தடபுடலாக மகிழ்ச்சியோடு மதிய உணவு தயாராகி கொண்டு இருக்க பானு சமையல் வேலையை பார்க்க கதிர் தேவையான காய்களை ஒவ்வொன்றாக அறுத்து கொண்டிருந்தான். உதவிக்காக
வந்த தாயாரை நகர்த்தி விட்டவன்….
அம்மா எத்தனை நாள் எனக்கு சமைச்சு போட்டு இருக்கறிங்க. இன்றைக்கு எதுவும் செய்ய கூடாது. பக்கத்தில் உட்கார்ந்து பார்க்க மட்டும் தான் செய்யணும்.
பானுவுக்குமே நன்றாக சமைக்க தெரிய அவளோ கதிரை எந்த வேலையும் செய்ய… விடாமல் அவனை போகச்சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருந்தாள்.
தாயையும் விடாமல் அவளையும் விட்டு தராமல் அழகாய் பேசிக்கொண்டு இருந்தான். ஊர்ல இருக்கறவரைக்கும் அம்மாவுக்கு சமைக்க ஹெல்ப் பண்ணறது நான் தான் தெரியுமா…
உமா எப்பவுமே சமைக்கற இடத்திற்கு வர மாட்டா தெரியுமா…. இப்பவாவது வர்றாலாமா…
இந்த இரண்டு மாசமா அதுதான் வேலையே. ஓரளவுக்கு சமைக்க கத்துகிட்டா கதிர். பேசியபடியே வேலை முடிய ஒரு மணியை நெருங்கி கொண்டிருந்தது. முதலில் மாணிக்கம் சாப்பிட பிறகு மூவரும் அமர்ந்தனர். சாம்பார்,ரசம் இரண்டு பொரியல் அப்பளம் என சிம்பிலாக செய்திருக்க அனைத்தும் அவ்வளவு சுவையாக இருந்தது.
சாப்பிட்டதும் மீனாலோ உன் பொண்ணாட்டி நல்லா சமைக்கறாய்யா.. பாராட்டுதலாய் பேச ஆரம்பித்தார். மூன்று மணி வரை இயல்பாய் போக அதற்கு பிறகு நடந்தது…… பானு அவளது அத்தையும் நன்றாகவே மாட்டிக்கோண்டாள்.
தந்தையோடு தனது அறையில் கதிர் பேசிக்கொண்டு இருக்க பானு அத்தையோடு முன் அறையில் நின்றிருந்தாள். இயல்பாய் அருகில் இருக்கும் அறையை பார்த்தவர்.
இது என்ன ரூம் என கேட்க…. அங்க என்ன இருக்கு ….
இது என்னுடைய ரூம் அத்தே…
திற பார்க்கலாம். உள்ளே திறந்து பார்த்தவர் கட்டில் பீரோ அட்டாச்சுடு பாத்ரூம் இருக்க … ஏன் ரெண்டு பேரும் ஒரு ரூம்ல தூங்கறது இல்லையா….
இங்கே தனி கட்டில் எதுக்கு என அடுத்தடுத்து கேட்க ஆரம்பித்தார்.
ஒரு நிமிடம் திகைத்தவள் சமாளிக்க ஆரம்பித்தாள். அங்கே தான் இருப்பேன் அத்தே. காலையில் ரெண்டு பேரும் ஓரே நேரம் வேலைக்கு போகணுமா. அப்ப குளிக்க இந்த ரூம்ம யூஸ் பண்ணிப்பேன்.
இந்த கட்டில் யாராவது வந்தா தங்கறதுக்காக வாங்கி போட்டது அத்தே …
திணறி திணறி சமாளித்து கொண்டு இருந்தாள். ஒருவழியாக மாலை ஏழு மணிக்கு புறப்படவும் கொஞ்சம் அசுவாசமாய் மூச்சு விட முடிந்தது பானுவுக்கு. … அப்பா ஒரு வழியா தப்பிச்சிட்டோம் இப்படி தான் உணர தோன்றியது.
ரயில்வே ஸ்டேசனில் இறக்கி விட்டு வந்தவனிடம்…. உண்மையிலேயே ரொம்ப பயந்துட்டேன். எத்தனை கேள்வி கேட்கறாங்க. ஷப்பா முடியல. ஒரு வழியா சமாளிச்சுட்டேன்.
கிராமத்தில் வளர்ந்த ஆளுங்க … முகம் பார்த்தே அத்தனையும் சொல்லிடுவாங்க.
சரி உன்னை ரூம்ல விட்டிடவா. திவ்யா வந்து இருப்பால்ல.
ம்… ஆமா வா போகலாம்.
அதே நேரம் ரயில் சென்று கொண்டிருக்க
தனது இருக்கையில் யோசித்தபடி அமர்ந்து இருந்தார் மீனாள்….அவரது முகம் பார்த்தவர் என்ன மீனா நீ ஆசைப்பட்ட மாதிரி உன் மவனை வந்து கூப்பிட்டாச்சு.
மூனு நாளா அழுது அழுது ரெண்டு பேரும் சாதிச்சுட்டிங்க. இன்னும் என்ன யோசனை. …
அது வந்து அந்த பொண்ணு நிஜமாவே நம்ம பையன் கூட தான் இருக்கா…
ஏன் உனக்கு இப்படி எல்லாம் தோணுது…
அது வந்துங்க. முதல்ல சமையல் கட்டுல எது எங்க இருக்குன்னே அந்த புள்ளைக்கு தெரியல.அந்த பொண்ணு கூட பக்கத்து ரூம்ப இருந்தப்ப கேட்ட கேள்விக்கெல்லாம் யோசித்து யோசித்து பேசின மாதிரி இருந்ததுங்க. பொண்ண
குறை சொல்ல முடியாது. அழகா இருக்கறா. தேடிணாலும் இவ்வளவு பொறுத்தமா கிடைக்காது. கிளம்பும் போது
பையன் கையில் பிடிச்சு ரெண்டு பேரும் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாங்க. ஆனாலும் எங்கேயோ தப்பா தெரியுது…
நீ மறுபடியும் அழ ஆரம்பிச்சுணாத.
ஒரு நாளைக்கு முன்னாடி வர சொல்லலாம். அங்கே வச்சி பேசிக்கலாம்.
ம்… அதுவும் சரிதாங்க. அப்புறம் அந்த பொண்ணு நூல் மாதிரி சின்னதாய் ஜெயின் தான் போட்டு இருக்கு. இந்த பய சம்பாதிக்கறான்தான. பெரிசா எடுக்க கூடாதா. அதுல தாலி கோர்த்து இருக்குமோ இல்லையோ அதுவும் தெரியலை…
நீ ஏன் புலம்பற. அது தான் அவனை கட்டிக்க போற பொண்ணுக்குன்னு நிறைய நகை வாங்கி வீச்சு இருக்கிறாயே வந்தா அத குடு . இந்த கால புள்ளைங்களுக்கு நகை போட பிடிக்கறதே இல்ல. சரி நீ தூங்கு … காலையில் நிறைய வேலை இருக்கு. ஊருக்கு வர வச்சா தெரிஞ்சிடும் சரி பண்ண முடியாதது எதுவுமே இல்ல.
தன் முகம் பார்த்தே பிரச்சனையை அறிந்து கொண்டதை அறியாமல் பானுவை அழைத்து கொண்டு அவளது இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருந்தான் கதிர்.
காலம் விளையாட ஆரம்பித்து விட்டது இவர்களோடு…
தொடரும்.