தீரா மயக்கம் தாராயோ 21

0
698

தீரா மயக்கம் தாராயோ..21

முகுந்தனும் ரகுராமனும், ஸ்ருதியும் நந்தினியும் எங்கே சென்று இருப்பார்கள் தெரியாமல் குழம்பியபடி நின்றவர்கள் கார்த்திக்கை பார்த்து “அவள் எந்த ஊருக்கு சென்று இருக்கிறாள் டீடெய்லா விசாரிச்சு வரனும்” முகுந்த் சொல்லிவிட்டு ரகுவை பார்த்து திரும்பி, “அவள் எங்கு சென்றாலோ தெரியாது தேவையில்லாமல் இனி என் வழிக்கு வந்த்தேன்னா நடப்பதே வேறு உன் உயிர் உன்னிடம் இருக்காது போடா இனி என் கண் முன் வந்துராத , வந்தால் உயிரோட இருக்க மாட்ட” என்று ஆக்ரோசத்தோடு மிரட்டினான்…
முகுந்தப் பார்த்து முறைத்த ரகு, “ஸ்ருதி கிடைக்கட்டும் அப்பறம் யார் உயிர் யார் எடுக்கப் போறாங்க பார்க்கலாம் உன்னோட மறைமுக பொறுக்கிதனத்தை வேறு யாரிடம் காட்டிக் கொள் . உன்னோட ஆரம்பத்தில் இருந்து நீ செய்த வண்டவாளத்தை புரூப் வைத்திருக்கேன். இனி ஸ்ருதிகிட்ட வம்பு பண்ணின நேராக என்னை எதிர் கொள்ள தயாராக இருந்துக்கோ” மிரட்டி விட்டு கிளம்பி போய்விட்டான் .

முகுந்த் கோபத்துடன் ரகுவின் முதுகுகை வெறித்தவன் டேபிள் மேல் இருந்த பீரை அப்படியே பாட்டிலோடு சரித்தவன், காலி பாட்டிலை ஒங்கி சுவரில் விட்டுறிய கண்ணாடி பாட்டில் சிதில் சிதிலாக சிதறி தெரித்தது  அவன் மனதை போல .

வெளியே சென்று இருந்த கார்த்திக் தகவல்களை சேகரித்து விட்டு வேகவேகமாக உள்ளே வந்தவன் “ஸ்ருதி சென்னையில் இருக்கிறாள் . பிளைட் டிக்கெட் அங்கு செல்வதாக எடுத்திருக்காங்க” சொல்ல “உடனே சென்னை கிளம்ப ஏற்பாடு பண்ணு உடனே கிளம்பனும்” . அவனிடம் சொல்லியபடியே பாத்ரூம்குள் குளிக்க சென்றான்.

தோட்டத்தில் அமர்ந்திருந்த நந்தினி மகிழினி பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தாயையும் தந்தையும் இல்லாமல் சித்தப்பாவை அப்பா நினைத்து கொண்டு இருக்கிறது , இக்குழந்தைக்கு ‘ஏன்’ இந்த வயதில் இத்தனை கஷ்டம் , வருத்தப்பட்டவள் கே. கே நினைத்து பெருமைபட்டாள்.
‘அண்ணா குழந்தை தன் குழந்தையாக வளரப்பது மட்டுமல்லாமல் அதை வெளியே யாருக்கு தெரியாமல் தன் குழந்தையாக வளர்க்கிறான். தன்னுடைய கல்யாணம் வாழ்க்கை பற்றி எந்தவித ஆசாபாசங்களுக்கு இடம் கொடாமல் இருக்கிறான் . இவன் என்னை விரும்புகிறான் என்பதை நம்ப முடியவில்லை . உண்மையாக இவன் விரும்பினால் அதுக்கு நான் தகுதியானவளா ? . கார்த்திக்கை லவ் பண்ணுவதாக நினைத்து எவ்வளவு பெரிய தப்பு பண்ணுவதாக இருந்தேன் ?
ஸ்ருதி வாழ்க்கையில்.. அவளைப் பற்றி அவன் கேட்டதை எல்லாம் சொல்லிக் கொண்டு முகுந்தை பற்றி அவனுடைய புத்தி தெரியாமல் அவள் வாழ்க்கை அவனோடு இணைத்திருந்தால் என்னாவாயிருக்கும் புவி அண்ணா கூட அவள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கா? நானே அவள் வாழ்க்கை கெடுக்க நினைத்தேனே ஆண்டவா’ என்று மனதில் சஞ்சலத்தோடு அமர்ந்திருந்தாள் .
இதை வேந்தனிடம் சொன்னால் என்னைப் பற்றி என்ன நினைப்பார். நீ இவ்வளவு தானா உதாசீனமாக பார்த்தால் என் முகத்தை எங்கே கொண்டு வைக்க கவலையில் ஆழ்ந்தாள் . இதை எப்படி சரிபண்ணவது தெரியாமல் கண்களில் நீர் வடிய அமர்ந்திருந்தாள். சன்னல் வழியாக பார்த்த ஸ்ருதி நந்தினி இருக்குமிடம் வந்தவள் அருகில் அமர்ந்தாள்.

