தகுதி இல்லாத இடத்தில் இருக்காதே

0
68

தினமும் ஒரு குட்டி கதை

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,
மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார் என்றார், அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம்
இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தரமுடியும் என்றனர்.

தந்தை, பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு,தந்தையிடம், இதற்கு 5000 டாலர் தரமுடியும் என்றனர்,

தந்தை, இதனை நூதனசாலைக்கு museum கொண்டு சென்று விலையை கேட்டுப் பார் என்றார்,

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குற்படுத்த ஒரு வரை வரவழைத்து பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர் என்றனர்.

தந்தை, மகனைப் பார்த்து, மகனே! சரியான இடமே உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிருத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.

உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே

இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here