நீயே என் உலகமடி_23

0
274

அடுத்த நாளை காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டு இருக்க வீட்டில் உள்ள அனைவரும் புறப்பட்டு கொண்டு இருந்தனர். காலை எட்டு மணிக்கு உமா தேவன் தம்பதியினரை அழைத்து வந்து இருந்தனர். மறு வீட்டிற்கு என அப்படியே கோவிலுக்கு சென்று வந்த பிறகு மதிய விருந்தை முடித்து இரவு தேவனின் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதாக முடிவு செய்து இருந்தனர்.

ஏற்கனவே பானு அழகாய் பட்டுடுத்தி ரெடி ஆகி இருக்க வீட்டில் முதலில் புறப்பட்டவர்கள் கீழே வண்டியில் அமர்ந்து புறப்பட்டு இருந்தனர்.

கதிர் சிறு சிறு வேலைகளை முடித்து கடைசியாக குளிக்க சென்றிருக்க அவசர அவசரமாக புறப்பட்டு கொண்டு இருந்தான். இரண்டு வண்டியில் கிளம்புவதாக முடிவு ஆகி இருக்க முதல் வண்டியில் கதிரின் தகப்பனார் இன்னும் முக்கிய உறவினர்கள் சிலர் என ஏறி புறப்பட்டு இருந்தனர். கதிரிடம் வீட்டை பூட்டி விட்டு வா என கூறி இருக்க…

அவசர அவசரமாக புறப்பட்டு கொண்டு இருந்தவன் புறப்பட்டு இருந்த பானுவிடம் எல்லாம் எடுத்தாச்சா…

ம்… ஆச்சுபா…

பக்கத்து ரூம்ல உமா புறப்பட்டு இருப்பா …
அவளையும் அழைச்சிட்டு போய் வண்டியில் ஏறு… நான் கதவை பூட்டிவிட்டு வரேன்…

ம்…சரி எனக்கு தலையாட்டி சென்றவள் அடுத்த சில நொடியில் இவனுக்கு எதிரில் வந்து நின்றிருந்தாள். முகம் லேசாக வியர்த்திருக்க கொஞ்சமாக சிவந்தும் கூட இருந்தது.இவனை பார்த்து திரு திரு என விழித்தபடி நின்றிருக்க…. என்ன ஆச்சு போகலாம் தானே…என்ன அப்படி முழிக்கற…

வா … வா கோவில் இங்கே இருந்து கால்மணி நேரத்தில் போய்விடலாம். அப்பா அம்மா அங்கே போயாச்சுன்னா திட்ட போறாங்க.. கிளம்பலாம்… உமாவை கூப்பிட்ட தானே… இவளின் அமைதியை பார்த்து…இல்லையா இரு நானே கூப்பிடறேன்.

வாசலை தாண்ட போகவும் அவனது கை பிடித்தவள் நீங்க இப்ப போக வேண்டாம். ..

ஏய்… என்ன ஆச்சு…

அங்கே அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நெருக்கமா பேசிட்டு இருக்கறாங்க…

புதுசா கல்யாணம் ஆனவங்க அப்படி தான் இருப்பாங்க நான் பார்த்துக்கறேன் வா என்றவன்… மச்சான் போகலாமா என சத்தமாக கூப்பிட்டவன். இது ஓகே வா என கேட்க…

ஏன்… இப்படி என்பது போல கையை காட்டியவள் படி இறங்க உமாவும் கூடவே தேவனும் இறங்கி வந்தனர். அடுத்த கால்மணி நேரத்தில் கோவிலை அடைந்து இருக்க… ஏற்கனவே பூஜைக்கு சொல்லி இருந்ததால் முன்பாகவே ஐயர் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்.

சற்று நேரத்தில் பூஜை துவங்க அனைவரும் திருப்தியாக தெய்வ தரிசனம் முடிந்து வீட்டுக்கு சென்றனர். மதிய விருந்தை தடபுடலாக ஏற்பாடு செய்து முடித்து மகிழ்ச்சியோடு மணமக்களை மாலையில் அணுப்பி வைத்தனர்.

அடுத்த இரண்டு நாட்களில் திவ்யா ஈஸ்வர் நிச்சயம் நடத்த முடிவு செய்திருக்க ஊரில் உள்ள அணைவரும் அழைத்து நிச்சயம் முடித்தவர்கள் திருமணத்தை அடுத்த மூன்று மாதத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர். திருமண பரபரப்பு நிச்சயதார்த்தம் என முடிந்து இயல்பு நிலை திரும்ப பதினைந்து நாட்கள் தாண்டி இருந்தது.

அன்று இரவு தாங்கள் இருவரும் ஊரிற்கு புறப்படுவதாய் முடிவு செய்திருக்க… மீனாள் தான் மிகவும் வருந்திக்கொண்டு இருந்தார்.

வீடே காலியாக இருக்கும் கதிர் நீங்களும் போயிட்டா…

அம்மா சனிக்கிழமை புறப்பட்டா நேரா இங்கே வந்திடுவோம் நீ ஏன் கவலை படற…

புரியுதுடா… நீங்களும் உங்க வேலையில் பார்க்கணுமே போய் தானே ஆகணும்…பானு அவன் வராட்டியும் நீயாவது இழுத்துட்டு வந்திடனும் சரியாடா…

சரிங்க அத்தை…அப்போது மாணிக்கம் உள் வந்தவர் கார் சாவியை கதிரிடம் கொடுத்தார். இனிமேல் இந்த காருக்கு இங்கே வேலை இருக்காது. நீ யூஸ் பண்ணிக்கோ கதிர். அங்கே இருந்து இங்கே வர உனக்கு உதவியாக இருக்கும்.
அடிக்கடி வந்து போய் இருடா என கூறிவிட்டு போக இரவு ஏழு மணியை தொடவும்…

இருவரும் புறப்பட்டு இருந்தனர். இருவரிடமும் சொல்லி விட்டு ஆசிர்வாதம் வாங்கி புறப்பட கோவையை நோக்கி வண்டியை திருப்பினான் கதிர்.

இரண்டு முறை டீ குடிக்க நிறுத்தியவன் கோவையை நெருங்குகையில் நேரம் ஐந்து மணியை நெருங்கி இருந்தது. ஏற்கனவே நிச்சயம் முடிந்ததும் ஈஸ்வர் முன்பே கோவை புறப்பட்டு வந்து இருந்தான். திவ்யாவுமே நான்கு நாட்களுக்கு முன்பாக வேலையில் ஜாயின் செய்திருந்தாள். பானுவின் விடுமுறை இன்றோடு முடிவடைய நாளை முதல் அவளும் பேங்கிற்கு செல்ல வேண்டும்.

இப்போது மறுபடியும் குழப்பம் வந்து இருந்தது கதிருக்கு… திருமணத்திற்காக இத்தனை நாள் இருந்தவள் இப்போது தன்னோடு வருவாளா… அல்லது ஏற்கனவே தங்கி இருந்த இடத்திற்கு கொண்டு போய் விடுவதா என…

மனம் முழுக்க தன்னோடு இருக்க வேண்டும் என ஆர்பரிக்க வருவாளா… மாட்டாளா… எதுவும் தெரியாமல் தனது வீட்டுக்கு செல்லும் பாதைக்கு சற்று தள்ளி வண்டியை நிறுத்தியவன் இவளின் பதிலுக்காக முகத்தை ஏக்கமாக பார்த்து நின்றான்.வந்துவிடேன் என்னோடு கோரிக்கை கண்களில் இருக்க அவளது முகத்தையே பார்த்திருந்தான்.

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here