தடைகளை தாண்டி

0
23

தினமும் ஒரு குட்டி கதை

வாழ்க்கைப் பயணமே தடைகள் நிறைந்தது ஆகும்,உடல் திறமும் நெஞ்சுரமும் நிறைந்தவர்களே தடைகளைத் தாண்ட முடியும்.

நீண்ட காலத் திட்டம் போடும்போது, நமக்கு முன் உள்ள சின்ன , சின்ன தடங்களைப் பொருட்படுத்தக் கூடாது.அவைகளை புறம் தள்ளி விட வேண்டும்.

எல்லாவற்றையும் போட்டு குழப்பினால் நாம் எண்ணிய செயலை முடிக்க இயலாமல் போகும்…

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. கிராமவாசி ஒருவர் மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.

பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த கிராமவாசி இரவு வேளையில கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார். அவர் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரம் தான் தெரிந்தது.

அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவருக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ?

இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார்.

அப்போது அங்கு ஒரு வயதானவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்து உள்ளதாக கூறினார்..

கிராமவாசி அவரிடம் தன் சந்தேகத்தை கேட்ட போது,

அந்த வயதானவர் சிரித்தப்படி,

”விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில்
முன்னேறு”, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும்.

அவ்வாறே எத்தனை கிலோ மீட்டர் வேண்டும் ஆனாலும் நீ மலை ஏறிச் செல்லலாம்.” என்றார்…

ஆம்.,நண்பர்களே..,

தடைகளை தாண்டினால் சரித்திரம் படைக்க முடியும்..
உங்கள் முயற்சியில் இடைபடும் தடைகளை
தொடர்ந்து தாண்டினால்தான் வெற்றி நிச்சயம். …

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here