காதல் 6

0
230

மலை முகடுகளிலும், அந்திவானத்திலும் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனை எவரும் கண்டுபிடிக்காமல் போக நான் இருக்கிறேன் என்று பறைசாற்றியபடி செங்கதிர்களை வீசி உலா வந்தான் காலை கதிரவன்.

வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க
மீரா ஹெர்பல் சீக்காய் கொண்டு நீராடு பெண்ணே நீராடு

என்று சிகைக்காய் விளம்பர பாடல் பாடியபடி தலையை துவட்டி கொண்டிருந்தாள் கவி. அவள் அணிந்திருந்த பிங்க்நிற காட்டன் சுடியில் பன்னீர்ரோஜாவாக மாறி

பனியின் சிறு துளியை போல அவளின் முகத்தில் அங்காங்கே துளிர்த்திருந்த நீர்முத்துக்கள் அவளை ஓவியமாய் காட்டியது.

அவளுடைய பாடலை கேட்டு கண்விழித்த தியா கவியை ஆச்சர்யமாய் பார்த்தாள். கண்ணாடியில் தெரிந்த தியாவின் பிம்பத்தை கண்ட கவி என்னவென்று தலை அசைத்து கேட்க

சோம்பலாக எழுந்தவள் “என்ன ஆச்சர்யமா இருக்கு?” என்று கண்களை கசக்கியபடி கேட்டாள்

தியா கேட்டதையே “என்ன ஆச்சர்யமா இருக்கு?” என்று கவியும் வடிவேலுவின் பாணியில் கேட்க

அவளை ஒரு பார்வை பார்த்த தியா “இல்ல எப்பவும் லீவு நாள் சத்தமே இல்லாம 8 மணி வரையும் இழுத்து போர்த்திக்கிட்டு தூங்குவ… இன்னைக்கு சன்டே அதுவும் இவ்வளவு சீக்கிரம் குளிச்சி இருக்க??” என்று ஒரு மார்கமாய் அவளை ஏற இறங்க பார்த்து என்ன விஷயம் என்று கேட்க

தியா கூறிய அனைத்தையும் விட்டுவிட்டு கடைசி வரியை மட்டும் வைத்து “என்ன சீக்கிரம் குளிச்சி இருக்க??” என்று மறுபடி வடிவேலுவின் சாயலில் கேட்க

அவள் கூறியதில் எரிச்சலுற்றவள் “இப்போதான் எழுந்தேன் படுத்தாதே..”என்று கடுப்பானாள் தியா.

“என்ன இப்போதான் எழுந்தேன்??” என்று மறுபடி தொடர

படுக்கையில் இருந்து எழுந்தவள் பற்களை கடித்துக்கொண்டு அவளை ஒரு தள்ளு தள்ளிவிட்டு காலை கடமைகளை முடிப்பதற்கு குளியலறைக்குள் நுழைந்தாள்.

அவள் திரும்பி வரும்போது காபி விளம்பரத்தின் பாடலை ஹம் செய்தபடி தலையை வாரிக்கொண்டிருந்தாள் கவி

அவளை சட்டை செய்யாமல் அறையை விட்டு வெளியே போக எத்தனிக்க

ஷைலல்லா ஷைலல்ல ரெட்டை வால் வெண்ணிலா என்று கவியின் மொபைல் போன் ரிங்கானது டிஸ்ப்ளேயில் அதன் அழைப்பாளரின் பெயரை பார்த்ததும் புன்னகைத்தவள் “ஹாய் சித்து” என்று தங்கையை பார்த்துக்கொண்டே உற்சாகமாய் பேசியபடி பால்கனியில் போய் நின்று கொண்டாள்

சித்து என்றதும் தியாவின் கால்கள் வேறூன்றியது போல் கால்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க மறுத்து அப்படியே நின்றது.

பால்கனியில் இருந்து பேசினாலும் தெளிவாக தியாவின் காதில் விழும்படி “என்ன ரெடியா?? நான் எப்போயோ ரெடி.. நீ எப்போடா வர்ற?”. என்று கேட்டுக்கொண்டு இருந்தாள் கவி

அந்த பக்கத்தில் இருப்பவர்.என்ன சொன்னாரோ!!!

