தீரா மயக்கம் தாராயோ பகுதி 11

0
836

அழகிய மாலை பொழுதில் இயற்கையும் மையல் கொள்ளும் உன்னழகில்…

தனக்கு நடப்பது கனவா நனவா எனக்கூட அறியா பேதை

மனம் அவளுடன் பயணிப்பதை லயித்து ரசித்தது…

ஸ்ருதியும் நந்துவும் பின் சீட்டில் அமர்ந்திருக்க…

“என்ன இவ்ளோ அமைதியா வர்றீங்க…ஹேய் கேர்ள்…”என ஸ்ருதியை கூப்பிட… அவள் முறைத்ததில் அமைதியாய் சிறு பிள்ளையாய் அமர்ந்துக்கொண்டாள்…

இவளின் செய்கை பார்த்து மனதுக்குள்ளேயே சிரித்த முகுந்தன்…

“ஸ்ருதி நம்ம வீடு வந்துட்டு வா போலாம்…”

“ஹீக்கும்…அதுக்குள்ள வந்துருச்சா இந்தப் பொண்ணுக்கு என்ன இப்போ அவசரம் அவளே அமைதியா இருக்கா சரியாய் தான் பேரு வச்சிருக்காங்க…நந்து…ஆனா எனக்கு நந்தி மாதிரி தான்…”என தனக்குள்ளே பேசிக்கொண்டு இருந்தவன் முன், கை அசைத்து நின்றவளை கூட காண மறந்தப்படி…

“ஹல்லோ…”

“ஹான் சொல்லு ஸ்ருதி…என்னப்பா பயங்கர யோசனை…ரகு பத்தியா…”

“இல்ல ஸ்ருதி…”

“அவர விடுங்க அவர் பத்தி பேச வேணாம்…”

நான் எதுவுமே பேசலையே என்பது போல பாவனை செய்தவனை பார்த்து நந்து சிரித்துக்கொண்டே இவளை அழைத்து வந்தாள்…

நினைவுகளை கலந்த வஞ்சியவள் நெஞ்சமெங்கும் நிறைந்திருக்க அவள் விட்டு சென்ற நினைவுகளின் பாதச்சுவட்டில் வண்டியை செலுத்தினான்…

காயம்பட்ட மனம் ஏதோ வகையில் புன்னகை சிந்தும் சிறு துளியாய் …. மயிலிறகால் மெல்லிய அன்பு தன் கரம் நீட்டுகையில் ….

தென்றல் தீண்டிய பொழுது தலையசைக்கும் சிறு செடியாய் இளகியது அவள் மனம் …..”

அத்துணை நாள் பார்க்காத அவள் ஸ்ருதி இன்று சேலையில் மட்டுமல்ல முகமும் ஒரு வகையில் பிரகாசித்ததை நந்து கவனிக்க தவறவில்லை…

ஏதோ மெல்லிய மகிழ்வு அவளுள்…அது என்னவென அவளிடம் கதைத்த அந்த நொடி அவள் முகம் சட்டென வாடியது…

“அதெல்லாம் ஓண்ணுமில்லையே…”

‘ம்ம்ம் எதை தான் என்கிட்ட நீ சொல்லிருக்க இப்போ இத சொல்ல’ என மனதுக்குள் நினைத்தவாறே நடையை கட்டினாள்…

“ஹேய் நந்து மா..”

“யாருமா நீயா கூப்பிட்ட…”

“ஆமா நான்தான் இப்போ என்ன…”

“இல்ல பாசமா கூப்படறியே அதான் யோசிச்சேன்…”

“ஏன் நான் பாசமா பேசினதேயில்லையா…” அவளாகவே ஆரம்பித்தாள்…

“அவரு பேரு முகுந்தன்…நான் இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனியோட எம். டி…” முறைத்தபடியே அவளை பார்த்த நந்து …

“இதெல்லாமே நீ சொல்லிட்ட எப்போவோ…”

“ஓஹோ அப்படியா…”

இவள் செய்கிற சேட்டைகளால் மெல்லிய சிரிப்புடன்…” ம்ம்ம்ம் சாரி” என்றாள் ஸ்ருதி …

“ஹிஹி…”

“மேல சொல்லு….”

