காதல் மட்டும் புரிவதில்லை 9

0
241

எங்கே போகணும் ??என்றபடியே வண்டியை ஸ்டார்ட் செய்தான் அரவிந்தன்…

முதல்முறையாக கணவருடன் வண்டியில் செல்ல போகும் பயணத்தை எண்ணி கனவுலகில் இருந்தாள் பிரபா …..

அவனின் கேள்விக்கு பதிலாக நான் தான் ரூட் சொல்வேன் என்றாள்…

அப்படி நான் பிறந்து வளர்ந்த இதே ஊர்ல என்ன எங்க கடத்திட்டு போகப் போற?! என்று கேட்டான்….

போகத் தானப் போறோம் அங்க போய் தெரிஞ்சுக்கோங்க என்றாள்….

ஆனாலும் இவ்வளவு சஸ்பென்ஸ் தாங்காது மா என்றான் அரவிந்தன்…

பிரபா ரூட்செல்ல அவர்கள் சென்ற இடம் basketball court …

ஆச்சரியம் ஆனான் அரவிந்தன் ,அவர்கள் சென்ற இடத்தையும் அங்கு இருந்தவர்களையும் பார்த்து…..

பள்ளியில் படிக்கும் காலத்தில் basketball state level பிளேயர் ஆக இருந்தான் அரவிந்தன்.. அவன் கூட அன்று விளையாடிய நண்பர்கள் அனைவரும் அங்கு குழுமியிருந்தனர்… மகிழ்ச்சியின் எல்லையில் அரவிந்தன்….

நம்மில் சிலருக்கு ஜாப் வேற ட்ரீம் வேற என்று தான் என்று அமைந்திருக்கும்… job
Dream, ambition என எல்லாம் ஒன்றாக அமைந்தவங்க அதிர்ஷ்டசாலிதான்…

basketball அவனது ட்ரீம் என்பதை அவன் பேச்சிலும் அவன் வாங்கிய கோப்பைகளை பார்த்தும் அறிந்து இந்த மீட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தாள் பிரபா….

மீட் அப் முடிஞ்சு சந்தோசத்தில் மிதந்தவாறு வீடு வந்து சேர்ந்தனர்… வீட்டுக்கு வந்ததும் ஒரு பெரிய பார்சலை பிரபாவிடம் தந்தான்,அவளின் ரவி …

அதை கையில் வாங்காமல் என்னது இது? என்றாள்.

வாங்கிப் பிரித்துப் பார்த்தால் தெரியும் என்றான்.

எனக்கா?! என்றாள்….

இல்ல என் கேர்ள் பிரெண்டுக்கு என்றான்…

இடுப்பில் கைவைத்து முறைத்தாள்….

முறைத்தவளை அருகில் இழுத்து அணைத்தும் அணைக்காமலும் முன் நெற்றியில் ஒரு முத்தம் தந்தான்..

ஒரே நொடியில் உலகனைத்தையும் மறக்கச் செய்து
உன் உச்சபட்ச அன்பினை வெளிப்படுத்தும்
என் முன் நெற்றியில் உன் ஒற்றை முத்தம்!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here