நிழல் போல் தொடர்வேனடி 1

0
415

வணக்கம் நண்பர்களே….

இது என் முதல் கதை எதிர்பாரமல் பார்த்த பெண்ணின் மேல் காதல் கொண்டு அவளையே கரம் பிடித்தவனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சுவரஸ்சியமாக எழுத முயன்றிருக்கிறேன்

கேட்டவுடன் இந்த தளத்தில் எனக்கு எழுத வாய்பளித்த மது அக்கவிற்க்கு நன்றி

Pls support me friends……

நின் முகம் கண்டேன்
பகுதி-1
ரம்மியமான காலை பொழுதில் இதமான தேனீருடன் பால்கனியில் அமர்ந்திருந்த அவளுடைய மனதில் அவளின் நாயகனின் நினைவுகள் வலம் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் ஒரே நொடியில் கலைத்தது அவளது 5 வயது மகள் வானதியின் குரல் . நினைவுகளை பின்னோக்கிநகர்த்தி விட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள் அவள் “அம்மா எல்லாம் ரெடியா ? ஏன் மா என்னை சீக்கிரம் எழுப்பல இன்னைக்கி எனக்கு ஸ்கூல்ல பாட்டு போட்டின்னு சொல்லி இருந்தேன்ல ” என்று சொல்லிக்கொண்டே வந்தால் குட்டி இளவரசி வானதி.

“சிறு புன்னகையுடன் இல்லடா செல்லம் டைம் அப்படி ஒன்னும் அதிகமா ஆகலை இப்போ கிளம்பினாதான் சரியா இருக்கும்” என்று காலை உணவினை தயாரித்தாள் வைஷ்ணவி.
வானதி வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை, பாலில் ஒரு துளி சந்தனம் விழுந்தது போல் நிறம், கயல் விழிகள் , தோல் வரை புரளும் கூந்தல் அச்சு பிசகு இல்லாமல் பேசும் பொற்சித்திரம். அம்மாவிடம் கிடைத்த கேள்வி ஞானத்தால் இனிமையாக பாடும் வரம் பெற்றவள்.

ஹைதராபாத்தில் புகழ் பெற்ற பள்ளியில் முதலாம் வகுப்பில் பயிலும் மாணவி வானதி. அப்பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவிற்காக தயாராகி கொண்டிருந்தாள்.

“வைஷூ..வைஷு… என்னமா செய்ற ? குல்லு ரெடி ஆகிட்டாளா ? நீ ரெடியாமா கிலம்பலாமா ?” என்று படி இறங்கினார் அத்தை ஊஷா.

பொட்டு மட்டும் தான் வைக்கனும் . இதோ வறேன் அத்தைன்னு அறையில் இருந்து குரல் கொடுத்தால் வைஷு என்கின்ற வைஷ்ணவி. வட்ட முகம், மான் விழிகள் , திருத்திய வில் போன்ற புருவம், கூர் நாசி ,செதுக்கிய ரோஜா இதழ், இடை வரை நீண்ட கூந்தல் அவளுடைய தந்த நிறத்திற்கு அடர் கரும்பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் அங்காங்கே தெரித்தார்போல் வெள்ளை முத்துக்கள் பதித்த புடவை மேலும் பாந்தமாக பொருந்தி அழகுக்கு அழகு சேர்த்தது.

வீட்டை விட்டு வெளியே வரும் சமயம் பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வந்தாள் வசுதா வைஷூவின் தோழி . வசுதாவிற்கு 5 வயதில் தான்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது . இருவரும் இந்தியாவில் பல கிளைகளைககொணட national buildersஸில் வேலை பார்க்கின்றனர் .வைஷூ 5 வருடங்களுக்கு முன் ஹைதராபாத் வந்த புதிதில் வசுதாதான் எல்லா ஊதவிகளையும் செய்தது.

வசுதாவின் கணவர் பரத் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் 6 மாதத்திற்கு 1 முறை இந்தியா வருவார். தான்யாவிடம் இருப்பது போல் வானதியிடமும் அன்பாக இருப்பார் வசுதாவிடம் பேசி பேசியே தெலுங்கு சரளம் இப்போது.

“ஏண்டி வைஷூ குல்லு ரெடியிந்தா போத்தாமா”( ஏன் டீ வைஷூ குல்லு ரெடியாயிடிச்சா போகலாமா)என்று தெலுங்கில் வினவினாள் வசுதா.