“ஆமா நீ ஏன் மேல பாக்கற…”

“நீ சொல்றது பிளாஷ்பேக் சோ அந்த பொசிஷன்ல தான் பாக்கணும்…”

“உன்னாலாம் வச்சிட்டு…”மின்னல் கீற்றுப்போல முகம் மாறிமாறிப் போன ஸ்ருதியின் முகத்தில் இப்போது சோகம் கரைபோல அப்பியிருந்தது…

வார்த்தைகளை மென்று விழுங்கியப்படியே தன் அம்மா அப்பா…அப்பா மீது கொண்ட அளவற்ற பாசம்…ரகு அத்தானுடனான திருமண பேச்சுவார்த்தை…முகுந்தன் நட்பு…அவனால் ரகு உருவாக்கிய சந்தேகப்பேச்சு…அதன் விலையாய் இவள் இழந்த இவளின் மொத்த சந்தோசமும்…பெற்றோர்கள் இழப்பு…தடம் மாறிய ரயிலாய் இன்று இங்கே இங்கும் அதே முகங்களைப் பார்க்க நேருகையில் தனக்கு ஏற்பட்ட தவிப்பு…பிடிப்பற்ற வாழ்வில் நிலையற்ற அன்பில் அவள் தவிப்பது அவள் அறிந்ததே…

அவள் முகத்தையே உற்று கவனித்த நந்து…அவள் குடும்பம் பற்றி பேசுகையில் குறிப்பாய் அவள் அப்பா குறித்து பேசுகையில் எல்லாம் அந்த சோகம் மீறி மெல்லிய புன்னகை கீச்சிட்டதையும் அதை ஒட்டிய விழியோரம் அவள் இத்துனை நாள் மறைத்த வலிகளும் அறிந்தாள்…அவளுக்கும் பெற்றோர் கிடையாது பெரிதாய் காட்டிக்கொள்ளா விட்டாலும் இன்று அவர்களின் நினைவு நந்துவை பெரிதாய் ஆட்டுவிக்க…அடுத்த கணமே தன் இயல்பினதுவாய் பேசத்தொடங்கினாள்…

“ம்ம்ம்ம்ம்ம்….”

“ஸ்ருதி…”

“ம்ம்ம் சொல்லு நந்து…”

“இப்போ நான் எனக்கு தோணுறத சொல்றேன்…முடிவை நீ எடுத்துக்க…”

“ம்ம்ம்ம் சொல்லு நந்து…”

“நீ சொல்றதுலாம் வச்சு நான் இதை சொல்லல சரியா…”

ரகு மகிழ் முன் போய் நின்றான்… “அவன் எனக்கு எல்லா இடத்துலயும் பிரச்சனையா தான் வரான்…”

“யார சொல்ற நீ…”

“ம்ம்ம்ம் அந்த கிருஷ்ணனை தான்…அதான் முகுந்தன்…”

“ஒஹோ அவன் என்ன பண்ணான் இப்போ…”

“இங்கயும் வந்துட்டான் என் உசுர வாங்குறதுக்கு…”

“ம்ம்ம்ம்ம்….”

இரண்டு வருடங்களுக்கு முன்…

“முகுந்தன் சார் ஸ்ருதி மேடம் ரொம்ப மனசுடைஞ்சு போயிருக்காங்க நீங்க இப்ப போய் அவங்ககிட்ட பேசலாம்ல…..”

“இல்ல இப்போ பேசினா சரியா வராது கார்த்திக்…ஏற்கெனவே அப்பா அம்மாவை இழந்து தவிச்சுட்டு இருக்கிற…நான் போய் ஆறுதலாய் பேசினா கூட அவளுக்குத்தான் அது கெட்டப் பெயர் ஆகிடுமோனு பயமா இருக்கு…என்னால தான் இவ்ளோ பிரச்சனை அவளுக்குனு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு…இதுல நான் எதுவும் பேசப்போய்…வேணாம் கார்த்திக்…நான் அவள உண்மையா நேசிச்சேன்…அந்த அக்‌ஷரா என் பின்னாடி சுத்திட்டு இருந்தா…பணத்துக்கு ஆசைப்பட்டிருந்தா அவ காதலுக்கு என்னால ஓகே சொல்லிருக்க முடியும்…

நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல…எனக்கு நல்ல மனைவி வேணும்னு நினைச்சேன்…ஒரு உண்மையான நேசம் அந்த பொண்ணு மேல…என்னோட ஒரு தப்பான வேலையால என்னென்னவோ ஆகிட்டு…ஆனா அது போட்டதுக்குப் பின்னாடி இப்படிலாம் ஆகும்னு நான் சத்தியமா நினைக்கல…ஏதோ ஒரு வகையில நானும் தானே காரணம்…”

நிலைகுலைந்து அப்படி முகுந்தன் பேசி பார்த்திராத கார்த்திக் குடித்து குடித்து மட்டையாகி இருந்த அவனை கைத்தாங்கலாக அறையில் சென்று படுக்க வைத்தப்படியே…யாருக்கோ போன் செய்தான்…

“ரகு இங்க பாரு…நீ எனக்கு தோழன் கிடையாது…பிஸினஸ் ரீதியா பேசிருக்கோம் அவ்ளோ தான் எனக்கு உன்னயப் பத்தி தெரியும்…நீ ஸ்ருதியை நேசிக்கிறேனு தெரியுது…ஆனா அவளோட கடந்த காலத்துல என்ன கசப்பான நினைவுகள் ஏற்பட்டுச்சுனு எனக்கு தெரியல…தெரிஞ்சுக்கவும் விரும்பல…ஆனா இப்படி நீ அவள தேடி போய் தொந்தரவு பண்றதுலாம் சரியில்ல…

ஒரு பொண்ணுக்கு உன்னய பிடிக்கலயா விலகிப்போயிடு…ஏதோ உன்னோட அன்பு உண்மையா இருக்கும் பட்சத்தில அவளே உனக்கு கிடைப்பா…அவ்ளோதான்…இதுல நீ என் பெயர எந்த இடத்துலயும் உபயோகிச்சிடாத சொல்லிட்டேன்…”

பெருத்த அவமானமாய் தலையை தொங்கப்போட்டு அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்தப்படியே விழிகளை மூடியவனின் முகம் எங்கெங்கோ அசைப்போட்டது…

சிரித்துக்கொண்டே நிழலாடிய ஸ்ருதியின் முகம்…தன் கோபக் கனலால் அன்று அவளிடம் குற்றம் கண்டுப்பிடித்து சந்தேகப்பார்வை பார்த்து…

‘நியாயமாய் நான் அவள் அப்பா அம்மா மறைந்தப் பின் போய் பேசிருக்கணும் அவ என்னய என்ன அடிச்சாலும் வாங்கிட்டு நான் நின்றிருக்கணும் ஆனா என் புத்தி எங்கப் போச்சுனு தெரியலயே…’ நினைத்து முடிக்கையில் விழியை நீர் சூழ்ந்திருந்தது…

யாரோ வந்து அவனை எழுப்ப…

“சூசானா நீயா…”

“என்ன ஆச்சு ரகு இங்க இருக்க என்ன செய்யுற…”

“என்ன ஓல்ட் மெமொரீஸா…”

“ம்ம்ம்ம்” ஆதரவாய் அவனை தலைசாய்த்துக் கொண்டாள்…அவனுக்கு அங்கு கிடைத்த நல்ல நட்பு அது…

“ஸ்ருதி…இப்போ நீ சொல்றதுலாம் வச்சுப்பாக்கிறப்போ தான் எனக்கு நிறைய விசயங்கள் மைண்ட்க்கு வருது…”

“என்ன நந்து…” விழிகள் பெரிதென விரிக்க…

“நில்லு சொல்றேன்…அதுக்கு முன்னாடி கொஞ்சம் ரகு பத்தி என்னோட ஒப்பீனியனை சொல்லிடுறேன்…நான் ஜட்ஜ்மெண்டல் டைப் இல்ல…ஆனா உன் வாழ்க்கையில நடந்தத என்னால பீல் பண்ண முடியுது அத வச்சு சொல்றேன்…

ரகு உண்மையா அடிப்படையில நல்லவன் தான்…

இப்போ ஏன் முறைக்கிற…சரி நான் உன்னய ஒரு கேள்வி கேட்கிறேன்…இப்போ வர ஏன் அவர அத்தான் அப்படினு கூப்பிடுற…வாழ்க்கையில உனக்கு மிகப்பெரிய் இழப்பு கொடுத்தவனை ஏறிட்டும் பார்க்காம போயிருந்துருக்க உன்னால முடியல…சரியா…”

