நீயே என் உலகமடி_15

0
337

நிச்சயம் முடிந்து பத்து நாட்கள் முடிந்திருக்க காலையிலேயே பானுவின் போனில் உமா அழைத்து கொண்டு இருந்தாள். போனை எடுத்து பார்த்த திவ்யா. ..

பானு உனக்கு தான் போன்… பேசு கைகளில் தந்து விட்டு நகர…

ஹலோ உமா… என்ன காலையிலேயே போன். எதிர் பார்க்கவே இல்ல…. என்ன விஷயம்பா….

அண்ணி பத்திரிகை அடிச்சு வந்திடுச்சி… குல தெய்வம் கோவிலில் வைத்து கும்பிட்டுவிட்டு கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. இன்னும் ரெண்டு நாளையில கோவிலுக்கு போகணும். நீங்களும் வாங்க. … அண்ணா கிட்ட சொன்னேன். அவன் உங்களுக்கு வேலை இருக்குமின்னு சொன்னான். எனக்கு நீங்க வந்தா கம்பட்டபிளா இருக்கும். அதுமாதிரி தான் கூப்பிடறேன். அண்ணா எங்க அண்ணி….

இதை கேட்டதும் மொத்த தூக்கமும் கலைய வேகமாக எழுந்து அமர்ந்தாள்…

வாக்கிங் போயிட்டாங்களா….

ஆமா… நீ சொல்லு…

அண்ணி அண்ணா கூட நீங்களும் வரணும். அன்றைக்கு வந்தப்போ சொன்னிங்களே எனக்கு லீவ் இருக்குன்னு. எத்தனை நாள் வேணும்னாலும் எடுக்கலாம்ன்னு….

நான் வரேன் உமா.. உங்க அண்ணா விட்டுவிட்டு வந்தா கூட நானும் தனியாவாவது கிளம்பி வரேன் சரியா. ..

போனை வைத்து விட்டு திரும்ப….திவ்யாவோ…

கதிர் கூப்பிட்டுட்டு போவானா….

ஏன்… அதெல்லாம் கூப்பிட்டுட்டு போவான். திவ்யா எனக்கு அவங்க அம்மா அப்பா அப்புறம் உமா எல்லாரையும் ரொம்ப பிடிக்குது. சோ… நான் போவேன். இரு கன்பாம் பண்ணிடலாம்… கதிரை போனில் அழைத்தாள். கதிர் நீ ஊருக்கு போகும் போது நானும் வரேன். இப்ப தான் உமா கூப்பிட்டா.

நீ என்ன சொன்ன….

நீ வாக்கிங் போய் இருக்கறன்னு சொன்னேன். எப்ப கிளம்பற…

நாளை நைட்க்கு….

சரி நானும் உன் கூடவே வரேன்….

இதோ புறப்பட்டு வந்தவள் எந்த ஒரு கவலையும் இல்லாமல் கதிரில் மடியில் தலை வைத்தபடி தூங்கிக் கொண்டு இருந்தாள். கதிரில் நிலை சொல்ல ஒன்றும் இல்லை… சில நேரம் நெருங்கி வருவது போல் தோன்ற பல நேரங்களில் விலகி சென்று கொண்டிருந்தாள். மொத்தத்தில் கதிரை பைத்தியமாக்கி கொண்டு இருந்தாள் அவளையும் அறியாமல். …

முதல் முறை இருந்த தயக்கமோ பயமோ இல்லாததால் காலை அங்கு இரங்கியதுமே கதிரை அந்த இடத்தில் விட்டுவிட்டு மகிழ்ச்சியோடு உமாவை அணைத்தபடி உள்ளே நுழைந்தாள் பானு. கதிருக்கு தான் தெரியாத இடத்திற்குள் நுழைந்திட்டது போல் தோன்ற ஆரம்பித்தது. உள் நுழையவும் அன்றைய வேலைகள் அவனை உள் இழுத்து கொண்டது.

அடுத்த நாள் காலை அழகாய் விடிய எழுந்து சிறிது நேரத்தில் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டனர்.
அங்கு சென்ற பிறகு எந்த குறையும் சொல்லாதபடி பானு அவ்வளவு பொறுப்பானவளாக அனைத்து வேலைகளையும் கதிரின் தாயார் சொல்ல சொல்ல நிறைவாக செய்து முடித்தாள்.
பார்க்க பார்க்க திகட்ட வில்லை கதிருக்கு… கண்கள் அவளை மட்டுமே சுற்றியபடி இருந்தது.

பூஜை முடிந்து புறப்பட மாலை ஆகிவிட அனைவருக்கும் அவ்வளவு நிறைவு. குடும்பத்தோடு போனதா அல்லது நிறைவான தரிசனம் செய்ததா எதுவோ ஒன்று அன்றைய இரவு நிறைவான உறக்கத்தை பெற்று இருந்தனர் அனைவரும்…

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here