“ஹம்.. அந்த குட்டிபிசாசுக்கெல்லாம் நீ ஏன்டா பயப்புடுற??? அவள எல்லாம் கணக்குலேயே எடுத்துக்காத… சீக்கிரம் கிளம்பி வாடா..” என்று போனை அணைத்துவிட்டு ஓரக்கண்ணில் தங்கையை பார்த்தாள்.

தியா கவியை பார்த்த பார்வையில் எரிகின்ற அக்னி ஜூவாலையாக இருந்திருந்தால் கவி இன்னேரம் எரிந்துபோய் இருப்பாள். பார்வையில் அவ்வளவு காரம் அவளின் பார்வையை கண்டுக்கொண்ட கவி” என்ன தியா இவ்வளவு பாசமா பாக்குற?”. என்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை எடுத்து ஊற்ற

“யார்கிட்ட இருந்து கவி போன்?” என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்ப

“ஏன் கேக்குற தியா என் பிரெண்ட் கிட்ட இருந்துதான் “.என்று அசராமால் சொல்ல

“உன் பிரெண்ட்கிட்ட இருந்து போனா எந்த பிரெண்ட் “.என்று மறுபடியும் கேட்டாள்.

“அது வந்து …அது சித்து… என்றாள் தயங்கியபடி அவன் பெயரை கேட்டாள் என்ன வசவு வருமோ என்று எதிர்பார்த்து

அதை அந்தரத்தில் விட்டவள் .”சரி அந்த கொரில்லாவ உன் பிரெண்டுன்னே வைச்சிக்க… ஆனா யார பாத்து குட்டிபிசாசுன்னு சொன்ன??” என்று கோபமாய் கேட்க

“ஏன் செல்லம் இப்போ கோவம்?? என்று சிரித்தவள் “அது வேற யாருமில்லை குட்டி நீயேதான் அந்த குட்டிபிசாசு”. என்று மறுபடியும் அந்த பெயரை சொல்லியே அவளை அழைக்க

அதில் இருந்து கடுப்பானவள் “அம்மா ,அம்மா… இவள பாருங்க மா..” என்று மாடியிலிருந்து சத்தம் கொடுத்தாள்

அவளின் வாயை பொத்தியபடி “ஏய் ஷ்ஷுஷுஷுஷு “என்று சப்தமிட்டு “பீளிஸ் பீளிஸ் விட்டுடுடி “என்று இறங்கி வந்தாள் கவி

“அப்போ எல்லாத்தையும் சொல்லு” என தியா மிரட்ட

“இன்னைக்கு நானும் சித்துவும் ஷாப்பிங் போறோம் … அவன் இங்க வரப்போ நீ இருப்பியான்னு கேட்டான்”. என்று உளரிவிட

“ஹோ சார் நாங்கல்லாம் இருந்தா வரமட்டாரோ !! என்று மனதில் நினைத்தவள் சித்துவும் நீயூம் மட்டும் போறிங்களா??”. என்று பாவம் போல் கேட்க

“ஆமா நாங்கதான் போறோம் தியா ஏன் ஒரு மாதிரியா இருக்கு உன் குரல் “. என்று கவி சகஜமாக கேள்வி கேட்க

அதற்க்குள் விர்ரென்று மனம் விரைத்தவள் ‘ இல்ல சும்மாதான் கேட்டேன் அந்த கொரில்லா கூட போனா எனக்கென்ன ??”. என்றவள் மற்றதையும் தெரிந்துக்கொள்ளும் ஆவலில் நின்றிருந்தாள்.

“அவனுக்கு ஏதோ முக்கியமா வாங்குனுமா நீ கொஞ்சம் வாயேன்னு கூப்பிட்டான்” என்பதை கூறினாள்.

