பகுதி-7
மூன்று தலை முறைகளாக ஜவுளி துறையில் வேறுன்றி இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னனாக இருக்கும் RK TEXTILES INDUSTRY யின் MD கௌஷிக் தனது உயர்ரக நவின வெளிநாட்டு காரில் வந்து இறங்கினான். அவன் வேகத்துக்கு காற்றையும் உதாரணமாக கூற முடியாது. வாசலில் வந்து இறங்கியவனை எதிர்கொண்டான் ராகுல் . கௌஷிகின் PA . கௌஷிக் எள் என்று சொல்லி முடிப்பதற்குள் அதை செக்கில் இட்டு எண்ணெய் ஆக்கி தருபவன்.(அவ்வளவு ஸ்பீடு)
“குட் மார்னிங் பாஸ்”ராகுல்.
“குட் மார்னிங் ராகுல்” கௌஷிக்.
“இன்னைக்கு அந்த ஹோட்டல் பிராஜக்ட் பத்தி பேச யார் வராங்க ராகுல் ” ஒரு சிங்கத்தின் கம்பிரத்துடன் ஆண்மையின் மிடுக்குடன் அதிவேக நடையினுடன் கேட்டுக்கொண்டே அலுவலக பணியில் இருக்கும் நபர்களின் வணக்கங்களுக்கு தலை அசைத்துக் கொண்டு தன்னுடைய கேபினுக்குள் நுழைந்தான் கௌஷிக்.
” பாஸ் இன்னைக்கு 10.30 மணிக்கு உங்கள மீட் பண்ண அந்த கம்பனியோட மேனேஜர் வரார் இன்னும் 10மினிட்ஸ் ல வர்ரேன்னு சொல்லி இருக்கார் அதற்கான ஃபைல் எல்லாம் மீட்டிங் ரூம் ல அரேஞ்ச் பண்ணி இருக்கு பாஸ் “. ராகுல்
(இதுதான் ராகுல் கௌஷிக் ஒரு கேள்வி கேட்டா அவனுக்கு கேட்க நினைக்கும் அடுத்த கேள்விக்கும் சேர்த்தே பதில் சொல்வான் )
“பாஸ் உங்கள ஒன்னு கேட்கலாமா ” ராகுல்
இதுவரை தன் லேப்டாப்பில் கண்களை வைத்திருந்தவன் ராகுலை நிமிர்ந்து பார்த்தான் .
“என்ன ராகுல் கேட்கப்போற . இப்போ ஏன் இந்த புது ஹோட்டல் பிஸ்னஸ்னு தானே ? “கௌஷிக்.
தான் கேட்க நினைத்ததை அவன் சொன்னவுடன் அதிர்ச்சி ஆனான்.”என்ன ராகுல் ஃபிரீஸ் ஆகிட்ட” கௌஷிக்.
“அது …அது… ஆமாம் பாஸ் ” ராகுல்.
” நாம கால்பதிக்காத துறையே இல்லை . இப்போ இந்த பிஸ்னஸ் செஞ்சா என்ன? “கௌஷிக்
“இதுல மத்ததபோல இல்லமா நீங்களே நேரடியா பாக்குறீங்க பாஸ்” ராகுல்
ராகுல் கூறியதில் அர்த்தமாய் சிரித்தவன் ” நீ என் நிழலவிட என்னை நல்லா தெரிந்து வைத்திருக்க போல”என்று புன்னகையுடன் கூறினான்.
அங்கு நின்றிருந்த சமயம் ராகுலுக்கு போன் வந்தது “பாஸ் மேனேஜர் வந்துட்டாராம்”
“ம் ஓகே” கௌஷிக்.
