தாய்மையிலும் விஷமுண்டு – 02

0
132

தாய்மையிலும் விஷமுண்டு.

குறள்

பெரியாரைத் துணைக்கோடல்
தக்கா ரினத்தனாய்த் தானொழுக

வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்.

பொருள்

பெரியவர்களுடைய சகவாசமுள்ளவனாக அவர்கள் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ளுகிற ஒருவனை அவனுடைய பகைவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

அத்தியாயம் – 02

சுகாசினி மலர்விழியின் நிலையை கண்டு மனம் கொதித்திருந்தவள் எப்படியாவது அந்த பேதை பெண்ணின் வாழ்வை காக்க வேண்டும் என முடிவெடுத்து தன் தோழியும் காவல் துறையில் ஆய்வாளராக
பணிபுரியும் கவிதாவை அருகில் உள்ள நகரத்தில் உள்ள கோவிலுக்கு வரவழைத்து முழு விவரத்தையும் கூறியவள் நாம ஏதாவது செய்யனும் கவி என சொல்ல

கவிதா மனைவி உயிரோடு இருக்கும் பொழுது அவள் சம்மதமின்றி கணவன் இரண்டாவதாக மணம் புரிவது சட்டபடி குற்றம் என்பதை கிராம மக்கள்
உணர்வதில்லை ஸ்மார்ட் ஃபோனும் நெட் கனெக்ஷ்னும் வீட்டுக்கு வீடு வந்த பின்பும்

பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற நிலை வந்த இந்த காலத்திலும் ஏன் விண்வெளிக்கே பெண்கள் சென்று வந்து சாதித்து பின்னும்

பெண்களுக்கெதிரான குற்றங்களும் குடும்ப வன்முறைகளும் குறைந்தபாடில்லை இவற்றையெல்லாம் சட்டம் மட்டுமே சரி செய்ய வேண்டும் என

எதிர்பார்ப்பதும் சரியில்லை குற்றம் நடக்கும் இடத்தை சுற்றி வாழும் மக்கள்
தங்கள் சுற்றுபுறத்தில் நடக்கும் விஷயங்களை தட்டி கேட்டாளே பாதி குற்றங்கள் குறைந்து விடும் ஆமாம் சுகா நீ சொல்றதை

பார்த்தா இந்த பிரச்சனை புதுசு இல்லை போலவே யாரும் அந்த லேடியை ஒன்னும் கேட்கலையாப்பா? கிராமம்னா பஞ்சாயத்து ஊர் பெரியவங்கனுலாம்

இருப்பாங்களே அவங்க கூடவா கேட்கலை? அந்த பெண் மலர்விழி பேரண்ட்ஸ் என்ன செய்றாங்க? மலர்விழியும் இதை வெளியே சொல்லலையா? கல்யாணம் வரை வந்துட்டேப்பா என விவரம் அறியும் பொருட்டு வேகமாக கேட்க

சுகாசினி அதை ஏன் கேட்குற கவி நீ படத்தில் பார்க்குற மாதிரி நாட்டாமை பெரிய ஆள்பலம் உள்ள பண்ணையார்னுலாம் கிராமம்
இருக்காதுப்பா ஊர் பெரியவங்களும்

சாதாரண மனுஷங்க தானேம்மா அவங்க உண்டு அவங்க விவசாயம் உண்டுனு இருப்பாங்க புகார்ன்னு ஒன்னு வரும் போது தான் அவங்க அதை விசாரிப்பாங்க

அவங்களா போய்லாம் எந்த வீட்டு விஷயத்திலும் தலையிடமாட்டாங்க அதுக்குன்னு ஏதேதோ
நடைமுறையெல்லாம் இருக்காம் எனக்கும் இதெல்லாம் ஒன்னும் தெரியாது நீ கேட்ட

மாதிரி தான் நானும் என் அத்தைகிட்ட கேட்டேன் அவங்க தான் இதெல்லாம் எனக்கு விளக்கமா சொன்னாங்க மலர்க்கு அப்பா கிடையாது ஏழ்மையான குடும்பம் இவளோட சேர்த்து நாலு பெண்கள் இவ
தங்கைக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை மலர் மாமியாரை தட்டி கேட்குற அளவுக்கு பணம் பலமோ அதிகார பலமோ

இல்லாத குடும்பம்ப்பா மலரும் பிள்ளை பூச்சியா இருக்கா என்ன செய்ய சொல்ற அடிப்பட்டு ரத்தம் வந்தாகூட எதிர்க்க துணிவில்லாத பூஞ்சை மனசு கவி என சுகாசினி ஆதங்கமாக சொல்லி முடிக்க

கவிதா சரி விடு நீ மனசை போட்டு குழப்பிக்காதே இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் உறவுகாரங்க ஊர்காரங்க கேட்கறதால தான் வருது குழந்தைங்கறதுலாம் கணவன் மனைவி தனிப்பட்ட விஷயம் அதில் தலையிட்டு

