தீரா மயக்கம் தாராயோ 26

0
1182

காதல் மனைவியின் கடை கண்ணில் வழிந்த காதலில் சற்று முன் வரை இருந்த கோபமெல்லாம் கரைந்தோட ஸ்ருதி நீட்டிய டீ கப்பை வாங்கி கொண்டான் புவி.

தனக்கொரு கப்போடு அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“பொம்மி…”அவன் குரல் மன்னிப்பை வேண்டி அவளிடம் நிற்க
“சொல்லு புவி…” என்றாள் அதை உணர்ந்த படி.
“ என் மேல இன்னும் கோவமாடா?”
“கோவம் இருக்கானு தெரியலடா… ஆனா ரிஷிய நினைச்சி வருத்தமா இருக்கு.” என்றாள்.
அவன் மேல் முன்பு இருந்த கோவம் இப்போது அவன் கூறியதில் இருந்து கொஞ்சம் குறைந்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்…

ஆனால் முழுதும் மறைந்ததா என்று அவளுக்கும் தெரியவில்லை.

அவன் அவளின் தோளை சுற்றி கை வளைத்த படி
“பொம்மி, எல்லா கெட்டதுக்கும் பின்னாடி ஒரு நல்லது இருக்க தான் செய்யும்… ரிஷியோட எதிர்காலம் குறித்து நம்ம கவலை படாம இருப்போம்… அவனுக்கு ரகு பொறுப்பு…. ஏன் ரகு மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”
‘இருக்கு…!!’ என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

‘மற்றவர்கள் போல தன் கணவன் ஒன்றும் வேண்டும் என்றே யாரையும் கொலை செய்யவில்லை.
சூழ்நிலை…
ஒரு காவல் அதிகாரியாக அவன் கடமையை தான் செய்து இருக்கான்.’ என்று அவளுக்குள் சொல்லி கொண்டாள்.

ஆனால், அதே குற்றத்தை காரணம் காட்டி அவனை தண்டித்த கவர்மெண்ட் மேல் அதீத கோவம் வர அவளின் மூளை கேட்டது.

‘அப்படியானால் நீயும் அதே தவறை தானே செய்கிறாய்’ என்று…

பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்தவள் முன் கையை அசைத்தான்.

“ என்ன பொம்மி இந்த குட்டி மூளைக்குள்ள பெரிய பெரிய விஷயம்லாம் ஓடுது?” என்று.

அவனுக்கா தெரியாது?
அவளின் காதல் மனைவி முகத்தை வைத்தே அவளின் மனதை படிப்பவன் ஆயிற்றே.

“என் மேல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு பொம்மி. கோவப்பட கூட. ஆனா ப்ளீஸ் கோவம் வந்தா நாலு திட்டு கூட சேர்த்து திட்டு… இப்டி பேசாமயோ இல்ல உன்னை தண்டிச்சு என்னை காயப்படுத்தவோ செய்யாத?”
அன்று அவள் கத்தியை வைத்து கொண்டு நின்ற காட்சி கண் முன் விரிய அது ஏற்படுத்திய பயத்தில் அப்போதும் அவன் கண்களில் வலி தெரிய தன் தோளில் இருந்த அவன் கையை அழுத்தி கொண்டாள்.

இருவருக்குமே ‘அடுத்து என்ன பேச?’ என்று தோன்றாமல் அவரவர் தத்தம் சிந்தையில் மூழ்கிய படி தூங்க சென்றனர்.
அன்றைய இரவு அவர்களுக்குள் அந்த அமைதியிலேயே கழிய மறுநாள் காலை விக்கியிடம் இருந்து அழைப்பு வந்தது புவிக்கு.