மீட்டீங் முடிந்து வெளியே வந்தவனின் முகம் பிரகாசமாக இருந்தது
அதே மகிழ்சியுடன் காரை எடுத்தவனின் கைகள் இலக்கில்லாமல் பயணித்து நின்று பார்த்தபோது அவன் சேர்ந்த இடம் கிருஷ்ணர் கோவில் . காதலின் பக்தியையும் தெய்வீகத்தையும் உணர்த்திய கடவுளின் சந்நிதியில் இருந்த அந்த அமைதி அவளின் நினைவுகளை மனதினில் நிறைத்தது..
அவளின் எண்ணங்கள் அவன் மனதை ஆட்கொண்டாலே அவன் மனம் காதலால் உருகுவதையும் ஒரு வினாடியேனும் விழிகள் பனிப்பதையும் கௌஷிக்கால் இல்லையென்று இன்றளவும் மறுக்கவே முடியாது…
அவளைக் கண்டு சில ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்றும் அவள் மூச்சிக்காற்று இவனை உரசி கொண்டிருப்பதாய் தோன்றியது…
எங்கோ இருந்தவள் … எதிர் பாராமல் என்னிடம் சேர்ந்தவள் … தீண்டாமல் தீண்டி சென்றாள்… நான் அறியும் முன்னே என்னைப் பறித்து சென்று விட்டாளே…
கண்மூடி கனா கண்டவனின் கனவிலும் அவளின் மதி முகமே வந்து இம்சிக்க அவனின் நினைவுகள் தன்னையறியாமல் அவளைப் பார்த்த அந்த நாளுக்கு சென்றது…
அன்று
தன் தந்தையின் நெருங்கிய நண்பரான ராஜரத்தினத்தின் மகள் திருமணத்திற்கு பெங்களூர் வந்திருந்தான் கௌஷிக் . அந்த திருமண மண்டபத்தில் உள்ளே நுழைந்தவனை 55 வயதில் கம்பிரத்துனுடனும் முகத்தில் புன்னகையுடனும் “welcome my young man”என்று வரவேற்றார் ராஜரத்தினம் . அவர் கூறியதில் சிரித்தவன் அவர் காலில் விழுந்து வணங்கினான்”. வா மேன் . உன்னை ஸ்வே அப்பவே கேட்டா… வந்துகிட்டு இருக்கான்னு சொன்னேன் . நீ போய் அவள மீட் பண்ணு நான் வந்தவங்கள பார்த்துட்டு வரேன்”.
” நான் போய் அவள பார்த்துட்டு வரேன் அங்கிள் ” என்றான் கௌஷிக் .
மணமகள் அறையில் தோழிகளின் அரட்டையில் முகம் சிவந்திருந்தாள் ஸ்வேதா . அறைக்குள் வந்து நின்றவன் ” ஹாய் கல்யாண பொண்ணே ” என்று கேளியில் இறங்கியவனை பார்த்து முகம் மலர்ந்தவள் பின் கோபமாக அவனை நோக்கி
“இதுதான் வர்ற நேரமா தங்கச்சி தங்கச்சின்னு சொல்லுறது எல்லாம் சும்மா …. இப்படி தான் கடைசி நிமிடத்தில் வருவாங்களா தங்கச்சி கல்யாணத்துக்கு” என்று படபடவென பொறிந்து கண்கள் கலங்கினாள் . அவள் கலங்கியதில் உள்ளம் பதற ” ஹே ஸ்வே குட்டி ஒரு முக்கியமான மீட்டிங்ல மாட்டிக்கிட்டேன் . சாரிடா நான் போய் அப்படி வருவேனா? “.அவன் கூறி அவளை சமாதனப்படுத்தினான் அதில் மனம் கனிந்தவள்
“சரி… சரி… எனக்கு நல்ல அண்ணனா இருந்து எல்லாத்தையும் நீதான் பண்ற என்ன ? “. பழைய ஸ்வேதாவாக மாறி அவனுக்கு கட்டளை இட்டாள்.