தம்பதிக்கு மன உளைச்சலை கொடுக்கறதோட இல்லாம அவங்க
வீட்டு பெரியவங்களையும் நிர்பந்தத்துக்கு ஆளாக்கி இப்படிபட்ட நிலையில் கொண்டு வந்து நிறுத்திடுறாங்க சுகா இந்த மாசம் நடக்க போற கூட்டுறவு

சங்களுக்கான தேர்தல்க்கு என்னை பாதுகாப்பு அதிகாரியா உங்க ஊருக்கு பக்கத்து ஊருக்கு நியமிச்சு இருக்காங்க அடுத்த பதினைந்து நாள் எனக்கு வேலை இருக்கு அந்த வேலை முடியறதுக்குள்ள மலர்விழி பிரச்சனையை சரி
செய்துடலாம் சுகா

அப்போ நான் உன் வீட்டிலேயே
தங்கிக்கலாமா? என சிரிப்போடு வினவ சுகாசினி முகம் மலர்ந்தவள் ரொம்ப சந்தோஷம் கவி எப்படி செய்ய

போறோமோன்னு நினைச்சு குழம்பிகிட்டு இருந்தேன் இப்போ மனசு அமைதியாகிட்டு மலர் விஷயம் இல்லாமலேயேயும்
நீ வந்து எங்களோட தங்கறது எனக்கு ரொம்ப சந்தோஷம் நம்ம படிச்ச கால விஷயமெல்லாம் பேசலாம் எப்போ வர? என உற்சாகமாக சிரிக்க

கவிதா தோழியின் கன்னம் வருடியவள் ஹப்பா இப்போ தான் பழைய சுகாவோட சிரிப்பு வருது நாளை மறுநாள் காலை உன் வீட்டிக்கு டிபன்க்கு வந்துடுவேன்

மாலை நான் டியூட்டி பிளேசில் ரிப்போர்ட் செய்யனும் அப்புறம் உன் அவர் அடிக்கடி பேசுறாங்களா? எப்போ ஊருக்கு வர்றாங்களாம்? என கண் சிமிட்டி கேட்க

சுகாசினி முகத்தில் செம்மை படர இம் டைம் கிடைக்கும் போதெல்லாம் பேசுவாங்க இந்த வருஷம் எங்களுக்கு தலை தீபாவளி இல்லையா அதுக்காக ஊருக்கு

வருவேன்னாங்க சரி கிளம்பலாம்ப்பா அத்தை தேடுவாங்க என கூறி தோழியிடம் கூற இருவரும் அவரவர் இல்லம் நோக்கி விரைந்தனர்.

தெய்வம் மனித உருவில் வந்து உதவும் என்பதற்கினங்க இந்த இரு நல்ல உள்ளம் கொண்ட பெண்களின் முயற்சியால் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வு சீராகும்.

நகரங்களில் தான் அண்டை வீடுகளில் வசிப்பவர்களின் முகம் கூட அறியாமல் வாழும் மனிதர்கள் ஒரே வீட்டினுல் கூட மனதுக்குள்ளும் சுவர்களை கட்டி வைத்து கொண்டு தனித்தனி தீவுகளாக

வாழ்கிறார்கள் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கூட உதவி செய்யாமல் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் மனிதம் ம(றை)றந்த மனிதர்கள் வாழ்கிறனர் என்று பார்த்தால்

உயிர்களின் பசியினை போக்க உணவளிக்கும் விவசாயம் செழிக்கும் கிராமங்களில் தான் மனிதம் உயிர்ப்போடு இருக்கிறது இது போன்ற சில புரிந்துணர்வு இல்லாத செயல்கள் மூலம்

கிராமங்களிலும் ஒரு சில மனிதர்களிடம் மனிதம் மரித்து போனதை இதன் மூலம் உணர முடிகிறது.

மலர்விழியின் கண்ணீரிலும் மதுபாலனின் இரண்டாவது திருமணத்திலும் அதே வீட்டில் உள்ள இரு பெண்களின் மிகப்பெரிய சதி மறைந்திருந்தது குழந்தை இல்லாத காரணத்துகாக தான்

இரண்டாவது திருமணம் என்றாலும் அதில் மங்களமும் காவியாவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அறியாமல் பல வேலைகள் செய்திருந்தனர்.

