காதல் மட்டும் புரிவதில்லை 5
அது ஒன்றும் பெரிய பங்களா இல்லை .ஆனால் அடக்கமான அழகான ஒரு வீடு… அதுவும் பிரபாவுக்கு பிடித்த பச்சை வண்ணம்……அரவிந்தனும் பிரபாவும் உள்ளே செல்ல நினைக்கையில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாள் சித்ரா… என்ன செய்து அவளை சமாதானப்படுத்துவது என புரியாமல் நின்றுகொண்டிருந்தனர் அரவிந்தனின் அண்ணன் ரவீந்திரனும் அண்ணி மாலதியும் ..மாலதியின் தங்கை தான் சித்ரா…
ஏன் இப்படி செஞ்சீங்க அக்கா ??ஆ! என கத்திக்கொண்டே இருந்தாள் …என் கிட்ட ஏன் சொல்லல ??இப்படி என் வாழ்க்கையை பாழாக்குவீங்க னு என் கனவுல கூட அதுவும் நீங்க இப்படி செய்வீங்கன்னு நினைக்கல.. மச்சான் என்று அழுக ஆரம்பித்தாள்..
அந்நேரம்தான் அரவிந்தனும் பிரபாவும் வீட்டுக்குள் வந்தார்கள்… நில்லுங்க !!அரவிந்த் நான் வெளியே போய்க்கிறேன் …இதையெல்லாம் பார்க்கிற சக்தி எனக்கு இல்லை…. என்று கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறினாள்…
அரவிந்தன் மாலையை கழட்டி சோபாவில் எறிந்து விட்டு மாடி ஏறி தனது அறைக்குச் சென்றான்…
சித்ராவை சமாதானம் செய்ய மாலதி அவளைப் பின்தொடர்ந்தாள்…
ரவீந்திரனும் மாலதியைப் பின்பற்றி தொடர்ந்தான்…வெளியே சென்ற அவன் உள்ளே பிரபாவின் முன் வந்து இங்கு நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு வேகமாக வெளியேறினான்…..
இங்க என்னடா நடக்குது ??இது யார் னு தெரியலையே!! இவ்வளவு கோபம் எதுக்கு? நம்ம அமுங்குனி இவ்வளவு கோபப்படுறாரு?? அமுங்குனிக்குள்ள ஒரு 96 பிளாஷ்பேக் இருக்குமோ என்று யோசித்து…பிரபா எந்த ரியாக் ஷன் கொடுக்க என தெரியாமல் சோபாவில் அமர்ந்தாள்…தீபி க்குபோன் பண்ணி கேட்போமா என்று நினைத்து அந்த எண்ணத்தையும் கைவிட்டாள்.. வீணாக அக்காவையும் கலவரப்படுத்த வேண்டாம்…..
ஒரு மணி நேரம் கழித்து மாடியில் அவன் ரூம் திறந்து கீழே இறங்கி வந்தான்… முகம் பாறையாக இறுகியிருந்தது… அது சொல்லொன்னா துயரம் சூழ்ந்து இருப்பதை உணர்ந்தாள் பிரபா ….பட்டு வேட்டி சட்டையை களைந்து கலந்து டீசர்ட்டில் வெளியே செல்லும் தோரணையில் இருந்தான் ..
கீழே இறங்கி வந்து பிரபாவிடம் ஹலோ!!! என்றான் ….நிமிர்ந்து அவனை என்ன? என்பது போல் பார்த்தாள்…. மேலே இருக்கிறது என்னோட ரூம் …நீ போய் பிரஷ் அப் பண்ணிட்டு வா …இன்னும் கொஞ்ச நேரத்துல மண்டபத்திலிருந்து பெரியவங்க எல்லாரும் வந்துடுவாங்க.. என்று கூறிவிட்டு அவளது பதிலையும் எதிர்பார்க்காமல் விடுவிடுவென வெளியேறிச் சென்றான்….
ஹலோ வா…என்னோட ரூமா…… ஒரு மணி நேரமா நான் இருப்பது தெரியலையா ???அவனின் வார்த்தைகள் முள்ளாய் தைத்தது.. தன் நிலையை நினைத்து கண்ணீர் வெளிவரத் துடித்தது… சுயபச்சாதாபம் ஆளை அழித்துவிடும் என்று என்று எங்கோ படித்தது நினைவுக்கு வர தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.. அவர்களது ரூமுக்கு சென்றாள்… அது ஒரு அழகிய சிறிய அறையாக இருந்தது… அனைத்து பக்கங்களிலும் ஜன்னல் இருந்தது… காற்று நான் உனக்கு துணை இருக்கிறேன் என்பது போல் அவளைத் தழுவிக் கொண்டு சென்றது…. ரூம் நல்லாதான் இருக்கு ..நம்ம ஆள்தான் சரியில்லை என்று நினைத்துக் கொண்டு பாத்ரூம் சென்று பிரஷ்அப் செய்து விட்டு வந்தாள் …இப்ப என்ன பண்றது …?எதைப் போடுவது… சாரியா? சுடிதாரா?
பெரியகுழப்பம் !!! இதை விட பயங்கர குழப்பம் உன் வாழ்க்கையில் இருக்கும் போல !!! என்ன செய்யப் போற ???அரவிந்த் கிட்ட பேசிப்பார்க்கலாம்… என மனசாட்சி எட்டிப்பார்த்தது…
சரிதான்… உருப்படியா ஒரு ஐடியா சொல்லியிருக்க …போய்தான் பேசிப் பார்ப்போம் என நினைத்து திரும்பினாள்…..
ஒரு பெரிய பட்டாளமே அவள் முன் நின்றது… அதன் நடுநாயகமாக நின்று இருந்தவனின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தாள் பிரபா…..
காதல் மட்டும் புரிவதில்லை!!!