தீரா மையக்கம் தாராயோ.24

0
562

சஞ்சனாவிடம் பேசிவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ஸ்ருதி இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தாள்.

சஞ்சனாவிடம் செல்லும்போது கூட தன் கணவனின் மீது தவறு இருக்காது வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட வீடியோவும் போட்டோவும் பொய்யாக இருக்கும் என மனதின் மூலையில் ஒரு நப்பாசையுடனே சென்றாள் சஞ்சனாவிடம் பேசியதும் தன் காதல் கணவனின் மீது வைத்திருந்த துளி நம்பிக்கையும் தூள் தூளாக உடைந்ததை எண்ணி கண்ணீர் வருவதைக் கூட உணராமல் நடந்து சென்றாள்

ஆம் காதல் கணவன் தான் இத்தனை நாள் ரகு அத்தானின் மேல் இருந்தது காதல் இல்லை மாமன் மகனின் மீது இருந்த பாசம் மட்டுமே என்பதை புவியிடம் வந்த பிறகுதான் உணர்ந்தாள்.கல்லூரி காலத்திலிருந்தே புவியை காதலித்தோம் என்பதை அறிந்ததிலிருந்து அதை தன் கணவனிடம் கூற ஆசையாக எதிர்பார்த்து கார்த்திருந்தாள் விதி அதற்குள்ளாக தன் மாமனை பார்க்க சென்றவளுக்கு அங்கு தன் கணவன் நடந்து கொண்டவிதமும் ரகு அத்தான் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்து குழம்பி போய் வீடு வந்தாள்.
மறுநாள் முகுந்தன் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியின் மூலம் உண்மை தெரிய வந்தாலும் அது பொய்யாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டே சஞ்சனாவை பார்க்க சென்றவளுக்கு அத்தனையும் உண்மைதான் என்று சஞ்சனா வாயாலேயே கேட்டதும் மனசு சுக்கு நூறாக உடைந்து போய் வெளியே வந்தவள் அடுத்து என்ன என்பதை சிந்திக்ககூட முடியாமல் நடந்து சென்றவள் கோவிலை கண்டதும் உள்ளே சென்றாள்.

கருவறைக்குள் சாந்த சொருபினியாக வரும் பக்தர்களையெல்லாம் தன் புன்னகையால் வசிகரித்து அவர்களின் கவலைகளை போக்கி கொண்டிருந்தாள் அம்மன்.

ஸ்ருதி,அம்மனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு மனதில் உள்ள பாரங்களை எல்லாம் அம்மனின் காலடியில் கொட்டிவிட்டு அங்கிருந்த தூணில் சாய்ந்தமர்ந்து இலக்கில்லாமல் வெறித்து கொண்டிருந்தாள்..

முகுந்தன் ஸ்ருதிக்கு வாட்ஸ்பில் வீடியோவை அனுப்பியது அதற்கு ஸ்ருதி எப்படி ரியாக்ட் செய்ய போகிறாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக முகுந்தனும்,கார்த்தியும் ஸ்ருதியை பாலோ பண்ணி வந்தார்கள்.

ஸ்ருதி சஞ்சனா வேலை பார்த்த மருத்துவமனைக்கு போகவும் தான் நினைத்தது நடக்குது என்பதை கண்டதும் மகிழ்ச்சியில் திளைத்தவன் ஸ்ருதி சஞ்சனாவிடம் பேசிவிட்டு கண்ணீருடனே வெளியே வந்ததை பார்த்தவனின் முகத்தில் பழிவெறி தாண்டவமாடியது.
“என்னை வேண்டாமென்று தூக்கிபோட்டு போய் அவன கட்டிக்கிட்டல அதுக்குதா இப்போ அனுபவிக்கற இதோட விட மாட்டேன் இன்னும் இருக்குடி கடைசில வலிதாங்க முடியாம நீயா என்னோட கால்ல வந்து விழணும் விழ வைக்கிறேனா இல்லையானு பாருடி” என குரலில் வன்மத்துடன் கூறினான்.