ஏதும் சொல்ல முடியாமல் “ம்ம்ம்” கொட்டினாள்…

“அவன் அவனோட தப்ப உணராம இல்ல…தன்னோட சந்தேகப் புத்திக்கு அவன் உனக்கு கொடுத்த தண்டனை ரொம்ப அதிகம்…ஆனா அதுக்குப் பின்னாடி அவனோட அதீத அன்பும் இருக்கு அப்படித்தானே…”

மறுபடியும் ம்ம்ம் மட்டுமே பதிலாய்…

“ஸ்ருதி…ஆனா அவனோட பெரிய தப்பு என்னனு தெரியுமா…உனக்கு நான் சொல்லித்தெரியனும்னு இல்ல… இப்போ வர உனக்கு அவன் பண்ணினத அவன் பீல் பண்றத விட அவன் அவனோட அம்மா அப்பா பத்தி அதிகமாய் கவலைப்படுறது…அப்போ இன்னும் அவன் முழுசா உணரலயோனு தோணுது…

அது மட்டுமில்ல…இவ்ளோ நாள் நீ எப்படி இருக்க எங்க இருக்கனு எல்லாமே தெரிஞ்சும் அந்த உறவு அவனுக்கு வேணும்னு தோணலயோ அதான் இவ்ளோ நாள் வராம இப்போ அவன் ஆபிஸ் சொன்னதால வந்திருக்கானோனு சந்தேகம் எனக்கு இருக்கு இப்போ…அப்போ உன்னய பாக்கிறப்போ அன்பு பொங்கனும் அத விட்டுட்டு மறுபடியும் முகுந்தன்க்கிட்ட மல்லுக்கு நிக்கிறது உன்கிட்ட சண்டை போடுறது இதெல்லாம சரியில்ல…”

“ம்ம்ம்ம்ம்ம்…..”சற்று பெரிதாக இம்முறை…

“கேர்ள்…ஸீ…அவன சப்போஸ் ஹேய் ஒரு பேச்சுக்குதான் சொல்றேன்…பிகாஸ் ஐ நோ இப்போ உனக்கு தேவை அரவணைப்பு தான் திருமணம்ன்ற பந்தத்தில இணைய நீ மனதளவில தயாராகலனு தெரியும்…அவன் நீ கல்யாணம் பண்றேனே வையேன்…”

“ஹேய்…”

“இரு மா முடிச்சிக்கிறேன்…”

“ம்ம்ம்ம்….”

சத்தியமா நீ நல்லா இருப்பியானு கேட்டா இல்ல…” நம்பிக்கை ரொம்ப முக்கியம் ஸ்ருதி அது கண்ணாடி மாதிரி உடைச்சிட்டு திரும்ப ஒட்டிறாம்னு நினைச்சாலும் அதோட கீறல்கள் அந்த விரிசலை நியாபகப்படுத்திட்டே இருக்கும்

அவன் உன்னய நல்லா பாத்துப்பான் ஆனா கூடவே சந்தேகத்தோட…கொஞ்சம் அவனுக்கு சுயநலமும் இருக்குன்றத மறுக்க முடியாது…”

“ம்ம்ம்ம்ம்…..”

“ஆனா முகுந்தன் அப்படி இல்லனு எனக்கு இப்போ தான் புரிஞ்சது…”

“என்ன உளற நந்து…”

“உளறல மா…பொறு சொல்றத கேளு……”
என்ன சொல்லபோறா என வியப்புடன் அவள் உதிர்க்கும் வார்த்தைகளை பார்த்துக்கொண்டே இருந்தாள்…

“நான் உன்கிட்ட சில விசயங்களை சொல்லல…முகுந்தன் கூட கார்த்திக்னு ஒருத்தர் இருந்தார்ல…”

“ஆமா…அவர எப்படி உனக்குத்தெரியும்…”

“அவர் கூட நான் பேசினதுலாம் இல்லமா…”

“ம்ம்ம்ம்…நேத்து நம்ம கோவில்ல பாத்தப்புறம் நைட் ஒரு கால் வந்துச்சுனு போனேன்ல…”

“ஆமா…அதுக்கென்ன…”

“ம்ம்ம் அது கார்த்திக் தான்…”

“நந்திதா…ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு கால் பண்ணி இந்த கம்பெனிக்கு ஒருத்தர் ரெபர் பண்ணாரா…”