குழந்தை இல்லாத காரணத்துகாக மறுமணம் செய்வதெனில் முறையாக ஊர் பஞ்சாயத்திடம் முறையிட்டு ஊர் மாரியம்மன் கோவிலுக்கு பதினொரு ரூபாய் பணம் செலுத்தி புகார் தெரிவிக்க

வேண்டும் ஊர் மக்கள் பஞ்சாயத்தார்
முதலில் மலர்விழியின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவிப்பர் இரு தரப்பினரையும் விசாரித்து ஊர் பெரியவர்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் தீர்ப்பு சொல்வார்கள்

அந்த தீர்ப்பு எப்படியும் மங்களத்துக்கு சாதகமாக வந்தாலும் அதிலும் சிக்கல்கள் இருக்க தான் செய்தது அவை முறையே குழந்தை இல்லாத காரணத்துகாக ஒரு பெண்ணை விலக்கி வைக்க வேண்டும் அப்படி விலக்கி வைக்கப்பட்ட பெண்ணுக்கு

அதாவது முதல் மனைவிக்கு கணவன் சொத்தில் இருந்து பங்கு அல்லது மாதா மாதம் வாழ்க்கை பணம் தரப்பட வேண்டும் அதுவும் பஞ்சாயத்தார் மூலமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செல்லும் என்பதால் தவற முடியாது

அல்லது முதல் மனைவியின் சம்மதத்தை பஞ்சாயத்தார் முன் தெரிவிக்க வேண்டும் அவளுக்கு தங்கை இருந்தால் அவளையே இரண்டாம் தாரமாக கணவனுக்கு மணம் செய்விக்கலாம் அப்படி செய்யும்பட்சத்தில் முதல் மனைவி தொடர்ந்து கணவன்

குடும்பத்தோடு வசிக்கலாம். இவற்றில் எதுவுமே மங்களத்திற்க்கு உடன்பாடாக இல்லை ஏனேனில் மலர்விழி
தன் கணவனின் இரண்டாம் திருமணத்திற்க்கு சம்மதிக்க

போவதில்லை அதற்காக அவளை விலக்கி வைத்தாலும் அதற்க்கு நஷ்டஈடு தர வேண்டும் அதை செய்ய மங்களத்திற்க்கு சம்மதமில்லை இல்லையேல் மலர்விழியின் தங்கையையே

மதுபாலனுக்கு மணம் செய்விக்க வேண்டும் அதனால் தங்கள் குடும்பத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதை மங்களம் நன்கு அறிந்திருந்தாள்
மலர்விழியின் திருமணத்திற்க்கு வாங்கிய கடனையே இன்னும் அவள் தாய் அடைத்தபாடில்லை எனபது

மங்களத்திற்க்கு தெரியுமே. மலர்விழி இல்லையேல் வீட்டு வேலை முழுவதும் மங்களத்தில் தலையில் தான் வந்து விழும் காவியா திருமணத்திற்க்கு முன்பே சாப்பிட்ட தட்டை கூட எடுத்ததில்லை இப்போதோ குழந்தையை சாக்கிட்டு கொண்டு எந்தவொரு வேலையும் செய்வதில்லை

அதோடு வயல் வேலைக்கும் மலர்விழிக்கு பதில் கூலிக்கு ஆள் போடவும் வேண்டுமே இதே மலர்விழியெனில் மூனு வேளை சாப்பாடு மட்டும் போட்டால் மட்டும் போதும் வீட்டு வேலை அனைத்தையும் சுருக்காக முடிப்பதோடு வயல் வேலைகளையும் செய்வாள்

இப்படியாக மங்களம் தன்னுள்ளேயே குழம்பியிருந்த போது தான் பழம் நழுவி பாலில் விழுந்தது போல காவியா தன் கணவன் ரத்தினம் வீட்டின் உறவு பெண் ஒருத்திக்கு ஏதோ காரணமாக திருமணம் தள்ளி தள்ளி போவதாகவும் வயதும் கூடுவதால் பையனின் குணத்தை மட்டும் கருத்தில் கொண்டு விரைவாக திருமணம் முடிக்க முடிவெடுத்திருப்பதாக

சொன்னவள் சொன்ன உபரி தகவல் அந்த குடும்பத்திற்க்கு ஒரே பெண் நிலம் நீட்சி
சொந்த வீடு என வசதியான குடும்பம் அத்துனை சொத்துகளுக்கும் அந்த பெண்னே வாரிசு என்பதை அறிந்த உடனே மங்களம் அந்த சம்பந்தத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து தன் மருமகன் மூலம் அந்த பெண் வீட்டில் பேசினாள்

முதலில் இரண்டாம் தாரம் என்பதால் தயங்கிய பெண் வீட்டார் மதுபாலனை பற்றி விசாரித்து அறித்த பையனின் குணம் மற்றும் அவர்களின் உறவினன் ஆன ரத்தினத்தின் அழுத்ததில் பணிந்து விட்டனர்

இவை முடிவாகும் வரை மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய போவதை பற்றி தன் கணவனுக்கு கூட தெரியாமல் பார்த்து கொண்டாள் மங்களம். திடீரென மகனுக்கு இரண்டாம் மணம் செய்விக்க போகும் தன் முடிவை சொல்லி
கணவனையும் மகனையும் தன் வழக்கமான அதட்டலில் சம்மதிக்க வைத்தவள் அழுது புலம்பிய மருமகளையும் மிரட்டி அடித்து அடக்கி வைத்தாள்.