“என்னை மட்டும் திட்டுற உன் ஆன்டி அங்கிள ஒன்னும் திட்டமாட்டுற ?? ” இதெல்லாம் ட்டூ மச் ஸ்வே” என்றான் .
அவனை கடுப்பாக பார்த்து” அங்கில் எனக்கு போன் பண்ணி லண்டன்ல இருக்கேன் அப்படின்னு டூடேஸ் முன்னாடியே சொல்லி ஃபீல் பண்ணாரு . நான் தான் அவரையே …சமாதனம் பண்னேன் . அப்புறம் கிருஷ்ணா… அவனுக்கு ஸ்கூல்ல முக்கியமான பிராஜக்ட் அதுக்கு லீவு போட முடியாது நான் பேசி அவன ஸ்கூலுக்கு போக சொன்னேன். எங்க ஆன்டி அவங்க காலைல போன் பண்ணாங்க பூஜா அண்ணிக்கு 8மாசம் . அண்ணா இம்பார்டன்ட் கேஸ் விஷயமா சுத்திக்கிட்டு இருக்காங்க …சோ ஆன்டியால எப்படி வரமுடியும்??சோ உங்களதானே திட்டனும் என்று கண்களை உருட்டோ உருட்டு என்று உருட்டினாள்.
அப்படியும் அண்ணா வந்திடுவேன்னு சொல்லி இருக்காரு ம்ஹ்கூம் என்று அழகு காட்டினாள் .
பக்கத்தில் நின்றிருந்த தோழிகளிள் ஒருவள் அவள் காதில் யாருடி இந்த பாசமலர் . சும்மா ஹீரோ போல ஹான்சமா இருக்காரு எங்களுக்கும் கொஞ்சம் இன்டிரோ கொடுடி” .என்று அவள் கூறியதில் வாய்விட்டு சிரித்தவள் .
” அண்ணா இவங்கல்லாம் என் பிரண்ஸ் என்று கூறி அவர்களை அறிமுகம் செய்தாள் .” அப்புறம் காய்ஸ் இவர் என் அண்ணன் கௌஷிக் என அறிமுகபடுத்தினாள்.
ஸ்வேதா அறிமுகப்படுத்தியதில்
அவர்களின் புறம் திரும்பி “ஹாய் ” என்று புன்னகையித்தான் .
தோழிகளிடம் திரும்பி ” கீது ,வைஷூ எங்க? போனா ?” என கேட்க , அவர்களிள் ஒருவள் “மாப்பிள்ளையோட அம்மா கூப்பிட்டு போயிருக்காங்க” என்றாள் . “சே இப்பதான் இவள கூப்பிடனுமா அவங்க ” என்று மனதினுள் சலித்து கொண்டாள் .
“சரி சரி ஸிஸ்டர்ஸ் என் தங்கச்சிய பாத்துகோங்க நான் அங்கில் கிட்ட போறேன் ” என்றுகௌஷிக் கூற .
அவன் தங்கை என்பதில் அதிர்ச்சி அடைந்த அவள் தோழிகள் ” தங்கச்சின்னு சொல்லி இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுடிங்களே ” என்றனர் நெஞ்சில் கை வைத்தபடி அவர்கள் சொன்னதை கேட்டவன் கண்களில் சிரிப்புடன் ” ஸ்வே நீ ரெடியாகி வா நான் வெளியே இருக்கேன்”.என்று கூறி அறையை விட்டு வெளியேறினான் .
ராஜரத்தினத்திடம் வந்தவன் “நான் என்ன ? பண்ணனும் அங்கிள் சொல்லுங்க? என்றான் அக்கறையாக.
அவன் கேட்டதில் உள்ளம் நெகிழ்ந்தவர் ” ஸ்வே எனக்கு ஒரே பொண்ணா போயிட்டா சொந்தத்திலும் அண்ணன் , தம்பி முறையில் யாரும் இல்ல நீதான் அவளுக்கு அண்ணன் ஸ்தானத்தில் இரூந்து எல்லாம் செய்யணும்” என்றார் .