வீட்டில் நந்தினி வேந்தனிடம் கார்த்திக்கை பற்றி உண்மையை கூறியதும் அதற்கு பதில் ஏதும் கூறாமல் நாளை பேசறேன்னு சொல்லிவிட்டு காலை கட் பண்ணியதிலிருந்து இதுவரைலும் கே கேவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் தன் மடத்தனத்தால் உண்மையான காதல் தனக்கு கிடைக்காமல் போய்விட்டதோ என நினைத்து அதில் கவலை கொண்டு ரூமிலே அடைந்து கிடந்தவள் மதியத்திற்கு மேல் தன் அறையை விட்டு வெளியே வந்து ஸ்ருதியை தேடினாள்.

வீடு முழுவதும் தேடியும் ஸ்ருதியை காணாததால் “இவ எங்க போயிட்டா எங்க போறதா இருந்தாலும் என்னையும் கூட கூட்டிட்டுதானே போவா” என நினைத்தவள் ஸ்ருதியின் போனிற்கு அழைத்தாள்.

போன் ரிங் அங்கிருந்த டேபிளின் மேல் இருந்து வருவதை கேட்டு திரும்பி பார்த்தவள் ஸ்ருதியோட போன் வீட்டிலிருப்பதை பார்த்து “அச்சச்சோ போன் எடுக்காம போயிட்டா போலயே சரி இங்க பக்கத்துல கோவிலுக்குதான் போயிருப்பா” என நினைத்துக்கொண்டு ஸ்ருதிக்காக எதிர்பார்த்து காத்திருந்தாள் நந்தினி.

நேரம் போனதே தவிர ஸ்ருதி வருவதை காணாததால் பயந்து போய் புவிக்கு அழைத்தாள்.

நந்தினியோட போன் வரும்போது புவி வேலையில் இருந்ததால் போனை சைலன்டில் போட்டு வைத்திருந்தான். நந்தினியும் திரும்ப திரும்ப அழைத்து பார்த்தும் எந்த பயனும் இல்லாததால் பயத்துடன் அழுக ஆரம்பித்து விட்டாள்.

புவி காலையில் ஸ்ருதியிடம் சரியாக பேசாததால் இன்று நேரமாக வீட்டுக்கு சென்று நடந்த உண்மையெல்லாம் ஸ்ருதியிடம் கூறி அவள் என்ன தண்டனை குடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் முடிவுடன் அனைத்து வேலைகளையும் சீக்கரமாகவே முடித்து விட்டு மீதியிருந்த வேலைகளையும் விக்கியின் பொருப்பில் விட்டு விட்டு தன் மனைவியை காண வீட்டிற்கு வந்தான்.

வாசலில் ஜீப் சத்தம் கேட்டதும் அழுது கொண்டிருந்தவள் வெளியே ஓடிவந்து “அண்ணா ஸ்ருதிய காணாம் எனக்கு பயமா இருக்குண்ணா அவள எப்படியாவது தேடி கூட்டிட்டு வாங்கண்ணா” என சொல்லிக்கொண்டே அழுதாள்.

புவி நந்தினி அழுது கொண்டே ஓடிவருவதை பார்த்து தேங்கி நின்றவன் அவள் கூறிய விசயத்தை கேட்டதும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றான்.

“என்னம்மா சொல்ற பொம்முவ காணாமா?? ஏன்மா ஏங்கிட்ட இவ்வளவு நேரமா சொல்லல??”

“ஐயோ அண்ணா! “நானும் உங்களுக்கு மதியத்திலிருந்து கால் பண்றேன் நீங்கதா போன் எடுக்கவே இல்லை”…

அப்போதுதான் புவிக்கு தான் வேலை பளுவில் போனை சைலன்டில் போட்டது நியாபகம் வந்தது.

சாதாரண கணவனாக ஸ்ருதியை நினைத்து மனதில் பயம் இருந்தாலும் போலிஸ் மூளை ஸ்ருதியை எப்படி தேடுவது என சிந்திக்க தொடங்கியது.
“சரிம்மா நீ வீட்ல இரு ஸ்ருதி வீட்டுக்கு வந்தா எனக்கு கால் பண்ணு நான் அவள தேடிப்போறேன்” என சொல்லிக்கொண்டே ஜீப்பில் ஏறி பறக்கவிட்டவன் போனில் விக்கியிடம் ஸ்ருதி காணாமல் போனதை கூறி அவளை தேடுவதற்கான வேலையை செய்ய சொன்னான்.

