இரவு பதினொரு மணியை நெருங்கி கொண்டிருக்க விடாமல் போன் அடித்தபடி இருந்தது. எங்கோ சத்தம் கேட்டது போல் இருக்க தனது பெட்ஷிட்டை இழுத்து் போர்த்திபடி திரும்பி படுத்தான் கதிரவன் என்கின்ற கதிர். செல் பேசியோ விடாது ஒலிக்க அரை தூக்கத்தில் எடுத்து காதில் வைத்தவனுக்கு அடுத்த நொடியே தூக்கம் கலைந்து இருந்தது. எதிர் முனையில் இருந்த குரலின் பதற்றம் இவனை பற்றி கொள்ள ஆரம்பித்தது.
கதிர் இங்க கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சி. உடனே வா.
பானு இப்போ நீ எங்க இருக்குற . பானு இன்று வரை புரியாத புதிர் தான் அவனுக்கு. விலகவும் முடியாமல் தொடரவும் முடியாமல் அவனது தவிப்பு மொத்தத்திற்கும் சொந்தகாரி.
நானும் திவ்யாவும் மூவி பார்த்துவிட்டு திரும்பி வந்துவிட்டு இருந்தோம். இங்க ரோட்டில் மூனு பேர் வம்பு பண்ணிட்டு இருக்கறாங்க. நீ சீக்கிரம் வா ….கூடவே கலவையான சத்தமும் காதில் விழுந்தது.
எந்த இடம் சொல்லு. போனை ஆப் பண்ணாதே..
இங்க நூறடி ரோட்டில….
பேச பேசவே சட்டையை மாட்டியவன் அருகில் இருந்த கட்டிலில் தூங்கி கொண்டிருந்த நண்பன் ஈஸ்வர் யை எழுப்பினான். டேய் எழுந்திரு …. அவசரமாக வெளிய போகணும் வண்டியை எடு.
ஏண்டா தூங்கும் போது எழுப்பற. என்னடா உன் பிரச்சனை.
வா . வந்து வண்டியை எடுத்து. பானு கூப்பிட்டு இருக்கிறா. திவ்யாவும் அங்கே இருக்கிறா. திவ்யா என்கிற பெயர் உடனே வேலை செய்ய வேகமாக சட்டையை மாட்டியவன் வெளியில் வர அதற்கு முன்பே வண்டியை ஆன் செய்திருந்தான்.
நீ நகரு .நான் வண்டியை ஓட்டறேன்.எந்த இடம்.
இடத்தை சொன்னதும் வண்டி ஜெட் வேகத்தில் பறந்தது. எதிர் முனையில் இருந்தவளிடம் கிளம்பியாச்சு. இன்னும் பத்து நிமிடம் அங்கே வந்திடுவோம்.
சொல்லும் போதே …
ஏய் என்ன பண்ணற. திவ்யா. … அவ கைய விடு. ..
கேட்ட குரலால் இன்னும் இதய துடிப்பை எகிற செய்தது கதிருக்கு. கொஞ்சம் வேகமாக போ.பத்து நிமிடம் சொன்னவன் ஏழாவது நிமிடத்தில் அந்த இடத்தை அடைந்து இருந்தனர். திவ்யாவின் கையை ஒருவன் பிடித்து இழுக்க இன்னொரு புறம் இவள் அவனை கையை தட்டி விட்டு கொண்டிருந்தாள்.
அருகில் சென்றதும் வண்டியில் இருந்து இறங்கிய ஈஸ்வர் திவ்யாவின் கையை பிடித்து இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டவன். என்ன பிரச்சனை…. திவ்யாவை முறைத்தபடி கேட்டான்.
சார். ஏன் எங்கள அடிக்கறிங்க. இந்த பொண்ணு வண்டியை எங்க மேல விட்டுட்டு சண்டை போடுது .
மூவருமே குடித்து இருக்க ஒரு நிமிடத்தில் தெரிந்து விட்டது என்ன நடந்திருக்கும் என .கதிரோ போலீஸ்க்கு போன் பண்ணிட்டு தான் வந்து இருக்கிறோம்.
என்ன பண்ணலாம்.
அந்த ஒரு சொல்லே அவர்கள் நகர போதுமானதாக இருந்தது. சற்று தொலைவில் சாய்ந்து கிடந்த ஸ்கூட்டியை நிமிர்த்தியவன் எதுவும் சொல்லாமல் பானுவிடம் நீட்ட வண்டியை ஆன் செய்தவளை ஈஸ்வரின் குரல் தடுத்தது.
நாட்டு நடப்பு தெரியுமா இல்லையா. வெளியில் சுத்த நேரம் இல்லையா.ஒரு தடவை சொன்னா கேட்க மாட்ட இல்லையா…அத்தனையும் திவ்யாவை பார்த்து திட்ட…
பானுவோ திவ்யாவை திட்டாத. நான் தான் கூப்பிட்டுட்டு வந்தேன்.
திவ்யாவோ ஏய் அவன் உன்னைத் தான் திட்டறான்.இப்போது வண்டியை கதிர்
ஆன் செய்திருக்க…
முன்னாடி போங்க. பின்னாடி வீடு வர வர்றோம். பின்னாடி ஈஸ்வர் வண்டியில் ஏறியவுடன் வண்டியை எடுக்க…
முன்னாள் அவர்கள் செல்ல வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தி அவர்கள் உள் செல்லும் வரை பார்த்த பிறகே வண்டியை திருப்பினான்.
பின் இருந்த ஈஸ்வரோ எல்லாம் நீ குடுக்கற இடம்டா. நீ வேணாம். ஆனா நடு ராத்திரி ஏதாவதுன்னா உன்னை கூப்பிடுவா . அப்படிதான….
அவன் திட்டிய எதற்கும் எதுவும் பேசாமல் அமைதியாக வண்டியை திருப்பியவன் தனது வீட்டுக்கு வண்டியை விட வந்தவன் தனது கட்டிலில் படுப்பதற்கு முன்பு ஈஸ்வரை பார்த்து நான் தோற்க மாட்டேன்டா.
இனிமே தோற்க என்ன இருக்கு . இன்னும் எதை இழக்க போற. ஏற்கனவே எல்லாத்தையும் இழந்தாச்சு. எல்லாம் முடிஞ்சிடுச்சு வான்னா வரவும் மாட்ட. இன்னும் எத்தனை நாள்ன்னு பார்க்கறேன். சொல்லியவன் அடுத்த கட்டிலில் படுத்தான்.படுத்தவன் உடனே உறங்கி விட்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் கதிர்.
தொடரும்.