“ஹாய் மச்சான், எப்டி இருக்க?”
“ நல்ல இருக்கேன்டா… நீ எப்டி இருக்க? தங்கச்சி உன் கிட்ட பேசுறாங்களா?”
விக்கியின் கேள்விக்கு நடந்தவைகளை கூறினான் புவி.
“எப்டியோ மச்சான் எல்லாம் நல்லபடியா நடந்தா சரி.”
“அதிருக்கட்டும்டா… நானே உனக்கு கால் பண்ணனும்னு இருந்தேன். நல்ல வேலை நீ கால் பண்ணிட்ட”
“ என்னடா என்ன விஷயம்?”
“ இங்க ஒரே பூச்சி தொல்லையா இருக்குடா”
“என்ன சொல்ற புவி?”
“ நீ இப்போ எங்க இருக்க?”
“வீட்ல தான் இனிமே தான் ஸ்டேஷன் கிளம்பனும்”
“ உன் வீட்டுலயும் என் வீட்டுலயும் மூட்டை பூச்சி தொந்தரவு பண்ணுதுடா. நீ என்ன பண்ற முதல்ல அதுக்கு மருந்து அடி” என்று கூறிவிட்டு அவன் போனை வைக்க
இந்த பக்கம் விக்கி அவன் கூறியதை கேட்டு முதலில் அதிர்ந்து பின் கடகடவென தேட தொடங்கினான்.
கையில் இருந்த டிடெக்டர் அவன் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அமைதியாக இருக்க அவன் புவியின் வீட்டிற்கு செல்ல ஜீப்பில் ஏறினான்.
அதை நெருங்கும் சமயம் டிடெக்டர் ஒலி எழுப்ப குழப்பமாக ஜீப்பையும் டிடெக்டரயும் பார்த்தான்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த ஜீப் தரவாக சோதனை செய்யப்பட்டு ஒரு சிறிய அளவிலான மைக் ஒன்று அவன் கையில் கொடுக்கப்பட்டது.

அதை டீ ஆக்டிவேட் செய்தவன்
“டாமிட்…” என்று பூட்ஸ் காலால் தரையை ஓங்கி மிதித்தான்.
மொபைல் ரிங் அடித்த சில நிமிடங்களில் அட்டெண்ட் செய்த புவி
“என்னடா மாட்டுச்சா?” என்க
“ போலீஸ் காரனையே முட்டாள் ஆக்கி இருக்கான் புவி… அவனை சும்மா விட கூடாது… இப்போவே அவன…” என்று கத்த

“ டேய், அப்டி எதுவும் செய்ய கூடாது. அவன் எனக்கு சொந்தம்… அவனை ரசிச்சு ருசிச்சு… என் ஸ்ருதியை எப்டி அழ வச்சானோ அதே மாதிரி அவனை அழ வைக்கணும்… ஏன்டா இவனை பகைச்சுக்கிட்டோம்னு அவன் ஒவ்வொரு நாளும் நொந்து நூடுல்ஸ் ஆகணும். எனக்கு இருக்க கோவத்துக்கு அவனை கொன்னாலும் ஆத்திரம் அடங்காது. ஆனா அதில்ல அவனுக்கு தண்டனை. என் பொம்மி கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்… அவளுக்கு கஷ்டம் கொடுத்த ஒருத்தனையும் சும்மா விட மாட்டேன்… அதனால நீ இப்போதைக்கு இதை மறந்துட்டு கேஸ பாரு… அவனை நான் பாத்துகிறேன்” என்று நிதானமாக கூற கேட்ட விக்கி சத்தமாக சிரித்தான்.

“ நீ நடத்து ராஜா உன் திருவிளையாட்டை…” என்று.
நண்பர்கள் இருவரும் ஒரு சேர சிரித்து கொண்டனர்.
இனி முகுந்தன் நிலை???

ரெடி ஒன்… டூ… த்ரீ…
வேந்தன் கூறி முடிக்கவும் தன் பக்கத்தில் இருந்த ஐஸ்க்ரீமை கடகடவென காலி செய்தனர் மகிழினியும் நந்தினியும்.

“ஹை, அப்பா நான் தான் ஃபர்ஸ்ட்” என்று கூறி அவனை கட்டி கொண்டாள் மகி.

“ அம்மா, மறுபடியும் நான் தான்…” என்று அவளின் தோளை கட்டி கொண்டாள்.

“ ஆமாடா செல்லம், நீ தான் எப்போமே ஃபர்ஸ்ட்..” என்று நந்தினி அவளை தட்டி கொடுக்க … இருவரையும் வேந்தனின் விழிகள் வாஞ்சையாக வருடியது.

