ஹாய் செல்லம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!! நான் வந்துட்டேன்…. காதலை தேடி… அடுத்த பதிவு போட்டுட்டேன்… படிச்சிட்டு உங்களோட கமெண்ட்ஸை அப்படியே சொல்லிட்டு போங்க தங்கங்களா……
காதலை தேடி… – 18
அடுத்த நாள் காலை உற்சாகத்துடன் அலுவலகத்திற்கு கிளம்பிய மதுரா சாதாரண சுடிதாரில் இருந்தாலும் மனதில் இருந்த கவலைகள் அகன்றதால் புதுப்பொலிவுடன் இருந்தாள். மாலை ஆறு மணிக்கு ஒரு புகழ்பெற்ற வணிகவளாகத்திற்கு வருமாறு அருள் கூறியிருந்தான்.
மாலை ஆறு மணிக்காக அன்றைய நாள் எப்போதும் முடியும் என காத்திருந்தவள், ஐந்து மணிக்கு கிருஷ்ணாவின் இடத்திற்கு சென்றாள்.
“என்ன மது இன்னைக்கு வேலையே செய்யலைபோல? ஒரே கனவுலகத்திலே இருந்த போல?”
“அப்படி ஒன்னும் இல்ல கிருஷ்….”
” ஆமா ஆமா நானும் பார்த்தேன்… நீ எப்படி வேலை செஞ்சன்னு என சிரிக்க மதுரா தன் வெட்கத்தை மறைப்பதற்காக பேச்சை மாற்றினாள்.
“என்ன மேடம்… கிளம்பியாச்சு போல?” – காவ்யா
“ஆமா காவ்யா… இன்னைக்கு மது இந்த ஆபீஸ்லயே இல்லை… ஒரே அருள் நியாபகம் தான்.. இல்ல மது?” – கிருஷ்ணா
“போதும் போதும்… காலைல இருந்து ரெண்டு பெரும் ரொம்ப ஓவரா என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கிங்க… நான் கிளம்புறேன் என தோழிகளிடம் கூறிவிட்டு அந்த புகழ்பெற்ற வணிகவளாகத்திற்கு செல்ல ஒரு ஆட்டோவை பிடித்தாள்.
சரியாக பத்து நிமிடத்தில் அங்கே சென்றவள் அருளின் வருகைக்காக ஒவ்வொரு நொடியும் அவஸ்தையுடன் காத்திருந்தாள்.
மணி ஆறு பதினைந்து. அருளிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. அவனின் கைபேசிக்கு ஐந்து முறை அழைத்தும் பதில் இல்லை. ஒருவேளை வேறு ஏதாவது வேளையில் மாட்டிக்கொண்டானோ? என அவள் யோசித்து கொண்டிருக்க இன்னும் பதினைந்து நிமிடம் மதுராவை காக்க வைத்து விட்டு வந்து சேர்ந்தான். உள்ளே சென்றவன் மதுராவை கண்டுபிடிக்க முடியாமல் அவளிற்கு கைபேசியில் அழைக்க அவள் இருந்த திசையை கூறி கை அசைக்க, அவளை நோக்கி அருள் வர, அவள் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
முழுதாக இரண்டு வருடம் கழித்து அருளை சந்திக்கின்றாள். மீண்டும் அருளை சந்திப்பாள் என அவள் கனவிலும் நினைக்காத ஒன்று இன்று நடக்கும் பொது அவளால் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவள் அழுவதை பார்த்த அருள் வேகநடையில் அவளை நெருங்கியவன் “மது, இப்போ எதுக்கு அழுற? என்னாச்சு? இங்க பாரு எல்லோரும் பாக்குறாங்க..” என அவன் சுற்றுப்புறத்தை உணர்த்த வேகமாக தன் கண்ணீரை துடைத்தாள்.
மேலும் அவளிடம் எதையும் கேட்காமல் பக்கத்தில் இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டி சென்றான். அங்கே ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து எதிர் இருக்கையை அமருமாறு அவளிற்கு கை காட்டினான். சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவாறாக அழுகை நின்று நிமிர்ந்து பார்த்தவள் அருள் இமைக்காமல் அவளை பார்த்துக்கொண்டிருக்க மதுரா அவனின் முகத்திற்கு நேரே கையை ஆட்டினாள்.
“ஹலோ சார்… என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?”
“ம்ம்ம்.. ஒண்ணுமில்ல”
“இல்ல ஏதோ இருக்கு… எதுக்கு அப்படி பார்த்தீங்கன்னு சொல்லுங்க..”
“அது… என்கிட்டே என்ன இருக்குனு நீ என்னை இந்தளவுக்கு காதலிக்கிற?”
“எந்தளவுக்கு?”
“என்னை பார்த்ததும் அழுதீயே… அந்த கண்ணீர்ல உன்னோட காதல் தெரிஞ்சுச்சு…”
“உங்களை பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு… மறுபடியும் என்னோட வாழ்நாள்ல உங்களை பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை.. அதான் உங்களை பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்…”
அவளின் கண்ணீரை மாற்றுவதற்காக இந்த இரண்டு வருட வாழ்க்கையை பற்றி அவளிடம் பேசிக்கொண்டிருந்தான் அருள். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தவர்கள் அருளின் கைபேசிக்கு அழைப்பு வர, அப்போதுதான் மதுராவிற்கு தன் கைபேசியை அணைத்து வைத்திருந்தது நினைவில் வர அதை உயிர்ப்பித்தாள். அதற்காகவே காத்திருந்தது போல் பத்து தவறிய அழைப்புகள் காட்ட காவ்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு காவ்யா…”
“அறிவில்லை உனக்கு.. எதுக்குடி கைபேசியை அணைச்சி வச்ச?”