“நீங்களும், ஸ்வேவும் இதை சொல்லனுமா… இது என்னோட உரிமை அங்கிள்”என்றான் சற்றே நெகிழ்ச்சியாக .
“ஆனால் எனக்கு தமிழ் கல்யாணத்துல என்ன ?பண்ணுவாங்கண்ணு தெரியாதே !… என்றான் சற்றே சங்கடமான குரலில் .
“அவன் கூறிய விதத்தில் வாய்விட்டு சிரித்தவர் அய்யர் சொல்றாப்போல செய் … மை பாய் ஹ …ஹ… உனக்கு மாதுரிக்கிட்ட சொல்லி தமிழ் பொண்ணா பாக்க சொல்ல போறேன்” இல்ல உங்க அண்ணன் போல ஹிந்தி பொண்ண கட்டிக்கப்போறியா? என்றார் கேலியுடன் அந்த பெரிய மனிதர் .
கௌஷிக்கின் தந்தை விஜயபஸ்கரனும் ,ஸ்வேதாவின் தந்தை,ராஜரத்தினமும் கல்லூரி நண்பர்கள் கல்லூரி முடிந்ததும் விஜயபாஸ்கரன் தந்தையின் டெக்டைல்ஸ் நிறுவனத்தில் தடம் பதித்தார் . ராஜரத்தினம் தனியாக தொழில் தொடங்கும் ஆசைக் கொண்டு அதில் வெற்றியும் கண்டார் . ராஜரத்தினம் தந்தை பார்த்த மரகதவல்லி என்ற பெண்ணை மணந்தார் . விஜயபாஸ்கர் தன் உடன் பயின்ற வட இந்திய பெண்ணான மாதூரி என்றவரை விரும்பி தாய் தந்தை சம்மதத்துடன் கை பிடித்தார் . இவர்களை அடுத்து அவர்களின் மனைவிகளின் நட்பும் வளர்ந்தது .ராஜரத்தினம் தம்பதியினர் தங்களது 9வது வருட திருமண நாளில் ஏழுமலையானை தரிசிக்க குடும்பம் சகிதம் திருப்பதி சென்றவர்களின் வாகனம் விபத்துக்குள்ளனதில் மனைவியை இழந்தார் .விபத்தில் தாயை இழந்த ஸ்வேதாவை விஜயபாஸ்கரின் தம்பதிகள் தங்கள் மகளைப் போல் அன்பை பொழிந்தனர் . விடுமுறையில் ஸ்வேதாவின் வாஸஸ்தலம் மும்பை தான் .
(இவ்வளவு பாசமா இருக்க அவங்க வராத காரணத்தை ஸ்வேதாவே சொல்லிட்டா ஒகே வா )
அவர் கூறியதில் அவன் கண்கள் மின்னின தான் காதல் கொண்ட பெண்ணின் முகம் மனக்கண்ணில் ஒரு முறை வந்து போனது அப்போது .
மணமேடையில் அய்யர் ” நாழி ஆகறது பொண்ண அழச்சிண்டு வாங்கோ” என்று குரல் கொடுத்தார் .
மணவரையை நோக்கி அழகு தேவதையை போல வந்துக்கொண்டிருந்த ஸ்வேதாவின் பக்கத்தில் இருந்தவளை கண்டவனின் கண்கள்… இமைகளை மூட மறுத்தன …எங்கே அவள் மறைந்து விடுவாலோவென. பின்னே இருக்காதா இன்று அவன் கனவில் கண்ட பெண்ணே அதே புடவையில் அழகு கொஞ்சும் செப்பு சிலைப்போல் இருந்தவளை (என்ன? ஒன்னு தாலி , வகிட்டு குங்குமம் மிஸ்ஸிங்) கண்டுக்கொண்டானே !