“ஆனா எனக்கு ஒன்னு புரியவே இல்ல தியா.. உன்னை விட 6 வயசு பெரியவன். அவன் சைசுக்கு நீ சுண்டைக்காய் மாதிரி ஆனா உன்னை பார்த்துதான் பையன் மிரண்டு போறான்”. என்றதும் இதுவரை முகத்தை சுருக்கி அஷ்டகோணலாக வைத்துக்கொண்டிருந்த தியாவும் கூட சிரித்துவிட்டாள்.

என்ன தியா தனியா சிரிக்கிற ??என்று கேட்க

“ஒன்னுமில்லை” என்றாள் தியா

“இல்ல இல்ல ஏதோ இருக்கு… என்னடி பண்ண அவன??? ஏய் அதை நினைச்சிதானே சிரிச்ச ??”என்று சந்தேகமாக கேட்க

அவளிடம் மாட்டிக்கொண்டதில் சங்கடமே என்றாலும் கவியிடம் சொல்ல இவளுக்கு எந்த தயக்கமும் வரவில்லை தியாவும் சொல்ல ஆரம்பித்தாள்.

“அப்போ நான் ஆறாவது படிச்சிட்டு இருந்தேன் நீ 8 த் படிச்சிட்டு இருந்த சித்து +2 படிச்சிட்டு இருந்தான்”. என்று சொல்ல தொடங்கவும் கவி மிக ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

அன்னைக்கு ஒருநாள் உனக்கு காய்ச்சல்ன்னு நீ ஸ்கூலுக்கு வரலை நானும் அடம்பிடிச்சேன் நானும் போகலனு, ஆனா அம்மாவும் அந்த சித்து கொரில்லாவும் என்னை வலுக்கட்டயமா ஸ்கூலுக்கு போக வைச்சிட்டாங்க… அங்க எனக்கு கிளாஸ் ரொம்ப கடுப்பா இருந்துச்சி அதுவும் மேக்ஸ் பீரியர்ட் ரொம்ப கஷ்டமா இருந்துச்சி… அந்த நேரம் பார்த்து கணக்கு டீச்சர் ஏதோ கேள்வி கேட்டிருக்கும் போல அந்த டீச்சர் எல்லாரையும் எழுப்பி கேட்டுகிட்டே வந்துச்சி போல என் இடம் வரவும் என் பக்கத்துல இருந்த பொண்ணு என்னை தட்ட என்னவோன்னு நினைச்சி சொல்லுங்க மேம்ன்னு நான் சொன்னேன். எனக்கு புரியாத ஒரு கேள்வியை கேட்க இது என்னடா கஷ்டகாலம்ன்னு நினைச்சிட்டு இருக்கும்போதே அந்தம்மா வெளியே போக சொல்லிடுச்சி இதுதான்டா டைமுன்னு நினைச்சிட்டு நானும் வெளியே வந்துட்டேன்… நம்ம ஸ்கூல் கம்பவுண்ட் பக்கத்துல ஒரு மாமரம் இருந்துச்சி அப்போன்னு பார்த்து ஒரு மாங்காய் சாப்பிடனும்னு தோன நான் அந்த மரத்துல ஏறிட்டேன். ஏறிட்டேனே தவிர இறங்குற வழி தெரியல அந்த நேரம் பாத்து அந்த பக்கமா போன சித்துவயும் அவன் பிரண்டையும் கூப்பிட்டேன் அவன் வந்து ஹெல்ப் பண்ணுவான்னு பார்த்தா பிரின்சிபல் மேமையும் PT சாரையும் கூட்டிட்டு வந்துட்டான். நான் என்னமோ சேஃபா இறங்கிட்டேன் ஆனா கிரவுண்ட 25 ரவுண்ட் சுத்த சொல்லிட்டாங்க”. என்றாள் சங்டமாக

“ஹா… ஹா…. இது என்ன தியா புது கதையா இருக்கு… நீ ஒரு நாள் கூட அதை பத்தி பேசுனது இல்லை.. சரி இதுல நீதான் பனிஷ் வாங்கி இருக்க ஆனா அவன் ஏன் உன்னை பார்த்து அலரனும்”. என்று அப்பாவியாய் கேட்க.

