் தேர்தல் பணியில் இறங்கினான்.
அதியன் கடுமையாக உழைத்தான் பேச்சு சாதுர்யத்தில் அவனை நம்பி ஆட்கள் சேர்ந்தனர் . அவன் பின் பக்கபலமாய் அரசியல் ஆசானாய் தந்தையின் வழிகாட்டுதலில் இளைஞர்களின் இன்றைய தேவைகளான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்கான பல்வேறு திட்டங்களையும் மற்றும் அதற்கு இந்த அதிகார பலம் வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து அவனுடைய ஆக்கபூர்வ பணிகளை செவ்வனே செய்து வந்தான்.
மக்கள் அவன் மேல் நம்பிக்கை கொண்டனர். தங்களின் தேவைகளை அறிந்து செயல்படும் ஒருவனை தேர்ந்தெடுக்க ஆயத்தமாகிவிட்டனர்.
இதற்கிடையில் நாகராஜன் பொய்யான வதந்திகள் மற்றும் அதியனை பற்றிய அவதுறான கருத்துக்கள் எங்கும் எடுபடாமல் போகவே கட்சிக்குள் இருந்தே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தான்.
கட்சியில் இருக்கும் ஆட்களிடம் கலகம் வைத்தான். அவனை தெரிந்தவர்கள் அவனை ஊதி தள்ளினர் தெரியாதவர்கள் இது உண்மையோ என்று நம்பினர். இருந்தும் அதியனின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை….
வீடுவீடாய் சென்று மக்களின் தேவைகள் மற்றும் அந்த பகுதியின் முக்கிய வேலைகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்த்து சரி செய்ய வழிசெய்தவன் மேலும் அதுபோல் நேராமல் இருக்க வழிவகை செய்தான்.
அவன் உழைப்பிறக்கும் அவன் நடத்தைக்கும் நடந்த தேர்தலில் அந்த பகுதி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயராது உழைத்தான். மக்களுக்காக பாடுபட்டான் சிறந்த அரசியல் பிரமுகராக அந்த கட்சியின் இளைஞர் அணியின் சார்பில் வெற்றி பெற்றதால் கட்சியின் மேலிடத்தில் இன்னும் பெருமதிப்பு கொண்டான்.
6வருடங்கள் கழித்து
சந்திரமோகன் வீட்டிற்க்கு பள்ளியின் தலைமை ஆசிரியரும் அவருடன் இரண்டு ஆசிரியர்களும் வர அவரை வரவேற்று நாற்காலியில் அமரவைத்த மரகதம் கணவரை அழைப்பதாக கூறி அவருக்கு காபி கொண்டுவர சென்றார்.
“அடடே வாங்க வாங்க சார் எப்படி இருக்கிங்க?” என்று சந்திரமோகன் அனைவரையும் வரவேற்க
புன்னகையுடன் கைகுலுக்கிய தலைமை ஆசிரியர் ” நல்லா இருக்கேன் ….நீங்க எப்படி இருக்கிங்க?” என்று நலம் விசாரிக்க அவர்களின் உரையாடல் இனிதே ஆரம்பமாகியது “என்ன விஷயம்ன்னு ஃபோன்லயே சொல்லி இருக்கலாமே நீங்க நேர்ல வரனுமா என்று சந்திரமோகன் கேட்க …
“அது முறைஇல்லையே மிஸ்டர் சந்திரமோகன்… அவங்க அவங்க பதவிக்கு இருக்க மரியாதைய நாம கொடுத்தே ஆகனும் இல்லையா?”