விஷயம் வெளியே கசிந்து யாரேனும் சம்பந்ததை கலைத்து விடும் முன் திருமணத்தை விரைவாக முடிக்கவும் திட்டமிட்டிருந்தாள்.

மங்களம் எதையும் காட்டி கொள்ளவில்லை என்றாலும் அவள் மனதோடு ஒரு பயம் இருந்து கொண்டு தான் இருந்தது மதுபாலன் தாயின் அதட்டலுக்கு பயந்தவன் ஆனாலும் மனைவியின் மேல் நேசம் கொண்டவன்

திருமணம் ஆனதில் இருந்து அவளின் மேல் இன்று வரை பித்தாக இருப்பவன் மனைவின் கண்ணீரோ கெஞ்சலோ இல்லை கொஞ்சலோ

ஏதோ ஒன்று அவனை கரைத்து விடுமோ என்ற பயத்தினை போக்கும் வழியறியாமல் திருமண வேலைகளை முடிக்கி விட்டதோடு மகன் மற்றும் மருமகள் மேல் ஒரு கண்ணை வைத்தபடியே இருந்தாள்.

இரண்டாம் திருமணத்திற்க்கு பெண் பார்த்து பூவும் வைத்து விட்டு வந்த பின் மலர்விழி தன் கணவனோடு ஒரே அறையில் தங்க அவனோடு பேச கூட அனுமதி மறுக்கப்பட்டது.

மலர்விழி தன் கணவனின் மனம் அறிந்தவள் அவனை சந்தித்து எப்படியாவது பேசினால் அவன் மனம் மாறும் தங்கள் வாழ்வு சீராகும் என நினைத்து எவ்வளவு முயன்றும் அந்த பேதையால் தன் கணவனை நெருங்க முடியவில்லை

தன் மாமியாரோ நாத்தனாரோ அவனோடு எப்போதும் இருக்க அவர்களுக்கு தனியே சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது தான் உண்மை.

அன்று முற்பகல் வேளையில் மங்களம் வீட்டிற்க்கு பெண் வீட்டார் மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்க்காக வர இருந்தனர். மலர்விழியோ நெருப்பின் மேல் நிற்பது போல தன் வாழ்வு தன் கண் முன்னே பறிபோகும் அவலத்தை தடுக்கும் வகையறியாமல்

கண்ணீர் வற்றிய கண்களோடு அரை உயிராய் வர போகும் விருந்தினர்களுக்காக மனம் உலைகளமாய் கொதித்தபடியே
சிற்றுண்டி தயார் செய்து கொண்டிருந்தாள்.

மங்களம் மரியாதை நிமித்தமாக தன் வீட்டில் நடக்க போகும் நிகழ்ச்சிக்காக சாரதாவை அழைக்க சாரதா என்ன மங்களம் நீ செய்யறது உனக்கே நியாயமா இருக்கா? மலர்விழி இருக்கும் போதே பாலனுக்கு வேற கல்யாணம் செய்ய பாக்குறியேம்மா இன்னும் கொஞ்சம் பொறுத்து பார்க்க கூடாதா? என தன்மையாகவே கேட்க

மங்களம் மன்னிச்சுடுங்க அம்மா உங்க வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேஎசுறேன்னு தப்பா நினைக்காதீங்க ரெண்டு வருஷமா பொறுத்து பார்த்துடோமே அவ மலடிம்மா என் மவன் கூட கல்யாணம் ஆன பயலுங்க எல்லாம் அப்பா ஆகிட்டானுங்க போதும்மா

இதுக்கு மேல இவளால என் வம்சம் வளரும்னு காத்திருந்து எந்த பிரையோஜனமும் இல்லைன்னு தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்
இனி இதை பத்தி பேசி ஒன்னும் ஆகறதுக்கு இல்லைங்கம்மா

எல்லாம் முடிவாகிட்டு நீங்க பட்டாளத்துகாரம்மா டீச்சர்மும் கூட நீங்க வந்து சபையில் நின்னா எங்களுக்கு கௌரவமா இருக்கும் என வலுகட்டாயமாக வரவழைத்த சிரிப்போடு சொல்ல சாரதா பெருமூச்சை எடுத்து விட்டவர் இல்லை மங்களம் எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்னால வர
முடியாது என மறுத்த போது

கவிதாவும் சுகாசினியும் மாடியில் இருந்து இறங்கி வர மங்களம் உடனே சரிங்க அம்மா அப்போ சின்னம்மாவை வர சொல்லுங்க என பணிவு காட்டி கேட்க சாரதா மருமகளை பார்க்க சுகாசினியோ கண்களை சம்மதமாய் மூடி திறந்தாள் இதழில் தோன்றிய மர்ம புன்னகையோடு

சாரதா புரிந்து கொண்டு மங்களத்திடம் சரி நீயே சுகாசினிகிட்ட சொல்லிட்டு போ என கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
மங்களம் விஷயத்தை கூறி சுகாசினிக்கு அழைப்பு விடுத்தவள் கவிதாவை காட்டி யார் என வினவ சுகாசினி இவ என் தோழி ஊரில் இருந்து வந்து இருக்கா பக்கத்து ஊரில் ஒரு வேலையா வந்தவ எங்க கூட தான் தங்கி இருக்கா பேர் கவிதா என முகத்தில் எதையும் காட்டாமல் சொல்ல.

