நீயே என் உலகமடி_10

0
374

இருவரும் சேர்த்து உருண்டு வர சமதளத்திற்கு வரவும் அவனை விட்டு நகர்ந்தவள் யோசிக்காது அடிக்க ஆரம்பித்தாள் பானு.

யார் உன்னை என் பின்னாடி வர சொன்னது. நான் சொன்னேனா. என்னை காப்பாத்தவான்னு. அடித்த கையை பற்றியபடி…

லூசா நீ… விழுந்தேன்னா எழும்பும் கூட மிஞ்சாது. அறிவில்ல . இத்தனை நாள் இதையா படிச்ச . நீ படிச்சவதானே.. பிரச்சனை வந்தா எதிர்த்து போராடணும் அத விட்டுவிட்டு இப்படி சாக போவாங்களா…

சும்மா பேசாத.. சாக கூட தைரியம் வேணும். என்னவோ கோழைன்னு சொல்லற.

இப்ப என்னதான்மா உன் பிரச்சனை. யாராவது…. பசங்க லவ் பண்ணறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா….

பானு கதிரை முறைக்க ஆரம்பிக்க…

இல்லையா… அப்படின்னா உனக்கு கேன்சர் மாதிரி ஏதாவது பெரிய வியாதியா.. இன்னும் மூனு இல்ல ஆறு மாசத்துல சாகற மாதிரி….

இதை கேட்டவள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். அவளுடைய சிரிப்பு அவ்வளவு அழகாய் இருக்க அவளையே பார்த்து இருந்தான் கதிர்.

சிரிப்பின் ஊடே நீ நிறைய தமிழ் சினிமா பார்ப்பியா. அதுதான் இப்படி யோசிக்கற.
ஆறு மாசத்துல சாகறதா இருந்தா இங்க வந்து ஏன் குதிக்கணும்.

நிறைய பார்க்க மாட்டேன். வாரத்துக்கு ஐஞ்சு தான். சரி நீ இப்ப சொல்லு. ஏன் குதிக்க போனேன்னு…

சொன்னால் உனக்கு புரியுமா…

நீ மொதல்ல சொல்லு புரியுதா இல்லையான்னு பார்க்கலாம்.

எனக்கு. .. நான் ஐந்தாவது படிக்கும் ஒரு அக்ஸிடெண்ட்ல அம்மா அப்பா ரெண்டு பேரையுமே ஒரு கார் விபத்தில் இழந்துட்டேன். பின்னாடி சீட்ல தூங்கிட்டு இருந்த எனக்கு சின்ன அடி கூட இல்ல.
ஆனால் அதுகப்புறம் நிறைய பார்க்க வேண்டி இருந்தது. சொந்தம்ன்னு சொல்லி ஒரு கூட்டம் அவங்கள சமாளிக்க முடியலை. எல்லோருக்கும் எங்களோடு பணம் தான் வேண்டி இருந்தது. என்னை கவனிக்க ஆள் இல்ல.

அப்போ தான் அப்பாவோட ப்ரெண்ட் வக்கீல் அங்கிள் வந்தாங்க. அவங்க தான் அப்பாவோட கடைசி நிமிடத்தில் கூட இருந்தவங்க. கார்டியன் பொறுப்பு எடுத்துகிட்டாங்க. அதுக்கறம் சொந்த காரங்க எல்லோரும் இனி எதுவும் தேறான்னு விழகி போயிட்டாங்க. என்ன ஊட்டில ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்க
வைக்க சேர்த்து விட்டாங்க…. சொல்லியவள் நிறுத்தி அவன் முகம் பார்க்க…

சொல்லு கேட்டுட்டு தான் இருக்கறேன்….