விக்கியும் ஒரு பக்கம் ஸ்ருதியை தேடிக்கொண்டிருந்தான்.

என்ன தேடியும் நேரம் போனதே தவிர ஸ்ருதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

ரகு ரிஷியை பள்ளியில் சென்று அழைத்துக்கொண்டு வரும்போது சஞ்சனாவையும் அழைத்து செல்லலாம் என நினைத்தவன் சஞ்சனா வேலை பார்த்த மருத்துவமனைக்கு வந்தவன் ரிஷியையும் கூட்டிக்கொண்டு சஞ்சனா இருந்த ரூமிற்கு வந்தான்.

சஞ்சனாவிற்கு ஓபி நேரம் முடிந்து விட்டதால் ஒரு பேசன்டின் பைலை பார்த்து கொண்டிருந்தவள் வாசலில் நிழல் ஆடுவதை கண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

ரகுவும் ரிஷியும் உள்ளே வருவதை பார்த்து ரகுவிடம் “உட்காருங்க” என்றவள் ரிஷியை தூக்கி மடியில் வைத்து கொண்டு “கண்ணா ஸ்கூல் விட்டு வந்துட்டிங்ளா?? அம்மா குடுத்து விட்ட சாப்பாடு எல்லாத்தையும் சாப்புட்டிங்களா இல்லையா??”

“ம்ம் நீங்க குடுத்த எல்லாத்தையும் சாப்புட்டேன்ம்மா…”

“குட் பாய் சரி நீங்க சமத்தா வெளிய ஆண்டிக்கூட விளையாடிட்டு இருங்க அம்மா கொஞ்ச நேரத்துல வேலைய முடிச்சிட்டு வர்றேன் வீட்டுக்கு போலாம்.”

“சரிம்மா” என தலையாட்டினான்.

நர்ஸ்ஸை கூப்பிட்டு “குழந்தைய ஒரு பத்து நிமிசம் பாத்துக்கோங்க” என்றவள் அவருடன் குழந்தைய அனுப்பிவிட்டு ரகுராமை பார்த்து “நீங்க இப்படி பண்ணுவிங்கனு நா எதிர்பாக்கவே இல்லை” என்றாள்.

வந்ததிலிருந்து சஞ்சனா குழந்தையிடம் காட்டிய அன்பை ரசித்து பார்த்து கொண்டிருந்தவன் சஞ்சனா கூறியதை சரியாக கவனிக்காமல் “என்ன சொன்ன சஞ்சு” என்றான்.

“நீங்க இப்படி பண்ணுவிங்கனு நா நினைக்கலைங்க காலைல நா அவ்வளவு தூரம் சொன்னேன்ல தருண் விசயம் ஸ்ருதிக்கு தெரிஞ்சா அவ புவியரசுக்கூட வாழமாட்டானு.அது தெரிஞ்சும் நீங்க ஸ்ருதிகிட்ட எதுக்கு உண்மைய சொன்னிங்க ரகு??”

சஞ்சனா பேசியதில் கோபம் கொண்ட ரகு, “ ஏய் கொஞ்சம் நிறுத்துறியா” என குரலில் சீறலுடன் அவளின் முன் கையை காட்டி அவள் பேச்சை தடுத்தவன் “நீ என்ன பத்தி என்ன நினச்சிட்டு இருக்க??ஸ்ருதிய நா லவ் பண்ணேன்தான் இப்பவும் லவ் பண்றேன். அதுக்காக அவ வாழ்க்கைய கெடுத்து அவளோட நா சேரனும்னு நினைக்கர அளவுக்கு நா கேடுகெட்டவன் கிடையாது. கல்யாணம்ங்ரது ஒருமுறைதான் நடக்கணும் அது புடிச்சலும் சரி புடிக்காட்டியும் சரி எனக்கும் நடந்துருச்சு அவளுக்கும் நடந்துருச்சு எனக்கு நீ ஸ்ருதிக்கு புவிதான். அவ வாழ்க்கைய கெடுத்து அவள நா அடையனும்னு நினைக்கர அளவுக்கு நா கேடுகெட்டவன் கிடையாது என்ன என்னோட அப்பா, அம்மாவும் அப்படி வளர்க்கலை புரியுதா.?”