“அதுக்கும் காரணம் இருக்கு கவி என்றவள் அங்க மட்டும் செஞ்சது பத்தாம இங்க வந்தும் மிசஸ் மஞ்சுளா மாணிக்கத்துக்கிட்ட போட்டுக் கொடுத்து விட” அன்று அவளுக்கு மத்து காம்பு பூஜை நடந்ததை பற்றி விளக்கமாக கூறுகையில் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள் கவி .

“ஹா… ஹா.. அப்புறம்” என்று கேட்கவும்

“அப்புறம் என்ன அடுத்த நாள் அவனுக்காக விஷேஷமான என் குட்டி குட்டி பிரெண்ட்ஸ் எல்லாரையும் தேடி கண்டுபிடிச்சேன். அவன் குளிச்சிட்டு போட எடுத்து வைச்ச சட்டையில நான் கொண்டு வந்த கட்டெரும்புகளை போட்டுட்டேன்…. அவ்வ்வ்வ்வ்……. அவ்ளவுதான் வேற எதுவுமே நான் பண்ணல” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டாள் தியா

“அது ஒன்னு போதுமே அவன் இந்த பக்கம் தலை வைச்சே படுக்காம இருக்கறதுக்கு” என்று அவள் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஏய் சிரிக்காத கவி என்ற தியாவுமே அன்றைய நாளின் நினைவில் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“சரி சரி ஏதோ பிரெண்ட் வீட்டுக்கு போகனும்ன்னு சொன்னியே… போய்ட்டு வா அதுக்குள்ள நாங்க ஷாப்பிங் முடிச்சிட்டு வந்திடுவோம்..” என்று கவி பேசியபடியே தயாராகி விட்டிருந்தாள்.

தியாவும் நேரமானதால் குளித்து விட்டு செல்லலாம் என்று குளியலறைக்கு சென்றுவிட்டாள்.

தியா குளித்தே முடித்து வந்துவிட சித்து வரவேற்பறையில் மாணிக்கத்துடன் அமர்ந்திருந்தான். நல்ல வெளீர்நீலத்தில் சட்டையும் அடர்நீல நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தான் சராசரி உயரம் சிரித்தால் கன்னத்தில் குழிவிழுவது கூடுதல் அழகு மாநிறம் அடர்ந்த கேசம் ட்ரிம் செய்த தாடி மீசையுடன் அழகாய் இருந்தான்.

நவனீதன் ராதா தம்பதியரின் ஒரே புதல்வன் சித்தார்த்… கோயம்பத்தூரில் பேங்க் மனேஜராக பணிபுரிந்த போது மாணிக்கத்தின் வீட்டு பக்கத்தில் 13 வருடங்களாக வசித்து வந்தார் இதுவும் சொந்த வீடுதான். நவனீதனின் பணிஓய்வு வந்ததும். தனது பிறந்த ஊரான ஊட்டிக்கே இடம் பெயர்ந்தார். சித்தார்த் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பாட பிரிவினை தேர்ந்தெடுத்து படித்து இப்போது ரெஸ்டாரண்டை நடத்தி வருகின்றான்.

“தியா வந்துட்டியா இந்த கவிக்கு இப்போதான் போன் வரனுமா?? சரி இந்தா இதை எடுத்துட்டு போய் சித்துகிட்டயும் அப்பாக்கிட்டயும் கொடுத்துட்டு வா”. என்று ஒரு தட்டில் காபியும் சில வகை பிஸ்கட்டுகளையும் வைத்து அனுப்பினார் மஞ்சுளா

இவனுக்கு நான் ஒருத்தி இருக்கறது தெரியல கவிக்கு போன்பன்னி வரவா வேனாவான்னு கேக்குறான் இவனையெல்லாம் என்ன செய்தா தகும் என்று அவனை மனதுக்குள் வைதபடி காபியை கொண்டு சென்றாள்.

அவனை பாரமால் காபியை வைத்தவள் “எடுத்துகங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர மாணிக்கத்தின் செல் ஒலிக்க அதில் பேசியவர் அதை அணைத்துவிட்டு “நான் ஒரு முக்கியமான கேஸ் விஷயம் ஒருத்தர மீட் பண்ணனும்…. நான் கிளம்புறேன். கவி வந்தா அவள அழைச்சிட்டு போ சித்து. என்றவர் இந்தா இந்த காபிய நீயே குடிடா என்று தியாவை பார்த்து கூறிவிட்டு மனைவியிடமும் தலை அசைத்துவிட்டு சென்றார் மாணிக்கம்.