“தலுபேசி பிகானி திஸ்கோனி ஒஸ்தானு பன் டி தகர வெய்ட் செய் ” ( கதவ பூட்டி விட்டு சாவி எடுத்துகிட்டு வரேன் வண்டி கிட்ட வெய்ட் பன்னு) என்று கூறினாள் வைஷூ.

வசுதா ,அவள் மகள் தான்யா, வைஷூ, வானதி , உஷாஆகியோர் ஆண்டு விழாவிற்கு காரில் புறப்பட்டு சென்றனர். வசுதா வானதியிடம்”ஹே குல்லு அந்தங்கா உன்னாவுரா நாக்கு ஒக்க முத்து பெட்ற்றா” ஹே குல்லு அழகா இருக்கடா…எனக்கு ஒரு முத்தம் கொடுடா…) போ அத்தமா நேநு இய்யனு ” ( போ அத்தை …நான் தரமாட்டேன் ) என்று வானதி கூற ஏன் குல்லு அப்படி சொல்ற என வைஷூ கேட்டாள்

“மா அத்தமா இன்னைக்கு லேட்டு நாங்க போட்டியில கலந்துக்க போறோம் ஆன கொஞ்சம் கூட பொருப்பே இல்லம்மா. அவங்களுக்கு எதுவும் கிடையாது எல்லாம் தான்யாக்கு மட்டும் தான்” என்று கூறி தான்யாவிற்கு முத்தத்தை பதித்து வசுதாவை பார்த்து பழிப்பு காட்டி சிரித்தாள் வானதி .

“ம்கும்…. போவே தரவாத்த சுஸ்கோன்டானு சிலக்கம்மா ” (சிலக்கம்மா means கிளியம்மா) என்று நொடித்தால் வசுதா.

‘சிலக்கம்மாவா இறுங்க மா …. இறுங்க ஊர்ல இருந்து மாமா வரட்டும் உங்கள மாட்டி விட்றேன் எத்தன வாட்டி சொல்றேன் அத்தம்மா சொல்லாதிங்கன்னு. ம்ஹம்…ம்ஹம்… எனக்கு கிளி மாதிரியா இருக்கு மூக்கு அழகா தானே இருக்கு…”. வானதி கொஞ்சும் தோரனையில்

“நீ அழகு டியர் சும்மா லோலோலாய்க்கு சொன்னேன்டா”. வசுதா

“ஏய் குல்லு அம்மா பாவம் விட்டுடு நம்ம சின் சேன் பாக்கலாம் வா. மாா… போன் குடு மா” என்று அவளுக்கு தெரிந்த முறையில் சமாதானம் செய்தால் தான்யா. இறுவறும் ஒரே வகுப்புதான் ஒன்றாகதான் இருப்பார்கள் சண்டை என்று வந்தால் இருவறும் அவர்களை உண்டு இல்லை என ஆக்கி விடுவார்கள் .

“ஹே தானு டேன்சுல அந்த பூசணிக்கா ஆடுறத விட நீ சூப்பரா ஆடனும்…அன்னைக்கு தெரியாம அவளோட தண்ணி பாட்டில தள்ளுனதுக்கு அந்த மங்கி எப்படி திட்டினா ?”.என்று கண்களை உருட்டி அபிநயம் பிடித்தால் வானதி

“விடு குல்லு ஒரு கை பாக்கலாம் அந்த பூசணிக்காய”.வானதிக்கு ஐ- பை கொடுத்தால் தான்ய.

“இதுகளுக்கு எப்படிதான் இதெல்லாம் பேச தெரியுமோ பயபுள்ளைக வயிற்றிலேயே பிராக்டீஸ் பண்ணி இருப்பாங்களோ நாம்மள விட அதிகமா பேசுராலுக “. என்று நினைத்தால் வைஷூ

“வைஷூ இவங்க ரெண்டு பேறும் பேசுற பேச்ச பாரு டி பெரிய பசங்க போல “.என்றால் சுதா

” உங்க ரெண்டுபேரோட ஜெராக்ஸ் காப்பில்ல அப்படித்தான் இருக்கும்”என்று கிண்டலாக கூறினார் உஷா.

.ஒரு வழியாய் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர் .வானதி பாட்டு போட்டியிலும் தான்யா நடன போட்டியிலும் பங்கு பெற்றனர்

தான்யாவின் நடன போட்டிதான் முதலில் நடைபெற்றது அவளுடைய பிரிவில் முதல் பரிசு பெற்றாள். வைஷூவிற்கும் தான்யாவிற்கும் ஒரு டீல் முதல் பரிசு பெற்றார்கள் என்றால் ஐஸ் கீம் என்று …..மேடையிலிருந்து இறங்கி வந்த தான்யா”அத்தமா நியாபகம் இருக்கா ஐஸ் க்ரீம்”என்றால் ஆவலாக”.