“நந்து என்னடா இன்னும் மனதைப் போட்டு குழப்பி கொள்கிறே… நீ எதும் தப்பு செய்யல . வேந்தன் சாரிடம் பேசு எல்லாம் சரியாகும் அவர் உன்னை புரிந்து கொள்வார் சொல்லியபடியே அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள் ஸ்ருதி .
அலைபேசியை கையில் வாங்கியவள் போன் பண்ணலாமா வேண்டாமா யோசித்தபடி அவன் போனுக்கு ரிங் விட ஒரு ரிங்கில வேந்தன் எடுத்து “நதிமா.. கூப்பிட திகைத்தாள் நந்தினி…

“ நா நா..திக்கி திணறியபடி நந்தினி பேசறேன்…”
“சொல்லுடா தெரியும்..நதிமா..செல்லமாக பேச..”
“என் பெயர் நந்தினி ..யார் அந்த நதி ..கோப குரலில் கேட்க ..”
“அவளா உனக்கு தெரியாது டா ..அவ என் மனம் கவர்ந்த காதலி எனக்கே எனக்காக இவ்வுலகில் தோன்றிய தேவதை தெரியுமா ..”
“அப்ப அந்த தேவதைகிட்ட பேசிக்கோங்க” போனை கட் பண்ணினாள் . ..திரும்ப திரும்ப ரிங் வரவும் .. ஆன் பண்ணி காதில் வைத்தாள் …
“லூசா டா ..நான் யாரை சொல்றேன் தெரியலாயா..உன்னை தான்டி சொல்றேன் மக்கு நதிமா ..சொல்ல ..சாரி சாரி ..”கெஞ்ச
“ம்ம்..” சொன்னவள் …

“ஸ்ருதி சொன்னதை யோசிச்சயா… கேட்டான்
நந்தினி ம்ம்..சொன்னவள், “நான் உங்ககிட்ட ஒன்று சொல்லனும் அதை கேட்ட பிறகு முடிவு செய்யுங்க ..” திக்கி திணறினாள்…
“ம் சொல்லு” வேந்தன் கேட்க கார்த்திக் பற்றி அவனால் ஸ்ருதி பற்றி அவனிடம் சொல்லியது எல்லாம் சொல்லி முடித்தாள்…அவள் சொல்வதைக் கேட்ட வேந்தன் சிறிது நேரம் எதும் பேசவில்லை …

நந்தினியோ “ஹலோ ஹலோ..கேட்கிறீங்களா” கத்தவும் ம்ம்..சொன்னவன் இதை பற்றி நாளைக்கு பேசலாம் ”பை” சொல்லி வைத்து விட்டான்..
அவன் கொஞ்சி பேசியது என்ன ..செல்லமா பெயரை வைத்து கூப்பிட்டு என்ன..இப்ப எதுவும் பேசாமல் வைத்துவிட்டானே என்னைப் பற்றி சொல்லியது அவனுக்கு பிடிக்கில போல மனதைப் போட்டு குழப்பிக் கொண்டாள் நந்தினி…
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த புவி நந்தினி தோட்டத்தில் அமர்ந்திருப்பதும் ஸ்ருதி எங்கே போனாள் என்று கண்களால் தேடியபடியே நந்தினியிடம் பேச்சுக் கொடுத்தான்.

“ஹேய் நந்துமா ஸ்ருதி எங்கே நீ ஏன் தனியா இங்கே ?.”
“அவ உள்ளே தான் இருக்கா அண்ணா .நான் கொஞ்சம் நேரம் இங்கே இருந்துட்ட வரேன்.”
“சரிமா நான் வீட்டுக்குள் போறேன் .”

வீட்டிற்குள் சென்ற புவி “ஸ்ருதி” கூப்பிட்டபடி சென்றான் . கீழே எங்கும் காணாமல் ‘கிச்சன்ல இருக்காளா’ பார்க்க அங்கு இல்லாமல் ‘தன் அறையில் இருக்காளா பார்க்கலாம்’ படியேறிச் சென்றவன் உள்ளே ஸ்ருதி யார்கூடயே பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தான் . யார்கூட பேசுகிறாள் எட்டிப் பார்க்க சில நிமிடங்கள் திகைத்து நின்று விட்டான் .