“ஆமா அது எனக்கும் பிரெண்ட் தான்…”

“எனக்குத் தெரியல உனக்கு இப்போ ஸ்ருதி பத்தி எல்லாமே தெரியுமானு ஆனா நீ கூடவே இருக்கதால பெரும்பாலும் தெரிஞ்சிருக்கலாம் அதனால நம்பி பேசலாம்” என எண்ணியப்படியே…

“நந்திதா…இங்கப்பாருமா ஒரு இரண்டு வருசத்துக்கு முன்னாடி எங்க எம்டி என்கிட்ட ரொம்ப பொலம்பிட்டே போனாரு…அப்போ அந்த சமயம் தான் ஸ்ருதி எங்க போட்டி கம்பெனியில சேர்ந்தது தெரிஞ்சது…

எங்க எம்டியோட வலி எனக்கு நல்லாவே புரியும்…அதனால அவரு என்ன நினைக்கிறாரோ நான் முடிக்கணும்னு நினைப்பேன்…அதனால தான்…உன்னய ஸ்ருதிக்கு பாதுகாப்பா அனுப்பனும்னு முடிவு பண்ணேன்…என்னோட பிரெண்ட் சொல்லிதான் உன்னைத் தெரியும்…அவன் அந்த கம்பெனியில இந்தியா லெவல்ல ஹையர் பொசிசன்ல இருக்கான்…அவன் சொன்னா அந்த கம்பெனி எம்டி கேட்பாருனு எனக்குத்தெரியும்… நீயும் அந்த கம்பெனி மேல விருப்பம் இருக்கிறதும் தெரியும் அதனால சரினு முடிவு பண்ணி அவனையே உன்கிட்ட பேச வச்சேன்…

நீயும் ஓகே சொல்லவும்… சரி இனிமே பிரச்சனை இல்லனு நானும் ரொம்ப சந்தோசப்பட்டேன்…எல்லாமே என்னோட எம்டியை கொஞ்சமாச்சும் திருப்திப்படுத்தணும்னு தான்… ம்ம்ம் எங்க எம்டியும் ரொம்ப ஹாப்பி…

அதுனால தான் அவனை உனக்கு அடிக்கடி போன் பண்ண சொல்லி உன்கிட்ட விவரம் கேட்க சொல்லுவேன்…எங்களால நேரடியா ஸ்ருதி எப்படி இருக்கானு பார்க்கத் தெரியாம இல்லமா…

ஆனா அவளுக்கு எந்த விதத்திலயும் கொஞ்சம் கூட ஸ்ருதியை காயப்படுத்த அவரு விரும்பல…அதுனால தான் உன் மூலமா பண்ணோம்…இதுவுமே உன் சுயமரியாதையை உன் மேலே ஸ்ருதி கொண்ட நம்பிக்கையை குலைக்கிறதுக்காக நாங்க இத பண்ணலமா… அவங்க நல்லா இருக்காங்களானு தெரிஞ்சுக்கணும் அவ்ளோதான்…இருந்தாலும் மன்னிச்சுடுமா…”

சிறு குழந்தையாய் மன்னிப்பு கேட்டவன் மேல் பரிதாப பார்வை வீச அவனோ காதல் பார்வை பார்த்தான்…அவளின் குறும்புத்தனம் ஏதோ அவனை பண்ணியது…

“ம்ம்ம்ம் ஸ்ருதிமா நிஜமா சொல்றேன் முகுந்தன்,கார்த்திக் செஞ்சது தப்புதான் இல்லனு சொல்லலமா…அதுனால என்னயும் தப்பா நினைச்சுடாத பிளீஸ்…”

“என்ன நந்து என்னய நீ புரிஞ்சுக்கிட்டது அவ்ளோதானா…”இறுக்கி அவளை அணைத்துக்கொண்ட நந்து…

“நிஜமா முகுந்தன் நல்லவர் தான் மா…” இத்துனை கணம் அமைதியாய் இருந்தவள்…மெலிதாய் ஒரு கணம் புன்னகையை உதிர்த்தாள்…வலியோடு கூடிய புன்னகை சற்று பெரிதாய் உண்மை புன்னகையாய் மாறுவது எங்கணமோ என அவளையே உற்று நோக்கினாள் நந்து அவள் இடை அணைத்தவாறே…

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா

காதலும் தொடர்கிறது…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here