குழந்தையோடு குழந்தையாக ஒன்றி நடக்கும் நந்தினியின் மேல் எப்போதும் போல அப்போதும் காதல் கூட அவளை விழியால் அளந்து கொண்டிருந்தான்.
அவன் பக்கம் திரும்பிய நந்தினி அவன் பார்வை தன்னை அளப்பது கண்டு உள்ளுக்குள் கூச்சமுற வெட்கமாய் தலை கவிழ்ந்து கொண்டாள்.

“ நதி…” அவன் குரலில் வழிந்த ஆவலை கண்டு அவள் மனம் அடித்து கொள்ள
“ம்ம்…” என்று முனகல் மட்டுமே வந்தது அவளிடம்.
“ உன்னை எனக்கு ஏன் இவ்வளவு பிடிச்சு இருக்குன்னு எனக்கே காரணம் தெரியல நதி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உன்னை பார்க்கிற ஒவ்வொரு நொடியும் ஏதோ செஞ்சு என் மனசை கொள்ளை அடிச்சுட்டு போயிடுற…” என்று கூற
அவள் மேலும் வெட்கத்தில் நெளிந்தாள்.
இது நாள் வரை எல்லாரிடமும் சரிக்கு சமமாக வாயாடி வருபவள் அவனின் காதல் விழியில் குறும்பு காற்றோட அவன் காதலில் காணாமல் போய் கொண்டிருந்தாள்.

“ மகியை உன் குழந்தையா நீ பார்க்க ஆரம்பிச்சதும் சொல்லவே வேணாம் என் வீட்டுக்கு கூட உன்னை ரொம்ப பிடிச்சிடுச்சு.. அவங்க தான் முதலில் தயங்கினாங்க. எங்க நீ மகியை ஒதுக்கிடுவியோன்னு.. ஆனா அன்னிக்கு பெர்த் டே பங்க்ஷன்ல நீயே முன்ன நின்னு மகியை ரெடி பண்ணதாகட்டும், அவளும் உன்னை அம்மான்னு சொன்னதாகட்டும்… எல்லாமே கனவானு ஒருமுறை யோசிக்க வைக்குது.”

“ கே.கே சொன்னாலும் சொல்லாட்டாலும் மகிழினிக்கு நீங்க அப்பானா… நான் தான் அம்மா… அவ முதல் முறையா வாயை திறந்து என்னை எப்போ அம்மான்னு கூப்பிட்டாளோ அப்போவே அவ என்னோட பொண்ணுனு ஆகிட்டா… அதுக்கு பத்து மாசம் சுமந்து பெற தான் செய்யணும்ன்ற அவசியம் இல்லை.”
இவனுக்கு இவள் சளைத்தவள் இல்லை என்பது போல இருந்தது வேந்தனின் மீதான அவள் காதலாகட்டும் மகியின் மீதான பாசமாகட்டும்.

“சரி போகலாமா..” என்று வேந்தன் அழைக்க சரியென கிளம்பினர்.
அந்த ஐஸ்கிரீம் பார்லர் விட்டு வெளியே வர கார்த்திக் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
வேந்தனையும் நந்தினியையும் ஒன்றாய் கண்டவன் திகைத்து நின்றான்.
அதற்குள் வேந்தனும் அவனை கண்டு கொண்டான்.
ஏதும் பேசாமல் அவனை கடந்து விட்டு காரில் மகிழினியை இறக்கி விட்டு,
“மகி, நீ கொஞ்ச நேரம் உள்ள இரு… நானும் அம்மாவும் போய் உனக்கு ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் வாங்கிட்டு வரோம்” என்று நந்தினியின் கை பிடித்து அழைத்து சென்றான்.
“ என்னங்க, ஏற்கனவே அவ நிறைய சாப்டுட்டா.. இன்னும் எதுக்கு?” என்று சொல்லி கொண்டு வந்தவள் வேந்தன் எதையோ முறைத்த படி நிற்பதை கண்டு திரும்பினாள்.
அங்கு கார்த்திக்கை அவள் எதிர்பாக்கவில்லை.
முதலில் திகைத்து பின் கோபத்தில் அந்த இடம் விட்டு நகர போனவளை கை பிடித்து நிறுத்தினான் மகிழ்வேந்தன்.
அவனின் பிடி இறுக்கமாய் ‘நான் இருக்கேன்’ என்று சொல்லாமல் சொல்ல அதற்கு பிறகு அவள் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
அவர்களுக்குள் சத்தமில்லாமல் நடந்த சம்பாஷனைகளை கண்டு இவன் விழிக்க வேந்தனே தொடங்கினான்.