“ஹா…. ஹா… அது சரி அப்புறம் சார் என்ன விஷயமா வந்து இருக்கிங்க ?”என்று விசாரிக்க
“நம்ம ஸ்கூல் ஆண்டு விழா வருது அதுல நம்ம ஊர் தலைவர முக்கிய விருந்தினரா அழைக்கலாமுன்னு இருக்கோம் அழைப்பிதழ் அச்சடிக்கனும் அதான் அவர்கிட்ட பேசிட்டு போகலாம்னு வந்தேன்”. என்று உரைக்க
அனைவருக்கும் காபியை கொண்டுவந்திருந்த மரகதித்திற்க்கு உள்ளம் பெருமை கொண்டது மகனின் வளர்ச்சியை இந்த 6 ஆண்டுகளாக கண்கூடாக பார்த்து கொண்டிருந்தவர் அல்லவா அவனுடைய அயராத உழைப்பும் பொதுமக்களின் மேல் அவன்கொண்ட மரியாதையும் மேலும் அவனின் அதிகாரமும் கண்டவர்தான் என்றாலும் படித்தவர்களும் மதிக்கும் அளவிற்க்கு உயர்ந்த தன் மகனின் மேல் மாசற்ற அன்பு கொண்டது அந்த தாயின் மனம்.
கட்சி கட்சி என்று பைத்தியம் பிடித்தவர்கள் அரசியல் பொதுவாழ்க்கை என்று வீணாய் போனவர்களை நேருக்கு நேர் பாத்தவர்கள்தானே அவர்களின் மது மாது மற்றும் தீய பழக்க வழக்கங்கள் இருக்கும் என்று எத்தனையோ கேள்வி பட்டு இருக்கிறாறே… ஆனால் தன் மகன் இன்றும் பண்புள்ளவனாகவும் மற்றவர்கள் மதிக்கும் அளவிள் இருப்பதற்க்கும் அந்த கடவுளுக்கு நன்றி தெரிவித்தவர் வந்தவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார்.
தன்னையும் தாண்டி வளர்ந்த தன் மகனின் வளர்ச்சியின் உயரம் பார்த்த சந்திரமோகன் மகன் மேல் மிக்க மரியாதை கொண்டார்.
“அதியன் எங்க மரகதம்” என்று சந்திரமோகன் கேட்க
“நம்ம ஊருக்கு புதுசா போர் போடுறாங்களா அங்க போறேன்னு சொல்லி போயிருக்குங்க தம்பி” என்று கூற
“நான் தலைவர்கிட்ட பேசிட்டுதான் வந்தேன். மிஸ்டர் சந்திரமோகன் அவர் இப்போ வந்திடுவேன்னு சொன்னார் “என்றபோதே அதியன் உள்ளே வர அவரை பார்த்ததும் ” வாங்க சார் எப்போ வந்திங்க ரொம்ப நேரமா வைட் பண்றிங்களா?” என்று கேட்டுக்கொண்டே அவர்களிடம் வந்தான்.
“இப்போதான் ஜஸ்ட் ஒரு 15 மினிட்ஸ். தான் ஆச்சி” என்றார்.
“உக்காருங்க சார் ஏதோ பேசனுமுன்னு சொன்னிங்க.. என்ன விசயமா?” என்றவன் அன்னையிடம் திரும்பி “அம்மா அவங்களுக்கு குடிக்க ஏதாவது “என்னும்போதே “அதெல்லாம் ஆச்சி தலைவரே” என்று சிரித்தவர்.