ரகுவின் கோபத்தில் தருண் பற்றிய உண்மையை ரகு ஸ்ருதியிடம் சொல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டவள் “அப்போ வேற யார் ஸ்ருதிகிட்ட தருண் பற்றிய உண்மைய சொல்லிருப்பாங்க” என்றாள்.

சஞ்சனா பேசியதில் கோபத்தில் பேசியவன் வெளிய எழுந்து செல்ல கிளம்பும் போது சஞ்சனாவின் ஸ்ருதிகிட்ட தருண் பத்தி யார் சொல்லிருப்பாங்கனு சொன்னது காதில் விழுந்ததும் கோபமாக வெளியே கிளம்பியவன் நின்று “வேற யாரு முகுந்தனா தான் இருக்கும்” என்றான்.

“அவருக்கு எப்படிங்க தருண் பத்தி தெரியும்??”

“அவன் ஜெகதால கில்லாடி ஒருத்தர தோற்கடிக்கணும்னா எந்த எல்லைக்கும் போவான் அப்படி இருக்கப்ப ஸ்ருதிய புவி கல்யாணம் பண்ணது தெரிஞ்சுதும் சும்மா இருப்பானா எப்படியாவது அவங்க ரெண்டுபேரையும் பிரிக்கத்தான் பார்ப்பான்.”

“இப்போ என்னங்க பண்றது??”

“இதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது புவிதான் எதாவது பண்ணனும் புவி பண்ணாலும் ஸ்ருதி புவிய மன்னிச்சி ஏத்துக்குவாளானு தெரியலை நா பண்ணதையே அவ இன்னும் மன்னிக்கல இப்போ புவியும் அதையேத்தான் பண்ணிருக்கான்.ஆனா ஒன்னு ஸ்ருதி புவிய விட்டு பிரியலாம் மாட்டா அவளுக்கு தெரியும் கல்யாணத்தோட அருமை புவிக்கூட இருந்து அவன தண்டிப்பா. ஒருவேளை புவி பக்கம் அவனோட செயலுக்கு ஏதாவது நியாயம் இருந்தா அவளோட கோபம் குறையலாம். காலம் எல்லாத்தையும் மறக்கடிக்கும் அப்போ ஸ்ருதி புவிய ஏத்துக்கலாம்.சரி நீ வா ரிஷி வரும் பொழுதே பசிக்குதுனு சொன்னான்.”.

ஸ்ருதியை பற்றி யோசித்து கொண்டிருந்தவள் ரகு ரிஷி பசிக்குதுனு சொன்னான் என்பதை சொன்னதும் மற்றதெல்லாம் மறந்து தன் மகனின் பசியை போக்க அவனை தேடிச்சென்றாள்.

இரவு ஆகியும் ஸ்ருதி கிடைக்காததால் புவி ஜீப்பை நிறுத்திவிட்டு கீழிருங்கியவன் சாலையில் உட்கார்ந்து “பொம்மு எங்கடா இருக்க?? என்கிட்ட வந்துருடா என்கூட இருந்த என்ன தண்டனை வேணாலும் கொடுடா நா ஏத்துக்குறேன்” என கதறியழுதான்.

புவியுடன் இருந்த விக்கி “டேய் புவி ஸ்ருதிக்கு எதுவும் ஆகிருக்காதுடா எப்படியும் கண்டுபுடிச்சிடலாம் நீ அழுகாதடா” என்றான்.

“எப்படிடா அழுகாம இருக்கறது அவதான்டா என்னோட வாழ்க்கையே அவ என்னோட காதல ஏத்துக்காதப்பவே அவளுக்காக வாழ்ந்தவன்டா நான் இன்னைக்கு அவ என்னோட மனைவி.. அவ இல்லாம ஒரு நொடிக்கூட என்னால வாழ முடியாதுடா அவ இல்லைனா நா செத்துருவேன்டா…”

இங்கு பாரில் புவியையும்,ஸ்ருதியையும் பாழிவாங்குன சந்தோசத்தில் கார்த்திக்குடன் சேர்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தான் முகுந்தன். அவனின் போனில் புவியுடைய ஜீப்பில் பொருத்தப்பட்ட மைக் மூலம் புவியின் ஒவ்வொரு செய்கையையும் கேட்டு கொண்டிருந்தான். கடைசியில் புவி விக்கியிடம் புழம்பி கதறியழுவதை ரசித்து கேட்டுகொண்டிருந்தவனின் கண்களில் போதையைவிட பழிவெறியே அதிகமிருந்தது.