மங்களம் டவுன் புள்ளையா நீங்களும் சின்னம்மா கூட வாங்கம்மா இங்கயெல்லாம் எப்படி என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கலாமே என கூறி இருவரையும் அழைத்து விட்டே சென்றாள்.
இரண்டு காரில் பெண் வீட்டார் வந்து இறங்கினர்

மங்களமும் காவியாவும் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்கும் போது சுகாசினியும் கவிதாவும் வர மங்களம் இருவரையும் பெண் வீட்டாருக்கு அறிமுகம் செய்வித்த பின் அனைவருக்கும் சிற்றூண்டி பறிமாறப்பட்டது.

மலர்விழிக்கு கிணற்றடியை தாண்டி உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது காலில் இருந்த காயத்தினை கண்டு கண்ணீர் விட்டபடியே சிலையென அமர்ந்திருந்தாள் அந்த அப்பாவி பெண்.
பெண் வீட்டார் தாங்கள் வந்த வேலை முடிந்தவுடன் விரைவில் திருமணத்திற்க்கு தேதி குறித்து விட வேண்டும் என கூறி புறப்பட்டவுடன் மங்களம் கொல்லைபுறம் நோக்கி மலரு என சப்தமாக அழைத்தாள். அழுத கண்களை துடைத்து கொண்டு வீட்டிற்க்குள் வந்த மலர்விழியிடம் ஹாலில் இருக்கும் காபி டம்ளர்களை எடுத்து செல்ல உத்தரவிட்டாள்.

ஒரு காலை சற்று தாங்கியபடியே குனிந்த தலை நிமிராமல் வந்த மலர்விழி காலி டம்ளர்களை எடுத்து கொண்டிருந்த போது கவிதா தன் தோழியிடம் இந்த பெண் யார் சுகா முகமும் சரியில்லை கால் வேற நொண்டுறா? என விவரம் அறிந்தே வினயமாக கேட்க

சுகாசினி இளையவளின் கால் தடுமாற்றத்தில் மனம் துனுக்குற்றாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இந்த பெண் பெயர் மலர்விழி இப்போ கல்யாணம் பேசிட்டு போறாங்களே மாப்பிள்ளை அவரோடு முதல் மனைவி என குரலில் எதையும் காட்டாமல் அமைதியாக சொல்ல

கவிதா வாட் என அதிர்வது போல் எழுந்து நின்றவள் என்ன சொல்ற என தோழியிடம் ஆரம்பித்தவள் மதுபாலனிடம் திரும்பி மிஸ்டர் இது உங்க மனைவியா? அவங்க உயிரோட இருக்கும் போதே இரண்டாவதா கல்யாணம் செய்ய பெண் பாக்குறீங்களா? அதுவும் அவங்களையும் வீட்டிலேயே அடைச்சு வச்ச மாதிரி வச்சுகிட்டு? அழுத்தமான குரலில் கேட்க

மதுபாலன் எதுவும் சொல்ல முடியாமல் விழித்தபடியே இருக்க கவிதா ஏம்மா நீங்க தான் இவரோட அம்மா இந்த பெண் உங்க மருமகள் தானே இவ உயிரோட இருக்கும் பொழுதே உங்க பையனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய பாக்குறீங்களே இது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா? என குரலில் அழுத்தம் மாறாமல் கேட்க

மங்களம் இதுல என்னங்கம்மா தப்ப இவ என் மருமக தான் ஆனா கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு வருஷம் முடிஞ்சு போச்சுங்களேம்மா இன்னும் அவ வயித்துல ஒரு புழு பூச்சி தங்கலையேம்மா எங்க வம்சம் வளர வேண்டாமா?

எங்களுக்குன்னு இருக்கறதே ஒரே ஒரு ஆம்பளை பிள்ளை அவன் குழந்தையை பாக்கனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா?