“ஹாய் கார்த்திக் எப்டி இருக்கீங்க? உங்க பாஸ் எப்டி இருக்காங்க?”என்று அவன் சர்வ சாதாரணமாக கேட்க
‘என்ன பதில் சொல்வது?’என்று தெரியாமல் முழித்தான்.
“ஹான்…”
“ என்ன ஆச்சு கார்த்திக்? என்னை இங்க எதிர்பாக்கலையா? அதுவும்…” என்று நந்தினியின் இடையில் கை பிடித்து தன்னோடு இறுக்கி கொண்டு
“ இப்டி… நந்தினி கூட ஒண்ணா…. எதிர்பாக்கலையா?” என்று அவன் கேட்க
கார்த்திக் தலை ஆமென்றும் இல்லை என்றும் தலையை அசைக்க அவன் விழித்த விழியில் வந்த சிரிப்பை தனக்குள் அடக்கினாள்.
“ மீட் மை ஃபியான்ஷி நந்தினி. நாங்க கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறோம். எங்க கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும்.” என்க
அவனுக்கு இது அடுத்த அதிர்ச்சி.
“ என்னடா உங்களை கண்டிப்பா வர சொல்றேன்னு பாக்குறிங்களா? ஆமா கார்த்திக் நீங்க இல்லைனா நாங்க சேர்ந்து இருக்க முடியாதே. நீங்க தானே ரொம்ப கஷ்ட பட்டு இவளை என் சேனல்ல சேர்த்து விட்டது. நீங்க இதை செய்யலைனா நான் என் நதியை பார்த்து இருக்க முடியாதே. அதனால நான் உங்களுக்கு கடமை பட்டு இருக்கேனே… இதுக்காகவாச்சும் உங்களுக்கு ஏதாவது பெருசா உதவி பண்ணனும்னு என் மனசு துடிக்குதே… என்ன செய்யலாம்?” என்றபடி அவன் சட்டை காலரை சரி செய்து விட்டு அவன் சிரிக்க வார்த்தையில் சிரிப்பு இருந்தாலும் அவன் விழி மிரட்டியதில் இவன் இரண்டடி தள்ளினான்.

“ கூல் கார்த்திக், என்ன இவ்ளோ வேர்க்குது? இவ்ளோ பயம் காட்ட வேண்டாம். உண்மையிலே எனக்கு இப்போ உங்களை… என் நதியோட உணர்வுகளோடு விளையாண்ட காரணத்துக்காக இந்த கழுத்தை அப்டியே ஒரு திருப்பு திருப்பனும்னு தோணுது. ஆனால் அது உங்களுக்கு ஒரு நொடி வேதனையா முடிஞ்சி போயிடுமே. அதனால நான் அப்டி எதுவும் செய்ய மாட்டேன்… “ என்று கூறினான்.

