பிரபல ஹோட்டல் இரவு ஒன்றை தாண்டி இருக்க அந்த பார்ட்டி ஹால்
உற்சாக கூச்சலில் மிதந்து கொண்டு இருந்தது. இளைஞர்கள் பட்டாளம் மேடையில் ஆடிக்கொண்டு இருக்க
அதை மொத்தமாய் ரசித்தபடி கைகளில் மது கோப்பையை ஸ்டைலாக ஏந்தியபடி ஒரு கூட்டம் ரசித்துக் கொண்டு இரூந்தது. ஆண்கள் பெண்கள் பாகுபாடு இல்லாமல் போதையி இருக்க சற்று தள்ளி இருந்த இருக்கையில் முழு போதையில் தலை சாய்த்து படுத்திருந்தான் ராகவ்.
ராகவ் எழுந்திரு. கமான் ராகவ். மேடையில் போய் ஒரு டான்ஸ் ஆடலாம் ராகவ்…
நிஷா… இரு வரேன் எழுந்தவனால்
நிற்க கூட்டம் முடியவில்லை. நின்றபடி ஆட ஆரம்பித்தான். ஸாரி நிஷா. இன்னொரு நாள் நீயும் நானும் ஆடலாம். இப்ப போயிடு. ஓகே..ஓகே
எப்படா. உன் கல்யாணத்துக்கு பிறகா
நிஷா நல்லா பார்த்துக்கோ. இது தான் லாஸ்ட் இனிமே இவனை இங்கே பார்க்கறதே அபூர்வம். அப்புறம் எப்படி டான்ஸ் ஆடறதாம்.
டேய் சும்மா இருடா. நான் எப்பவும் போல இங்கே வருவேன். என்ன யாராலையும் தடுக்க முடியாது. அவ யாரு என்ன தடுக்க கால் கட்டு போட்டா நான் மாறிடுவனா. நெவர் நீ வா பேபி நான் வரேன் உன் கூட ஆட … இப்ப மட்டும் இல்ல எப்பவுமே…. என்றபடி அவள் தோல் மேல் கைகளை போட்டபடி நிற்க இவனது மொத்த எடையையும் தாங்க முடியாமல் ஒரு புறம் சரியான ஆரம்பித்தாள்.
டேய் உன்னோட சேர்த்து அவளையும் தள்ளிடாத. விடு நிஷா அவனால் நிக்க கூட முடியல. நீ வேற. .. போ.. உன் வீட்டு டிரைவர் இன்னும் வரலையா..
இன்னும் இங்கே சுத்திட்டு இருக்கற.
நீ உட்காருடா.. நிஷாவின் தோல் மேல் இருந்த கையை பிரித்து விட்டவன்
ஏற்கனவே அமர்ந்து இருந்த இருக்கையில் அமர வைத்தான். அமர முடியாமல் எதிரில் இருந்த டேபிலில் படுத்தவன். கண்கள் போதையில் சொக்கி இருக்க தன் இஷ்டம் போல் பாடலை குளரியபடி பாட ஆரம்பித்தான். நிஷாவோடு ஆடுவதாய் நினைத்து…
ராகவ் மட்டும் அல்ல அங்கே இருந்த அனைவருமே கோல்டு ஸ்பூனில் பிறந்தவர்கள். இதுவரையிலுமே கஷ்டம் என்பதை உணராதவர்கள்.
கஷ்டமா அது எந்த பார்ல கிடைக்கும்
என்ன கேட்க கூடியவர்கள். வாரம் முடிகிறதோ இல்லொயோ இவர்களது கும்மாளம் ஓய்வதில்லை.
மூன்று நான்கு மணி வரை இஷ்டம் போல் ஆட்டம் ஆடி வீட்டுற்கு போய் பெட்டில் விழுந்தால் அடுத்த நாள் இரண்டு மணிக்கு எழக்கூடிய கண்ணியவான்கள். இன்றும் அப்படியே ஆடிக்கொண்டு இருக்க …
நிஷாவோ நகராமல் அருகில் இருந்த இருக்கையில் அமர அவனுக்கு அருகில் அமர்ந்த அவனது இன்னொரு தோழன் என்ன நிஷா…
ஏன் அவனை அப்படி பார்க்கற…
நான். …. இவனை உயிருக்கு உயிரா லவ் பண்ணறேன். இவனுக்கு புரியவே இல்ல. இதை சொல்லும் போதே அவளை எழுப்பி
நகர்த்தி போய் இருந்தான். அவளது இன்னொரு தோழன்.
பைத்தியமா உனக்கு. நீ இங்கே மொத தடவை வரும் போதே சொன்னான் ஞாபகம் இருக்கா. இது ஒரு டைம் பாஸ் யாரும் தேவையில்லாமல்
ஆசையை வளர்க்காதிங்கன்னு
அவன் கேட்டு இருந்தான்னா இன்னேரம் பளார்ன்னு விட்டு இருப்பான். அப்புறம் அவன் வாய்ல என்ன வரும்ன்னே தெரியாது. நல்ல வேளை முழு போதையில் இருந்தான் அத நால கவனிக்கல .
அப்போ இத்தனை நாள் என் கூட ஆடினது. நீ இல்லன்னா இங்கே வர பிடிக்கலன்னது. உன்னை தவிர வேற யார் கூடவும் பேச பிடிக்கலைன்னது.
அவன் ஸ்டேட்டஸ் பார்த்து தான் பழகுவான். அவனுக்கு ஈக்வலா நீ இருந்ததால்தான் வந்தான். இல்லன்னா உன் முகத்தை திரும்பி கூட பார்க்க மாட்டான். அந்த அளவுக்கு அவனுக்கு வெறி இருக்கு.
அதுக்காக உன்னை அவன் வீடு வரைக்கும் கூப்பிட்டுட்டு போவான்னு எதிர் பார்க்காத அது நடக்காது. அவனை நல்லா தெரிஞ்சதால சொல்லறேன்.
அப்போ…. அவன் இஷ்டப்படி வருவான். நான் ஒன்றும் சொல்லும் கூடாதா.
நிஷா அவனுக்கு இன்னும் நாலு நாளையில நிச்சயம் இருக்கு. அதுக்குதான் இந்த பார்ட்டி. நீங்க கடைசி வரைக்கும் இப்படியே வரலாம். ஒன்னும் சொல்ல மாட்டான்
அதுக்கு மேல எதுவும் உளரி வாங்கி கட்டிக்காத.. ஏற்கனவே ஒருத்தி இத மாதிரி சொல்லி இவன் பேசி அந்த பொண்ணு தற்கொலை பண்ணிகிச்சு
நீயும் அந்த லிஸ்டுல சேர்ந்துடாத புரியுதா….போ..
யாரோ ஒருத்தி சொன்னா நானும் விடணுமா… மாட்டேன் அவன் என்ன தான்டி எப்படி இன்னொருத்திய கட்டிக்கறான்னு பார்க்கறேன் குரோதத்தோடு விலகினாள் நிஷா.
தொடரும்.