அங்கு சுவரில் மாட்டிருந்த அவனின் ஆளுயர புகைப்படத்தை வருடியபடி ” புவி என் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களை கடந்து வந்துவிட்டேன். பல சஞ்சலங்களோடு இருந்த நான இப்ப தான் சரியான இடத்தில் வந்து சேரந்துருக்கேன் .உங்களிடம் வந்தபிறகு தான் நான் சந்தோஷமா இருக்கேன் .நீ அப்ப காலேஜ்ல எப்படி இருந்தியோ அப்படியே துறுதுறுவென்று இருக்கடா , மாறவே இல்லை அதே பாசம் அன்பு காதல் !” சொல்லிபடி கன்னத்தை வருடியவள் கிள்ளி முத்தமிட்டாள் .

நிழல்படத்தை வருடி முத்தமிட்டதை பார்த்தவன் நிஜமாகவே முத்தமிட்டதை போல தன் கன்னத்தில் வருடியவன் ரூம்ற்குள் நுழைந்து ” நிழல் படத்திற்கு கொடுப்பாயா ? நிஜத்திற்கு கொடுக்க மாட்டாயா? ” பேசி கொண்டே ஸ்ருதி அருகே செல்ல அவளோ திகைத்துப் போய் கன்னங்கள் செந்தாமரையாக சிவக்க கண்களில் அவன் கண்டு கொண்டானே வெட்கபட்டு தலை குனிந்து நின்றாள் .

அவள் அருகில் சென்றவன் அவள் தலை நிமிர்த்தி நெற்றியை வருடி முடிக்கற்றையை காதோரோம் சொருகி காதில் ஊஞ்சலாடிய ஜிமிக்கியை சற்றே தட்டிவிட்டு அதன் ஆடும் அழகை ரசித்து , நீண்ட புருங்களை தடவி கண் இமைகளை வருட அவளோ கண்களை மூடி செந்நிறமாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்க கண்களை வருடிய கை நாசியில் கோடாக இழுத்து செவ்விதழ்களில் தஞ்சமடைய அவளோ வேகமாக அவன் விரலை பிடித்தவள் ”ம்கூம்..” தலையாட்டினாள்.

அவனோ அவள் விரல்களை சேர்த்து அழுத்தியவன் என்ன ”ம்கூம் ” தலை குனிந்தவள் ஒன்றுமில்லை திணறி சொல்ல அவளுடைய உடல் நடுக்கத்தையும் திணறி பேசுவதையும் கண்ட புவி ஒரு நிமிடம் தன் கண்களை அழுத்தி மூடி தன் மனதை ஒருமுகப்படுத்தினான் .

” ரீலாக்ஸ்டா” சொல்ல
” ம்ம் ” சொன்னவள்
” எனக்காக ஒரு பாட்டு பாடனும் பாடுவியா? ” கேட்க ,
அவளும் ” சரி புவி என்ன பாட்டு பாடட்டும் ? “.
” எனக்கு பிடித்த பாட்டு பாடனும் ” சொல்லியவன் , சினிமா பாட்டுல ”சுந்திரி கண்ணால் ஒரு சேதி ..” இந்த பாட்டு தான் பாடனும் சொல்ல ” ம்ம் ” சரி சொல்லியவள் . ” உங்களுக்கு டீ எடுத்து வந்து கொடுத்துவிட்டு பாடுட்டா? ” ” டீ வேண்டாம் உன் பாட்டு தான் வேண்டும் ” அவளை கொஞ்சினான் ,
சரி என்று அவளும் கட்டில் அமர்ந்தபடி பாட ஆரம்பித்தாள்…

சுந்திரி கண்ணால் ஒரு சேதி

  • சொல்லடி இந்நாள் நல்ல சேதி..*
  • என்னையே தந்தேன் உனக்காக*
  • ஜென்மமே கொண்டேன் அதற்காக*
  • நான் உனை நீங்க மாட்டேன் *
  • நீங்கினால் தூங்க மாட்டேன்*
  • சேர்ந்தே நம் ஜீவனே..
  • சுந்திரி கண்ணால் ஒரு சேதி*
  • சொல்லடி இந்நாள் நல்ல சேதி*
  • என்னையே தந்தேன் உனக்காக*
  • ஜென்மமே கொண்டேன் அதற்காக*
  • வாய் மொழிந்த வார்த்தை யாவும்*
  • காற்றில் போனா நியாமா*
  • பாய் விரித்து பாவை பார்த்த காதல்*
  • இன்பம் மாயமா…..* அவள் பாட பாட உருகி போய் அமர்ந்திருந்த புவி எழுந்து தன் மார்பில் சாய்த்து அணைத்துக் கொள்ள ஸ்ருதியும் அவனின் நெஞ்சில் சாய்ந்து கண்டாள்………

சென்னை திரும்பிய முகுந்த் நேராக வீட்டிற்கு செல்ல அவன் அப்பா அவனை முறைத்துப் பார்த்தார் .