எந்த விசேஷ வீட்டுக்கு போனாலும் இதே கேள்வி தாங்கம்மா ஊர் சனம் சொந்த பந்தம்னு எல்லாம் இதே கேள்வி தான் கேட்குறாங்க எங்களுக்கு பதில் சொல்லி
மாளலைங்கம்மா இந்த மலட்டு சிறுக்கியால என் பிள்ளை வாழ்வு பாழா போகுதும்மா

எங்களுக்கும் வயசாகுதுல்ல
காலாகாலத்துல அவனுக்கு இன்னொரு கல்யாணத்தை செய்து வச்சா வர போற மகராசி மூலமாவாவது எங்களுக்கு பேர பிள்ளை கிடைக்குமே அதான் என்

பையனுக்கு இந்த சம்பந்தத்தை முடிச்சேன் அவங்களுக்கும் தெரியும்
இது ரெண்டாம் கல்யாணம் தான்னு கல்யாணம் ஆனாலும் என் மொத மருமக மலரை எங்க கூட தான் வச்சுக்க போறோம்ன்னு சொல்லிட்டேன் என கடைசி வாக்கியத்தில் மிகவும் பணிவு காட்டி சொல்ல

கவிதா இவ்வளவையும் கேட்டவள் மலர்விழியிடம் ஏம்மா உன் சம்மதத்தோடு தான் இதெல்லாம் நடக்குதா? உனக்கு ஏதும் ஆட்கொல்லி நோயோ இல்லை கணவனோட குடும்ப வாழ்க்கை வாழ முடியாதுனோ ஏதும் இருக்கா? என கேட்க மலர்விழி கண்களில் வழியும் நீரோடு பதறி மறுப்பாக தலையசைக்க

சற்று பொறுத்து பார்த்த கவிதா நீ வாய் திறந்து சொல்லாமலேயே எனக்கு புரியுது ஏன் கால் நொண்டுற என கேட்ட நொடி காவியா வேகமாக இதெல்லாம் கேட்க நீங்க யாரு? என ஆங்காரமாக கேட்க

கவிதா அதெல்லாம் அப்புறம் சொள்றேன் மலர்விழி காலில் என்ன காயம்? என அதே அழுத்த குரலில் கேட்க காவியாவின் மூத்த மகள் தன் மழலை குரலில் அது வந்து பாத்தி காலையிலே அத்தை காலில் சூடு போட்டுட்டாங்க பாவம் அத்தை ரொம்ப அழுதுச்சு என பிஞ்சு முகம் வருத்ததில் சுருங்க கூற

சுகாசினி இதை கேட்டு ஆத்திரமானவள் சே நீங்களாம் மனுஷங்களா? என கூறிவிட்டு மலர்விழியை நெருங்கி அவள் காலை பற்ற முயல அதை தடுத்து விலகிய மலர்விழி அய்யோ அக்கா நீங்க போய் என் காலை பிடிக்கறதா? விடுங்க என மேலும் நகர சுகாசினி இளையவள் கை பற்றி நிறுத்தி காலை பார்க்க அதில் பச்சை ரணமாய் சூட்டு காயம் இருந்தது

கவிதாவும் இதை கண்டு அதிர்ந்து போனவள் என்ன இதெல்லாம் என மலர்விழியை கேட்க மலர்விழி அழுகையோடு பொண்ணு பார்த்து வந்ததில் இருந்து என் வீட்டுகாரர்கிட்ட என்னை பேசவே விடுறது இல்லைங்கம்மா

இன்னிக்கு பொண்ணு வீட்டுகாரங்க வராங்கனு தெரிஞ்சதுலேர்ந்து மனசு கெடந்து அடிச்சுகிச்சுங்க கிணத்து பக்கம் வந்த என் வீட்டுகாரர்கிட்ட
பேசினேங்கம்மா அதுக்கு தான் என மேற்கொண்டு கூற முடியாமல் பெரும் கேவலோடு வாய் பொத்தி அழுகையை அடக்க நிலைமை கை மீறுவதை கண்ட மங்களம் சின்னம்மா இது எங்க குடும்ப விஷயம் என அழுத்தமான குரலில் சொல்ல

கவிதா அவகிட்ட என்ன பேச்சு என்கிட்ட பேசுங்க நான் யாருன்னு கேட்டிங்களே இப்போ சொல்றேன் நான் ஒரு போலீஸ்
இன்ஸ்பெக்டர் அடுத்த ஊரில் நடக்குற எலெக்ஷ்ன் டியூட்டிகாக வந்து இருக்கேன் சுகாசினி வீட்டில் தான் தங்கி இருக்கேன் போதுமா என்னை பத்தின அறிமுகபடலம், விஷயத்துக்கு வருவோமா என அலட்சிய பாவனையில் கேட்டு

வீட்டிலிருந்தவர்களை பார்க்க அவர்களோ சப்த நாடியும் ஒடுங்கிய தினுசில் நின்றிருக்க

மலர்விழியின் முகத்தில் மெல்ல வருத்தம் மறைய தொடங்கியிருந்தது சுகாசினி தன் வீட்டிற்க்கு சென்று தீ காயத்துக்கான மருந்தை எடுத்து வந்து இளையவளுக்கு போட்டு விட்டு அமர வைத்தாள்.