“அதுவந்து…”
“நீ எங்க இருக்க இப்போ?”
“அருள் கூடத்தான் இருக்கேன்…”
“இன்னும் நீ வீட்டுக்கு கிளம்பலையா?மணி என்னனு தெரியுமா?”
தன் கை கடிகாரத்தில் மணியை பார்த்த மதுரா, “அச்சோ.. மணி ஒன்பது ஆனதே தெரியல காவ்யா.. இதோ கிளம்பிட்டேன்…”
“இதுவரைக்கும் மூணு தடவ உங்க அம்மா எனக்கு போன் பண்ணி கேட்டுட்டாங்க… இன்னும் நீ வீட்டுக்கு வரல. உன்னோட போனும் எடுக்கல.. அவங்க பயந்து போய் எனக்கு போன் பண்ணாங்க… நான் தான் ஏதேதோ சொல்லி சமாளிச்சேன்… நீ முதல்ல அம்மாக்கு போன் பண்ணி பேசு… சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு.. ” என சொல்லிவிட்டு காவ்யா போனை அணைத்தாள்.
“அருள், எனக்கு நேரமாச்சு… நான் கிளம்புறேன்..”
“இங்கேயிருந்து எப்படி வீட்டுக்கு போவ மது?”
“பஸ்ல போயிடுவேன் அருள்.. நீங்க வீட்டுக்கு பாத்துப்போங்க.. நான் வீட்டுக்கு போனதும் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்..” என அருளிடம் கூறிவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள்.
அருள் தன் வண்டியை எடுத்து கொண்டு வெளியே வர, அதுவரை மதுராவிற்கும் பேருந்து வரவில்லை. இப்போவே மணி ஒன்பதரை ஆகிடுச்சு.. இந்த பஸ் எப்போ வந்து நான் எப்போ வீட்டுக்கு போறது.. என அவள் எண்ணி கொண்டிருக்கும் போதே அருள் அவள் பக்கத்தில் வந்து வண்டியை நிறுத்தினான்.
“மது இன்னும் உனக்கு பஸ் வரலையா? நீ கிளம்பி பத்து நிமிஷம் ஆச்சே..”
“ம்ம்.. இன்னும் பஸ் வரல அருள்.. நேரம் வேற ஆகுது…”
“சரி வந்து வண்டில ஏறு… நான் கூட்டிட்டு போறேன்…”
“இல்ல.. வேண்டாம்.. இப்போ பஸ் வந்துடும்…நான் பஸ்லயே போயிடுறேன்.. நீங்க கிளம்புங்க…”
“ஏற்கனவே நேரமாச்சு மது… வந்து உட்காரு…” என அருள் கூற, அதுற்கு மேல் தமாதிக்காமல் மது வண்டியில் ஏற அவர்களின் முதல் பைக் பயணம் தொடங்கியது.
மதுரா ஏறி அமர்ந்தவுடன் வண்டியை கிளப்பியவன் வேகமாக வண்டியை ஓட்ட மதுரா, அருளின் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். அவள் கூறிய இடத்தில் பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தவனை “சரியான வாத்து மடையனா இருக்கானே… இதே வேற ஒருத்தன இருந்தா… வண்டியில பின்னாடி தனக்கு பிடிச்ச பொண்ணு உட்கார்ந்துருக்கே… பத்து நிமிசத்துல போக வேண்டிய இடத்துக்கு ஒரு மணி நேரத்துல போயிருப்பான்.. ஆனா இந்த பேக்கு அரை மணி நேரத்துல போக வேண்டிய இடத்திற்கு பத்து நிமிஷத்துல வந்து சேர்ந்துடுச்சு…” என மனதிற்குள் திட்டியவாறு வண்டியில் இருந்து இறங்கினாள் மதுரா. வெளியே அவனை எதுவும் சொல்ல முடியாமல் அவனிற்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு கிளம்பினாள் மதுரா.
வீட்டிற்கு வந்த மதுராவை அவள் அன்னை விஜி, கேள்வியால் துளைத்து எடுத்துவிட்டார். பின்னே எப்போதும் நேரத்திற்கு வீட்டிற்கு வரும் மகள் இன்று இவ்வளவு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை… கைபேசியும் எடுக்கவில்லை என்றதும் ஒரு தாயாக அவரின் தவிப்பு சரியே. ஒருவழியாக வாயில் வந்த பொய்களை கூறி அவள் அன்னையை சமாளித்தவள் சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு வந்தவள் அருளிற்கு மெசேஜ் செய்தாள்.
இதுவரை தன் தாயிடம் போய் கூறாதவள் தன் காதலுக்காக போய் கூற ஆரம்பித்தாள். தன்னுடைய காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகினாள் மதுரா.
தேடல் தொடரும்…..