“ ஆனா, அதுக்காக எப்போவும் ஒரே எண்ணத்துல இருப்பேன் மட்டும் நினைக்காதீங்க. இனி உங்களால என் நதிக்கு எந்த சின்ன கஷ்டம் வந்தாலும் அதுக்கான உங்களோட இழப்பு பெருசா இருக்கும் சொல்லிட்டேன்.” என்று அவனிடம் கூறிவிட்டு
“ போலாமா பேபி…” என்று ஸ்டைலாக கண்ணாடியை மாட்டிவிட்டு அவளிடம் கேட்க அவள் தலை சரியென அசைக்கவும் அவளின் இடை பிடித்த படியே அழைத்து செல்ல பின்னே கார்த்திக் ஆடி போய் நின்றிருந்தான்.
அவளுமே காதலாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
நம் கண்ணே கூட பட்டு விடும் போல.
அந்த அறையின் மையத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான் முகுந்தன்.
இப்போது அது தான் அவனுக்கு எழுதப்படாத விதியாகி போனது.
மிருதுளா மட்டுமே அங்கு வேங்கையாக வீற்றிருந்தாள்.
முகுந்தன் தொழில் சரிய தொடங்கும் நேரம் அதன் மேல் தங்கள் காலூன்றலாம் என்று எண்ணி இருந்த பல பிஸ்னெஸ் மேன்களின் எண்ணத்தில் இடியை இறக்கி அவர்களுக்கு மேலே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தாள்.
ஆரம்ப கட்டத்தில், ‘ ஒரு சிறு பெண் என்ன செய்ய போகிறாள்?’ என்று மெத்தனமிட்டவர்கள் அவள் கொண்டு வந்த அடுத்தடுத்து முடிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஒவ்வொரு துறையிலும் தன் முத்திரையை பதித்து யாரும் நெருங்கா இடத்தை அடைந்திருக்க முகுந்தனின் மொத்த பொறுப்பும் அவளையே சார்ந்திருக்க செய்தது.

அவளின்றி அணுவும் அசையாது என்பது அங்கிருக்கும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அவளோ, முகுந்தனின் கவனம் தொழிலை தவிர வேறெதிலும் திரும்பா வண்ணம் ஒவ்வொன்றுக்கும் அவனின் கையெழுத்தை இட செய்திருந்தாள்.

“ ஏய், முகுந்த்… இதுக்கு உன்னோட சைன் கண்டிப்பா வேணும்…எங்கேயும் போயிடாத” என்று அவனை இருத்தி வைப்பாள்.

“ இந்த மீட்டிங் நீ தான் அட்டெண்ட் பண்ணனும். இட்ஸ் யுவர் ஒர்க்…” என்று அவள் தோளை குலுக்க
முதலில் அவன் மறுக்க தோன்றினாலும் அவனின் ஆணிவேரே ஆட்டம் கண்டது.
தந்தையும் அவளின் பக்கம் எனும் போது அவனால் அவளை முறைக்க மட்டுமே முடிந்தது.
“எல்லா பக்கமும் செக் வச்சிட்டு சட்டமா சிரிக்குற… உனக்கு ஒரு நாள் இருக்கு..” வாய்க்குள் முனகியபடி தான் அந்த அறைக்கு வந்திருந்தான்.
அவன் பின்னே அவளும் வர அடுத்த சில நிமிடங்களில் அந்த இடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எழுந்து நின்ற மிருதுளா,
“கைஸ், நாம இப்போ எதுக்கு கூடி இருக்கோம்ன்னு எல்லாருக்கும் தெரியும்… இருந்தாலும் சொல்லுறேன். இந்த இயர் நம்ம சேனல் டி.ஆர்.பி ரேட்ல இறங்கி இருக்கு.
அதுக்கு என்ன காரணம்னு அலசி ஆராயலாம் உங்களை வர சொல்லல… என்ன காரணம் வேணா இருந்துட்டு போகட்டும்.’ என்றபடி அவள் பார்வை அவனை குறை கூறியது.
உண்மையில் அவன் தானே அதற்கு காரணம்.
‘ஸ்ருதியை பாட்டு நிகழ்ச்சிக்கு நடுவராக வைத்தது தவறில்லை. ஆனால் அவளோ பாதியில் நிகழ்ச்சியை விட்டு போனதும் நிகழ்ச்சியை தரம் குறையாமல் அடுத்து ஏதேனும் சுவாரஸ்யமாக செய்திருக்க வேண்டாமா?
அதை விட பெரிய கொடுமை. ஸ்ருதி தங்களின் போட்டி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு போனது மிக பெரிய காண்ட்ரோவர்சியானது தான். அதுவே மகிழ் டிவியை ரேட்டிங்கில் எகிற செய்தது.
இதற்கெல்லாம் காரணம் யார்?
நீ மட்டும் தான்…’ என்று அவள் அவனை சுட்டி காட்டி விட்டு மற்றவர்களிடம்,