தியாவை பார்த்து சிநேகமாய் சிரித்தான் சித்து பதிலுக்கு சிரிக்கிறேன் என்று இளித்து வைத்தாள் தியா…. “அவளை பார்க்கமல் அவன் மொபைலை பார்தபடியே என்ன விது ஸ்டடியெல்லாம் எப்படி போகுது” என்று சாதரணமாக கேட்க

அவனின் செய்கையில் கடுப்பானவள் அது என்னை விட்டா போதும்ன்னு போகுது” என்று குதர்க்கமாக பதிலளித்தாள் அவள் பதிலில் சித்து அவளை நிமிர்ந்து பார்க்க அந்த பார்வையின் அர்த்தத்தை அவனால் கிரகிக்க முடியவில்லை. இவ ஏன் இப்படி பாக்குறா என்று மனதில் நினைத்தவன் ம்… “என்ன சொன்ன விது??”. என்று புரியாமல் கேட்க “டியூப் லைட் ,டியூப் லைட்”. என்று அவன் காதுகளில் விழும்படி திட்டியவள் விடுவிடுவென மாடியேறி சென்றுவிட்டாள்.

இவ எதுக்கு என்ன திட்டிட்டு போறா முன்னே போனா கடிக்கிறா பின்னே வந்தா உதைக்கிறா இவளுக்கு ஏதோ ஆகிடுச்சி என்று யோசனையுடன் காபியை குடித்து முடிக்கவும் கவி வரவும் சரியாக இருக்க இருவரும் ஷாப்பிங் சென்றனர்.

………………………………………………………………

“இங்க பாரேன் இந்த ஆர்கிட் பிளவர் மாடல் நல்லா இருக்குல்ல ???”

“சே அது வேனாம்டி… வேற ஏதாவது யூனிக்கா இருக்கனும்… பார்த்தவுடனே மனசுக்கு சூப்பர்ன்னு தோனனும்… அந்த மாதிரி ஏதாவது எடுடி”.

“ஏய் இது யாருக்குடா?? நீ சொல்றத பாத்தா ஏதோ லவ்வருக்கு கொடுக்குற மாதிரி சீன் போடுற !!!…”

“சே லவ்வருக்குலாம் கொடுக்க உன்னை கூப்பிட்டு வருவேனா?? இது நம்ம விதுக்குதான் நாளைக்கு அவ பர்த்டேல அதான்”.

“ஹா… ஹா… அது தெரியுதுடா ..அந்த மாதிரி பிரிஸியஸா கேக்குரியே அதான் கேட்டேன்.. நானும் தான் அவளுக்கு வாங்க வந்தேன். சரி உனக்கு எது புடிக்குதோ நீ பாரு எனக்கு புடிக்கிறத நான் பாக்குறேன்” என்றாள் கவி.

“சரி கவி நீ இங்க பாரு நான் அந்த பக்கம் பாக்குறேன்” என்று இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் சென்றனர்.

“இது நல்லா இருக்குமா ??சே சே இது வேண்டாம் அதை பாக்கலாம்” என்று மனதிற்க்குள் கேள்வியும் அவளே பதிலும் அவளே என்பதாய் கூறிக்கொண்டு வந்தாள்

அதற்குள் அங்கு பணிப்பெண்ணும் வந்துவிட” மே ஐ ஹெல்ப் யூ மேம்” என்றிட “நிச்சயமாய் “என்றாள் கவி

அந்த பணிப்பெண் அவளிடம் எதற்கான பரிசு என்று கேட்டு அறிந்துக்கொண்டு இரண்டு மூன்று ரேக்குகளுக்கு அப்பால் அழைத்துக்கொண்டு போனவள் ஒரு பரிசு பொருளை காண்பித்தாள் பார்த்ததும் பிடித்துவிட்டது கவிக்கு அழகிய கண்ணாடி குவளையில் இரு மலர்கள் அதில் தேவதையாய் சிரிக்கும் பெண்ணிடம் இருக்க அதை ரசனையாய் எடுத்து பார்த்தவள்.