மேடையில் நின்று தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்தவளின் சிவந்த கன்னத்தில் விழந்த முடி கற்றையும் ,அதனை ஒதுக்கிய வெண்டை பிஞ்சு விரல்களும், அவளின் பேச்சிற்கு பேச்சு மாறும் முகபாவமும் ,அதில் இருந்த மலர்ச்சியையும் , அவள் தலை அசைப்புக்கு ஏற்றபடி காற்றில் அசைந்து ஆடும் தோடும் , ஆரஞ்சு சுலை இதழ்களின் ஓரத்தில் இருந்த மச்சத்தின் அழகில் மயங்கி கொண்டிருந்தான் .
அவளிடம் ( மாப்பிள்ளை) மகேஷின் அம்மா ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .அதற்கு முகம்மலர தலை அசைத்து அவருடன் சென்றாள் . அப்போது”கௌஷிக் மேடைக்கு வா பா “என்று ராஜரத்தினம் அழைத்ததில் சுற்றுபுறம் உணர்ந்தவன் மணமேடையை நோக்கி சென்றான் .
“கெட்டி மேளம்… கெட்டிமேளம்…”என அய்யர் குரல் கொடுத்தார் .
ஸ்வேதாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்ட “வைஷூ நாத்தனார் முடி போடுமா என குரல் கொடுத்தார் மகேஷின் தாய்”
அவர் கூறியவுடன் மகேஷ் இரண்டு முடி போட மூன்றவது முடியை வைஷூ போட்டு ” அண்ணா கங்ராட்ஸ் அன்டு Wishing you an amazing life together, மை டியர் sweet heart . “வாழ்த்தியவளின் கைபேசி ஒலிக்க இப்போ வந்துடுறேன் டார்லிங் என்றவள் மேடையை விட்டு கீழ் இறங்கி சத்தம் குறைவான இடத்திற்கு சென்றாள் . அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டாருந்தவனை “பொண்ணுக்கு உடன் பிறந்தவா சித்த வாங்கோ” என்ற அய்யரின் அழைப்பில் தன்னிலை உணர்ந்தான் (இந்த அய்யர் ரொம்ப டிஸ்டப் பண்றார்)
“யாரச்சும் “கவனிச்சி இருப்பாங்களோ சே … இப்படி அடிக்கடி ஃபிரிஸ் அகிடுறோமே”
என்று பார்வையை சுழலவிட்டவனின் முகத்தில் கோபம் குடிகொண்டது .சில இளைஞர்களின் பார்வை அவளையே சுற்றிக்கொண்டு இருந்ததை பார்த்தவனுக்கு கண்கள் சிவந்தது” ( ஹி… ஹி… ஹீரோ சாருக்கு அவரோட ஆள மத்தவங்க சைட் அடிக்க கூடாதம் என்ன ஒரு நல்ல எண்ணம் ) இங்க இருந்து போறத்துக்குள்ள எப்படியாவது அவள பத்தி தெரிஞ்சிக்கனும் நம்ம லவ்வுக்கு ஓகே சொல்ல வைக்கனும் என்று நினைத்து கொண்டான் .
அய்யர் சொல்லும் மைத்துனர் செய்யும் சடங்குகளை முடித்தவன் அவன் தாய் அனுப்பிய பரிசையும் அவனுடைய பரிசையும் கொடுத்து மணமக்களை வாழ்த்தினான். பின் தன் மனதில் நிறைந்திருந்தவளை மண்டபம் முழுவதும் சளித்து தேடியவனின் கண்ணில் சிக்காமல் போனாள் அவனின் தேவதை .
அன்று தெரியாது அவன் தேடாமலே அவனுடைய தேவதையின் கரம் பற்றும் காலம் தொலைவில் இல்லை என்று .இன்று அவளை தொலைத்து விட்டு தன்னிடம் என்று சேருவாள் என்று ஏங்கும் நிலையில் இருப்பவனுக்கு.