“ கைஸ், புது சீரியல்ஸ் லான்ச் பண்ணுங்க… அது எல்லாமே ப்ரைம் டைம்ல வர மாதிரி பாத்துக்கோங்க…”
“ மேம்… பட்?”
“ வாட்?”
“ இல்ல ஏற்கனவே ப்ரைம் டைம்ல போயிட்டு இருக்க சீரியல்ஸ் வச்சு தான் நமக்கு செகண்ட் பிளேஸ் கிடைச்சு இருக்கு… இப்போ அதையும் எடுத்துட்டா?” என்று ஒருவர் கூற
“ அதையெல்லாம் ஒரு ஹாஃப் அன் அவர் முன்னாடி டெலிகாஸ்ட் பண்ண சொல்லுங்க… ரீ டெலிகாஸ்ட் பண்ற சில சீரியல்ஸ் எல்லாம் இக்னோர் பண்ணுங்க… அண்ட் வீக் எண்ட் ல வர கூடிய ரியாலிட்டி ஷோல சிலது 30 mins எக்ஸ்டரா டெலிகாஸ்ட் பண்ண சொல்லுங்க… இன்னும் சில சேஞ்சஸ் இருக்கு… அது பத்தின டீடைல்ஸ் உங்க முன்ன இருக்க பைல்ல இருக்கு… என்ன பண்ணுவீங்களோ தெரியாது… நம்ம சேனல் விட்ட ரேட்டிங்கை பிடிக்கணும்.” என்று ஆணையிட்டு விட்டு அமர அனைவரும் தலையாட்டியபடி சம்மதம் தெரிவித்தனர்.
“ ஒரு புது ரியாலிட்டி ஷோவை கொண்டு வருவோம்”
“எந்த ஜனர்ல மேம்?”
“ இப்போ இருக்க கால கட்டத்துல கணவன் மனைவிக்கு நடுல காதல்ன்ற ஒரு உணர்வு காணாம போயிடுச்சு. காதல் திருமணம் ஆகட்டும் அரேஞ் மேரேஜ் ஆனாலும் சரி… இந்த அவசர உலகத்துல எதையோ தேடி ஓடிட்டு இருக்காங்க… அவர்களுக்கான ஷோ இது. பஸ்ர்ட் எபிசோட் ஒரு செலிபிரிட்டி கபில் வச்சி நடத்துவோம். அது டாக் ஷோ மாதிரி இல்லாம கேம் ஷோ மாதிரியும் இல்லாம அவங்களோட காதல் காலத்துக்கு கொண்டு போற மாதிரி ரவுண்ட்ஸ் ரெடி பண்ணுங்க.” என்று சொல்லி கொண்டே அவள் பார்வை முகுந்தை அளந்தது.
“அந்த ஷோ முடிஞ்சு போகும் போது அவங்க மறந்த அந்த உண்மையான காதலை உணர்ந்து போகணும்.
அதை பாக்குற மக்களும் சரி நமக்கு இந்த மாதிரி ஒரு உண்மையான காதல் அமையனும்னு நினைக்க வைக்கணும்… அது தான் அந்த நிகழ்ச்சியோட உண்மையான சக்ஸஸ்…” என்று கூறவும் அவையோர் அவளை பாராட்டினர்.
“ நிச்சயமா பண்ணிடலாம் மேம்…” என்று கூற அவளும் புன்னகைத்தாள்.
அவளின் ஒவ்வொரு ஆளுமையையும் பார்த்தபடி இருந்த முகுந்தன் இறுதியில் அவள் பார்வை சொன்ன செய்தியில் ஆடி போனான்.
‘உண்மையான காதலை உணர வேண்டுமா? யாரை சொல்கிறாள் இவள்?’ என்று அவன் எண்ணமிட அவனை சிந்தனை முகத்தை ஓர கண்ணில் ஆராய்ந்து கொண்டிருந்தாள் மிருதுளா.

இப்படி ஒரு நிகழ்ச்சி மூலம் மிருதுளா அவன் மனதில் கல்லெறிந்து இருந்தாள்.

கலங்கிய மனம் அது தெளியுமா?
தெளிந்த மனம் அவளின் உண்மை காதலை உணருமா?
காத்திருப்போம் பதிலுக்காக.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here