“யாரோ ஒருத்திக்காக இப்படி தான் குடிச்சிட்டு உன் சௌகரியத்திற்கு சுற்றிக் கொண்டு இருப்பியா ? இப்ப இருக்கிற காலகட்டத்தில் பிஸின்ஸ் எவ்வளவு போட்டி இருக்கு தெரியுமா ? நீ என்னடா நினைச்சிட்டு இருக்க மனசுல ? ” என்று கோபமாய் திட்டிவிட்டு ” ஒழுங்கா நாளைக்கு நீ ஆபீஸ் போற , இனி இப்படி இருந்தா என் சொத்தில் சல்லி காசு உனக்கில்லை ” சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார் .

அவரை முறைத்தபடி தன் ரூமிற்கு சென்றவன் தன் கோபத்தை அங்குள்ள பொருட்கள் மீது காட்டி அனைத்தையும் போட்டு உடைத்து விட்டு கட்டில் தலையை பிடித்தபடி அமர்ந்தான் .

அடுத்தநாள் ஆபீஸுக்கு போனவன் அங்கு டைரக்டர் இருக்கையில் மிருதுளா அமர்ந்திருப்பதை பார்த்து திகைத்தவன். ” யேய் !!! நீ எப்படி இங்கே என் முகத்தில முழிக்க கூடாது சொல்லிருக்கேன்ல ? எதுக்கு இங்கே வந்தே ? எழுந்திரு என் இருக்கையில் உனக்கென வேலை எழுந்திருடி ” என்று சத்தமிட்டான்.

”ஹலோ கூல் ” என்ன ”ஒவரா சத்தம் போடறீங்க காலையில சரக்கு அடிச்சாச்சா ? ஆபீஸ் வந்து எத்தனை நாள் ஆகுது ? இத்தனை நாளாக பிசின்ஸ் எப்படி நடக்குது தெரியாமா வாயே பேசக்கூடாது. இவ்வளவு நாளாக என்ன நடந்தது முதலில் தெரிந்து கொள்ளுங்கள் . இங்கு பிஸ்னஸ் நொடித்து போகும் நிலை .நானும் எங்கப்பா தான் இந்த நிலையை சரி செய்தோம் . இனி நான் தான் டைரக்டர் இங்கு இன்சார்ஜ் எடுத்து ஒருமாதம் ஆகிவிட்டது . இனி நான் சொல்வதுபடி தான் இந்த ஆபீஸ் இயங்கும் . அதை விட்டு இங்கே கத்தக் கூடாது , சரியா “? என்று அதிகாரத்தோடு பேசியவள் அவனுக்கு எதிர்த்த சீட்டை காட்டி உட்கார சொனனாள் சைகையில் .

அவளை முறைத்தவன் கண்கள் சிவக்க , விட்டால் தன் கரங்கள் தம் பேச்சைக் கேட்காது எங்கே அவளை அடித்துவிடுவோமா கரங்களை இறுக்கியபடி அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

அவன் அமர்ந்தவுடன் அவன் முகத்தை பார்த்த மிருதுளா . “காலேஜ்ல ஹீரோவா சுற்றி விட்டு இப்ப வில்லானா மாறிட்டு வருரீங்க மிஸ்டர் முகுந்த் , இப்படியே அவள் பின்னால் எத்தனை நாள் சுற்றுவதாக எண்ணம் வேண்டாம் ஒதுங்கி போறவளை தொடர்ந்து போய் தொந்தரவு பண்ணுரீங்க . உங்களை தேடி இத்தனை நாட்களாக காத்திருக்கு என்னை எகாத்தாளாமாக பேசுவீங்களா? .
அவள் வாழ்க்கை அழித்து உங்கள் வாழ்க்கை அழித்து நீங்களே வேண்டும் நினைக்கிற என் வாழ்க்கை அழிக்கிறீங்க. இனி எதுவும் நடக்காது , ஆபீஸ் , வீடு இனி என் கன்ட்ரோல் தான் . எங்கயும் தப்பிக்க முடியாது !” பேசிக் கொண்டே இருந்தவளை பார்த்தவன் இருக்கையை தள்ளி விருட்டென எழுந்தான் .
கரத்தை நீட்டி “போதும் நிறுத்து நான் என்ன செய்யனும் செய்யக்கூடாது நீ சொல்லக் கூடாது. எனக்கு தெரியும் எதை எப்படி செய்யனுமென்று” சொல்லியவன் கதவை வேகமாக தள்ளிவிட்டு வெளியே சென்றான் முகுந்த் .
அவன் செல்வதை பார்த்தவள் கண்கள் கலங்கி போனாலும் மனதில் தைரியத்தோடு ‘எங்கே போனாலும் கடைசியில் எனனிடம் வந்தே ஆகனும் . நீயா நானா பார்த்துக்கலாம்’ என்று மனதிலுள்ள முகுந்திடம் பேசினாள் மிருதுளா …

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here