காதல் மட்டும் புரிவதில்லை 8

0
260

நாளுக்கு நாள் வளரும் பிறைச்சந்திரன் போல அரவிந்தன் பிரபாவதி இடையேயான புரிதலும் வளர்ந்து கொண்டு வந்தது ….இதற்கிடையில் அரவிந்தனின் பிறந்த நாளும் வந்தது ….

பிரபாவும் வீட்டில் உள்ளவர்களும் வாழ்த்துச் சொன்னார்கள் ஆனால் அது எதுவும் அவனது கருத்துகக்கு எட்டவில்லை….

அன்று அவனது சுய முயற்சியால் அவன் நடத்தி வந்த நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி காண புது பிராஜெக்ட் சைன் செய்யப்படும் நிலையில் இருந்தது …அதனால் மனம் முழுவதும் ஆபீஸில் தான் இருந்தது… அனைவரிடமும் பார்மாலிட்டிக்காக தேங்க்ஸ் சொல்லி வாழ்த்து பெற்றான்..அரவிந்தனின் இந்த செய்கை வருத்தத்தைத் தந்தது ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை தனது வருத்தத்தை வெளிக்காட்டினால் பெரியவர்கள் அவனை கண்டிப்பார்கள் தேவையில்லாத சங்கடம் என நினைத்தாள்…. தான் ஏற்பாடு செய்திருந்த சர்ப்ரைஸ் பார்ட்டிக்கு மட்டும் ஈவினிங் கரெக்டாக வர வேண்டும் என வேண்டிக் கொண்டாள் மனதினுள்….

மாலை 5 மணிக்கு அரவிந்தனுக்கு கால் செய்தாள்…பிரபா எப்பொழுதும் போன் செய்து டார்ச்சர் செய்யாதவள்… பிரபா அழைத்ததால் அவளது காலை அட்டென்ட் செய்தான் ….

ரவி, சீக்கிரமா வீட்டுக்கு வர்றியா?

என்னது ரவியா ?யார் அது??

மனசுக்குள்ள பேசிப்பேசி வந்திருச்சு… சாரி… சாரி ..ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வரீங்களா …

மனசுக்குள்ள பேசுவியா?

ம்.. ஆமா..

யார் கூட ??

என் பாய் ஃப்ரெண்ட் கூட

என்னது? கேட்கல !!

எல்லாம் காது சரியாத்தான் கேட்குது என் பாய் பிரன்ட் கூட பேசுவேன்னு சொன்னேன்

அப்படியா !!இப்ப எதுக்கு எனக்கு கால் பண்ண?? உன் பாய் பிரன்ட் கூட பேச வேண்டியதுதானே?? என பொய்க் கோபம் காட்டினான்..

இன்னும் ஒரு மணி நேரத்தில் நீங்க இங்க வரலைன்னா நான் என் பாய் பிரன்ட் கூட வெளியில் கிளம்பிருவேன், ஓகே வா? என சீண்டினாள்

போய்க்கோ… எனக்கு என்ன ???என போனை கட் செய்தான்

அடுத்து பிரபா செய்த அனைத்து கால்களும் வீணாகப் போனது…. இவள் பத்தாவது முறையாக செய்த காலுக்கு பதிலாக காலிங்பெல் அடித்தது… அரவிந்தன் தான் வந்திருந்தான்.. வீட்டில் உள்ளவர்கள் அவனை ஏலியனை பார்ப்பது போல் பார்த்தார்கள்.. அப்புறம், சும்மாவா ??ஏதாவது ஃபங்ஷனுக்கு வா என்றால் கூட பிஸி என்று விடுவான் .எல்லாரையும் கிண்டல் செய்வான் இப்ப அவனை கிண்டல் செய்ய வேண்டிய இடத்தில் இருக்கான்.. எல்லோரும் மௌனமாக சிரித்தார்கள்…

யாரையும் கண்டுகொள்ளாமல் மாடி ரூமுக்கு சென்றான்… பிரபாவும் பின்தொடர…

ஓய்.. உன் பாய் பிரண்ட் எங்க ??

அவனுக்கு பர்த்டே… பார்ட்டிக்கு போய் இருக்கான்.. உங்களையும் வர சொல்லி இருக்கான்…

அவளின்காதை திருகி ஏதோ குறும்பு பண்ணி வச்சிருக்க ….

என்னனுதான் தெரியலை என்றான் …

ஆ… வலிக்குது.. விடுங்க… என்றாள்..

விடுறேன்… உன் பாய் ஃபிரண்ட் பேரு வச்சு மாதிரி என்னையும் பெயர் வைத்து கூப்பிடு வரேன் ..

ஏற்கனவே வச்சாச்சு…

அடிப்பாவி !!!சரி என்ன பெயர் சொல்லு… பார்ப்போம்…

பேரை எப்படி பார்க்கிறது கேட்கத்தான் முடியும்…

சரி ரொம்ப மொக்கை ஜோக் .அறுவை தாங்க முடியாது …அப்ப நானும் வரமுடியாது …

உங்க கால்ல வேணா விழுறேன் ..வாங்க…

விழு…வரேன்..

கட்டிலில் உட்கார்ந்து இருந்த அவள் எழுந்தாள் ….

அவள் நல்லவளா என மனதில் நினைத்துக் கொண்டான் அரவிந்தன் …

கண்ணை திருத்தி பழிப்பு காட்டிவிட்டு “இது வேற ஆசையா?” ஆசை …தோசை… அப்பள வடை .என்றாள்…
இருவரும் சிரித்துக்கொண்டே கிளம்பினார்கள்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here