“நம்ம ஸ்கூல் விழால வந்து நீங்க பேசனும்” என்றதும்
“சார் நானா? நான் எப்படி” என்றதும்
“நீங்க தான் பேசனும் ஏன்னா இவ்வளவு சின்னவயசுல விடாமுயற்ச்சி கடின உழைப்பால உயர்ந்தவர் உங்களோட வளர்ச்சி அசுர வளர்ச்சி … அது நானே பார்த்து பிரம்மிச்சிருக்கேன் முதல்முதல்ல உங்கள என் ஸ்கூல்ல உங்க அப்பாவுக்கு பின்னாடி நின்னுட்டிருந்த ஒரு டீன் ஏஜ் பையனாதான் என் கண்ணுக்கு தெரிஞ்சிங்க ஆனா இப்போ அப்படி இல்ல ஊர் தலைவர். இது சாதரணம் இல்ல உழைப்பால் உயர்ந்தவங்களதான் நம்ம பள்ளிக்கு விருந்தினரா வரவழைச்சி மாணவர்களுக்கு சிறந்த முன் உதாரணமா இருக்கனுமுன்னு நினைக்கிறேன்”.என்றதும் சிறு மறுப்பும் இன்றி வருவதாக ஒத்துக்கொண்டான் அதியன்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
“அம்மா… என்று அழைத்துககொண்டே வந்த அங்கயற்கண்ணி மரகதத்தை கண்டதும் அம்மா நல்லா இருக்கிங்களா ??அப்பா எங்க???…. தம்பி தூங்கரானா ???…”என்று வந்ததும் வராததுமாக விசாரித்த அங்கயர்கண்ணிக்கு முகமெல்லாம் முழுவதும் புன்னையும் பூரிப்புமாக கணவருடன் வந்த மகளையே ஆச்சரியத்துடன் பார்த்திருந்தார் மரகதம்.
“என்ன அத்தை எப்படி இருக்கிங்க?” என்ற மருமகன் பரமசிவத்தின் குரலில் நிகழ்வுக்கு வந்தவர் “நல்லா இருக்கேன் மாப்பிள்ள… வாங்க வாங்க வந்து உட்காருங்க.. 5 , 6 வருசமா ஊர் பக்கமே வராதவங்க வந்திருக்கிங்க அதான் சந்தோசத்துல தலை காலே புரியல எப்படி இருக்கிங்க மாப்பிள்ள?..” என்றவர் அவருக்கு உபசரிக்க நீர்மோருடன் வந்தார்.
“அடியே கண்ணி இந்த மோரு எங்கடி என் பேத்திய காணும்?. உங்க அப்பா இப்போ வந்திடுவார்… உன் தம்பி குளிக்கிறான்”. என்றார்.
“அம்மா நல்ல விசயம் பேசறோம்…
கல்யாண பொண்ண கூட வைச்சிக்கிட்ட பேசுறது!!!… வெக்கமா இருக்காது ???அதான் ஊருல எம் மாமியாருக்கிட்ட விட்டுட்டு வந்தேன்”. என்றதும் பேத்திக்கு வேறு இடத்தில் கல்யாணம் எனும் செய்தி கேட்டதும் மரகதத்தின் முகம் வாடியது.
“அட என்னத்தை என்ன,ஏது, யாரு மாப்பிள்ளைன்னு கேக்கமாட்டிங்களா?
உங்க பேத்தி அத்தை விசாரிக்காம இருக்கிங்க?… என்றார் பரமசிவம்
தலை துவட்டியபடியே அதியனும் உள்ளிருந்து “அம்மா” எனறபடி வர அக்கா குடும்பத்தை பார்த்ததும் சந்தோஷத்துடன் அவர்களை வரவேற்றவன்.
மேற்கூறிய விஷயத்தை கூறாமல் “வாங்க மாப்பிள்ள எப்படி இருக்கிங்க ??உங்க வேலையெல்லாம் எப்படி போகுது?” என்று பரமசிவம் அதியனை விசாரித்தார்
அவர் மாப்பிள்ளை என்றதும் எதுவுமே உறைக்காமல் அனைத்தும் புரிந்தது அதியனுக்கு.
…………………………………………………………………..
நிறைந்த சபை பள்ளி வளாகம் களைகட்டியிருந்தது. ஆங்காங்கே தோரணங்களும் வண்ண மாயமாக்கியிருந்தது பள்ளி மாணவர்கள் முதல் சாதாரண குடிமக்கள் வரை குழுமி இருந்தனர். மாணவர்கள் தமது தனி திறமை மற்றும் பேச்சி போட்டி கட்டுரை நடனம் இசை போட்டி என்று எலலாவற்றிலும் ஆர்வமாய் பங்கு கொண்டு திறம்பட செயலாற்றினர். அனைவருக்கும் விருதுகள் அளித்து பரிசுகளும் வழங்கி மகிழ்ச்சிபடுத்த பள்ளிதலைமை ஆசிரியர் பேச எழுந்தார்.