“என்னடா பேசற ஸ்ருதி நல்லாத்தா இருப்பாங்க நீ இப்படி உடைஞ்சிப் போனா ஸ்ருதிய எப்படி கண்டுபிடிப்ப??”

“ஆமா.. நான்தானே ஸ்ருதிய கண்டு பிடிக்கணும்” என்றவன் கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்தான்.

அப்போது நந்தினியிடம் இருந்து அழைப்பு வந்ததும் டிஸ்ப்ளேவில் நந்தினியின் பெயரை பார்த்து வேகமாக காலை எடுத்து பேசினான்.

எதிர்ப்புறம் நந்தினி சொன்ன தகவலை கேட்டு சந்தோசத்துடன் “டேய் மச்சான் என்னோட பொம்மு கிடச்சுட்டாடா” என்றான்.

அதை கேட்டு விக்கியும் சந்தோசத்துடனே “எங்கடா இருக்காங்க” என்றான்

“வீட்டுக்கு வந்துட்டாளாம்டா” என்றவன் ஜீப்பில் ஏறி ஜீப்பை ஸ்டார்ட் பண்ணினான்.விக்கியும் ஜீப்பில் ஏறியதும் அரைமணி நேரத்தில் அடைய வேண்டிய தூரத்தை பத்தே நிமிசத்தில் ஓட்டி வந்து காரை வீட்டில் நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே ஓடினான்

ஹாலில் ஸ்ருதி உட்கார்ந்திருப்பதும் அவளின் அருகில் நந்தினி “எங்கடி போன” என கேட்டு கொண்டிருப்பதையும் பார்த்து அவளின் அருகில் சென்றான்.

நந்தினியின் கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் உட்கார்ந்திருந்தவள் புவியை பார்த்ததும் வேகமாக தனது அறைக்கு சென்று கதவடைத்து கொண்டாள்.

அவளின் பின்னாலே ஓடி வந்தவன் “பொம்மு கதவை திறடா நான் உன்கிட்ட பேசணும்” என கெஞ்சினான்.

அவன் எவ்வளவு கெஞ்சியும் கதவை ஸ்ருதி திறக்காததால் பயந்தவன் “பொம்மு வெளிய வாடா எதுவா இருந்தாலும் என்கிட்ட சண்டைக் கூட போடுடா இப்படி பேசாம மட்டும் இருக்காதடா”

நந்தினி தான் எவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் வேகமாக சென்று கதவடைத்தவளின் அறைக்கதவையே வெறித்தவள் புவியின் உயிரை உருக்கும் வார்த்தையில் தெளிந்து புவியை பார்த்தாள் அவனின் கண்களின் இருந்த விழிந்த கண்ணீரே கூறியதை அவனின் காதலின் ஆழத்தை.ஸ்ருதி மேல் ரகு மற்றும் முகுந்தனிடம் பாக்காத காதலை புவி ஸ்ருதி மேல் வைத்திருப்பதை கண்டு அதிசயித்தவள் ‘ஆண்டவா எப்படியாவது இவங்க ரெண்டுபேரையும் சந்தோசமா வாழ வை’ என கடவுளிடம் வேண்டுதலும் வைத்தாள் மனதிற்குள்ளேயே.

விக்கி தன் நண்பன் போலிஸாக எதற்கும் அஞ்சாதவனாக திமிராக திரிந்தவனை இன்று தன் மனைவிடம் மன்னிப்பை யாசித்து கொண்டிருப்பதை பார்த்து வியந்து போய் நின்றான்.

ஸ்ருதியும் கதவிலே சாய்ந்து அமர்ந்தவாறு தன் கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சுவதை தன் காதல் மனம் ஊமையாக அழுதாலும் அறிவோ தன் கணவன் குழந்தை ரிஷிக்கு செய்த கொடுமை கண்முன் வந்து அவளை பாடாய் படுத்தியது.இன்னும் சிறிது நேரம் தன் கணவன் கதறுவதை கேட்டால் தன் மனம் கணவனின் பக்கம் சாயிந்துவிடும் என்பதை உணர்ந்தவள் எழுந்து வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்து டைனிங் டேபிலில் பழம் நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியை போய் எடுத்து தன் கையில் வைத்து அழுத்தியவள் “இன்னொரு தடவை என்கிட்ட பேச முயற்சி பண்ணிங்க என் கையை நானே அறுத்துக்குவேன்” என்றாள்.