“சூப்பர் ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் அந்த பெண்ணிடம் வெல்கம் மேம் என்றவள்” இது லிமிடெட் ஸ்டாக் மேம் ரொம்ப அழகானது இதிலிருக்கும் பெண் கிரிஸ்ட்டல் தேவதை” என்று கூறி சிரித்தாள் அதை முன்னும் பின்னுமாக திருப்ப இன்னும் அழகாய் தெரிந்தது கவியின் கண்களுக்கு..

நிற்பதற்க்கு நேரம் இல்லாமல் இரண்டு நாட்கள் ரெக்கை கொண்டு பறந்தது கேஷவ்விற்க்கு அண்ணனுடன் அலுவலகம் செல்வது.. தன் புகைபட பதிவிற்க்கு தேவையானதை தேர்ந்தெடுபதற்க்கு என்று கேஷவ் சுற்றினான். இதற்க்கிடையில் தனது நண்பனின் திருமணத்திற்க்காக திருமணபரிசை வாங்க கேஷவ்வும் அவன் நண்பனும் வந்திருந்தனர் கேஷவ் எதிர் ரேக்கில் இருந்த இரட்டை மயில்களின் பெயிண்டிங்கை கையிலெடுத்து பார்த்திருந்தான். அது அவனுக்கு பிடித்து போக அதற்க்கு பில் போட கேஷ் கவுன்டரை நோக்கி நகர கையில் குவளையுடன் எதிர்பட்ட கவியின் மேல் அந்த பெயிண்டிங் பலகை பட்டு கையில் இருந்த பொருள் கிழே விழுந்து உடைந்து விட்டது

அவன் முகத்தை கவனிக்கமால் கிழே உடைந்ததையே பார்த்திருந்தவள் மிகுந்த வருத்தத்துடன் எவ்வளவு நேரம் தேடி கிடைத்த பொருள் இப்படி உடைந்து விட்டதே என்ற கோவத்தில் “சே அறிவில்ல?…. இப்படியா கண்ணு மண்ணு தெரியம வந்து இடிப்பிங்க???”. என்று திட்ட

முதலில் தெரியாமல் செய்ததற்க்கு மன்னிப்பு கேட்க வந்தவன் அவள் திட்டவும் “எனக்கு தான் கண்ணு மண்ணு தெரியல…. உனக்கு நல்லாதானே தெரியுது நீ பாத்து போக வேண்டியதுதானே???”. என்று பதில் பேச

அப்போதுதான் அவன் முகத்தை பார்த்தாள் வேறு எவரேனும் இருந்திருந்தால் போனால் போகுது என்று விட்டிருப்பாள் ஆனால் அவனை இங்கே பார்க்கவும் சே எங்கே போனாலும் இந்த இம்சை வந்து சிக்குதே என்று நொந்தவள் இன்னைக்கு உன்னை வைச்சி செய்யனும் டா என்று என்ற நினைத்தவாறே “யூ ராஸ்கல் தப்பு உன் மேல வச்சிக்கிட்டு என்னை தப்பு சொல்றியா?” என்று வர்த்தைகளை விட்டாள்.

“ஏய் யாரப்பாத்து ராஸ்கல் சொல்ற பாத்து பேசுடி” என்று அவனும் பேசினான்.