“இங்கு குழுமியுள்ள அனைவருக்கும் என் முதற்க்கண் வணக்கம். இங்கு வருகை புரிந்து இந்த விழாவை சிறப்பித்த தலைவர் அதியன் அவர்களையும் காவல்துறை ஆணையர் மிஸ்டர் கிருஷ்ணன் அவர்களையும் நம் பள்ளியின் சார்பில் வரவேற்க்கிறேன்”
“தலைவர் அதியன் அவர்களை ஓரிரு வார்த்தைகள் பேச அழைக்கிறேன்” என்று தலைமை ஆசிரியர் அமர்ந்துவிட
மைக் முன் நின்ற அதியன் “ஒரு முறை தொண்டையை சரி செய்தவன் தன் வெண்கல குரலால் வணக்கம் ” என்றவன் அனைவரையும் தன் பால் கவர்ந்து ஈர்த்தான் .
மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பெரும் பங்கு இருக்கு …ஒரு மாணவன் நல்லா ஜொலிப்பதற்க்கும் கண்ணாடி கல்லாய் மாறுவதற்க்கும் அவனுடைய சூழ்நிலைகளே முக்கிய காரணம்…. நான் இப்போ இங்க நிக்கிறேன். நிஜமா எனக்கு ஆச்சர்யம் தான் இதுபோல ஒரு நிகழ்வு வரும்ன்னு ஒரு நாளும் நான் நினைச்சி பார்த்ததே இல்லை …என்னை கேலி கிண்டல் பண்ணாதவன் யாருமே இல்லை… நான் அரசியல் என்று என் பாதையை வகுத்தபோது கூட இவனெல்லாம் எங்க உருப்படபோறான். நாலுபேருக்கு நல்லது செய்றேன்னு ஊரை ஏமாற்றுவான்னு சொன்னது என் காதுலையே கேட்டுச்சி என் முதுகுக்கு பின்னாடி பேசினவங்க எத்தனையோ பேர் என் முகத்துநேர வந்து உதவி கேட்டாங்க… என்னால முடியும்னு நினைச்சேன் பைத்தியமா திரிஞ்சேன் என்னை நானே தயார் படுத்திக்கிட்டேன் வழி மாறி வாழ்க்கை பயணம் மாறி போனவங்க எத்தைனையோ பேர் … ஆனா நம்ம குறிக்கோளோட பயணம் செய்யனும் நம்மோட பாதைல நிறைய முட்களும் கல்லி செடிகளும் இருக்கும்.அதை கடந்து போகனும் சோர்வு வந்து துவண்டு போனா நம்பிக்கையே நம்ம ஆயுதமா எடுக்கனும்…..”
“உன்னால முடியாதுன்னு சொன்னவன் முன்னாடியே உருவாகி காட்டனும் இன்றைய இந்தியா இளைஞர்கள் கையில்ன்னு சொன்னாங்க…. எத்தனை பேர் அதற்க்கு முன்னுக்கு வந்திங்க நாம நல்லா இருந்தோம்மான்னு மட்டும் நினைக்காம நம்மால முடிஞ்சத நாலுபேருக்கும் செய்யனும்.
“என்னோட வளர்ச்சி அசுர வளர்ச்சி அப்படின்னு சார் சொன்னாரு …அது அசுர வளர்ச்சி இல்ல மக்கள் என்னோட செய்கையில எனக்கு கொடுத்த அதிகாரம் உனக்குள் இருக்கும் ஒரு கனவை வெளியே கொண்டு வா அதன் பின்னே ஒடு அதை அடையும் வரை போராடு கனவு கண்டா மட்டும் போதாது அதை நிஜமாக்கும் முயற்ச்சியும் எடுக்கனும்”.
” நன்றி” என்று இருகரம் கூப்பி கூறியதும் விண்ணை பிளந்தது கர கோஷம் …