தேன்மொழி பாகம்4

0
179

கிஷோர் அன்றிரவு தேனுவிற்கு கால் செய்கிறான் …..அவள் இவன் மொபைல் கால் எதிர்பார்த்தவளாய் அட்டண்ட் செய்து”தயக்கத்துடன் ம்ம்ம் “என்கிறாள் .

ஹே ஹனி என்ன ம்ம்ம் ஏதாவது பேசுமா எனக்கேட்கிறான்…..”சொல்லுங்க மாமு ” என இவள் பதில் தருகிறாள்….

மாமுவா எனக்கு பிடிச்சிருக்குடி

இங்க பாரு ஹனி …..நான் மேரேஜ் லைப் பத்திலாம் ட்ரீம் பண்ணதே இல்லை…..படிச்சு நல்ல பொஸிஸன் வரனும்னே இருந்துட்டேன்…அம்மா ஆசைப்பட்டாங்கனுதான் உன்னை வரன் பார்க்க வந்தோம்……பட் நான் இப்ப என் நாடி நரம்பெல்லாம் பித்து பிடிச்ச மாதிரி இருகுகேன் ….இதுதான் லவ்வாடி தேனு …சாரி டி போட்டுட்டேன் மா…எனக்கூற

நீங்க என்னைய வாடி போடினே கூப்பிடுங்க அதைத்தான் நானும் விரும்புறேன் ஏன்னா உரிமையானவங்க கூப்பிட்டா என்னமோ பண்ணுது மாமு எனக்கூறினாள்
என்ன நான் உன் இஷ்டமானவனா எனக் கேட்க …அவள் போங்க என கலகலவென்று சிரித்தாள்ஈஈ

கிஷோருக்குமண்டையில் பல்ப் எரிந்தது….அட என் செல்ல பொண்டாட்டியா ஆகுறதுக்கு ஹனி ரெடியாயிட்டா இனி எல்லாம் என் வசம்தான் …என்னமோ பண்றடி அழகி என்றான்.

இப்படியே ஜோடி கிளிகள் பேசிக்கொண்டிருக்க மணி இரவு 12 ஆனது….

எனக்கு தூக்கம் வருது மாமு நான் தூங்கப்போறேன் என சொல்லி இருவரும் தூங்க சென்றனர் பல கனவுகளுடன்.

அவனின்றி அவளில்லை….அவளின்றி அவனில்லை என்று சொல்லும் அளவு காதல் கசிந்தது.

இப்படியே காதல் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது…..நிச்சயதார்த்தம் முகூர்த்தம் குறிக்க ஏற்பாடு செய்தனர்

அன்று நிச்சயத்திற்கு தேதி குறிக்க தேனுவின் அப்பா ராமன்,அம்மா சீதா …..கிஷோர் தாய் சுமதி தந்தை கிருஷ்ணன் என அனைவரும் ஜோசியரிடம் சென்றனர்…

மேற்பார்வைக்காக பொன்வனம் அருகில் குக்கிராமம் வந்த கிஷோர் ………அப்படியே தேனுவை பார்க்க சர்ப்ரைஸாக அவள் வீடு வந்தான் யாரும் வீட்டில் இல்லை என அறிந்தவன்

வீட்டுக்குள் நுழைந்தான் மெல்ல அவள் ஸ்டோர் ரூமிலிருநக்க… அவளை பின்னிருந்து அணைத்தான் அவள்”ஆஆஆஆவென்று கத்திட என்ன செய்வதென தெரியாமல் இதழோடு இதழ் பதித்துவிட்டான் உணர்ச்சி வேகத்தில்….இவள் கோபமாக அவனைத்தள்ளிவிட்டு……கிஷோர் ஆளில்லாத வீட்ல என்ன செய்றீங்க எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு எனக் கண்ணகியைப்போல கோப பார்வையால் சுட்டெரித்து விட்டாள்.

இல்ல ஹனி ஒரு வேகத்துலலலல என அவன் இழுக்க…..இவள் எரிமலையாய் குமுறி முதல்ல வீட்ட விட்டு கிளம்புங்க எனக் கத்திவிட்டாள்….

இவன் சோகமே சொரூபமாய் தன் உயிரில் பாதி அறுந்ததைப்போல் சுயமற்று நடந்து காருக்குள் சென்று அதை இயக்கி பட்டென ஆபிஸ் நோக்கி சென்றான்…அவன் மனம் பாரமாய் கணத்தது.

“முதன் முதலாய் கோபம்

முதன் முதலாய் முத்தம்

முதன் முதலாய் சோகம்

முதன் முதலாய் தவிப்பு

ஏனோ எட்டிப்பார்த்தது

இருகிளிகளின் இதயத்தில்”

அவள் கண்கள் மட்டும் கண்ணீர்துளிகளை உதிர்த்தது …….ஒன்று அவனிடம் கடுமையாக நடந்து கொண்டது மற்றொன்று உயிராய் நினைத்தவன் ரசித்து முதல் முறை தந்த முத்தப்பரிசை அவமானப்படுத்தியது…..இதை நினைத்து உறங்கியவளுக்கு சோகமும்…..முதல் முத்தத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியும் இரண்டு நாட்ளாய் அளவுக்கு அதிகமான காய்ச்சலில் கொண்டுபோய்விட்டது…

இவன் தான் தவறாக நடந்தை எண்ணியவாறே அவளிடம் பேசத்தயங்கியவாரே இரண்டு நாட்களாய்
சாரி என 300 குறுஞ்செய்திகள் வரை அனுப்பினான்….

இரண்டு நாள் உண்ணாமல் உறங்காமல் கவலையாக இருந்தவனுக்கு ….அவளிடம் சாரி கேட்க போன் செய்கிறான்……போன் ரிங்காகிறது…..அவள் அப்பா ராமன் மொபைலை அட்டண்ட் செய்து தேனுவிற்கு ஜொரம் அதிகமாயிருக்கு தம்பி பக்கத்துல ஊரு ஆர்.ஜே ஹாஸ்பிட்டல்ல ட்ரிப் ஏறுது….எனக்கூறவும் தேனு என இருதுளி நீர்சொட்ட கண்களை துடைத்தவாறு…..ஞாயிறு லீவில் வீட்டில் இருப்பதால் ட்ராக் டிசர்ட்டோடு தன் பல்சரை கிளப்பினான் அரைமணிநேரத்தில் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தான்….ரிசப்சனில் தேனுவின் பெயரைக்கேட்டு புவம்பியவாறே…சாரி ஹனி எல்லாம் என்னாலதான் எனப்புலம்பியவாறே இன்பேசன்ட் வார்டை நெருங்கியவன் கதவைத்திறக்த அங்கே அவளைத்தவிர யாருமில்லை…இருவர் கண்களும் தெப்பமாய் கொட்டித்தீர்த்தது …..தாயைப்பிரிந்த சேயைப்போல….அவன் அவள் இருவரும் பிரிவால் துடித்தனர்….வேகமாக அவனை அணைத்துக்கொண்டவள்……இச்சென்று அவன் இதழ்களில் முத்தம் பதித்து பிரிய மனமின்றி ஆழ்ந்து போனாள்…இவனும் இதழ்ரசம் சுவைத்த வண்ணம் மெய்மறந்துவிட்டனர்……சட்டென கதவு திறக்கும் சத்தம் கேட்டு நினைவு வந்தவர்களாய் இருவரும் விலகினர்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here