ம்… அங்கே அந்த நிறைய கஷ்டப்பட்டேன்.
அம்மா அப்பா இல்லாதது சரியான வழி காட்ட யாரும் இல்லாம… இப்படி. .. அங்கிள்
லீவுக்கு வீட்டுக்கு கூப்பிட்டு போவாங்க. ஆனாலும் எனக்கு ஒட்டுதல் இல்ல. நமக்கு ஊரிமை இல்லாத இடம்ன்னு. அவங்கல தப்பு சொல்ல முடியாது ஆனாலும் என்னோட நிலைமை இப்படி தான் இருந்துச்சு. அங்கே ஹாஸ்டல்ல என் கூட தங்கி இருந்த ஒரு அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.

ஆனா அதுவும் நான் டென்த் படிக்கும் போது அவங்க டூர் போன இடத்தில் நடந்த விபத்தில் இறந்துட்டாங்க . அதுக்கபுறம்
யார் கிட்டேயும் ப்ரெண்டா இருந்தது இல்ல.
நாம பிரியமா இருந்தா நம்மல விட்டுட்டு போயிடுவாங்கன்னு பயம்.

திவ்யா வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் மாறிடுச்சு நினைச்சேன்….

சரி இப்ப என்ன பிரச்சனை. ..

அது….நான் டென்த் படிக்கும் போதே முடிவு பண்ணி இருந்தேன். காலேஜ் முடிக்கும் போது கடைசி வருஷம் இத மாதிரி எங்கேயாவது உயரமான இடத்தில் இருந்து குதிச்சு இறந்திடணும்ன்னு…

என்ன ஒரு புத்திசாலி தனம்… சரி உன் அங்கிள் என்ன ஆனாரு..

டென்த் படிக்கும் போதே வர மாட்டேன்னு சொல்லிவிட்டேன். இப்ப தான் சமீபத்தில் இங்க வந்து என்னுடைய சொத்து பணம் எல்லாத்தையும் செட்டில் செஞ்சிட்டு போணாங்க. ஏதாவது இருந்தாலும் என்ன கூப்பிடு. நான் வந்து பார்த்துக்கறேன்னு சொல்லிட்டுதான் போணாங்க…

எல்லாம் சரி. அவங்கல பார்த்தா நல்லவங்கலா தான் தெரியறாங்க. பிரச்சனை உன் கிட்ட தான். நீ தான் உன்னை மாத்திகணும். நல்லா தான் போச்சு அப்புறம் என்ன. …

உனக்கு நான் சொன்னது புரியவில்லையா. எனக்கு யாருமே இல்ல. இதே தான் எனக்கு தோணிட்டு இருக்கு. நாம ஏன் தனியாக இருக்கணும்.

பணத்துக்கு பிரச்சனையாக இருக்கு.

அதெல்லாம் என் கிட்ட நிறையா இருக்கு.

அப்ப ஒன்னு செய். இது தான் உன் பிரச்சனைன்னா நான் உனக்கு துணையாக இருக்கிறேன். கடைசி வரைக்கும் என்ன சொல்லற.

எப்படி…

உனக்கு என்ன பிடிக்கும் தான….

ஆமாம். ஏன் கேட்கறிங்க ..

அப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கோ. உன்னை எந்த நிமிடமும் தனியா விட மாட்டேன்.

குழப்பத்தோடு அவன் முகம் பார்க்க….

என்ன. ஓகேவா. ஊர்ல அப்பா கிட்ட சொல்லிட்டு வரேன். சரியா.

சரியா வருமா… இல்லையா எதுவுமே தோனாமல் தலை ஆட்ட அடுத்த மாதத்தில் தந்தையை எதிர்த்து மணந்து கொண்டான் கதிர். தம்பதிகள் இருவரும் தற்போது கதிர் இருந தான் வீட்டில் குடி புக அப்போதே சொல்லி விட்டால் பானு. எனக்கு தனி ரூம் வேணும். நம்மல பத்தி புரிஞ்சதுக்கு அப்புறம் தான் எல்லாம் என்ன ஆரம்பிக்க இவனும் மகிழ்ச்சியோடு தலை ஆட்டியது முதல் தவறு என பின்னாளில் உணர்ந்து கொண்டான் கதிர்.

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here