“ஓகே டியர் அத மறப்பேனா இன்னைக்கு வீட்டுக்கு போகும் போது டீரீட் ஓகே” என்று கூறினாள் வைஷூ

அடுத்து பாட்டு போட்டி ஆரம்பம் ஆயிற்று நான்காம் நபராக மேடை ஏறினாள் வானதி . அவள் பாட ஆரம்பித்தும் அதை கேட்ட வைஷூவிற்கு தன்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.

தன்னுடைய வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருந்த இந்த பாடலை தன் மகள் பாடி கேட்டதில் எல்லையில்லா ஆனந்தம் கண்ணீராக ஊற்றெடுத்து.

பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா

பாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்று மேடையில் இருந்து கீழ் இறங்கி வந்து வானதி குழலியை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கும் வரை சுயநினைவை பெறவில்லை வைஷூ.

வானதி இந்த பாடலைதான் பாட போகிறாள் என்று வைஷூவிற்கு தெரியாது அவளுக்கு அடுத்த வாரம் மும்பைக்கு உயர் பதவியுடன் மாற்றலாகிறாள் என்பதால் வேலை பளுவின் காரணமாக குழந்தையுடன் நேரம் செலவிடமுடியாமல் வசுதாவிடமும், அத்தையிடமும் வானதியை பார்த்துகொள்ள சொல்லியிருந்தாள்.

வானதி முத்தம் கொடுத்ததும் நினைவு வந்தவளாக குழந்தையை அள்ளி அனைத்து முத்தமழை பொழிந்தாள். “ஹே செல்லம் சூப்பரா பாடின ..அம்மாக்கு ரொம்ப ஹெப்பி டா .

ஹே..ஹேஹே.. தங்ஸ் மா லவ் யூ மா நீயும் சொல்லு நான் சொன்ன பதிலுக்கு நீயும் சொல்லனும்னு சொல்லி இருக்கேன்ல”என்றாள் வானதி

“அப்படிங்களா மேடம் நீங்க சொன்னா உடனே நாங்க சொல்லனுமா ? எல்லாம் உங்க அத்தமா செய்ற வேலை அவளுக்கு இருக்கு ” என்று மகளை சீண்டினாள் வைஷூ .

“அம்மா … ” என்று சினுங்கினாள் வானதி.
“ஓகே ஓகே …கோச்சிக்காதிங்க மேடம் லவ் யூ டூ டியர்” என்று வானதியை அணைத்து கொண்டாள் வைஷூ.

இந்த ஓர் பழகத்தில் மட்டுமே் வசுதாக்கும் வானதிக்கும் ஒற்றுமை மற்றபடி செல்ல சண்டைகளும் சின்ன சின்ன சமதானங்களுடனும் இருப்பர்.

பாட்டி நல்லா பாடினேனா?.. உங்களுக்கு என்னடா செல்லங்களா நீ அருமையா பாடின அவ அழகா ஆடினா உனக்கு உங்க அம்மா போல குரல் நீ பாடும் போது அவளே சின்ன வயசுல பாடியது போல இருந்துச்சி டா என்றார் உஷா.

விழா முடிந்தது அனைவரும் ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றனர்.
“வைஷூ எனக்கு வேண்டாம் மா… தல வலி வந்திடும் நீங்க சாப்பிடுங்க”உஷா

அம்மா நீங்க காபி குடிக்கிறீங்களா என்றாள் வசுதா . சரிம்மா சுதா எனக்கு காபி சொல்லிடு என்றார் உஷா பிறகு அவரரவர்களுக்கு பிடித்த ஐஸ் கிரீம்களை வாங்கிக் கொண்டனர். அன்று நாள் மிகவும் சந்தோஷமாகமாகவே இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் அத்தையை ஓய்வு எடுக்க சொன்னாள். .மகளை தூங்க வைத்து தானும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து இரவு உணவை தயாரிக்க ஆயத்தமானாள்.

வேலை நாட்களில் எல்லாம் உஷாதான் சமைப்பார் விடுமுறை நாட்களில் சமையல் அறையிலே அவரை விடமாட்டாள் வைஷூ. சப்பாத்தியும் அதற்கு தோதாக வெஜிடபிள் குருமாவும் செய்து வைத்திருந்தாள். இரவு சாப்பிட அமர்ந்த சமயம் “அத்த நாளைக்கு லீவு ,துணி எல்லாம் பேக் பண்ணி வைச்சிடலாம் அப்பறம் என்னால உங்க கூட உதவி செய்ய முடியாம போய்டும் .வொர்க் வேற அதிகமா இருக்கு” என்றால் வைஷூ”.