கவிதா சிலையாய் நின்றிருந்த மங்களம் முகத்தின் முன் போய் சொடக்கிட மங்களம் அகல திறந்த கண்களோடு தலையை மேலும் கீழும் அசைக்க கவிதா நான் முதலிலேயே சொன்னது போல நீங்க செய்ய இருக்குறது சட்டத்துக்கு விரோதமானது

அதோட நீங்களும் உங்க மகளும் சேர்ந்து உங்க மருமகளை கொடுமை செய்து இருக்கீங்க என சொல்லி கொண்டிருக்கும்
போதே காவியா அய்யோ அம்மா எனக்கு ஒன்னும் தெரியாதுங்க நான் ஒன்னும் செய்யலை என வேகமாக இடையிட்டு பதற்றமாக சொல்ல கவிதா ஷ் பேசிகிட்டு இருக்கேன்ல என அதட்டி விட்டு தொடர்ந்தாள்

உங்களையெல்லாம் குடும்ப வன்முறை சட்டத்தில் உள்ள தூக்கி வச்சேன் பேரனாவது பேத்தியாவது நீங்க பன்னதுக்கெல்லாம் உள்ளேயே கிடக்க வேண்டியது தான் என்ன செய்துடவா? என அதிகார குரலில் கர்ஜனையாக வினவ
மங்களம் கிராமத்துகாரங்க சட்டம் தெரியாதுன்னு நினைக்காதீங்க

குழந்தை இல்லைனா முதல் பொண்டாட்டியை விலக்கி வச்சுட்டு வேற கல்யாணம் செய்யலாம்னு எங்களுக்கும் தெரியும் என தான் அறிந்ததை சற்று ஆங்காரத்தோடு சொல்ல

கவிதா முகத்தில் முறுவல் அரும்ப நீங்க சொல்றது சரி தான் ஆனா அது உடனே நடக்க கூடிய காரியம் இல்லையே கோர்ட் அதாவது நீதிமன்றம் மூலமா விவாகரத்துக்கு பதிவு செய்யனும் அதுவும் அப்படியே தூக்கி கொடுத்துடமாட்டாங்க

நீங்க குழந்தை இல்லைனு சொல்றதுனால
கணவன் மனைவி ரெண்டு பேரையும் மெடிக்கல் டெஸ்ட் அதாவது மருத்துவ பரிசோதனை செய்து யாருக்கு குறை இருக்குனு கண்டுபிடிச்சு ஆய்வு முடிவை கோர்ட்டில் சமர்ப்பிக்கனும்

சொல்லுங்க அவங்க ரெண்டு பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தாச்சா மலர்விழிக்கு தான் குறைன்னு ரிப்போர்ட் முடிவு சொல்லுதா? அப்படினா அந்த ரிப்போர்டை கொடுங்க நான் பார்த்துட்டு இப்போவே இங்கே இருந்து எதுவும் பேசாம போயிடுறேன் என அழுத்தம் திருத்தமாக சொல்ல

வீட்டில் அமைதி மட்டுமே நிறைந்து இருக்க அதை கவிதாவே கலைத்தாள் சொல்லுங்க மிஸ்டர் உங்களுக்கும் உங்க மனைவிக்கும் குழந்தைகான மருத்துவ பரிசோதனை செய்து இருக்கீங்களா? எந்த டாக்டர்கிட்ட பார்த்தீங்க? எப்போ பார்த்தீங்க? என அடுக்கடுக்காக மதுபாலனை கேள்விகனைகளால் துளைக்க அவனோ மலங்க விழித்தபடி நின்றிருக்க

கவிதா அப்போ எந்த டெஸ்ட்டும் எடுக்காமலே குறையும் யாருக்குனே தெரியாம இந்த அப்பாவி பெண்னை வாழ விடாம கொடுமை படுத்தி இருக்கீங்க என அதட்டலாக கேட்டது அந்த வீட்டின் ஹால் எங்கும் ஓங்கி ஒலித்தது மங்களம் என்னம்மா நீங்க பாட்டுக்கு பேசிகிட்டே போறீங்க

என் பையனுக்குலாம் குறை இருக்காது பிள்ளையை பெக்க போறது பொம்பளை தானே அப்போ இந்த சிறுக்கிக்கு தான் குறை இருக்கும் என ஆங்காரமாக சொல்ல கவிதா சீ வாயை மூடும்மா நீயும் ஒரு பெண் அதோட ஒரு பெண்ணுக்கு தாய் வேற இன்னொரு பெண்ணை தரம் இல்லாம
பேசுறியே உனக்கே இது அசிங்கமா தெரியலை