“ஹேய் லுக் எனக்கு கண்ணு நல்லாவே தெரியும் உன்னை பார்த்து தான்டா பேசுறேன்..”. என்று சொல் அம்பை அவனிடம் திருப்பினாள்

“நீயெல்லாம் பொண்ணா பஜாரியா இப்படி வாய்க்கு வாய் பதில் பேசிக்கிட்டு இருக்க??? என்று அவனும் பதில் தர

“உன்னை மாதிரி திமிரெடுத்துபோய் பொண்ணுங்ககிட்ட வம்பிழுத்தா?? நாங்க வாய பொத்திக்கிட்டு அடங்கி போகனுமா அதுக்கு வேற எவளாவது ஏமாந்து இருப்பா அவ கிட்ட போய் காட்டு உன் வீரத்தை..” என்று ஆத்திரத்தில் கத்திவிட

“ஏய் என்னடி என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசுர” என்று அவனும் பாம்பாய் சீற

“நான் ஓவரா பேசலடா… நீதான் ஓவரா நடந்துக்குற…” என்று அவளும் கீரியாய் அவனை குதறினாள்

“சே ஆப்ட்ரால் ஒரு கண்ணாடி பாட்டல் உடைஞ்சதுக்கா இப்படி ரியாக்ட் பண்ணுவ??? அதுக்கு என்ன காசோ அதே நா கொடுத்துட்டு போறேன்.. என்று எரிச்சலில் பேச

“ஹா… அப்புறம் நீ உடைச்ச பொருளுக்கு நீ காச கொடுக்காம?? என் தலைல கட்டலாம்ன்னு பாக்குறியா?? அது நடக்கதுடா மவனே.” என்று பேசி “நான் ஓவரா ரியாக்ட் பண்றேனா… ஆமா அப்படித்தான் பண்ணுவேன் பேசுவேன்…” என்று இவளும் வம்பாய் பேசினாள்.

ஆனால் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பது போல் சண்டையில் இறங்கினர். அந்த கடையே இவர்களைதான் வேடிக்கை பார்த்தது.

அதற்க்குள் அங்கு கூடி இருந்தவர்களை பார்த்து சித்து அங்கு வந்துவிட்டான். “ஏய் என்ன கவி என்ன நடந்தது.. ஏன் இங்க சண்டை?? “.என்று கேட்க ஏதோ தவறுதலாய் நடந்ததை யூகித்துக்கொண்டான்.

“இவரு பெயிண்டிங் போர்டால என் கையில இருந்த பொருளை தட்டி விடுவாரு… நான் இவருக்கு தேங்கஸ் சொல்லி டாடா காட்டி வழி அனுப்பனும் என்று நினைக்கிறாரு…” என்று நக்கலாக கூற

“ஹேய் நிறுத்து டி …நிறுத்து… “என்று கேஷவ் அடிக்குரலில் உரும

அவள் பேசியது சித்துவிற்க்கே அதிகமானது என்று தோன்றிட சித்துதான் நடுவில் புகுந்து “ப்ளிஸ் ப்ளிஸ் என்றவன் “கவி வா போகலாம்…. சாரி சார்..

சாரி… அவ என்ன பேசி இருந்தாலும் சாரி …” என்று கூறி விட்டு அவளை அழைத்துக்கொண்டு வேறு ஷாப்பிற்க்கு சென்றான்

“விடு சித்து… விடு… அவனை உண்டு இல்லாம பண்ணனும். இரண்டுமுறை என்னை எப்படியெல்லாம் திட்டினான் தெரியுமா?? இன்னைக்கு எனக்கு நல்ல சான்ஸ் கிடைச்சி இருக்கு அவனை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்”.

“வேணா கவி.. ஒரு ஆண்கிட்ட இப்படியெல்லாம் பேசாதா.. அவன் நல்லவனா இருக்க போயி பேச்சு பேச்சோட போச்சி இல்லனா நினைச்சிபாரு உன்னை அசிங்கபடுத்த அவன் என்ன ரேஞ்சிக்கும் போய் இருக்கலாம்… என்று கூற

“நீயும் ஆம்பிள்ளை தானே அவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவ??.. என் வாழ்க்கையில அவனை போல ஒருத்தனை நான் பார்த்ததே இல்ல.. பார்க்கும் போதெல்லாம் சண்டை .ஆண்டவா இனி அவனை நான் சந்திக்கவே கூடாது”. என்று இறைவனுக்கு விண்ணப்பம் இட்டாள் கவி

அவளின் விண்ணப்பம் இறைவனடி சேர்ந்ததா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous Postகாதல்:5
Next Postபகுதி 7
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here