‘சரிடா உன்னால முடிஞ்சத மட்டும் செய். மத்தத நான் பாத்துக்கிறேன்” உஷா.

“அம்மா தான்யாவ விட்டு எனக்கு வரவே புடிக்கலம்மா ,அம்மா பிளீஸ் மா இங்கயே இருக்கலாம்மா,”என்று பாவமாக முகத்தை வைத்து கெஞ்சிக் கொண்டிருந்தாள் வானதி.

வைஷூ அவளை சமாதனப்படுத்தும் விதமாக “என் தங்கபட்டுல்ல என் செல்லம்மால்ல நாம இப்போ கிளம்பி போவோம், லீவுக்கு தான்யா , அத்த , மாமால்லாம் ஊருக்கு வருவாங்க நீயும் இங்க வரலாம் .அப்புறம் வீடியோ கால் பண்ணலாம் ஓகே வா என்றாள் .

‘என் வைஷூவையே குழந்தையா நினைச்சிக்கிட்டு இருக்கேன் .அவ எவ்வளவு மாறிட்டா துருதுருன்னு இருந்த பொண்ணு இவ்வளவு பொறுமையா குழந்தைகிட்ட பேசுறா! அவளுக்கு எப்போதான் நல்ல காலம் பிறக்குமோ? அவளோட வாழ்க்கை சந்தோஷத்துடன் பூத்து குலுங்கும் நந்தவனமாய் மாறனும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். பின் ஏதோ நினைவு வந்தவராக “மும்பைல வீடு எப்படிம்மா போய்தான் அரேஞ்ச் பன்னனும இல்ல ஆபிஸ்ல தருவாங்கலா? “.

” ஆபீஸ்ல அரேஞ்ச் பண்ணிடுவாங்க அத்த. கவலை வேண்டாம் .அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபிஸில் ஜாயின் செய்ய வேணும் இந்த பர்னிச்சாஸ் எல்லாம் சுதா கிட்ட சொல்லி செகண்ட் சேல் பண்ணிடலாம்”.

” சரி அப்படியே செய்யலாம்டா . குல்லு சாப்பிட்டா பாரு நீயும் சாப்பிட்டு போய் படு நான் எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிறேன்.

” இல்ல அத்த நீங்க போய் படுங்க நான் பாத்துக்குறேன்” வைஷூ

“குல்லு வாடா அம்மா வருவா என்றார்” உஷா.”ஓகே ஆபிஸர்” என்றாள் கார்டூனில் வரும் கதாபாத்திரத்தின் துள்ளளுடன்.

“உனக்கு வாய் அதிகமாயிடுச்சி வானதிஈஈஈஈ” என்று அழுத்தி உச்சரித்தால் வைஷ்ணவி. கோபம் வரும் சமயம் மட்டும் மகளின் பெயரை குறிப்பிடுவாள். “பெரியவங்கக்கிட்ட மரியாதையா பேசனும்னு சொல்லி இருக்கேன்ல” தாயின் குரலில் உள்ள கோபத்தை உணர்ந்த வானதி “மா சும்மா விளையாட்டுக்கு தான் மா சொன்னே”என. சமாளித்தாள் வானதி.”ம் சரி போ” என்று அதே தொணியில் கூறினாள் வைஷ்ணவி .

வைஷ்ணவிக்கு படுக்கையில் விழுந்ததிலிருந்து “அவன் தன்னை புரிந்து கொண்டிருப்பானா என்னனைப்போல் அவனுக்கும் என் நினைவு இருக்குமா அவனை பிரிந்தது வந்து 5 வருஷம் ஆகிடுச்சி வீட்டில் கட்டாயபடுத்தி வேற கல்யாணம் செய்து வெச்சிருப்பாங்களோ என்று நினைக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது. “சே இதென்ன நினைப்பு அவரை விட்டு வந்தாச்சு நல்லா இருந்தா சந்தோசம்தான் எனக்கு என் பொண்ணு இருக்கா. அவ போதும் எனக்கு “. என்று தன்னை தானே சமாதானம் செய்து தூங்க முயற்ச்சித்தாள். சூரியனின் நித்திரை கலைந்த போது இவள் நித்திரையில் ஆழ்ந்தாள்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here