பிள்ளையை சுமக்கறது பெண்ணா இருந்தாலும் ஆணுக்கும் அதில் சம்பந்தம் உண்டு குழந்தைங்கறது கணவன் மனைவினு ரெண்டு பேரும் இணைந்து உருவாக கூடிய உயிர் சொந்தகாரன் கேக்குறான் அக்கம் பக்கத்துல கேட்குறாங்கனு உன் மருமகளை
ஒதுக்கி வச்சுட்டு இன்னொரு கல்யாணம் செய்யுறியே

அந்த பெண்ணுக்கும் குழந்தையில்லைனா அவளையும் ஒதுக்கி வச்சுட்டு இன்னொரு கல்யாணம்னு செய்து வைப்பியா? என அதட்டலாக கேட்க மங்களம் ஏதும் பேச முடியாமல் நிற்க கவிதா தொடர்ந்தாள் இப்போ நீங்க டெஸ்ட்க்கு
சம்மதிக்கலைனா

உன் மொத்த குடும்பத்தையும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்ய முயன்றது பெண்களுக்கெதிரான வார்த்தை பிரயோகம் அடித்து சூடு வைத்து காயப்படுத்துதல் அப்புறம் அப்படியே கொலை முயற்சி வரை என்னால கேஸை இழுத்துட முடியும் என்ன செய்யவா? என ஒற்றை புருவம் தூக்கி கேட்க

மங்களம் உட்பட அனைவரும் சர்வ அங்கமும் ஸ்தம்பித்து போய் நின்றிருக்க கவிதா எல்லார் முகங்களையும் ஒரு முறை பார்த்த பின் ரைட் இனிமே யாரும் டெஸ்ட்க்கு தடை சொல்ல மாட்டீங்கனு புரியுது இங்க இந்த

சுற்றுவட்டாரத்துலையே குழந்தையின்மை பற்றின பிரச்சனைகளுக்கு பிரபலமான ஹாஸ்ப்பிட்டல்னா அது பக்கத்து டவுனில் இருக்குற தளிர் நடை குழந்தையின்மை சிகிச்சை மையம் தான் நாளை மலர்விழியும் அவ கணவரும் டாக்டரை போய் பாருங்க என்ன சொல்றாங்கனு தெரிஞ்சுகிட்டு

வாங்க மேற்கொண்டு மலர்விழிக்கு பிரச்சனைனா மட்டும் என்ன நான் சொல்றது புரியுதுல என குரலில் அழுத்தம் கூட்டி சொல்லி தொடர்ந்தாள் மலர்விழிக்கு மட்டும் சிகிச்சைக்கான பணத்தில் பாதி நான் தரேன் என அதிகார குரலில் கூறியவள் சுவர் ஒரமாய் அமைதியாக நின்ற

நாராயணனை அழைத்து நீங்க தானே வீட்டு தலைவர் என கேட்க நாராயணன் ஆமாம் என்பதாய் தலையசைக்க ரேஷன் கார்டில் மட்டும் குடும்ப தலைவரா இருக்கறது பெருமை இல்லை இனிமேலாவது குடும்ப தலைவர்கறத்துக்கு ஏத்த மாதிரி நடந்துகோங்க நான் சுகாசினி வீட்டில்

தான் இருப்பேன் நாளை டாக்டரை பார்த்துட்டு வந்து என்னை பார்க்கனும் மிஸ்டர் என மதுபாலனிடம் கூறியவள் இனி இந்த வீட்டில் மலர்விழிக்கு ஏதாவது பிரச்சனைன்னு கேள்விபட்டேன் அவ்வளவு தான் உங்க மீதி வாழ்க்கை ஜெயிலில் தான் கழியும் என்ன நான் சொல்றது புரியுதுல என அதட்டலாக கூறி தோழியிடம் சொல்லி

வெள்ளை காகிதம் ஒன்றை எடுத்து வந்து இங்கு நடந்த அனைத்தையும் தன் கைப்பட எழுதி மங்களம் குடும்பத்தினர் அனைவரிடமும் கையெழுத்து வாங்கிவிட்டு சுகாசினியிடமும் சாட்சிக்கு கையொப்பம் வாங்கி தன்னிடம் பத்திரப்படுத்திகொண்டு இந்த பேப்பர் ஒன்னு போதும் எனக்கு என எச்சரித்துவிட்டு

மலர்விழி அழாம தைரியமா இரும்மா இனி உனக்கு எந்த கஷ்டமும் வராது பெண்களின் கண்ணீருக்கு சக்தி அதிகம் அதற்கு காரணமானவங்களை அது பொசுக்கிடும் சந்தோஷமா இரு மதுபாலன் நீங்க தான் உங்க மனைவிக்கு பாதுகாப்பு

அவ உங்களை மட்டுமே நம்பி உங்க வீட்டுக்கு வாழ வந்து இருக்கா பார்த்துகோங்க என கூறி விட்டு சுகாசினியோடு புறப்பட்டாள்.

இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம். ?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here