ஸ்ருதியின் இந்த செயலை பார்த்தவர்கள் அதிர்ச்சியாகி

“பொம்முமுமுமு…”

“ஏய் ஸ்ருதி என்னடி பண்ற”

“ஸ்ருதிதிதி..”

மூன்று பேரும் பதட்டத்துடன் கத்திக்கொண்டே அவளின் அருகில் சென்றனர்.

“யாராவது என்கிட்ட வந்திங்க நான் சொன்னதை செய்வேன்”அவளின் வார்த்தையை கேட்டதும் மூவரும் அப்படியே உறைந்து போய் நின்றனர்.

“ஏய் ஸ்ருதி உனக்கு பையத்தியம் பிடிச்சிடுச்சாடி ஏன்டி இப்படி பண்ற” என்றாள் நந்தினி.

“ஆமா பையத்தியம் தான் முடிச்சிருச்சு எல்லாம் இதோ என் முன்னாடி நிக்கறானே இவனால இவனை நான் உயிருக்குயிரா காதலிச்சதுனாலதானே என்னால இன்னைக்கு இவனை வெறுக்க முடியலை இதெல்லாம் நினைக்க நினைக்க எனக்கு பையத்தியம் புடிக்குது நந்து” என கத்தியவள் அங்கேயே தரையில் அமர்ந்து “அந்த ரிஷியும் என்ன மாதிரிதானேடி தன்னோட அப்பாவ இழந்து தவிச்சிருப்பான்” என கூறிக்கொண்டே கதறியழுதவள் கோபமாக எழுந்து தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு அவன் அப்பா இல்லாம இருக்கறதுக்கு காரணம் நீதானேடா உனக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா?? உனக்கு நான்தானே உயிரு அப்போ எனக்கு தண்டனை குடுத்துகிட்டா உனக்கு வலிக்கும்தானே.அதான் என்னை தண்டிச்சிக்கபோறேன்” என்றவள் தனது அறைக்கு நுழைந்து கதை அடைத்தாள்.

அவள் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் இருந்த புவி ஸ்ருதி கதவை முடியதும் பயந்துபோய் “பொம்மு கதவை திறடா தப்பா எதும் பண்ணிக்காதடா ப்ளீஸ்டா கதவை திறடா.”என்றான்

அவன் கதவை தட்டியதும் கதவை திறந்தவள் “பயப்படாத நான் அவ்வளவு சீக்கரம் சாகமாட்டேன் நான் செத்துட்டா நீயும் செத்துருவனு எனக்கு தெரியும் நீ உடனே செத்துட்டா எப்படி நீ செஞ்ச பாவத்த நினச்சி ஒவ்வொரு நாளும் அழணும் அதுக்கு நான் உயிரோட இருந்துதா தண்டனை தரனும்” என்றவள் கதை வேகமாக முடினாள்.

அவளின் அறைக்கதவு மூடியதை போலவே மனக்கதவும் மூடியது.

‘பொம்மு நீ கூட இருந்து என்ன தண்டனைவேனாலும் எனக்கு குடுடா அத நான் தாங்குவேன் ஆனா என்னவிட்டு போயிடாதடா அந்த வலிய என்னால தாங்கமுடியாது’ என மனதில் பேசிக்கொண்டவன் அவளின் அறையின் முன்னே சுவரில் சாய்ந்து அமர்ந்தவன் பொழுது விடியும் வரைக்கும்கூட அந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தான்.

விக்கியும்,நந்தினியும் எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த இடத்தை விட்டு அசைந்தானில்லை.

நந்தினிக்கு அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று புரியாவிட்டாலும் புவி அண்ணாவின் மேல் நந்தினி கூறுவது போல் எந்த தவறும் இருக்காது என்று நம்பினாள்.

பி.கு: நந்தினியை போல் நானும் புவிமேல தப்பு இருக்காதுனு நம்பறேன் அது புவியே சொல்லனும் அடுத்து எழுதரவங்களும் அப்படியே எழுதுங்கம்மா பிளீஜ்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here