கிஷோர் ரிடையர்ட் ஆனாலும் இப்பொழுது மனைவியுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு.சரணுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் பெயர் தியாசெய்து வைத்தார்கள் பெண்ணும் லாவ் படித்தவள் (,சும்மா இருக்குற பொண்டாட்டியே நூறு கேள்வி கேப்போம் அப்ப லாயர் பொண்ணு எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க????).ஆனா அப்படி நடக்கல அவள் சரணோட ரொம்ப சந்தோஷமா இருந்தா எல்லாமே ரொம்ப ஹேப்பியான டேய்ஸா நகர்ந்துட்டு இருந்தது இப்போ அவங்களோட சந்தோஷம் இரட்டிப்பானது சரண் தியாவிற்கு அடுத்தடுத்து இரண்டு பையன்கள் பிறந்தனர் தேவ்,விகாந்த் என இப்பொழுது தன் மருமகளையும் அவள் விருப்பப்படி வேலைக்கு அனுப்பினாள் தேனு.இப்பொழுது அவள் சுமைகள் குடும்பப்பொறுப்பு அதிகமானாலும் தன் பேரன்களை கவனிப்பதிலும் தன் மகன்,மருமகளை லஞ்ச் கட்டி வேலைக்கு அனுப்புவதிலுமே பிஸியாகி போனாள் தேனு.தியாவும் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அத்தையை அம்மாவாகவே எண்ணினாள்.வார இறுதி நாட்கள் யூடியூப் பார்த்து தன் குடும்பத்துக்கே விதவிதமாய் சமைத்து அசத்தினாள் தியா. இரண்டு வாரத்திற்கு ஒருஞாயிற்றுகிழமை வீட்டில் ஒரே குதூகலம்தான் அப்சரா ,பாலா,சரண்,தியா எல்லோரும் மீட் செய்து எல்லோரும் வெளியே சென்று வருவார்கள்.தேனுவும்,கிஷோரும் தன் பேரக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் பார்க்,கோவில் என சென்று வருவார்கள்.வயதானாலும் கிஷோரின் அன்பு தேனுவிற்காக வளர்பிறையாய் வளர்ந்து கொண்டேயிருந்தது.உணவு வைத்தால் கண்ஜாடையிலேயே நல்லாருக்கு என்பான்,அவள் கட்டும் உடையை தூரமிருந்து ரசிப்பான் கண்களாலே காதல் மொழி பேசுவான்.இன்னைக்கு கிஷோரோட 60வது திருமண நாள் பேரன் பேத்தி மகள் மகள் மருமகள் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நாளிது .தியாவும்,அப்சராவும் தன் அன்னையின் சஷ்டியப்தபூர்த்தி விழாவிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.இந்த ஜிமிக்கி போடுஙக அண்ணி அத்தைக்கு அழகா இருக்கும் என்றாள் தியா.உடனே தேனு வயசாயிடுச்சு ஏன்தான் நீயும் அப்சராவும் என்னைய அலங்காரம் பண்றேனு அநியாயம் பண்றீங்க என்றாள் தேனு.சும்மா இருமா என சொல்லி ஜிமிக்கியை மாட்டி மாம்பழ மஞ்சள் பட்டுடுத்தி தலை நிறைய மல்லிகை பூச்சரம் வைத்து பார்க்க மங்களகரமாக மீனாட்சியை போல் காட்சியளித்தாள் தேனு முன்னால் இரண்டு நரைமுடி இல்லாவிட்டால் அவள் பாட்டியாகிய சுவடே தெரியாமல் போயிருக்கும் .ரூமிற்குள் வந்த ஆருஷ் “டேய் விகாந்த்,தேவ் இங்க வாங்க பாட்டி லுக்கிங் ஸோ ப்ரிட்டி என சொல்ல…தேனு மடியில் ஏறிய சின்ன வாண்டு விகாந்த் பாட்டி நீங்க அழகா இருக்கீங்க இருங்க தாத்தாவை கூட்டிட்டு வாரேன் என சொல்ல தேனு பாட்டிக்கு ஏதோ வெட்கம் பற்றிக்கொண்டது புதுப்பெண்ணை போல்..கிஷோர்தாத்தா தேனு பாட்டியை கண்கொட்டாமல் ரசித்தார் எத்தனை பேரழகி வந்தாலும் தன் மனைவியை நேசிக்கும் கணவனுக்கு அவள்மட்டும்தான் பேரழகி..மீனாட்சிசுந்தரேஸ்வரராய் கிஷோரும் தேனுவும் காட்சியளித்தனர்…சொந்தங்களும், குடும்பமும் சூழ்ந்திருக்க இருவரின் 60ம் கல்யாணம் அழகாய் நடந்தது.புதுமணதம்பதியை மகளும் மருமகளும் ராசாத்தியும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.கிஷோர் தன் மகனை,மகளை அழைத்து இருவரும் பொன்வனத்திற்கே சென்று தங்கள் வயோதிகத்தை கழிக்க ஆசைப்பட்டார்.சரண்”அப்பா நீங்க ஆசைப்படுற மாதிரியே அங்க இருங்க நாங்க வீக்லி ஒன்ஸ் வர்றோம் ….அப்ப எல்லோரும் ஜாலியா இருப்போம் நீங்க எப்ப பார்கனும்னாலும் வாங்க இது குட் ஐடியா “.தேனுவிடம் இதைக்கூற பிள்ளைகளை விட்டு எப்படி தனியா என முகம் வாடினாள்.இதுவரை எல்லாருக்காகவும் வாழ்ந்தாச்சு இனி நமக்குனு அழகான வாழ்க்கையை இயற்கையான சூழல் ,காற்று,மாசற்ற இடம்னு கழிப்போம்.கார் இருக்கு பிள்ளைகளை எப்ப பார்க்கனுமானாலும் நான் கூட்டிட்டு வாரேன் என்றார் கிஷோர்.அரைமனதாய் சம்மதித்தாள் தேனு.சரி கல்யாணம் முடிஞ்சுடுச்சு அடுத்து எனக்கேட்க வயசானாலும் உங்க குசும்பு போகல என சிரித்தாள் தேனு.சந்தோஷமாய் இருந்தனர் அந்த வயதான தம்பதியினர் .இரண்டு வருடம் அழகாக அமைதியாக அவர்கள் விருப்பப்படிதான் வாழ்க்கை சென்றது .பொன்வனம் வந்தார்கள் பால் காய்ச்சி தேனுவின் பழைய வீட்டிற்கே சின்ன சின்ன மராமத்து வேலைகள் பார்த்து கூடியேறினர் இருவரும் சேர்ந்து ஸ்தலங்களுக்கு செல்வது,பேரன்களோடு கொஞ்சி மகிழ்வது,ஒன்றாய் உணவருந்துவது,வீட்டில் வனர்க்கும் கிளிகளோடு கொஞ்சி மகிழ்வது,தோட்டத்தில் நடப்பது என நன்றாகத்தான் சென்றது.இப்படி ஒரு பிரச்சனை வரும் என கிஷோர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
தேன்மொழி பாகம்15
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1